ராதே கிருஷ்ணா 28-12-2018
இராமகிருஷ்ணர்
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் (பெப்ரவரி 18, 1836 - ஆகஸ்ட் 16, 1886) எனப் பரவலாக அறியப்படும் ஸ்ரீகதாதர சட்டோபாத்யாயர் 19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த ஆன்மீகவாதிகளுள் ஒருவர். இவர் விவேகானந்தரின் குருவாவார். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
பொருளடக்கம்
வாழ்க்கை
இளமை
கதாதர், க்ஷூதிராம் (பிறப்பு கி.பி.1775)[1] - சந்திரமணிதேவி தம்பதியினருக்கு நான்காவது குழந்தையாக மேற்கு வங்காளத்திலுள்ள காமார்புகூர் எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். சிறு வயதில் ஆடல் பாடல்களிலும், தெய்வங்களின் படங்கள் வரைவதிலும், களிமண்ணில் சிலைகள் செய்வதிலும் ஆர்வமாயிருந்த கதாதருக்கு கணிதம் பிடிக்காத பாடமாய் இருந்தது. கிராமத்தின் செல்லப்பிள்ளையாக அவர் விளங்கினார். சற்று வளர்ந்தவுடன் பள்ளிப்படிப்பு பொருள் ஈட்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதாக கருதிய அவர் பள்ளி செல்ல மறுத்தார். இயற்கையை ரசிப்பதிலும், பக்திப் பாடல்கள் பாடுவதிலும், புராணக் கதைகள் கேட்பதிலும், நண்பர்களுடன் விளையாடுவதிலும் பொழுதைக் கழித்தார். சிறு வயதிலேயே ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தார்.
கதாதரர் மிகவும் சிறியவராக இருந்த போது அவரது தந்தை காலமாகி விட்டதால் தாய் சந்திரமணி, அண்ணன் ராம்குமார் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்து வந்தார். கதாதரை விட ராம்குமார் ஏறக்குறைய முப்பத்தொரு வயது மூத்தவர்.
ராம்குமாரின் திருமணம் கி.பி.1820 இல் நடந்தது.கி.பி.1849ஆம் ஆண்டில் ராம்குமாரின் மனைவி அழகிய ஆண்மகவு ஒன்றை ஈன்றாள். மறுகணமே அதன் முகத்தைப் பார்த்தவாறு உயிர் நீத்தாள். அந்தக் குழந்தைக்கு அட்சயன் என்று பெயரிடப்பட்டது. அதன்பின் ராம்குமாரை வறுமையும், துயரமும் வாட்டின. மனைவியின் நினைவுகளில் இருந்து விடுபடவும், பொருளீட்டவும் குடும்பப் பொறுப்பை சகோதரர் ராமேசுவரரிடம்(பிறப்பு கி.பி.1826) ஒப்படைத்துவிட்டு கல்கத்தா சென்றார். அங்கு ஜாமாபுகூர் என்னுமிடத்தில் சமஸ்கிருத பாடசாலை ஒன்றைத் தொடங்கி சிறுவர்களுக்கு கல்வி கற்பிக்கலானார். அத்துடன் திகம்பர மித்ரர் மற்றும் ஓரிரு செல்வந்தர்களின் வீட்டில் தினசரி பூஜையும் செய்து வந்தார். பள்ளியிலிருந்து மிகவும் குறைந்த வருவாய்தான் அவருக்குக் கிடைத்தது.
ராமேசுவரர், கதாதரனை மிகவும் நேசித்த போதிலும் அவனது படிப்பைப் பற்றி மட்டும் எந்தக் கவலையும் படவில்லை. கதாதரனும் தமது பள்ளி நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாடகக்குழு அமைத்து நண்பர்களுக்கு பயிற்சி அளித்தான்.
கல்கத்தாவில்
கல்கத்தாவில் இருந்த ராம்குமாரின் பள்ளியில் அதிக மாணவர்கள் சேர்ந்து பயில ஆரம்பித்திருந்தனர். வருடத்திற்கொரு முறை குடும்பத்தினருடன் தங்க வரும் ராம்குமார், கதாதரனின் போக்கில் ஏற்பட்டிருந்த மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டார். எனவே தாயுடனும் ராமேசுவரருடனும் கலந்து பேசி கதாதரனை கல்கத்தா அழைத்துச் சென்றார். கதாதரன் அவருடன் சென்றால் பாடசாலையை கவனிக்க உதவி செய்யலாம், மற்றவர்களுடன் படிக்கவும் செய்யலாம் என்று முடிவு செய்தார். ஸ்ரீராமகிருஷ்ணரின் பதினேழு வயதில் அவர் கல்கத்தா சென்றார். அண்ணனுக்கு உதவியாக வீடுகளில் சென்று பூஜைகளைச் செய்ததுடன் அவரிடம் சிறிது கல்வியும் கற்று வந்தார் கதாதரர். இவ்வாறுஅங்கு கதாதரர் 1852 முதல் மூன்று ஆண்டுகளைக் கழித்தார். அடுத்த இரண்டு வருடங்களில் ராம்குமாரின் வருவாய் குறையத் தொடங்கியது.
தட்சிணேசுவரத்தில்
அச்சமயம் மீனவக் குடும்பத்தில் பிறந்த ராணி ராசமணி கட்டிய தட்சிணேசுவரம் காளி கோயிலில் அவர் அன்னைக்கு அன்ன நைவேத்தியம் செய்வதை சமுதாயம் ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், வேதபாடசாலையில் இருந்த ராம்குமார் பிரச்சனைக்கு தீர்வு கூறினார். இதன்பின் ராணி ராசமணி கட்டிய கோவிலில் ராணியின் வேண்டுகோளின்படி ராம்குமார் அர்ச்சகராகப் பொறுப்பேற்றார்.
ராம்குமாரின் விருப்பப்படி தட்சிணேசுவரத்தில் இருந்து வந்தார் கதாதரர். ராணியின் மருமகனான மதுர்பாபு, கதாதரரைக் கண்டது முதலே ஈர்க்கப்பட்டு அவரிடம் அன்னை காளியின் திருவுருவத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க எண்ணினார். ஒருமுறை மதுர்பாபு நேரடியாக பூஜைப்பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டினார். ஆபரணங்களின் பொறுப்பை ஹிருதயர் ஏற்றுக்கொள்வதானால் தாம் பூஜைப் பணியை ஏற்றுக்கொள்வதாக கதாதரர் கூறினார். இது நிகழ்ந்த ஆண்டு 1855.ஏதோ வேலை நிமித்தமாக கல்கத்தாவின் வடக்கிலுள்ள சியாம்நகர் முலாஜர் என்ற ஊருக்கு சென்ற ராம்குமார் அங்கேயே காலமானார். காளி கோயிலின் ஒரு மூலையில் கங்கைக் கரையின் அருகில் கதாதரர் தங்குவதற்காக ஒரு அறை ஒதுக்கப்பட்டது. இங்கு தான் அவர் தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்தார்.
தட்சிணேசுவரம் காளி கோயில் பவதாரிணி காளிக்கு தினந்தோறும் பூசை செய்து வந்த ஸ்ரீராமகிருஷ்ணருக்கு அன்னையை நேரில் காணும் ஏக்கமும் ஆவலும் தீவிரமாகி என்ன செய்தால் அன்னையின் திருக்காட்சி கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே இருந்தார். தனக்கு காட்சி அளிக்குமாறு காளியிடம் மனமுருக பிரார்த்தனை செய்தார். தினமும், இரவு நேரங்களில் கோயிலின் அருகில் இருந்த பஞ்சவடி என்ற காட்டுப்பகுதியில் காளியை நினைத்து தியானம் செய்தார். எனினும் அவருடைய முயற்சிகளுக்குப் பலனில்லை. ஒரு நாள் பொறுமையை இழந்த அவர், காளி சிலையின் கைகளில் இருந்த வாளினால் தன்னைத்தானே கொல்ல முயற்சித்தார். உடனே அவர் சுயநினைவு இழந்ததாகவும், ஒரு பேரானந்த ஒளி அவரை ஆட்கொண்டதாகவும் அவர் பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த காட்சிக்குப் பிறகு ஸ்ரீராமகிருஷ்ணரின் நடவடிக்கைகள் அசாதாரணமாக இருந்தது. இதைக்கண்ட அவர் தாயார் அவருக்கு பித்தம் பிடித்து விட்டது என்றெண்ணி, அவருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என நினைத்தார். ஸ்ரீராமகிருஷ்ணரோ, இதற்கு மறுப்பளிக்கவில்லை. மாறாக, கமார்புகூரின் அருகில் இருந்த ஜெயராம்பாடி என்ற ஊரில் சாரதாமணி என்ற ஐந்து வயது பெண் இருப்பதாகவும், அப்பெண்ணே, தன்னை மணம் புரிய பிறந்தவள் என்று கூறினார். அதன்படியே அவர் திருமணம் நடந்தது. அனைத்துப் பெண்களையும் காளியின் வடிவங்களாக நோக்கும் ஸ்ரீராமகிருஷ்ணருக்கு, அவர் மனைவியும் விதிவிலக்கில்லை. ஒருநாள் அவர் மனைவியை காளியாக நினைத்து அலங்கரித்து, பூசை செய்து, அவர் கால்களில் வீழ்ந்து வணங்கினார்.
ராணி ராசமணி 1861ஆம் ஆண்டு இறுதியில் காலமானார். அதன் பிறகு ஒருநாள் பைரவி பிராம்மணி என்ற தாந்தரிக பெண்மணி தட்சிணேசுவரத்திற்கு வந்தார். ஸ்ரீராமகிருஷ்ணர் அவரிடம் தாந்தரிக சாதனைகள் கற்றுத் தேர்ந்தார். பின்னர் தோதாபுரி என்பவரிடம் அத்வைத வேதாந்தம் கற்ற ஸ்ரீராமகிருஷ்ணர், ஆறு மாதங்கள் நிர்விகல்ப சமாதியில் திளைத்திருந்தார். அதன் பிறகு ராமர், கிருஷ்ணர், ஆகியோரைக் குறித்து பிரார்த்தித்து சீதை, ராதை ஆகியோருடைய காட்சி கிடைத்ததாகக் கூறியுள்ளார். மேலும், கிறித்தவ, மற்றும் இஸ்லாமிய மார்க்கங்களிலும் சாதனை புரிந்து இயேசு, நபிகள் ஆகியோரின் காட்சிகளையும் தாம் கண்டதாக அவரே பின்னர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதி நாட்கள்
ஸ்ரீராமகிருஷ்ணரின் இந்த சாதனைகள் பற்றி கேள்விப்பட்டு அப்போது கல்கத்தாவில் இருந்த பலர் அவரைப் பார்க்க வந்தனர். இவர்களுள் நரேந்திரநாத் தத்தா எனப்பட்ட சுவாமி விவேகானந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்கள் செல்லச் செல்ல, அவரைப் பார்க்க வருவோரின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே சென்றது. அவர் நாள் முழுவதும் அவர் சீடர்களுடன் ஆன்மீகம் பற்றிய விவாதங்கள் புரிவது சர்வசாதாரணமானது. அப்போது அவரை வந்து அடிக்கடி சந்தித்த மகேந்திரநாத் குப்தா, தினமும் அவர் கூறுபவற்றையும், அவர் புரிந்த விவாதங்களைப் பற்றியும் வீட்டுக்குச் சென்றவுடன் தன் தினக்குறிப்புப் புத்தகத்தில் குறிப்பெடுத்துக் கொண்டார். இந்த குறிப்புகளே, பின்னாட்களில் The Gospel of Sri Ramakrishna என்ற பெயரில் தொகுக்கப்பட்டது. இது தமிழில் ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுத மொழிகள் என்ற பெயரில் மூன்று பாகங்களாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் கடைசி நாட்களில் தொண்டைப் புற்றுநோய் அவரைத் தாக்கியது. அவருடைய சீடர்கள் அவரை கல்கத்தாவின் அருகில் உள்ள காசிப்பூர் என்ற இடத்தில் தோட்டவீட்டில் வைத்து வைத்தியம், சேவை செய்தனர். 1885 டிசம்பர் 11ஆம் நாளிலிருந்து 1886 ஆகத்து 15 வரை இங்கு தங்கினார். ஸ்ரீராமகிருஷ்ணரின் 1886 ஆகத்து 16 அன்று மகா சமாதி அடைந்தார்.
175 ஆவது ஜெயந்தி விழா
ராமகிருஷ்ணரின் 175 ஆவது ஜெயந்தி விழா, 2012 ஆம் ஆண்டு பிப்ரவரி 22 முதல் பிப்ரவரி 26 வரை சென்னை மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர் ; ஸ்ரீராமகிருஷ்ண வரலாறுகளின் ஆதார நூல் 1; சுவாமி சாரதானந்தர் ஸ்ரீராமகிருஷ்ண மடம்,சென்னை,பக்கம் 27
வெளி இணைப்புகள்
விக்கிமீடியா பொதுவகத்தில்இராமகிருஷ்ணர்என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: இராமகிருஷ்ணர் |
- ராமகிருஷ்ணரைப் பற்றிய தமிழ் புத்தகங்கள்
- ராமகிருஷ்ணர், அவர் கூற்றுகள் பற்றி மாக்ஸ் முல்லர் புத்தகம்
- ராமகிருஷ்ண கதாம்ரிதம்
'இவர்களிடம் எப்போதும் கவனமாக இருங்கள்' பரமஹம்சரின் வாழ்வியல் ரகசியங்கள்..!
நாகரிக வாழ்க்கையில் மனிதன் அனைத்தையும் செய்யக்கூடிய அளவுக்குத் திறமை வாய்ந்தவன்தான். ஆனால், இன்றும் அவன் தடுமாறும் விஷயம், பிறரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு பழகவேண்டும் என்பவைதான். அதற்கு அவன் முதலில், மகான்களின் உபதேசங்களுக்குச் செவிசாய்க்க வேண்டும். 'உண்மையானவர்கள், குடிகாரர்கள், குழந்தைகள் இவர்களின் வாய் வழியாக ஒரு சில நேரங்களில் தெய்வ வாக்குகள் வரும்' என்று கூறுவார், ராமகிருஷ்ண பரமஹம்சர். அத்தகைய மகான் அடிக்கடி தன் சிஷ்யர்களுக்குக் கூறும் உபதேசம் இதோ...
மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர்கள் யார் ?
பரமஹம்சர், 'நாம் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பழக வேண்டும்' என்று எப்போதும் வலியுறுத்துவார். ஆனால், 'ஒரு சிலரிடம் எப்போதும் தள்ளியிருக்க வேண்டும்' என்பதையும் கூறியுள்ளார்.எப்போதும் மிக ஜாக்கிரதையாகப் பழகுதற்குரியவர் சிலர் இருக்கின்றார்கள்.
அதில் முதலாவது செல்வ வளம் மிக்க தனவான்கள். அவர்களுக்கு பண பலம், செல்வாக்கு அதிகம் என்பதால், அவர்கள் இஷ்டப்பட்டால் உனக்குத் தீமை செய்துவிடுவார்கள். அதனால், அவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அவர்கள் சொல்வதைக்கேட்டு 'சரி, சரி ஆமாம்....' என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.
அதில் முதலாவது செல்வ வளம் மிக்க தனவான்கள். அவர்களுக்கு பண பலம், செல்வாக்கு அதிகம் என்பதால், அவர்கள் இஷ்டப்பட்டால் உனக்குத் தீமை செய்துவிடுவார்கள். அதனால், அவர்களுடன் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும். அவர்கள் சொல்வதைக்கேட்டு 'சரி, சரி ஆமாம்....' என்று சொல்லும் நிலை ஏற்படலாம்.
இரண்டாவது குடிகாரன். நீ அவனைத் தொந்தரவு செய்தால், காதால் கேட்கச் சகிக்காதபடியெல்லாம் உன்னைத் திட்டுவான். அதைவிட்டு, 'என்னப்பா நல்லாயிருக்கியா?' என்று கேட்டால் உன்னிடம் சந்தோஷத்துடன் ஐக்கியமாகிவிடுவான்.
மூன்றாவது காளை மாடு. அது உன்னை முட்டவரும்போது அதையும் ஏதாவதொரு சப்தம் செய்து சமாதானப்படுத்த வேண்டும்.
நான்காவது நாய். அது உன்னைக் கண்டு குலைக்கவோ கடிக்கவோ வரும்போது, நீ ஓடாமல் நின்று விசிலடித்து அதனைச் சமாதானம் செய்ய வேண்டும்.
ஐந்தாவதாக பாம்பைப் போன்ற விஷத்தன்மை உடைய மக்கள். அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்கள் என்று உனக்குத் தெரியாது. அவர்களின் விஷத்தை முறிக்க மிகுந்த பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்களைப் பழிக்கு பழி வாங்க வேண்டும் என்னும் எண்ணம் தோன்றிவிடும்.அவர்களிடம் இருந்தும் தள்ளியிருக்க வேண்டும்.
பெண்களிடம் நடந்துகொள்ள வேண்டிய முறை :
ஒரு முறை, ராமகிருஷ்ணரிடம் அவரது சீடர் ஒருவர், 'பெண்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும். அதற்குரிய முறைகள் என்ன என்பது பற்றிக் கேட்டார். தன்னுடைய சிஷ்யன் கேட்டதும், மிகவும் ஆனந்தத்துடன் பெண்களின் மகிமையையும், அவர்களிடம் நடந்துகொள்ளும் முறையையும் கூற ஆரம்பித்தார்.
ஒரு முறை, ராமகிருஷ்ணரிடம் அவரது சீடர் ஒருவர், 'பெண்களிடம் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும். அதற்குரிய முறைகள் என்ன என்பது பற்றிக் கேட்டார். தன்னுடைய சிஷ்யன் கேட்டதும், மிகவும் ஆனந்தத்துடன் பெண்களின் மகிமையையும், அவர்களிடம் நடந்துகொள்ளும் முறையையும் கூற ஆரம்பித்தார்.
பெண்கள் அனைவரும் தேவியின் ஸ்வரூபம் ஆவர்.அவர்கள் அனைவரையும் தாயைப்போல கருத வேண்டும். ஸ்த்ரீகள் நற்குணங்களுடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும், கற்புடையவளாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை அவமதிக்காமல் மதிக்கவேண்டியது கட்டாயமாகின்றது.
உண்மையை அறிந்தவனும், ஈஸ்வர தரிசனம் பெற்றவனும் பெண்களைக் கண்டு பயப்படத்தேவையில்லை. அவர்கள் பெண்ணை ஜகதீஸ்வரியாகவே நினைத்து வழிபடுகிறார்கள். தாயை வணங்கும் மகனைப் போலவே பெண்ணை வணங்கவேண்டும். ஒருபோதும் பெண்ணைத் தவறான கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டாம் என்றும்' அவர் கூறினார்.
பெண்ணின் மகிமையைப் பற்றி ஒரு முறை விவேகானந்தரிடம் ராமகிருஷ்ணர் கூறியுள்ளார், ' உனக்குத் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கவேண்டுமென்றால், தேவியைப் பற்றிக்கொள். ஆக்கல், காத்தல், அழித்தல் போன்ற மூன்று காரியங்களைச் சிறப்பாகச் செயல்புரிகின்றாள்.அவள் விருப்பப்பட்டால் பரலோகத்தில் வசிக்கலாம். அவள் அருள்பார்வை இல்லையெனில், நம்மால் இவ்வுலகில் வசிக்க இயலாது. ஒவ்வொரு பெண்ணும் அவள் உருவம் கொண்டவள், என்று பெண்மையைப் போற்றிப் புகழ்கின்றார்.
மகானின் உபதேசங்களின் படி நடந்தால், எவருடனும் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது.
மகானின் உபதேசங்களின் படி நடந்தால், எவருடனும் நமக்கு எந்தப் பிரச்னையும் வராது.
-கி.சிந்தூரி
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள்...!
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள்...!
தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே.
ஒருவனுடைய குணதோசங்கள் அவனுடைய சகவாசத்தைப் பொறுத்திருக்கின்றன. ஒருவன் தன்னுடைய குணதோசங்களுக்கு ஏற்ற சகவாசத்தையே நாடுகிறான்.
பாவமும், பாதரசமும் எளிதில் செரிமானமாகாது. மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல் போவதில்லை.
பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.
அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும். உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.
சிலருக்குப் பாம்பின் சுபாவம் இருக்கிறது. அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்களென்பது உனக்குத் தெரியாது. அவர்களுடைய விசத்தை முறிக்க வெகுவாகப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற கோபம் உனக்கு வந்துவிடும்.
மாயை என்பது தாய், தகப்பன், சகோதர - சகோதரிகள், மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோரிடத்து ஒருவனுக்கு உண்டாகும் வாஞ்சையாகும். எல்லா ஜீவப்பிராணிகளிடத்தும் சமமாகப் பரவும் அன்புக்குத் தயை என்று பெயர்.
sri ramakrishna tamil message
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் பொன்மொழிகள்...!
தர்ம வழியில் நிம்மதியாய் நீ வாழுங் காலத்தில் லோக ஜனங்களுடைய புகழையும், இகழையும் பொருட்படுத்தாதே.
ஒருவனுடைய குணதோசங்கள் அவனுடைய சகவாசத்தைப் பொறுத்திருக்கின்றன. ஒருவன் தன்னுடைய குணதோசங்களுக்கு ஏற்ற சகவாசத்தையே நாடுகிறான்.
பாவமும், பாதரசமும் எளிதில் செரிமானமாகாது. மற்றவர்கள் தலை வணங்குமிடத்தில் நீயும் தலை வணங்கு. வழிபாடு ஒருநாளும் பயன்படாமல் போவதில்லை.
பக்தியையும், பிரேமையையும் பற்றிய ரகசியங்களைத் தினமும், உன் ஆயுள் உள்ளளவும் கற்றுக் கொள். அது உனக்கு எப்போதும் பலனைத் தரும். ஆசையை அகற்றிப் பற்றுதலற்றுக் கர்மம் புரிவதே உனக்கான சிறந்த வழியாகும்.
அநித்யத்தின் மூலமாய் நித்யத்தையும், மாயையின் உதவியால் உண்மையையும், உருவத்தின் உதவியால் அருவத்தையும் அடைய வேண்டும். உன்னிடம் தீவிர நம்பிக்கை இருக்குமானால் நீ மனமுருகித் தேடும் பொருள் உமக்குக் கிடைக்கும்.
சிலருக்குப் பாம்பின் சுபாவம் இருக்கிறது. அவர்கள் எப்போது உன்னைக் கடிப்பார்களென்பது உனக்குத் தெரியாது. அவர்களுடைய விசத்தை முறிக்க வெகுவாகப் பாடுபட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் மீது பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்ற கோபம் உனக்கு வந்துவிடும்.
மாயை என்பது தாய், தகப்பன், சகோதர - சகோதரிகள், மனைவி மக்கள், உற்றார் உறவினர் முதலியோரிடத்து ஒருவனுக்கு உண்டாகும் வாஞ்சையாகும். எல்லா ஜீவப்பிராணிகளிடத்தும் சமமாகப் பரவும் அன்புக்குத் தயை என்று பெயர்.
விவேகானந்தரின் சிந்தனை துளிகள்...!
எப்போதும் வெற்றி பெறுவது அன்பு மட்டுமே. அன்புடன் ஒப்பிடும்போது நூல்களும், அறிவும், யோகமும், தியானமும், ஞான ஒளியும் ஆகிய யாவுமே அதற்கு ஈடாகாது.
* வரம்பு கடந்த ஆற்றல் கொண்ட இறைவனை தூய்மையான மனதோடு பற்றிக் கொள்ளுங்கள். அவரைச் சார்ந்து நின்று வாழுங்கள். உங்களை வெல்ல யாராலும் முடியாது.
* கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்தோடு அன்பையும், உதவியையும், சேவையையும் மற்றவர்களுக்கு கொடுத்துப் பழகுங்கள். இதற்காக எதையும் எதிர்பார்க்கவேண்டாம்.
* எதைப் பிறருக்கு கொடுக்கிறோமோ அது திரும்பவும் ஆயிரம் மடங்காக நம்மிடமே திரும்பிவிடும். ஆனால், இப்போதே அதைப்பற்றிச் சிந்திக்காதீர்கள். நீங்கள் செய்யவேண்டியது எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பிறருக்குக் கொடுப்பது மட்டுமே.
* கைகள் இருப்பது பிறருக்கு உதவி செய்யத் தான். பட்டினியாய்க் கிடந்தாலும் கடைசிப் பருக்கையையும் பிறருக்கு கொடுப்பது தான் நல்லது. கொடுப்பவன் முழுமை பெற்று முடிவில் கடவுளாகிறான்.
* ஒருவருக்கு உதவி செய்ய எண்ணி, யாருடைய கை முன்னே நீளுகிறதோ, அவனே மக்களில் சிறந்தவன்.
\* பரந்த இந்த உலகத்தில், கிராமம் கிராமமாகச் சென்று மனிதகுலத்திற்கு நன்மை செய்வதை கடமையாகக் கொள்ளுங்கள். மற்றவர்களின் நன்மைக்காக நரகத்திற்குக் கூடச் செல்ல தயாராகுங்கள்.
* தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அலட்டிக் கொள்வதில் ஆற்றலைச் சிதற விடாமல் அமைதியுடனும், ஆண்மையுடனும் ஆக்கப்பூர்வமான கடமைகளில் அக்கறை காட்டுங்கள்.
* சேவை செய்யும் வாய்ப்பு எல்லாருக்கும் கிடைப்பதில்லை. தன் குழந்தைகளில் யாராவது ஒருவருக்கு உதவி செய்யும் வாய்ப்பை கடவுள் அளித்தால் அதன் மூலம் நீங்கள் பாக்கியம் பெற்றவராகிறீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
* நல்லவர்கள் உலகில் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது. இந்த உண்மையை உலக வரலாறு எங்கும் காணமுடியும்.
சுவாமி விவேகானந்தரின் சிந்தனை துளிகள்....!
ஒருவன் நெருப்பினுள் கூட தூங்கி ஓய்வெடுக்க முடியும். ஆனால், வறுமையில் ஒருவனால் கண்மூடித் தூங்குதல் என்பது முடியாது.
* குறிக்கோளை மட்டும் கருதாமல், அதை அடையும் வழியையும் சிந்திக்கவேண்டும். இதில் தான் வெற்றியின் ரகசியமே அடங்கி கிடக்கிறது.
* உங்களுக்குள் இருக்கும் தெய்வத்தன்மையை வெளியில் பரவச் செய்யுங்கள். அந்த தெய்வீக இயல்பே நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒழுங்குள்ளதாக மாற்றிவிடும்.
* எல்லா உயிர்களும் கோயில் என்பது உண்மைதான். ஆனால், மனிதவுயிரே மகத்தான கோயில். அதை வழிபட இயலாதவன் வேறு எதையும் வழிபட முடியாது.
* யாருடைய மனம் ஏழை எளியவர்களுக்காக இரக்கம் கொள்கிறதோ, அவரே மகாத்மா.
* உடலில் உள்ள குறைபாடுகளை நினைத்து துயரப்படுவதால் பயன் ஏதும் உண்டாகாது. மாறாக, அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் மனதில் ஊக்கத்தை வளர்த்துக் கொண்டால் வாழ்வில் உயர முடியும்.
* மலைபோல தடைகள் குறுக்கிட்டாலும், மனவுறுதியை மட்டும் கைவிடாதீர்கள். உங்களுக்கு சரியெனப் பட்டதை இலக்காக கொண்டு முன்னேறுங்கள்.
* அரிய பெரிய விஷயங்களை தியாகமனம் படைத்தவர்களால் மட்டுமே சாதிக்க முடியும்.
* நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை.. இதுவே உங்கள் தாரக மந்திரமாகட்டும்.
* சுயநலமே ஒழுக்கக்கேடு. சுயநலமின்மையே நல்லொழுக்கம். ஒழுக்கத்தின் இலக்கணம் இது தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக