ஞாயிறு, 1 ஜூன், 2014

கனவுகளின் பலன்களை அறிய ஆவலா?

ராதே கிருஷ்ணா 02-06-2014





கனவுகளின் பலன்களை அறிய ஆவலா?


From the album: Timeline Photos
By Ananthanarayanan Ramaswamy
கனவுகளின் பலன்களை அறிய ஆவலா?

இரவில் முதல் ஜாமத்தில் கண்ட கனவு ஒரு வருஷத்திலும், 2ஆம் ஜாமத்தில் கண்ட கனவு 3 மாதத்திலும், 3ம் ஜாமத்தில் கண்ட கனவு 1 மாதத்திலும் அருணோதயத்தில் கண்ட கனவு 10 தினங்களிலும் பலிதமாகும்.

நல்ல கனவு கண்டால் மறுபடியும் நித்திரை செய்யலாகாது. கெட்ட கனவு கண்டால் கடவுளை தியானித்து பிறகு நித்திரை செய்ய வேண்டும்.

சுப சொப்பனங்கள் பசு, எருது, யானை தேவாலயங்கள, அரண்மனை, மலைஉச்சி, விருக்ஷம் இவைகளின் மேல் ஏறுதல், மாமிச பக்ஷணம், தயிரன்னம் புசித்தல் வெள்ளை வஸ்த்திரம் தரித்தல்?

ரத்தின ஆபரணங்கள் காணல், சந்தனம் பூசிக்கொள்ளல், வெற்றிலை பாக்கு தரித்தல், கற்பூரம், அகில், வெள்ளை புஷ்பம் இவைகளை கண்டால் சொற்ப சம்பத்து உண்டாகும்.

வெண்ணிறப் பாம்பு கடித்தல் தேள் கடித்தல் சமுத்திரம் தாண்டல், நெருப்பில் அகப்படுதல், கட்டுப்படல் இவைகளை கண்டால் தனலாபம் உண்டு

பகலில் காணும் கனவுக்கு பலனில்லை

இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும்.

ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும். உடல் நலம் குறையலாம்.

விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை
ஏற்படக் கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம்.

வஸ்திர தானம் செய்யலாம்.

வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை தூக்கம் எதற்காக?

தூங்குகின்ற போதுதான் நமது உடல் உறுப்புக்கள் எல்லாம் ஓய்வெடுத்துக் கொள்கின்றன.

தூக்கம்தான் உயிரினங்களுக்கு உண்மையான ஓய்வு.

தூங்கும்போது இதயத்துடிப்பு குறைவாகவும் இரத்தம் சீராக செயல்படுகின்றதென்றும் மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சிலர் சொல்வார்கள் ஒரு கோழித் தூக்கமாவது தூங்கவேண்டுமென்று. கோழி நின்றுகொண்டே தூங்குமென்பது எல்லோருக்கும் தெரியும்.

யுத்தகாலங்களில் போர் வீரர்கள் சிறிதுநேர ஓய்வு கிடைத்தாலும் நின்றபடியே தூங்குவார்களாம்!

அதுதான் கோழித்தூக்கம்! ஆனால் எங்களில் சிலர் இரவில் கும்பகர்ணத் தூக்கம் தூங்கிவிட்டுக் காலை எட்டு அல்லது ஒன்பது மணிக்கு எழும்புவார்கள் பின்பு மத்தியான‌ம் சாப்பாட்டிற்குப் பின்னரும் பிற்பகிலில் ஒரு மணிநேரமாவது தூங்குவார்கள். அவர்களின் கணக்குப்படி அதை கோழித்தூக்கம் என்று கூறிக்கொள்வார்கள்.

மனிதன் ஒவ்வொரு இரவும் இறந்து மீண்டும்
மறுநாள் பிறக்கின்றான்” என்று.

ஆனால் சிலர் இருக்கின்றார்கள் எவ்வளவுதான் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாலும் சின்னச் சத்தம் கேட்டாலும் விழித்துவிடுவார்கள்.

மிருகங்களில் நாய்களும் அப்படித்தான்!

நாய் எப்பொழுதும் தூங்கும்போது காதுப்பகுதியை
தரையில் வைத்தே படுத்துக்கொள்ளும்.

அதன் செவிப்புலன்கள் தூரத்தில் ஏற்படும் சிறு அதிர்வையும்
உணர்த்தி விழிக்க வைக்கின்றது.

சிலருக்கு தூங்குவதற்கு அமைதியான சூழ்நிலை வேண்டும். வேறு சிலர் இருக்கின்றார்கள் எந்தமாதிரியான இடத்திலும் தூங்கிவிடுவார்கள்.

திருவிழாக்கள், கொண்டாட்டங்களுக்கு நிகழ்ச்சி நடாத்துவதற்கு செல்லும்போது அங்கு அப்பொழுது வேறு நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தால் அந்த சிறு இடைவெளியில் அங்கு ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கும் லைட் என்ஜினுக்குப் பக்கத்திலேயே ஒரு துணியை விரித்து தூங்கிவிடுவார்கள்!

இதுவே அவருக்கு பழக்கமாகி பின் நாட்களில் அப்படியான சத்தம் இல்லாவிட்டால் தனக்கு தூக்கம் வருவதில்லை என்று சொன்னார். இப்படி விசித்திரமான பழக்கங்களை உடையவர்களும் இருக்கின்றார்கள்

குழந்தைகள் தூங்கும் நேரத்தில்த்தான் வளர்ச்சியடைகின்றதாம்! ஆம் குழந்தைகளின் தொழிலே தூக்கம்தான்.

தூக்கத்தில் கனவுகள் வருவது வழமை.

கனவு என்பது என்ன?

எங்களின் நினைவுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருவதாக உளவியல் ஆராட்சியாளர்கள் கூறுகின்றார்கள்.

இள வயதினர்க்கு காதல் கனவுகளே அதிகமாக வருமாம். சினிமா பார்த்துவிட்டு வந்து தூங்கினால் கனவில் அந்தப் படத்தின் கதாநாயகனோ, அல்லது கதாநாயகியோ கனவில் தோன்றுவார்களாம். அவரவர்களின் நினைவுகளே கனவுகள்.

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்தனது நறுக்குகள் ஒன்றில் சொல்லுகின்றார் ‘உன் கனவில் பாம்பு துரத்துகின்றது நீ ஓடுகின்றாய்! குறவன் கனவில் அவன் துரத்துகின்றான் பாம்பு ஓடுகின்றது” என்று

ஆம் கனவுகள் எல்லாம் அவரவர் நினைவுகளைப் பொறுத்ததே.

கனவுகளுக்கு பலன் சொல்பவர்களும் உண்டு.

கனவில் மலத்தைக் கண்டால் பணவரவாம்! மாங்கல்யத்தைக் கண்டால் துன்பம் சூழுமாம்!

இப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள். பல்லி விழுந்தாலும் பலன் சொல்வார்கள்! பல்லு விழுந்தாலும் பலன் சொல்வார்கள்

உடலின் மேல் பாம்பு ஊர்ந்து செல்வது நல்லது. சங்க காலத்தில் வாழ்ந்த வேடுவர்கள் இதனை ஒரு வழக்கமாகவே வைத்திருந்தனர்.

இன்றைக்கும் கோத்தகிரி, ஊட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் படுக இன மக்கள் பாம்பை உடலின் மீது ஊர்ந்து செல்ல வைத்து தோஷ சாந்தி செய்கின்றனர்.

எனவே, பாம்பு ஒருவர் மீது ஊர்ந்து செல்வது போல் கனவு கண்டால், அவருக்கு இருந்த கண்டம் அல்லது கெட்ட நேரம் விலகிச் சென்று விட்டதாகக் கருதலாம்

மனதின் வெளிப்பாடே கனவுகள். எந்த கனவுகளும் விருப்பத்திற்கு உட்பட்டு வருபவை அல்ல.

அவை தன்னிச்சையாக நிகழும் மனதின் உள்ளுணர்வு
வெளிப்பாடுகள். அவற்றுக்கும் பலன்கள் உண்டு.

ஆனால் அவை யாராலும் அறியப்படாதவை.

நல்ல கனவுகளைக் கண்டால் என்றுமே உறக்கம் வராது. அதுபோல தீய கனவுகளைக் கண்டால் கடவுளை வணங்கிவிட்டு உறங்குவது நல்லது.

இதோ சில கனவுகளுக்கான பலன்கள்:

* குழந்தையைக் கனவில் காண்பது நல்லது. தொழில் விருத்தி ஏற்படும். பொருள் வரவு அதிகமாகும்.

* ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் விளையாடுவது போலவோ, சிரித்து மகிழ்வது போலவோ கனவு கண்டால் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நிலைக்கும்.

* சூரியனைக் கண்டால் வியாதிகள் நீங்கும். விரோதிகளை வெல்லும் ஆற்றல் கிட்டும்.

* கோயிலைக் கண்டால் நூதனமான தொழில் விருத்தியாகும். செல்வம் குவியப்போவதைக் குறிக்கும்.

* வெல்லத்தைச் சாப்பிடுவதாக கனவு கண்டால் வறுமை நீங்கும்.

* பலருடன் சேர்ந்து சாப்பிடுவதாக கனவு கண்டால் பொருள் லாபம் உண்டாகும்.

* பழங்களை ஒருவர் தனக்கு கொடுப்பதாகவோ, உண்பதாகவோ கனவு கண்டால் செய்யும் காரியம் வெற்றியாகும் குருவிகளைக் கனவில் காண்பது நன்மையானது.

கஷ்டமான நிலை விலகும். வம்புவழக்கு இருப்பின் வெற்றி கிட்டும்;

நோயுற்றிருப்பின் நோய் அகலும்.

குருவி தன் வீட்டில் கூடு கட்டுவதாகக் கண்டால் திருமணமாகாதவருக்கு திருமணமும் திருமணமாகியிருந்தால்
புத்திர பாக்கியமும் உண்டாகும்.

குருவிகள் கூட்டைப் பார்த்தால்கூட, இந்தப் பலன் உண்டு.

ஆனால் குருவிக் கூட்டைத் தானே பிரிப்பதாய் கண்டால் துயரமிகுந்த சம்பவம் நடக்க இருக்கிறது என்பதை அறியலாம்.

குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இரையூட்டுவது போலவும் தன் குடும்பத்துடன் இருப்பதையும் கண்டால் வாழ்க்கையில் சந்தோஷம் ஏற்படும்.

குருவிகள் குதூகலமாய் இருப்பதைக் காண்பதும் நல்லதே.

ஆனால் குருவிகள் சண்டை போடுவதைப் போல கண்டால் குடும்பத்தில் பிளவுகள் ஏற்பட்டு பிரிய நேரும்.
தொழிலும் பகை ஏற்பட்டு ஜீவனக் கேடு உண்டாகும்.

குருவிகள் இறந்து கிடப்பதைக் கண்டால்கூட கெடுபலன்.
பல தொல்லைகள் உண்டாகும்.

அடுப்பு சுவாலையுடன் எரிந்து கொண்டிருப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி ஏற்படும்.

புதிதாக தொழில் தொடங்கி இலாபம் பெற நேரும்.

அடுப்பு எரியாமல் அதனுள் பூனையோ அதன் குட்டிகளோ இருப்பதாகக் காண நேரின் ஆரோக்கியக் கேடும், செய்தொழிலில் நஷ்டமும் உண்டாகும்.

எரியும் அடுப்பு அணைத்து அதன் கரியையோ சாம்பலையோ காணநேரின் எதிர்பாராத நஷ்டம் ஏற்பட்டு அதனால் துன்புறப் போவதை உணர்த்தும்.

அழுக்கு ஆடை அணிந்திருப்பதாகக் கண்டால் பலவித
சங்கடங்கள் நேர இருக்கின்றன என அறியலாம்.

வெண்பட்டு ஆடை உடுத்தியிருப்பதாகக் காண நேரின் பெண்களின் சேர்க்கையும் அதனால், இலாபமும் நேரும் தன்னை யாரோ ஏமாற்றிவிட்டதாகக் கண்டால் வஞ்சகத்தால் தன்னிடமுள்ள பொருள் பறிபோகப் போகிறது என்பதை அறியலாம்.

* ஒரு நூதமான இயந்திரத்தைக் கண்டால், தான் மேற்கொள்ளப் போகும் செயலால் வெற்றியும் இலாபமும் ஏற்படும்.

* அந்த இயந்திரத்தைத் தானே இயக்குவதாய்க் காண நேரின், செய்யப்போகும் தொழிலில் நிச்சயம் அபிவிருத்தியும் இலாபமும் மிகும். அந்த இயந்திரம் இயங்கிக் கொண்டிருப்பதாகக் கண்டால் தான் நினைக்கும் காரியத்தைச் செய்வதால் நன்மை பெறலாம்.

* ஆனால் இயந்திரம் ஓடிக்கொண்டே இருந்து நின்று போவதாகக் கண்டால், செய்யும் தொழில்கூட பாழ்படப் போகிறது என்பதை அறியலாம்.

* ஆண் பெண் கலந்த கூட்டத்தைக் கண்டால் செய்தொழிலில் விருத்தி உண்டாகும்.

* நீர்க்குமிழியைக் கண்டால் சிறு சிறு நஷ்டங்கள் ஏற்படும். பிறர் தன் மீது வீண்பழி சுமத்துவர். எலுமிச்ச மரத்தைக் காண்பது நல்லது. அதில் பழங்கள் மிகுந்து தொங்குவதாகக் காணப்பட்டால் உடனடியாக எதிர்பாராத பணவரவு ஏற்படும்.

* அதுவே பழமாக இல்லாது காயாக இருப்பின் பண வரவு ஏற்படும். ஆனால் மிகவும் தாமதமாய்க் கிடைக்கக்கூடும்.

* எலுமிச்ச மரம் உலர்ந்து போய் விட்டதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். தெளிந்த நீரைக்காணின் வாழ்க்கையில் கஷ்டங்கள் நீங்கப் போவதையும், நல்ல காலம் தொடங்குகிறது என்பதையும் அறியலாம் பேனா அல்லது எழுதுகோல் எதையேனும் கண்டால் கடிதம் மூலமாக பொருள் வரவு ஏற்படும்.

* அரண்மனையைக் கண்டால் பொருள் விருத்தியாகும்.

* அரண்மனைக்குள் தாமே செல்வதாய்க் கான நேரின், உற்றார் உறவினர்களால் சந்தோஷம் மிகுதியாகும். செல்வ நிலையும் உயரும்.

* வயதில் மூத்தவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வது போன்று கனவு கண்டால் ஜீவன மேன்மையும் பொருள் சேர்க்கையும் ஏற்படும்.

* எலுமிச்சம்பழத்தைக் காண்பது நல்லது. தனக்கு ஒருவர் கொடுப்பதாகக் கண்டால் தொழிலில் விருத்தி, சகல பாக்கியங்களும் பெருகும்.

*அப்பழத்தைச் சாப்பிடுவதாகக் கண்டால் நல்ல தன்று.

குடும்பத்தில் ஏதோ ஓர் அசம்பாவிதம்
நேரப் போவதைக் குறிக்கும்.

காய்ச்சல், நோய் ஏற்படும்.

* காதுகளைக் கண்டால் குடும்பத்தில் கலகம் ஏற்பட்டு அதனால் கஷ்டம் நேரும்.

* தனக்கு காதுநோய் வந்துவிட்டதாகக் கண்டால் கூட குடும்பத்தில் ஏற்படப் போகும் கலகத்தின் அறிகுறியே ஆகும்.

* சாவிக் கொத்து தன்னிடம் இருப்பதாகக் கண்டால் குடும்பத்தில் பற்று அதிகமாகும். தொழிலில் மேன்மை, பொருள் சேர்க்கை மிகும்.

* சாவிக் கொத்து காணாமல் போனதாகக் கண்டால் பலவித கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக நேரும். நம்பிக்கை மோசம் போவார்.

* ஒரு கதவையோ பூட்டையோ திறப்பதாகக் கண்டால் பிறருக்கு உதவுவதன் மூலமாகப் புகழ் பெறுவர் உண்மை:

நமது ஆழ்மனதில் புதைந்துள்ள நிறைவேறாத ஆசைகள், மூளையில் பதிவான சமீபத்திய நிகழ்வுகள்தான் தூக்கத்தில் கனவுகளாக வருகின்றன. இதற்கு பலன்களாக நாம் எடுத்துக்கொள்பவை, நம்மால் ஏற்படுத்தபட்டவைதான்.
அவற்றில் உண்மை கிடையாது.

`அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பதுபோலத்தான், கனவுகள் தொடர்பான பலன்களும்!

நல்ல பலன் ஏற்படும் என்று நம்பினால் நல்ல பலனை அடையலாம் அல்லது அதை நெருங்கலாம். அதேபோன்றுதான் தீயபலனுக்கும்!

பாம்பு கனவில் வந்தாலும் பயப்பட வேண்டாம்.

பாலூட்டி இன மிருகமே இன்றைய மனித இனத்தின் முந்தைய நிலை. லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் பாலூட்டிகளுக்கும், பாம்பு போன்ற ஊர்வனவற்றிற்கும் பயங்கரமான சண்டைகள் நடந்தன.

அந்த பழைய பகை உணர்வுகளின் நினைவுகள் மனித இனத்தின் மரபணுக்களில் அழுத்தமாக பதிந்து போனதுதான் மேற்படி கனவுக்கு காரணம். கனவு பற்றிய மேலும் சில உண்மைத் தகவல்கள்: பார்வை இல்லாதவர்களுக்கு வரும் கனவுகளில் உருவங்கள் இடம்பெறுவதில்லை.

சத்தம் மட்டுமே வரும். வளர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமின்றி
கைக் குழந்தைகளும் கனவு காண்கின்றன.

ஏன் தாயில் வயிற்றில் வளரும் குழந்தைக்கு கூட கனவு வருகிறது.

மனிதர்களை போன்று மிருகங்களும் கனவு காண்கின்றன

கனவில் கண்டு மகிழ்ந்த காட்சியும் கண்முன்னே தெரியும் வாசகங்களும் நிஜம் பெற சரியான திட்டம் தேவை.

கனவில் யானை வந்தால் அரசாங்க உதவி கிடைக்கும்.

நீண்ட நாட்களாக நடந்து வந்த வழக்கில் தீர்ப்பு கிடைக்கும்.

யானை மாலை போடுவது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும்.

பிரிந்த கணவன் மனைவி இடையே உறவு ஏற்படும்.

இளம் தலைமுறையாக இருந்தால் திருமணம் நடக்கும்.

விநாயகப்பெருமானை வணங்கிவிட்டு தூங்கசெல்லுங்கள்.

விநாயகர் அகவலை காலை, மாலையில் பாராயணம் செய்யுங்கள்.

ஓம் சக்திவிநாயகநம என்ற நாமத்தை குறைந்தபட்சம்
ஒரு நாளைக்கு 108 முறை சொல்லுங்கள்.

நிச்சயம் நல்லபலன் உண்டாகும்.

கனவில் யானையைப் பார்ப்பது செல்வவளத்துக்கும் அறிகுறியே.

கனவுகளுக்கான பலன்கள் பழமையான சாஸ்திரங்களில் மட்டுமே உள்ளது.

நள்ளிரவில் ஒரு மணிக்கு கனவு கண்டால் ஒரு வருடம்
கழித்து பலன் கிடைக்கும்.

இரண்டு மணிக்கு கனவு கண்டால் மூன்று மாதத்தில் பலன் கிடைக்கும்,

அதிகாலை கனவு உடனடியாக பலிக்கும் என்று கனவு சாஸ்திரம் கூறுகிறது.













































பித்ரு தோஷம்

ராதே கிருஷ்ணா  02-06-2014





From the album: Timeline Photos
By ஆன்மீக தகவல்கள்
பித்ரு தோஷம்

ஒருவரின் ஜாதகத்தில் 1, 3, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் பாம்பு கிரகங்களான ராகு, கேது இருந்தாலும், சூரிய சந்திரர்கள் ராகு அல்லது கேது கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலும் பித்ரு தோஷம் உள்ள ஜாதகமாக கருதப்படும். நிழல் கிரகங்களான் ராகுவும், கேதுவும் நமது முன்வினைகளை பிரதிபலிப்பவை. மேலும் ராகு தந்தை வழி பாட்டனாரைக் குறிக்கும் கிரகம் ஆகும். அதே போல் கேது தாய் வழி பாட்டனாரைக் குறிக்கும கிரகம் ஆகும். இந்த இரண்டு கிரகங்களும், ஒருவர் செய்த முன்வினை கணக்கினை தெளிவாக காட்டுபவை ஆகும்.

ராகுவும், கேதுவும் அவரவர் முன்னோர்கள் செய்த பாவ-புண்ணிய கணக்கினை தெளிவாக காட்டுவதோடு மட்டுமல்லாமல் அந்த பாவங்களை தீர்க்க முடியுமா அல்லது முடியாதா என்பதையும் காட்டும் கிரகங்கள் ஆகும். ராகு மற்றும் கேது ஆகிய இரண்டு பாம்பு கிரகங்களே கிரகங்களில் மிகவும் வலிமையானவை. ஆனால் தற்கால சோதிடமோ ராகு மற்றும் கேது ஆகியவற்றிற்கு பலமில்லை என்று கூறுகின்றன். ராகுவை ஞான-போக காரகன் என்றும் கேதுவை மோட்ச காரகன் என்றும் அழைப்பர்.

முன்பு குறிப்பிட்டவாறு ஜாதகத்தில் ராகு, கேது அமைந்திருந்தால் ஜாதகரின் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை, குழந்தைப்பேறு இவற்றில் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. இந்த பிரச்சனைகளுக்கான காரணம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களே. ஒருவர் தனது முற்பிறவிகளில் அவர் செய்த பாவங்களே அவருடைய இப்பிறவியில் ஜாதகத்தில் தோஷங்களாகவும், முற்பிறவிகளில் செய்த புண்ணியங்களே அவரது ஜாதகத்தில் யோகங்களாகவும் அமைகின்றன.

அதுமட்டுமல்லாமல் நமது முன்னோர்களிடமிருந்து இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை பெறுவதால் நம் முன்னோர்களின் பாவ-புண்ணியங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியை நாம் அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி ஆகும். நாம் நமது முன்னோர்களின் பாவத்தினை அனுபவித்தால் நம் முன்னோர்களின் புண்ணியத்தினையும் அனுபவித்தே ஆக வேண்டும். நம் முன்னோர்களின் பாவமும் நம்முடைய பாவமும் சேர்ந்து தலைமுறை தலைமுறைகளாக நம்மை பின்தொடர்கின்றன என்பதே உண்மை ஆகும்.

அவ்வாறு நாம் பாவங்களை அனுபவிக்கும் காலத்தில் ஒரு சில நன்மைகளும் நமக்கு விளையும். அவை நம்முடைய புண்ணியம் மற்றும் நம் முன்னோர்கள் செய்த புண்ணியத்தினால் விளையும் நன்மைகள் ஆகும். நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முன்னோர்களின் பாவத்தினையும், நம்முடைய பாவத்தினையும் அழித்து நம் முன்னோர்கள் மற்றும் நம்முடைய ஆன்மாக்கள் நற்கதி அடையுமாறு செய்தல் வேண்டும். நமது பித்ருக்களின் ஆன்மா நற்கதி அடைய தக்க பரிகாரங்களை மேற்கொள்ளல் வேண்டும்.

பித்ரு தோஷம் எதனால் வருகிறது?

பித்ரு தோஷம் நாம் நம் முற்பிறவிகளில் செய்த பாவங்களினாலும், நமது முன்னோர்கள் செய்த பாவங்களினாலும் ஏற்படுகிறது.

ஒரு ஆண் தன் முற்பிறவியில் தனது மனைவியை கவனிக்காமல் வேறு பெண்ணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது மனைவியால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒரு பெண் தன் முற்பிறவியில் தனது கணவனை கவனிக்காமல் வேறு ஆணின் மோகம் கொண்டு அலைந்ததால் இப்பிறவியில் தனது கணவனால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் தனது பெற்றோர்களை கவனிக்காமல் இருந்தால் பெற்றோர்கள் இடும் சாபம் மறுபிறவியில் பித்ரு தோஷமாக மாறுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளுக்கு துன்பம் இழைத்திருந்தால் இப்பிறவியில் தனது சகோதர / சகோதரிகளால் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

ஒருவர் தன் முற்பிறவியில் முறையற்ற கருச்சிதைவு செய்திருந்தால் இப்பிறவியில் மகப்பேறு இல்லாமல் சந்ததி விருத்தியடையாமல் போகும் நிலையும் அமைகிறது.

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.

நம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்கும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.

நமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும். இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.

ஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும். இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.

எனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.

வருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.

பித்ரு தோஷம் என்பது ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.

பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.

நன்றி :ஆன்மீகச்சுடர் செந்தில் குமார்



மீளாத நரகத்தை கொடுக்கும் பாவகாரியங்கள் எவை?


From the album: Timeline Photos
By Thiruvaiyaru Shiva Sewa Sangh
மீளாத நரகத்தை கொடுக்கும் பாவகாரியங்கள் எவை?

01. தர்மம் கொடுப்பவர்களைத் தடுப்பது.
02. கோயிலுக்கு செல்பவரைப் பார்த்து பரிகாசம் செய்தல்.
03. பொய்சாட்சி கூறுதல்.
04. நன்றி மறத்தல்.
05. புறம் கூறுதல்.
06. தனக்கு உரிமை இல்லாத பொருட்கள் மீது உரிமை கொண்டாடுதல்.
07. மற்றவருக்கு உரிய பொருட்களை அபகரித்தல்.
08. மாற்றான் மனைவியின் மோகம் கொள்ளுதல், அபகரித்தல்.
09. பெரியவர்களை, தாய், தந்தையை தூசித்தல்.
10. குருமார்களை நிந்தித்தல்
11. பொறாமை கொள்ளுதல்.
12. மற்றவருக்கு தீங்கு இழைத்தல்
13. ஒருவனுக்கு ஒரு பொருளை தருவதாக கூறி பின் தராதிருத்தல்.
14. ஒரு பொருளை தானம் கொடுப்பது போல கொடுத்து பின்பு அபகரித்தல்.
15. மதம் மாறுதல்.
16. தாய், தந்தையர் சொல் மீறுதல்.
17. வீட்டுக்கு நெருப்பு வைத்தல்.
18. கோயில் சொத்தைத் திருடுதல்.
19. பிறரை ஏமாற்றுதல்.
20. கோவில் குளங்களை மூடுதல்.
21. பசுவைக் கொலை செய்தல்.
22. அந்தணரை அடித்தல்.
23 வேதம் ஓதுபவரைப் பழித்தல்.
24. அன்னத்தை மிதித்தல்.





















































நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!

ராதே கிருஷ்ணா 02-06-2014




  • Ranga Rao Narasimhan


From the album: Timeline Photos
By Mona Sithar
நம் முள்ளந்தண்டில் 18 படிகள்!

முதலில் சரியை, கிரியை நெறியில் பதினெட்டு படி உணர்த்தும்
தத்துவம் :-

காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இது சரியை, கிரியை நெறியில் உள்ள விளக்கமாகும்.

ஆனால் யோகநெறியும் தாண்டிய ஞானநெறியில் உடலையே ஆலயமாகப் பாவித்து, இறையுடன் இரண்டறக் கலந்து முற்றுப்பெற்ற ஞானி / சித்தராவர். நமது முள்ளந்தட்டில் 18 கோர்வைகள் உண்டு. விந்தானது முள்ளந்தட்டிலுள்ள பதினெட்டுப் படிகள் தாண்டி கழுத்தைத் தாண்டும்போது அமிர்தமாக மாறி அன்னாக்கில் சிந்தும்போது நம் பொய்யுடல் ஜோதிவடிவான மெய்யுடலாகும்.

ஒம் நம சிவாய.திருச்சிற்றம்பலம். தில்லைஅம்பலம். சிவாய நம, சிவாய நம, சிவாய நம, சிவாய நம, நமசிவாய, நமசிவாய நமசிவாய நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய, நமசிவாய நமசிவாய, நமசிவாய.நமச்சிவாயா சிவசிவாய சிவ சிவாய நம ஓம் ஹரசிவாய சிவ சிவாய நம ஓம் தொடர்புக்கு:ஜல்லியார் செல்வம்(எ)G .அத்தியப்பன் செல் எண் :07708557755





















































ஜோதிடம்

ராதே கிருஷ்ணா 02-06-2014


ஜோதிடம் 



From the album: Timeline Photos
By Varagooran Narayanan
“கல்யாண விஷயத்ல, பொண், பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம, குலம், கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும்"

ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார்.

“பெரிய குடும்பம், வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படி ரொம்ப கொறைச்சல், ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார்.

“நீ…. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?”

“இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்”

“நீ அங்கே இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு இரு. பரம்பரையா அம்பாளை பூஜை பண்ணின குடும்பம். மாட்டுக் கொட்டகைல இருங்கோ. அதோட, இன்னொண்ணும் கேளு. எல்லா க்ரஹங்களையும் நன்னா. திட்டறயோன்னோ ! ….உங்க ஜாதகத்ல குரு நீசன், சனி பாபி, புதன் வக்கிரம்!…இப்பிடியெல்லாம் வாயால சொல்லக் கூடாது”.

“குரு…ங்கறது பெரிய கிரகம். தக்ஷிணாமூர்த்தி ஸ்வரூபம்….அவரைப் போய்நீசன், பாபி, வக்கிரம்..ன்னெல்லாம் திட்டக் கூடாது. சனி, சூர்யனோட புத்திரன். ஈஸ்வரபட்டம் வாங்கிண்டவர். அவரைப் போய் பாபிங்கறே! கிரகங்கள் சரியான எடத்ல இல்லை…..கால பலன் சரியில்லைன்னு சொன்னா போறுமே!”

“பொண்பிள்ளை ஜாதக பொருத்தம் பாக்க வரவா கிட்டே “பொருத்தமில்லை” ன்னு நிர்தாட்சண்யமா சொல்ல வேணாமே! பொண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும், பையனுக்கு புத்திர பாக்கியம் கேள்விக் குறிங்கற மாதிரி சொல்லலாம். முப்பது வயசாகியும் நெறைய பொண்கள் கல்யாணம் ஆகாம இருக்கா. அப்பிடிப்பட்டவாளுக்கு வரன், ஜாதகபொருத்தம் பாக்க வந்தா, முடிஞ்சவரை நிராகரிக்காம பதில் சொல்லணும்”.

“கல்யாண விஷயத்ல, பொண், பையன் ஜாதகப் பொருத்தத்துக்கு ஜாஸ்தி importance குடுக்காம, குலம், கோத்ரம், மனப் பொருத்தம் இருந்தா போறும். பழங்காலத்ல ஜாதகப்பொருத்தம் அவ்வளவு முக்யமா இருந்ததில்லை”.

ஜோஸ்யர் திருப்தியோடு, “இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்” என்று சொல்லி பிரசாதம் வாங்கிக் கொண்டு போனார்





















































விஜயபாரதம் 7.9. 2012

 ராதே கிருஷ்ணா 02-06-2014





From the album: Timeline Photos
By விஜய பாரதம்
எனக்கு சம்ஸ்க்ருதம் தெரியாது. சம்ஸ்க்ருத அறிஞர்கள் சபை மேடையில் நான் இடம்பெறுவது “இரும்படிக்கும் இடத்தில் ஈக்கு என்ன வேலை” என்ற கேள்வியைத்தான் எழுப்பும். படிக்கும் காலத்தில் சம்ஸ்க்ருதம் கற்க எனக்கு வாய்ப்பு இருக்கவில்லை. மதுரையில் 10 ஆண்டுகள் ஒரு வைணவப் பெரியாரிடம் சம்ஸ்க்ருதம் கற்றேன். அது 1953ல். அதோடு சரி. இளமையில் வறுமை காரணமாக மேலும் சம்ஸ்க்ருதம் படிக்க முடியாமல் போனது. ஹிந்தி மொழியையே படிக்காதே என்ற சூழலில் சம்ஸ்க்ருதம் படிப்பது எப்படி? மொழி வெறுப்பு நிறைந்த கெட்ட காலம் அது. ஆனால் எனக்கு சம்ஸ்க்ருதத்திடம் வெறுப்பு இருந்ததே கிடையாது. “இந்த பிறவியில் எனக்கு சம்ஸ்க்ருதம் கிடையாது” என்பது மீனாட்சி அம்மையின் திருவுள்ளம் போலும்.

தமிழ் ஒரு கண் என்றால் சம்ஸ்க்ருதம் மற்றொரு கண். இரண்டு கண்களும் முக்கியம். “பார்வை” சரியாக இருக்க வேண்டுமானால் இரண்டு கண்களும் தேவை. இந்திய மண்ணில் விஷயம் தெரிந்தவராய் உருவாக ஒருவருக்கு இந்த இரண்டும் வேண்டும்.

எம்.ஏ. (தமிழ்) படிக்கும் போது, “வட எழுத்து நீக்கி வருவது சொல்” என்ற பொருள்பட இலக்கண சூத்திரம் படித்தேன். அதாவது தொல்காப்பியருக்கு முன்பே தமிழில் வடமொழி இருந்திருக்கிறது. எனவே தான் “அதை நீக்கி” என்று கூறியிருக்கிறார். ஆக, தமிழில் சம்ஸ்க்ருதம் இருந்தது. பிற்காலத்தில் தேவநேய பாவாணர், பரிதிமாற் கலைஞர் உள்ளிட்டோர் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தைத் தவிர்க்க “சமக்கிரதம்”, “சமற்கிரதம்” என்றெல்லாம் சொல்லிக் காட்ட வேண்டி இருந்தது. காரணம் “ஸ்” என்கிற வடமொழி எழுத்தாம்.

அது சரி “வடமொழி” என்றால்? சிலர் வடக்கிலிருந்து வந்ததால் என்று விளக்கம் சொல்வதுண்டு. ஆனால் வட (vata) என்ற சொல்லுக்கு ஆலமரம் என்று பொருள். ஆலின் கீழ் அமர்ந்து தான் உயரிய ஞான உபதேசங்கள் அருளப் பட்டன. அவற்றைக் கொண்ட மொழி; எனவே வடமொழி என்பேன். இது “பிரிட்டானிக்கா” கலைக்களஞ்சியம் தந்துள்ள விளக்கம். இது நமக்குத் தெரியாமல் போயிற்றே! அவன் சொல்லி நாம் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது பாருங்கள்!!

ஏகப்பட்ட இலக்கியங்கள் உடையது சம்ஸ்க்ருதம். எனவே அது ஞானமொழி. ராமாயணமும் மகாபாரதமும் சான்று. உலகில் மலையும் நதியும் உள்ள காலமெல்லாம் ராமாயணம் நின்று நிலைக்கும். “நல்லான் ஒருவன் வேண்டுமென்றால் ராமன் அங்கே இருக்கிறான்” என்பதல்லவா பழமொழி? சங்க நூல்களிலும் ராமாயண மகாபாரதம் காட்சி தருகிறது. புறநானூற்றுப் புலவர்களின் பெயர்களையே பாருங்களேன்! வான்மீகியார், நெய்தற்காகி, பாரதம் பாடிய பெருந்தேவனார், கலைக்கோட்டு ஆசான்… சம்ஸ்க்ருத இலக்கியம் பெரிய விஷயங்களைப் பேசுவது, அந்த ஞான அலை தமிழுக்குள் பாய்ந்திருக்கிறது. வள்ளுவர் சமஸ்க்ருத இலக்கியம் படித்திருப்பார். “நிரம்பிய நூல்”, “பல கற்றும்” போன்ற அவர் வார்த்தைகளைப் பாருங்கள். அவற்றைப் படித்திராமல் பொத்தம் பொதுக்கென பேசுபவர் அல்ல அவர். பிறரையும் “படி” என அறிவுறுத்துகிறார்.

தமிழ் போலவே சமஸ்க்ருதமும் செம்மொழி. ஆக, சம்ஸ்க்ருதம் படிப்பது தமிழுக்குத் தொண்டு. இப்படிப் பலரும் அறிந்த மொழி, அனைவரும் பாராட்டும் மொழி, பதவிப் போட்டி காரணமாக அனைவரும் படிக்க முடியாமல் செய்யப் பட்டிருக்கிறது. ஆனால் எல்லாரும் சம்ஸ்க்ருதம் கற்கணும். குறைந்த பட்சம் – ஆம் – குறைந்த பட்சம் பகவத் கீதையாவது படிக்கணும். சம்ஸ்க்ருதம் படிக்க வாய்ப்புக் கிடைத்த ஒவ்வொருவரும் புண்ணியவான். அன்னவர்கள் அனைவரையும் போற்றுகிறேன்.

(2012ம் ஆண்டு ஆகஸ்டு 19 அன்று சென்னை சம்ஸ்க்ருத பாரதி கருத்தரங்கில் அவர் நிகழ்த்திய உரையில் இருந்து).

விஜயபாரதம் 7.9. 2012