செவ்வாய், 14 அக்டோபர், 2014

ஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

ராதே கிருஷ்ணா 14-10-2014


6 hrs · 
ஹிந்து மத தர்ம சாஸ்திரம்
ஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

Photos from Kamalji Panditji's post in தாம்ப்ராஸ்
By Kamalji Panditji
ஹிந்து மத தர்ம சாஸ்திரம்

ஹிந்து மத தர்ம சாஸ்திரத்தில் திருமணத்தை பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருமணம் எட்டு வகைகளாக விவரித்து கூறப்பட்டுள்ளது

ப்ராம்ஹோ தைவஸ்ததை வார்ஷ:
ப்ராஜாபத்ய: ததா ஆஸுர:
காந்தர்வோ ராக்ஷஸ: சேதி
பைசாச: ச அஷ்டமோ மத:

என்று எட்டு வகைகளாக கூறப்பட்டுள்ளது. இதை சற்று விரிவாக பார்ப்போம்.

ப்ராம்ஹம், ப்ராஜாபத்யம், ஆஸுரம், தைவம், ஆர்ஷம், ராக்ஷஸம், பைசாசம் மற்றும் காந்தர்வம் ஆகியவைதான் அந்த எட்டு வகையான திருமணங்கள். இந்த திருமண விவரங்களை பார்ப்போம்.

(1) ப்ராம்ஹம் - தன் மகளை யாரும் பெண் கேட்டு முன்வராத நிலையில் படித்த நற்குணமிக்க ஓர் ஆண்மகனை தேர்ந்தெடுத்து, தேர்ந்தெடுத்த ஆண்மகனுக்கு தேவையான ஆடை, ஆபரணங்கள் தந்து அணியச் செய்து, தன்னுடைய மகளை உயர்தர ஆடைகளாலும், ஆடம்பர நகைகளாலும் அலங்கரித்து, அவனுக்குத் தன் மகளை தானம் கொடுப்பது ''ப்ராம்ஹம்"

(2) ப்ராஜாபத்யம் - நற்குணமிக்க ஓர் ஆண்மகனை தேர்ந்தெடுத்து,
தனது மகளை தன் வசதிக்கேற்ப ஆடை, அணிகலன்களால் அலங்கரித்து, ''நீங்கள் இருவரும் இணைந்து இல்லற தர்மத்தை கடைப்பிடித்து வாழுங்கள்" என்று கூறி, பெண்ணை அந்த ஆண்மகனிடம் ஒப்படைப்பது ''ப்ராஜாபத்யம்"

(3) ஆஸுரம் - ஓர் ஆண்மகன், தான் விரும்பிய பெண்ணை
அவன் விரும்பிய பெண்ணிற்க்கோ அல்லது அவள் தந்தைக்கோ, தனது வசதிக்கேற்ப பொன்னும், பொருளும் கொடுத்து அவளை திருமணம் செய்து கொள்வது ''ஆஸுரம்"

(4) தைவம் - தன்னுடன் சேர்ந்து தான் செய்யும் யாகத்தில் பங்கேற்று / ருத்விக்காக இருந்து, அல்லது தான் செய்யும் தர்ம காரியங்களில் பங்கேற்று / உடன் இருந்து அதற்கான காரியங்களில் ஈடுபட்டவனுக்கு, தன் சக்திக்கேற்ப ஆடை, அணிகலன்கள் தந்து உபசரித்து, தன் பெண்ணை அவனுக்கு தானமாக அளிப்பது ''தைவம்"

(5) ஆர்ஷம் - ஓர் வரனை தேர்ந்தெடுத்து, அந்த வரனிடமிருந்து காளை மாடு ஒன்று, பசு மாடு ஒன்று என இரண்டு மாடுகளை பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக தனது மகளை அந்த வரனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுப்பது ''ஆர்ஷம்"

(6) ராக்ஷஸம் - ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக, அவளது உறவினர்களும், சுற்றத்தாரும் எதிர்த்தும், பலவந்தமாக அவளைக் கடத்திச் சென்று மணப்பது ''ராக்ஷஸம்"

(7) பைசாசம் - ஒரு பெண் தன் நிலை மறந்து தூங்கும் சமயம், அல்லது போதை மருந்துகளை அந்த பெண்ணிற்கு வலுக்கட்டாயமாக கொடுத்து, அவளை மயக்கமடையச் செய்து, அந்த மயக்க நிலையில் நெறிதவறிய முறையில் அவளை அடைவது ''பைசாசம்"

(8) காந்தர்வம் - ஆணும், பெண்ணும் ஒருவரை ஒருவர் மனமார நேசித்து திருமணம் செய்து கொள்வது ''காந்தர்வம்"

இதில், ப்ராம்ஹம், ப்ராஜாபத்யம், தைவம், ஆர்ஷம் மற்றும் காந்தர்வம் ஆகிய ஐந்து திருமண முறைகளும் ப்ராஹ்மண வர்ணத்தாருக்கு ஏற்றது.

















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக