ராதே கிருஷ்ணா 14-10-2017
வ்யாஸாய பவனாசாய சைஸாய குண நாசயே வ்ருத்தாய
சுத்த வித்யாய மதவாய ச நமோ நமஹ:
Message body
கண்ணன் பாட்டு-26 :: ருக்மணி கல்யாணம்
புவனச்சந்திரா போற்றி உன்பதம்
கவலையாலே நான் கடிதம் எழுதினேன்
குவலயம்புகழ் கோகுலத்தில் பூர்ணச்சந்திரா
கோடி தெண்டனிட்டு கோரினேன் உம்மை
திக்கு வேரில்லை தீனரக்ஷகா
இக்கணம் தன்னில் வந்துகாருமே
அக்கறையுடன் ருக்மணன் தன் அண்ணன் பாவியும்
அர்ப்பன் சேனாதிபதியை அழைத்திருக்கிறான்
ஐந்து வயதிலே ஆசை கொண்டவள்
உந்தன் வடிவையே உள்ளம் வைத்தவள்
நந்தபாலா உந்தன் தயவை நாடி நிற்கிறேன்
உந்தன் வரவை நோக்கி உயிர்த்திருக்கிறேன்
பக்தவத்ஸலா பங்கஜநயனா
உத்தமாய் எந்தன் உறுதி அறிகுவீர்
பாதக சிசுபாலன் என்னைப் பார்த்திட வருமுன்
பாணிக்கிரகணம் செய்ய வந்தருள் புரிவீர்
நம்பினேன் உன்னை நளினபாதரே
அம்புஜ வதனா அடிமலர் சரணம்
அம்பிகைதனை பூஜை செய்ய ஆலயம் வருவேன்
அந்த வேளை நல்ல சமயம் வருகுதே
தாமதம் வேண்டாம் தருணம் தப்புமுன்
ஸ்யாம சுந்தரா சட்டென வருவீர்
கோமளாங்கா உந்தன் வரவை கோரும் பெண்மணி
பீமராஜன் பெண் உன் ப்ரிய ருக்மணி
|
புவனா சுந்தரா அர்த்தங்கள்
புவனம் என்றால் ஜாலம் என்று பொருள் , அதனால் ஜலத்தைப் போல் குளிர்ச்சியாக இருப்பது போல் கிருஷ்ணன் குளிளிர்ச்சியாக இருப்பான்.
ஜலம் எப்படி தாகத்தை தீர்க்குமா அதுபோல் கிருஷ்ணன் சம்சார தாகத்தை தீர்ப்பான்.
ஜலம் எப்படி நிர்மலாமோ அதுபோல் நமக்கு நிர்மலமான ஹ்ருதயத்தைக் கொடுப்பான் கிருஷ்ணன்.
ஜலம் எப்படி சுத்தமாக இருக்குமோ அதுபோல் கிருஷ்ணன் சுத்தமானவன்.
நதி ஜலம் எப்படி குப்பைகளை அடித்துச் சென்று விடுமோ அதுபோல் கிருஷ்ணன் நமதுகாமம் க்ரோதம், மதம்,மாச்சரியம் போன்றவற்றை அடித்து துரத்திவிடுமாம்.
ஷீராப்திசயனத்தில் பாற்கடலில் படுப்பவன் நமது பெருமாள் அதனால் புவனா சுந்தரா ப்பவன் அதனால் புவனா சுந்தரா
கிருஷ்ணன் துவாரகாதீசன் கடலுக்கு மத்தியில் தானே இருக்கு அதனால் புவனா சுந்தரா
யமுனா தீர விஹாரி அதனால் புவனா சுந்தரா
ராமர் சரயு தீரவிஹாரி அதனால் புவனா சுந்தரா
ரங்கநாதர் உதய காவேரியில் சில்லுனு படுத்திண்டிருக்கார் அதனால் புவனா சுந்தரா
சுந்தரராஜன் கிருஷ்ணன்
வ்யாஸாய பவனாசாய சைஸாய குண நாசயே வ்ருத்தாய
சுத்த வித்யாய மதவாய ச நமோ நமஹ:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக