ராதே கிருஷ்ணா 05-06-2013
இந்தியா இந்துக்களுக்கே's
Narasimman Nagarajan shared Nithya sri lakshmi இந்தியா இந்துக்களுக்கே's photo.
அடிக்கடி ஹிந்துத்துவத்துக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுள் முக்கியமானது இதுவே. ஹிந்துத்துவம் என்றால் பிராமணீயம்.
அது பார்ப்பன மேலாதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான சதி. பழைய சாதி முறையையும் தீண்டாமையையும்தான் ஹிந்துத்துவம் என்கிற பெயரில் பார்ப்பனீயம் கொண்டுவர முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது. இது தவறு.
விடுதலைப் போராட்டத்தையும் பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் இவ்வாறே கூறி வந்தார்கள் என்பதை நாம் காண வேண்டும். ஹிந்துத்துவ அமைப்புகளே நலிந்தபிரிவுகளிடையே சென்று சேவை செய்வதில் முதன்மை பெற்று விளங்கும் இந்திய அமைப்புகள். ஹிந்து தருமம் என்பதே இன்று நலிந்த பிரிவு என கருதப்படும் சமுதாய மக்களால் உருவாக்கப்பட்டதாகும்.
வேதங்களைத் தொகுத்த வியாசர் ஒருமீனவர்.
ஆதிகாவியமான ராமாயணத்தை எழுதிவர் வால்மீகி எனும் வேடர்.
வேத முனிவர்கள் பலர் இன்றைய தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே.
மகரிஷி பராசரர், மகாராஜா ஜனகருக்கு அளித்த அறிவுரையில், “நல்லொழுக்கம் கொண்ட சூத்திரன், பிராமணர்களின் வழிகாட்டியாகக் கருதப்படுவான். நான் அந்த சூத்திரனை மகாவிஷ்ணுவின் அம்சமாகவே காண்கிறேன்’ எனக் கூறுகிறார்.
வேடனான குகனை சகோதரனாகவும், வனவாசிப் பெண்ணான சபரியின் வாயால் சுவைக்கப்பட்ட கனியை உணவாகவும் ஏற்றுக்கொண்டவனே, “ஹிந்துத்துவம் மரியாதா புருஷோத்தமன்’ எனக் கொண்டாடும் ராமன். மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்ந்து, அரசவை அழைப்பைப் புறக்கணித்து, பணிப்பெண் மகனான விதுரனின் அழைப்பை ஏற்றவன் கிருஷ்ணன்.
சிவபெருமானோ, ஆதி சங்கரருக்கு சமுதாயத்தால் புறக்கணிக்கப்பட்ட புலையராகவே தரிசனமளித்து, சாதிய மனநிலையைப் போக்கினார்.
கீதையில் கிருஷ்ணர் நான்கு வர்ணங்கள் குணத்தாலும் அதனைச் செயல்படுத்தும் விதத்தாலும் (கர்மத்தாலும்) உருவாகின்றனவே அல்லாது, பிறப்பால் உருவாவத ல்ல எனக் கூறியுள்ளார்.
மேலும், அர்ஜுனன் குலதர்மம் குறித்துப் பேசும்போது கிருஷ்ணரோ ஸ்வதர்மம் என்பதையே வலியுறுத்துகிறார். அதாவது, பிறப்பின் அடிப்படையில் அமையாது ஒரு தனி மனிதரது திறமை, மனப்பக்குவம், அவரது சுபாவம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே வர்ண அமைப்பு அமைவதாகக் கூறுகிறார்.
மேலும், பிறப்பின் அடிப்படையில் தன்னை உயர்ந்தவன் எனக் கருதுபவன் அரக்கத்தன்மை கொண்டவன் என்றும் சொல்கிறார்.
பௌத்த ஜைன அறநூல்களும் அந்தண அறவொழுக்கம் என்பது பிறப்பால் ஏற்படுவதல்ல எனக் கூறுகின்றன. சமுதாயத்தில் தேக்கநிலை ஏற்படுவதும், அதனால் சமுதாய ஏற்றத்தாழ்வுகள் ஏற்படுவதும். அதனால் மக்கள் சமுதாயங் களில் சிலரை விலக்கி வைப்பதும் விரும்பத்தகாத சில பண்டைய சமுதாய இயக்கங்களாகும்.
இவை எல்லா சமுதாயங்களிலும் ஏற்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் மட்டுமே, “ஆவுரித்து தின்கிற புலையரும் வேத தருமத்தை அனுசரிப்பவரெனில் அவர் தெய்வமே ஆவார்’ என சொல்லிய ஆன்ம நேயக் குரல்கள் சைவ வைணவ பக்தி இலக்கியங்களில் எழுந்தன.
ராமானுஜர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அவர்களின் பிறப்புரிமையான வேத ஞானத்தை மீட்டளித்தார். ஒப்பு நோக்க, இதே காலகட்டத்தில் உலகெங்கிலும் மிக மோசமான அடிமை முறைகளே இருந்திருக்கின்றன.
ராமானுஜரையும் நாயன்மார்களையும் ஆழ்வார்களையும் போன்ற சமூக சமத்துவக் குரலாளர்கள் அங்கெல்லாம் உருவாகவே இல்லை. இறையியல் ரீதியாக உடலுழைப்பே கூட பாவத்தின் விளைவாகக் கருதப்பட்டது.
பாரதத்தில் மனு போன்ற ஒரு சில ஸ்மிருதிகள் பிறப்படிப் படையிலான வேற்றுமையைப் பெரிதுபடுத்துகின்றன. ஆனால், வேதம் உபநிடதம் பகவத் கீதை எனும் ஸ்ருதி நூல்கள் போல, ஸ்மிருதிகள் நிலையான உண்மைக்கு வழிகாட்டுபவை அல்ல.
ஸ்மிருதிகள் சட்டநூல்கள் மட்டுமே. ஸ்ருதி என்பது மாறாது. ஸ்மிருதி என்பதன் பொருளே காலம்தோறும் மாறக்கூடியது. ஆனால், பிரிட்டிஷ் காலனியவாதிகளும், அன்னிய மதப் பிரசாரகர்களும், இந்த பாகுபாட்டுத்தன்மை கொண்ட ஸ்மிருதிகளின் சில வாக்கியங்களே ஹிந்து தருமம் என்பது போன்ற எண்ணத்தை உருவாக்கி விட்டார்கள்.
இதனைச் சில மேல் சாதிக்காரர்களும் குறுகிய எண்ணத்தால் ஏற்றுக்கொண்டனர். இன்னும் சிலரோ, ஒருபடி மேலே போய், காலனிய ஆராய்ச்சியாளர்கள் காட்டிய ஆரிய திராவிட இனவாதத்தை உண்மையென நம்பி, சாதி அமைப்பே இனவாத அடிப்படையில் உருவானதாக நம்பிவிட்டார்கள்.
ஆனால், ஹிந்து தர்மத்தின் உண்மையான ஆத்மிகக் குரல் எப்போதும் சமுதாய சமத்துவத்தையும் சமுதாய சமரசத்தையுமே உரக்க பிரகடனப்படுத்தியபடி உள்ளது.
ராமகிருஷ்ண பரமஹம்சர் சாதியத்தை முழுக்க அழித்திட, தலித் வீட்டின் கழிவறைகளை சுத்தம் செய்தார். சுவாமி விவேகானந்தர் வேதாந்தத்தை சமுதாய விடுதலைக்கான போர் முழக்கமாகப் பறையறைந்தார்.
கேளரத்தில் அத்வைத வேதாந்தத்தை தாழ்த்தப்பட்டவர்களின் விடுதலைக்கான கருத்தியல் ஆயுதமாக நாராயண குரு கூர்மைப் படுத்தினார். தலித் விடுதலை வீரரான அய்யன் காளி, பாரத ஆன்மிகத்தையும் தலித் விடுதலையையும் ஒருங்கிணைத்து முன்னகர்த்தினார்.
ஹிந்துத்துவம் இந்த பாரத பண்பாட்டு பாரம்பரியத்தின் அரசியல் சமுதாய நீட்சியே. தமது நூலான ஹிந்துத்துவத்தில், வீர சாவர்க்கர் “வட துருவம் முதல் தென் துருவம் வரை மனிதகுலம் ஒரே ரத்தத்தால் இணைக்கப்பட்டுள்ளது.
மற்ற எல்லா வேற்றுமைகளும் மனிதர்கள் செயற்கையாக உருவாக்கியதே’ என்று கூறுகிறார். 1920களில் எழுதப்பட்ட வார்த்தைகள் இவை. மேற்கத்திய நாடுகளின் அறிவியலறிஞர்கள் தங்கள் சுய இன மேன்மை வாதங்களைத் துறந்து இதே முடிவுக்கு வர, அவர்களுக்கு மேலும் கால் நூற்றாண்டும், ஒரு பெரும் உலக யுத்தமும், நாஜி கொடுமைகளின் கோர அரங்கேற்றமும் தேவைப்பட்டன.
செய்முறையிலும் ஹிந்துத்துவம் சாதியத்தை அழிக்கும் சக்தியாகவே விளங்குகிறது. ஹிந்துத்துவ இயக்கமான ஆர்.எஸ்.எஸ். முகாமுக்கு மகாத்மா காந்தி வருகை தந்தபோது, அங்கு சாதி உணர்வும் தீண்டாமையும் சற்றும் இல்லாத நிலையைப் பாராட்டினார்.
இன்று வனவாசிகள், தலித் சமுதாயங்களில் இயங்கும் ஹிந்துத்துவ இயக்கங்களான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம், ஏகல் வித்யாலயா, வனவாசி கல்யாண் ஆசிரமம் ஆகியவை இந்த ஹிந்து கருத்தியல் பாரம்பரியத்தின் செயல் வடிவங்கள்.
தீண்டாமைக்கு ஹிந்து தருமத்தில் இடம் கிடையாது என பாரம்பரிய ஆச்சாரியார்களைக் கொண்டே ஒரே மேடையில் பிரகடனம் செய்த பெருமை, ஹிந்துத்துவ சிந்தனையாளரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் இரண்டாவது தலைவரும் “குருஜி’ என அழைக்கப்படுபவருமான கோல்வால்க்கரையே சாரும்.
தீண்டாமை குறித்து பேசும் போது, கோல்வால்க்கர் மிகக் கடுமையாக, “மேல்சாதி எனத் தம்மை கருதுவோரின் அற்பப் புத்தியே தீண்டாமை’ எனக் கூறுகிறார். ஹிந்து சமுதாயத்துக்கு வர்ண அமைப்பு இன்றியமையாத அம்சமா எனும் கேள்விக்கு அவரது பதில் முக்கியமானது:
“வர்ண அமைப்பு என்பது ஹிந்து சமுதாயத்தின் நிலைமையோ ஆதாரமோ அல்ல. அது ஒரு ஏற்பாடு, அவ்வளவுதான். அது தற்போது நன்மை பயக்குமா பயக்காதா என்பதன் அடிப்படையில் வர்ண முறையை இருக்கவிடவோ ஒழிக்கவோ செய்யலாம்’.
ஹிந்துத்துவம் என்பது மக்களை ஒருங்கிணைக்கும் தத்துவம். அண்மையில் கேரளத்தின் புகழ்பெற்ற கிறிஸ்தவ சிந்தனையாளரான ஜோசப் புலக்குன்னல் என்பவரால் நடத்தப்படும் “கிறிஸ்தவ ஆராய்ச்சிக்கான இந்திய மையம்’ (The Indian Institute of Christian Studies) என்ற அமைப்பு ஹிந்து கிறிஸ்தவ மோதல்களைத் தவிர்ப்பது குறித்து கருத்தரங்கு ஒன்றை நடத்தியது.
அதில் கலந்துகொண்டு பேசிய தொழிலதிபர் ஜியார்ஜ் ஐஸாக் என்பவர், “தான் வணங்கும் கடவுள் மட்டுமே உண்மை என நம்புவதால் தான் பிரச்னை. ஹிந்து பண்பாட்டு மேதமையிலிருந்து சத்தியத்துக்குப் பல வழிகள் உள்ளன என்கிற உண்மையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்’ என்று சொன்னார்.
ஹிந்துத்துவம் அனைவரையும் அரவணைத்துச் செல்லும் தன்மை கொண்டது. பல்வேறு வழிபாட்டு முறைகளுக்கு இங்கு இடம் உண்டு. ஆனால், “எனது மதம் மட்டுமே உண்மை, எனது கடவுள் மட்டுமே உண்மை, எனது இறைநூல் மட்டுமே உண்மை’ என்கிற போக்குக் கொண்ட பிரசாரங்களாலும், அத்தகைய பிரசாரங்களுக்கு வெளிநாட்டுப் பணம் வருவதாலும்தான் மதமோதல்கள் ஏற்படுகின்றன.
மண்டைக்காட்டு மதக் கலவரங்களை ஆராய்ந்த வேணு கோபால் கமிஷன் அறிக்கை, மத மாற்றங்களும் மதமாற்றப் பிரசாரமுமே மதக் கலவரங்களுக்குக் காரணமாக இருந்ததைச் சுட்டிக் காட்டியது முக்கியமானது.
ஆனால் ஹிந்துத்துவமோ, சேவையை மதமாற்றக் கண்ணோட்டத்துடன் பார்ப்பதில்லை. கோல்வால்கர், சேவையை எப்படி அணுக வேண்டும் எனச் சொல்லும்போது, “உதவி தேவைப்படும் மக்களுக்கு சேவை புரிந்து அவர்களின் துயரத்தை நீக்க வேண்டும். இத்தகைய தொண்டுகளில் எவரும் பாகுபாடு பார்க்கக்கூடாது.
நாம் அனைவருக்கும் உதவி புரிவோம். அவர்கள் கிறிஸ்தவர் களாகட்டும்; முஸ்லிம்களாகட்டும் அல்லது வேறு எந்த சமயத்தைச் சார்ந்தவர்களாக இருக்கட்டும். ஏனெனில் இன்னல்கள் அனைவருக்கும் ஏற்படுகின்றன. அனைத்து ஆன்மாக்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனுக்குத் தொண்டு புரிவதாக எண்ணி உதவி புரிதல் வேண்டும்’
இதுதான் ஹிந்துத்துவ சமுதாய உணர்வு.
இத்தகைய உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கருத்தியல், எப்படி மதக் கலவரத்தை ஏற்படுத்தும்? மதக்கலவரங்களுக்கு காரணம், தனது மதமே உண்மை என்கிற எண்ணத்துடன் செய்யப்படும் பிரசாரமும், மதமாற்ற முயற்சிகளுமே தவிர ஹிந்துத்துவம் அல்ல.
-----------------------நன்றி அரவிந்தன் நீலகண்டன் ஹிந்துத்துவம் டுடே-------------------------- ----------------------

-----------------------நன்றி அரவிந்தன் நீலகண்டன் ஹிந்துத்துவம் டுடே--------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக