வியாழன், 31 ஆகஸ்ட், 2017

போஜனம் செய்ய வாருங்கோ

ராதே கிருஷ்ணா 31-08-2017



Lyrics of Bhojanam Seyya Vaarungo

Lyrics of Bhojanam Seyya Vaarungo
(This song is a song meant to invite the bride groom's party for lunch.)
Raagam: Mayamalavagowla

போஜனம் செய்ய வாருங்கோ
போஜனம் செய்ய வாருங்கோ, ராஜ
போஜனம் செய்ய வாருங்கோ
ராஜ போஜனம் செய்ய வாருங்கோ

மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கோ
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கோ


சித்திரமான, நவ சித்திரமான
கல்யாண மண்டபத்தில்
வித விதமாகவே வாழைகள் கட்டி
வெட்டி வேர் கொழுந்து தோரணங்களும்
மாட்டிய கூடமும், பவழ ஸ்தம்பவும்
பச்சை மரகதங்கள், தல கதி செய்களும்,
முத்து முத்தாகவே நுனி வாழைகளும்,
பசும் பொன்னால் செய்த பஞ்ச பாத்ரங்களும்
பன்னீர் ஜலத்துடன் உத்ஹிரனியுமே ,
முத்து முத்தாகவே முன்னே தெளிக்க
போஜனம் செய்ய வாருங்கோ
ராஜ போஜனம் செய்ய வாருங்கோ
மும்மூர்த்தி சகல தேவர்களும் கூட,
அன்னம், பார்வதி, ஆதி பரா சக்தி,
அருந்ததி, இந்த்ராணி, அகல்யா, கௌசல்யா ,
திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி ,
இந்திரா தேவி, ரம்பை, திலோத்தமை,
கந்தர்வ பத்தினி, கின்னர தேவி ,
அஷ்ட திக் பாலகர்கள் பாரியாள் உடனே,
சப்த மகா முனி ரிஷி பத்தினிகளும்,
பந்தடித்தார் போல் பட்டுக்கள் கட்டி,
கச்சை மெட்டுக்கள் கொள்ளு கொள்ளுவென,
பசும் பொன் தட்டிலே பாயசங்கள் எடுத்து,
பரிந்து பரிந்து பரிமாறிட வந்தார்

போஜனம் செய்ய வாருங்கோ, ராஜ
போஜனம் செய்ய வாருங்கோ
மீனாக்ஷி சுந்தரேச கல்யாண மண்டபத்தில்
போஜனம் செய்ய வாருங்கோ
செய்ய வாருங்கோ
செய்ய வாருங்கோ

English Verse:

Bhojanam Cheyya varungo
Bhojanam Cheyya varungo, Raja
Bhojanam cheyya varungo

Meenakshi Sundaresa kalyani Mandapathil,
Bhojanam cheyya varungo (2)

Chithramana, nava chithramana,
Kalyana Mandapathil,
Vidha vidhamagave vazhaigal katti,
Vetti ver kozhundu thoranangalum,
Maattiya koodamum, pavazha sthambhavum,
Pachai maragathangal, thala gathi cheygalum,
Muthu muthana nuni vazhaigalum,
Pasum ponnal cheytha Pancha pathrangalum,
Panneer jalathudan udharaniyume,
Muthu muthagave munne thelikka

Mummurthi Sakala devargal kooda,
Annam Parvathi Aadhi Para Shakthi,
Arundathi, indrani Agalya Kousalya,
Draupadhi, Sita, Thara Mandodhari,
Indira devi, Rambhai thilothamai,
Gandharwa pathni, kinnara devi,
Ashta dik palakar baaryal udane,
Saptha mahu muni rishi pathinigalum,
Pandhu adithar pol pattukkal katti,
Gejjai mettukkal gollu gollu vena,
Pasum pon thattile payasangal eduthu,
Parindu praindu parimarida vandhar


Bhojanam seiya vaarungo...(Welcome to partake of a feast)

Poritcha kuzhambu (vegetable sambhar made with coconutand roasted dals),
Pusinikkai sambhar (White pumpkin sambar),
Vendaikkai morkadhi ( fried Okra/ladies finger-coconut sour curd dish),
Vengaya sambar (small red madras onion sambhar),
Vaikku miga rasikum milagu jeera rasam (black pepper-cumin appetizer soup which will wake your mouth),
Madhuramaai irukum mysore rasamum (rasam made with a lot of powdered spices and coconut),
Paruppugal sertha paneer rasamum (Paneer is a special edible perfumed ingredient with unique scent, used in south indian marraiges, not be mistaken for the namesake cheese),
Venduvorkelaam veppan poo rasamum (fried neem flower rasam),
Kudikka miga rusikkum kottu rasamum ( tempered simple rasam made with red chillies,tastes delicious),
Soorya udhayampol seerum appalam ( papad that blooms like the rising sun in oil),
Sukla udhayyam pol jevv arisi karuvadam ( sun dried fryums that look like rising moon),
Akkara vadisal ( Iyengar sweet preparation with jaggery),
Sakkarai pongal (sweet made with riceand jaggery),
Sojji vadaiyudan (semolina vadai),
Nallaennai vadaiyum (vadai fried in sesame oil),
Thayir vadaiyum ( fried vadai soaked in tempered curd),
Paal poligalum ( dal and jaggery in a flat bread soaked in milk),
Anarasam adhirasam (jaggery and rice fried sweet),
Padir peniyudan ( sweet made of maida in the shape offine vermicelli),
Semiya halwa (vermicilli semisolid cake),
Jilebi ( fried sweet made of ground urad dal and soaked in sugar syrup),
Laddo (sweet made of besan flour and sugar syrup),
muthu muthai irukkum munthiri laadoo ( spherical sweet made of cashews)
rumyamai irukum rava ladoo (sweet semolina spherical sweets),
besha irukum besari ladoo (another sweet preparation),
Mysore pagudan ( square sweet made of besan flour sugar and clarified butter),
burfiyum serthu (coconut and sugar squares),

Bhojanam seiya vaarungo...raaja...Bhojanam seiya vaarungo

Porikani vargangal (Fruits and berries),
Pachai nadam pazham (special type of fruit...I guess),
Then kadali pazhamum ( this is a commonly available banana) ,
Sevvazhai pazhamum (red banana),
Nenthiram pazhathudan (unripe plaintains ,the long variety),
Maambazha dhinusugal (varieties of mango),
Pala pazhathudan (jackfruit),
Annasi pazhamum (pineapple),
aadai parimalikkum aadai thayir vennai thangamal serthu (curd with butter and cream not removed),
Bagaalabathu (curd rice),
pala dhinusaana chithra annagalum (varieties of mixed rice preparations),
ranjithamagiya Inji oorugai ( ginger pickle),
vedukkena kadikum maavadu oorugai ( baby mango pickle that is crisp to bite),
pandiyil parimaarinaar (this is what they served at the feast),
paarthu parimaarinaar ( they served with a lot of attention to detail)...

Bhojanam seiya vaarungo
English Meaning for the Lyrics of Bhojanam Seyya Vaarungo

Please come to take your meals,
Please come to take your royal meals.

In the picturesque marriage hall,
Different types of Banana plants are erected,
All round Khus roots have been tied,
The hall is shining with gem studded pillars.
The floors have been paved with green emeralds,
And very, very pretty Banana leaves have been spread,
And by its side is the water pot made by pure Gold,
And in it is kept the scented rose water with a sacred spoon,
And from it water is sprinkled drop by drop

All the devas including the Sacred trinity have assembled there,
And dressed with pretty well made up silk Saris,
And with anklets making jingling sounds,
Food is being served with care and love,
By Goddess Annapurni, Parvatrhi and Adhi Parashakthi,
Arundathi, Indrani, Ahalya, Kousalya,
Panchali, Sitha, Tara, Mandodhari,
The queen of Indra, Rambha, Thilothama,
The kinner devi, the wives of Gandharwas,
Along the wives of the eight guardians,
And with the wives of the seven great sages

செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

05 உத்யோகபர்வம் 001-199 முழுவதும்

ராதே கிருஷ்ணா 01-08-2017


முக்கியமானவை


ஆறு வகைத் துறவுகள்? - உத்யோக பர்வம் பகுதி 43ஆ

Six kinds of renunciations! | Udyoga Parva - Section 43b | Mahabharata In Tamil

(சனத்சுஜாத பர்வத் தொடர்ச்சி - 3)


பதிவின் சுருக்கம் : தவத்தின் தன்மைகள் குறித்துத் திருதராஷ்டிரன் வினவ, அதற்குரிய விளக்கத்தைச் சனத்சுஜாதர் அளிப்பது; ஆபத்தைத் தரக்கூடிய தீய குணங்கள் எவை? தீயவர்கள் யார்? உண்மை ஆதிக்கம் செலுத்தும் காரணிகள் எந்தப் பண்புகளில் இருக்கின்றன? சுயக்கட்டுப்பாடு எத்தனை பண்புகளைக் கொண்டது? ஆறு வகையான துறவுகள் எவை? அவை ஒவ்வொன்றுக்குமான விளக்கம் ஆகியவற்றைச் சனத்சுஜாதர் திருதராஷ்டிரனுக்குச் சொன்னது...

திருதராஷ்டிரன் {சனத்சுஜாதரிடம்} சொன்னான், “தவறுகளால் கறைபடியாத தவத்தைக் குறித்து நீர் சொன்னதை நான் கேட்டுவிட்டேன். அதனால் நிலைத்த மர்மம் ஒன்றை அறிந்து கொள்வதில் வென்றேன். ஓ! சனத்சுஜாதரே, இப்போது, தவறுகளால் கறைபடிந்த தவம் குறித்து எனக்குச் சொல்லும்” என்று கேட்டான்.

சனத்சுஜாதர் {திருதராஷ்டிரனிடம்}, “ஓ! மன்னா {திருதராஷ்டிரா} கோபத்துடன் கூடிய பனிரெண்டும் {12}, இன்னும் பதிமூன்றுவகைத் {13} தீய குணங்களும் தவத்தைக் கறை படுத்தும் தவறுகளாகும். கோபம், காமம், பேராசை, சரி தவறு அறியாத அறியாமை, நிறைவின்மை, கொடுமை, தீய குணம், மாயை, துக்கம், இன்பத்தில் நாட்டம், பொறாமை, பிறர் குறித்துத் தவறாகப் பேசுதல் [1] ஆகியவை மனிதர்களின் பொதுவான தவறுகளாகும். இந்தப் பனிரெண்டும் {12} மனிதர்களால் எப்போதும் விலக்கத்தக்கவையே. ஓ! மனிதர்களில் காளையே {திருதராஷ்டிரா}, இவற்றில் ஏதாவது ஒன்று கூடத் தனியாகவே ஒரு மனிதனை அழிவுக்கு உள்ளாக்கத்தக்கதுதான். உண்மையில், மானை அடைய {கொல்ல} சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்கும் வேடுவனைப் போல, இவற்றில் ஒவ்வொன்றும், மனிதர்களைப் பொறுத்தவரை, சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன.


[1] குரோதம், காமம், லோபம், மோஹம், விதிதஸை, அக்ருபை, அஸூயை, மானம், சோகம், ஸபருஹை, ராஷை, ஜுகுபஸை

தனது சொந்த மேன்மையை வலியுறுத்தும் முனைப்பு, பிறர் மனைவியிடம் இன்பம் கொள்ள நினைக்கும் ஆசை, அதீத செருக்கால் பிறரை அவமதிப்பது, சீற்றம் {கோபம்} நிறைந்திருத்தல், நிலையின்மை, தன்னால் பேணிக் காக்கப்பட வேண்டியவர்களைப் பேண மறுத்தல் ஆகிய தீய குணம் கொண்ட இந்த ஆறும் {6} செயல்களும் இவ்வுலகிலும் மறுஉலகிலும் நேரக்கூடிய ஆபத்துகளையெல்லாம் மீறி {பெரும் ஆபத்துகள் வரும் என்று தெரிந்தும் அதற்கு அஞ்சாமல்} பாவிகளால் எப்போதும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. காமத்தைத் தணித்துக் கொள்வதே வாழ்வின் இலக்கு என்று கருதுபவன், ஆதீத செருக்குடையவன், கொடுத்ததற்காக வருந்துபவன், எப்போதுமே பணத்தைச் செலவு செய்யாதவன் {கஞ்சன்}, வெறுக்கத்தக்க வரிகளை {tax} வற்புறுத்துவதன் {கேட்பதன்} மூலம் தனது குடிமக்களைத் துன்புறுத்துபவன், பிறரை அவமதிப்பதில் இன்பம் காண்பவன், தன் சொந்த மனைவியரை வெறுப்பவன் ஆகிய இந்த ஏழு {7} பேரும் தீயவர்கள் என்று அழைக்கபடும் பிறராவர்.

நெறிசார்ந்திருக்கும் தன்மை {அறம் கடைப்பிடித்தல்}, உண்மை (தாக்காமல் பேசப்படும் உண்மை நிறைந்த பேச்சு), தற்கட்டுப்பாட்டு {சுயக்கட்டுப்பாடு}, தவம், பிறரின் மகிழ்ச்சியில் இன்புறுவது, அடக்கம், பொறுமை, பிறரிடம் அன்பு, வேள்விகள், பரிசுகள், விடாமுயற்சி, சாத்திர அறிவு ஆகிய பனிரெண்டும் {12} அந்தணர்களின் நடைமுறைகள் ஆகின்றன. இந்தப் பனிரெண்டையும் {12} அடைவதில் வெற்றி அடைபவன், இந்த முழுப் பூமியையும் ஆளும் திறன் பெற்றவன் ஆவான். இவற்றில் மூன்றையோ{3}, இரண்டையோ{2}, ஏன் ஒன்றையோ{1} கூடப் பெற்றிருப்பவனை தெய்வீகச் செழிப்புடையவன் {பாக்கியம் பெற்றவன்} என்று கருத வேண்டும். சுயக்கட்டுப்பாடு, துறவு, தன்னறிவு {சுயஞானம்} ஆகிய இவற்றில் தான் விடுதலை {முக்தி} இருக்கிறது. உண்மை {சத்தியம்} ஆதிக்கம் செலுத்தும் காரணிகள், இந்தப் பண்புகளிலேயே இருக்கின்றன’, என்று அறிவுள்ள அந்தணர்கள் {ஞானம் கொண்ட பிராமணர்கள்} சொல்கின்றனர்.

சுயக்கட்டுப்பாடு

பதினெட்டு{18} நல்லொழுக்கங்களைக் கொண்டது சுயக்கட்டுப்பாடு. அத்துமீறல்கள், விதிக்கப்பட்ட செயல்களைக் கடைப்பிடிக்காமல் தவிர்ப்பது, பொய்மை, கெடுநோக்கு, காமம், செல்வம், (புலன்) இன்பத்தில் வருப்பம், கோபம், துக்கம், தாகம், பேராசை, ஏமாற்றுத்தனம், பிறர் துயரில் மகிழ்வது, பொறாமை, பிறரைக் காயப்படுத்தல், வருத்தம், பக்திச் செயல்களை வெறுத்தல், கடமை மறத்தல், பிறர் மீது பழிகூறுதல், தற்பெருமை ஆகிய இந்த (பதினெட்டு-18) தீமைகளில் இருந்து விடுபட்டவன் தற்கட்டுப்பாடு {சுயக்கட்டுப்பாடு} உடையவன் என்று நெறிசார்ந்தவர்களால் சொல்லப்படுகிறான். (வரிசைப்படுத்தப்பட்டுள்ள இந்தப்) பதினெட்டுத் தவறுகள் மதம் என்றோ செருக்கு என்றோ அழைக்கப்படும் ஒன்றில் இருக்கின்றன. 

துறவு


துறவு ஆறு{6} வகைகளைக் கொண்டது. அவற்றுக்கு நேர் எதிரான ஆறும் மதம் என்று அழைக்கப்படும் தவறுகளாகும். (எனவே, {மேற்கண்ட} பதினெட்டும், {துறவுக்கு எதிரான இந்த} ஆறும் {அதாவது இந்த 24ம்} மதம் என்று அழைக்கப்படுபவை ஆகும். ஆறுவகையான துறவுகள் அனைத்துமே வரவேற்கத்தக்கவையாக இருக்கின்றன. அதில் மூன்றாவது வகை நடைமுறைக்குக் கடினமானதாகும், ஆனால் அதுவே துயரங்கள் அனைத்தையும் கடந்து செல்ல உறுதுணையாக இருக்கும். உண்மையில், அந்த வகையான துறவு நடைமுறையில் சாதிக்கப்பட்டால், அவன் உலகத்தில் உள்ள முரண்பட்ட இரட்டைகள் அனைத்தையும் கடந்துவிடுவான்.

ஆறுவகைத்{6) துறவுகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவையே. அவற்றில்

{1}முதலாவது, செழிப்புமிக்கச் சந்தர்ப்பங்களில் இன்பம் அனுபவிக்காமை.

{2}இரண்டாவது, வேள்விகள், துதிகள், பக்திச் செயல்கள் ஆகியவற்றைக் கைவிடல். ஓ! மன்னா {திருதராஷ்டிரா}

{3}மூன்றாவதாக அழைக்கப்படுவது யாதென்றால், ஆசையைத் துறத்தல் அல்லது உலகத்தில் இருந்து விடுபடுதல். உண்மையில், இன்பம் தரும் அனைத்துப் பொருட்களையும் (அவற்றை அனுபவியாமல்) கைவிடுதலால் அல்லாமல், அவற்றை நிறைவாக அனுபவித்துவிட்டு கைவிடமுடியாது என்பதும். அவற்றை அடைந்த பிறகு கைவிடுதலோ, பசியின்மையால் {தேவையின்மையால்} அவற்றை அனுபவிக்கும் திறனற்று கைவிடுதலோ முடியாது என்பதும் இந்த மூன்றாம் வகையான ஆசையைத் துறத்தலின் விளைவாகவே {அவற்றில் உள்ள ஆசையைத் துறக்க முற்படும்போதே} சாட்சியாகக் காணப்படுகிறது.

{4}நான்காம் வகைத் துறவில், ஒருவனுடைய செயற்பாடுகள் தோல்வியடையும்போது, அவனது அனைத்து அறங்கள் மற்றும் அனைத்து வகைச் செல்வம் ஆகியவற்றை எதிர்த்துத் தாக்குப்பிடிக்க இயலாமலோ அவன் துக்கப்படவோ, வேதனை கொள்ளவோ கூடாது. அல்லது ஏற்பில்லாத எது நடைபெற்றாலும், ஒருவன் வலியை உணரக்கூடாது.

{5}ஐந்தாவது வகைத் துறவானது தனக்கு மிகவும் அன்பான தனது மகன்கள், மனைவியர் மற்றும் இன்னும் பிறரையும் கேட்காமல் {யாசிக்காமல்} இருப்பதேயாகும்.

{6}ஆறாவது வகைத் துறவானது கேட்கும் {தன்னிடம் யாசிக்கும்} தகுதிவாய்ந்த மனிதனுக்குத் தானமளிப்பதே ஆகும். அந்தத் தானம் எப்போதும் தகுதியை {புண்ணியத்தை} உண்டாக்கும். மேலும், இவற்றால் ஒருவன் தன்னறிவை {சுய அறிவை} அடைகிறான். இந்தக் கடைசிப் பண்பைப் பொறுத்தவரை, இது எட்டுக்{8} குணங்களை உடையதாகும். அவை, உண்மை {சத்தியம்}, தியானம், பொருள்கள் மற்றும் கருத்தின் வேறுபாடு அறிதல், ஊகிக்கும் திறன், உலகத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளல், பிறர் உடைமைகளை அபகரிக்காமை, பிரம்மச்சரிய நோன்புகளின் நடைமுறைகள், (பரிசுகள்) ஏற்காமை ஆகியவையே.

அதே போல (தமம் அல்லது தற்கட்டுப்பாட்டிற்கு {சுயக்கட்டுப்பாட்டுக்கு} எதிரான) மதத்தின் பண்புகளுடைய தவறுகள் அனைத்தும் (சாத்திரங்களில்) சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இந்தத் தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும். நான் (உன்னிடம்) துறவு மற்றும் தன்னறிவு {சுய அறிவு} ஆகியவற்றைக் குறித்துப் பேசியிருக்கிறேன். தன்னறிவு {சுய அறிவு) எட்டு{8} அறங்களைக் கொண்டிருப்பதைப் போல, தன்னறிவு இல்லாமையும் எட்டு{8} தவறுகளைக் கொண்டுள்ளது. அந்தத் தவறுகளும் தவிர்க்கப்பட வேண்டும். ஓ! பாரதா {திருதராஷ்டிரா}, இந்த ஐம்புலன்கள், மனம், கடந்த காலம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றில் இருந்து விடுபட்டவன் மகிழ்ச்சியடைகிறான்.

ஓ! மன்னா {திருதராஷ்டிரா}, உனது ஆன்மா உண்மையில் {சத்தியத்தில்} அர்ப்பணிப்புடன் இருக்கட்டும்; அனைத்து உலகங்களும் உண்மையிலேயே நிறுவப்பட்டுள்ளன; உண்மையில், சுயக்கட்டுப்பாடு, துறவு மற்றும் தன்னறிவு ஆகியவை உண்மையையே தனது முதன்மையான பண்பாகக் கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. (இந்த) தவறுகளைத் தவிர்க்கும் ஒருவன், தவம் பயில வேண்டும். உண்மை {சத்தியம்} மட்டுமே நீதிமிக்கவர்களின் நோன்பாக இருக்க வேண்டும் என்று விதி சமைப்போன் {பிரம்மன்} விதித்திருக்கிறான். இந்தத் தவறுகளில் இருந்து விடுபட்டு, அந்த அறங்களைக் கைக்கொண்ட தவமே, பெருஞ்செழிப்பின் ஊற்றுக்கண்ணாகும். பிறப்பு, இறப்பு மற்றும் முதுமையில் இருந்து ஒருவனை விடுவிக்கும் திறன் பெற்றதும், பாவத்தை அழிப்பதும், புனிதமான கருத்துமான இதை நான் உனக்குச் சுருக்கமாகச் சொல்லியிருக்கிறேன்” என்றார் {சனத்சுஜாதர்}.




+/- 05 உத்யோகபர்வம் 001-199 முழுவதும்


தற்போது மொழிபெயர்க்கப்படுவது

+/- 09 சல்லிய பர்வம் 001-065
















































முழு மஹாபாரதம்

ராதே கிருஷ்ணா 01-08-2017






 

திங்கள், ஜூலை 31, 2017

கிருதவர்மனை வென்ற சாத்யகி! - சல்லிய பர்வம் பகுதி – 21

Satyaki vanquished Kritavarma! | Shalya-Parva-Section-21 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 21)


பதிவின் சுருக்கம் : கிருதவர்மன் போரிடுவதைக் கண்டு திரும்பி வந்த கௌரவர்கள்; கிருதவர்மனை எதிர்த்த சாத்யகி; கிருதவர்மனைத் தேரற்றவனாகச் செய்த சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; தனியொருவனாக நின்று பாண்டவப் படையை எதிர்த்த துரியோதனன்; மற்றொரு தேரில் ஏறி மீண்டும் வந்த கிருதவர்மன்...

 4333Google +175 111

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சபைகளின் ரத்தினமான சால்வன்[1]கொல்லப்பட்ட பிறகு, சூறாவளியில் முறிந்த விழுந்த பெரும் மரம் போல உமது படை வேகமாகப் பிளந்தது.(1) படை பிளவுறுவதைக் கண்டவனும், வீரமும், பெரும்பலமும் கொண்டவனும், வலிமைமிக்கத்தேர்வீரனுமான கிருதவர்மன், அந்தப் போரில் பகைவரின் படையைத் தடுத்தான்.(2) ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, தப்பி ஓடியவர்களான குருவீரர்கள், அந்தச் சாத்வத வீரன் {கிருதவர்மன்}, (எதிரியின்) கணைகளால் துளைக்கப்பட்டாலும் அந்தப் போரில் மலையென நிற்பதைக் கண்டு, மீண்டும் அணிதிரண்டு திரும்பி வந்தனர்.(3) அப்போது, ஓ! ஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களுக்கும், தப்பி ஓடி, மரணத்தையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டு மீண்டும் திரும்பி வந்தவர்களான குரு வீரர்களுக்கு இடையில் போர் நடந்தது.(4)அந்தச் சாத்வத வீரனுக்கும் {கிருதவர்மனுக்கும்}, அவனது எதிரிகளுக்கும் இடையில் நேர்ந்த கடும் மோதலானது, வெல்லப்பட முடியாத பாண்டவப் படையைத் தனியொருவனாக அவன் {கிருதவர்மன்} தடுத்ததால் அற்புதமானதாக இருந்தது.(5)

ஞாயிறு, ஜூலை 30, 2017

எதிரிகளைக் கலங்கடித்த மிலேச்சன் சால்வன்! - சல்லிய பர்வம் பகுதி – 20

The hostile army agitated by Mleccha Shalva! | Shalya-Parva-Section-20 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 20)


பதிவின் சுருக்கம் : பாண்டவப் படையை எதிர்த்து வந்த மிலேச்சன் சால்வன்; படையைக் கலங்கடித்த சால்வனின் பெரும் யானை; பாண்டவப் படையைப் பிளந்த சால்வன்; சால்வனை எதிர்த்த திருஷ்டத்யும்னன்; திருஷ்டத்யும்னனின் தேரை நொறுக்கிய யானை; யானையைக் கொண்ட திருஷ்டத்யும்னன்; சால்வனைக் கொன்ற சாத்யகி...

 4333Google +175 111

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "(குரு) படை மீண்டும் அணிதிரண்டபிறகு, மிலேச்சர்களின் ஆட்சியாளனான சால்வன், சினத்தால் நிறைந்து, அங்கங்களில் மதநீர் சொரிந்ததும், மலையைப் போலத் தெரிந்ததும், செருக்கு நிறைந்ததும், {இந்திரனின் யானையான} ஐராவதனுக்கு ஒப்பானதும், பகைவரின் பெருங்கூட்டத்தை நொறுக்கவல்லதுமான ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு, பாண்டவர்களின் பெரும்படையை எதிர்த்து விரைந்தான்.(2) அந்தச் சால்வனின் விலங்கானது {யானையானது} உன்னதமான உயர்ந்த குலத்தில் {பத்ர குலத்தில்} பிறந்ததாகும். அஃது எப்போதும் திருதராஷ்டிரன் மகனால் {துரியோதனனால்}வழிபடப்பட்டதாகும். ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, அது யானை பழக்குவதை நன்கறிந்தோரால் சரியாக ஆயத்தம் செய்யப்பட்டு, போருக்காகச் சரியாகப் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. அந்த யானையைச் செலுத்தி வந்த அந்த மன்னர்களில் முதன்மையானவன் {சால்வன்} கோடையின் நெருக்கத்தில் உள்ள காலை சூரியனைப் போலத் தெரிந்தான்.(3) அந்த முதன்மையான யானையில் ஏறிய அவன் {சால்வன்}, ஓ! ஏகாதிபதி, பாண்டவர்களை எதிர்த்துச் சென்று, சக்தியில் இந்திரனின் வஜ்ரத்துக்கு ஒப்பானவையும், பயங்கரமானவையுமான கூரிய கணைகளால் அனைத்துப் பக்கங்களில் இருந்தும் அவர்களைத் துளைத்தான்.(4) அந்தப்போரில் அவன் {சால்வன்} தன் கணைகளை ஏவி, பகைவீரர்களை யமனின் வசிப்பிடத்திற்கு அனுப்பியபோது, ஓ மன்னா, பழங்காலத்தில் வஜ்ரதாரியான வாசவன் {இந்திரன்}, தைத்தியர்களின் படைகளை நொறுக்குகையில் ஏற்பட்ட தைத்தியர்களின் நிலையைப் போலக் கௌரவர்களாலோ, பாண்டவர்களாலோ அவனிடம் எந்தக் குறையையும் {கவனக்குறைவையும்} காணமுடியவில்லை.(5)

சனி, ஜூலை 29, 2017

துஷ்யந்தன் சகுந்தலை - கிண்டில் புத்தகம்

 4333Google +175 111


துஷ்யந்தன் சகுந்தலை ₹.70.00/-
கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் மூதாதையரான துஷ்யந்தன் ஹஸ்தினாபுரத்தை ஆண்ட ஒரு மன்னனாவான். "தீமையை அழிப்பவன்" என்பதே அவனது பெயரின் பொருளாகும். அவன் இலிலன் மற்றும் ரதந்தரி ஆகியோருக்குப் பிறந்த மகனாவான்.

மஹாபாரதத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாக வரும் இவனது கதையில், இயற்கை வர்ணனையும், மனைவி மற்றும் மகனைக் குறித்த நீதிகளும், விருந்தினரை உபசரிக்கும் முறைகளும், திருமணத்தின் வகைகளும் சிறப்புடன் சொல்லப்படுகின்றன. இக்கதையிலேயே விஷ்வாமித்திரர் மற்றும் மேனகையின் கதையும் சொல்லப்படுகிறது.

வியாழன், ஜூலை 27, 2017

இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்! - சல்லிய பர்வம் பகுதி – 19

Bhima killed twenty one thousand Foot-soldiers! | Shalya-Parva-Section-19 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 19)


பதிவின் சுருக்கம் : புறமுதுகிட்ட கௌரவப் படை; பாண்டவர்களும், பாஞ்சாலர்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டது; படையின் பின்புறத்தை அடைந்த துரியோதனன்; காலாட்படையினரில் இருபத்தோராயிரம் பேரைக் கொன்ற பீமன்; துரியோதனன் தன் வீரர்களிடம் பேசிய வீர உரை; மீண்டும் அணிதிரண்ட கௌரவப்படை...

 4333Google +175 111

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "வலிமைமிக்கத் தேர்வீரனும், வெல்லப்பட முடியாத வீரனுமான அந்தப் பெரும் மன்னன் {சல்லியன்} போரில் கொல்லப்பட்டதும், உமது துருப்புகளும், உமது மகன்கள் அனைவரும் போரில் இருந்து புறமுதுகிட்டு ஓடினர்.(1) உண்மையில், சிறப்புமிக்க யுதிஷ்டிரனால் அவ்வீரன் {சல்லியன்} கொல்லப்பட்டதும், உமது துருப்புகள், ஆழ்ந்த கடலில் மரக்கலம் உடைந்து, அதைக் கடக்க ஒரு படகில்லாத வணிகர்களைப் போல இருந்தன.(2) மத்ர மன்னன் {சல்லியன்} வீழ்ந்ததும், ஓ! ஏகாதிபதி, உமது துருப்பினர், ஒரு பாதுகாவலனை விரும்பும் தலைவனற்ற மனிதர்கள் போலவோ, சிங்கம் ஒன்றால் பீடிக்கப்படும், ஒரு மான்கூட்டத்தைப் போலவோ இருந்தனர்.(3) கொம்புகளை இழந்த காளைகளைப் போலவோ, தந்தங்கள் உடைந்த யானைகளைப் போலவோ இருந்த உமது துருப்பினர், அஜாதசத்ருவால் {யுதிஷ்டிரனால்}, வீழ்த்தப்பட்டு நடுப்பகல் வேளையில் தப்பி ஓடினர்.(4) சல்லியன் வீழ்ந்த பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, உமது துருப்பினரில் ஒருவனும் படையைத் திரட்டுவதிலோ, தன் ஆற்றலை வெளிப்படுத்துவதிலோ தன் இதயத்தை நிலைநிறுத்தவில்லை.(5)

செவ்வாய், ஜூலை 25, 2017

சல்லியனின் தொண்டர்கள்! - சல்லிய பர்வம் பகுதி – 18

The followers of Shalya! | Shalya-Parva-Section-18 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 18)


பதிவின் சுருக்கம் : தங்கள் தலைவனின் படுகொலைக்குப் பழிதீர்க்க முனைந்த சல்லியனின் தொண்டர்கள்; அவர்களைத் தடுத்த துரியோதனன்; துரியோதனனுக்குக் கீழ்ப்படியாத மத்ரகர்கள்; அவர்களைத் தாக்கி அழித்த பாண்டவர்கள்; மத்ரகர்களைக் காக்க துரியோதனனைத் தூண்டிய சகுனி; மத்கர்களைக் காக்க விரைந்த கௌரவவீரர்கள்; களத்தில் இருந்து மீண்டும் புறமுதுகிட்ட கௌரவர்கள்...

 4333Google +175 111

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "சல்லியன் கொல்லப்பட்ட பிறகு, ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, மத்ர மன்னனை {சல்லியனைப்} பின்தொடர்ந்த எழுனூறு {700} வீரப் போர்வீரர்கள் பெரும் சக்தியுடன் போரிடச் சென்றனர்.(1) தலைக்கு மேல் வெண்குடை பிடிக்கப்பட்டு, எப்போதும் வெண்சாமரம் வீசப்பட்டு, மலை போன்ற ஒரு பெரிய யானையைச் செலுத்திக் கொண்டு வந்த துரியோதனன், "செல்லாதீர்கள், செல்லாதீர்கள்" என்று சொல்லி மத்ரகப் போர்வீரர்களைத் தடுத்தான்.(2) துரியோதனனால் மீண்டும் மீண்டும் தடுக்கப்பட்டாலும், அவ்வீரர்கள், யுதிஷ்டிரனைக் கொல்லும் விருப்பத்தோடு பாண்டவப் படைக்குள் ஊடுருவினர்.(3) துரியோதனனிடம் மாறாப்பற்றுக் கொண்ட அந்தத் துணிச்சல்மிக்கப் போராளிகள், தங்கள் விற்களில் உரத்த நாணொலி எழுப்பியபடியே பாண்டவர்களுடன் போரிட்டனர்.(4)

வெள்ளி, ஜூலை 21, 2017

சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்! - சல்லிய பர்வம் பகுதி – 17

Yudhishthira slays Shalya! | Shalya-Parva-Section-17 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 17)


பதிவின் சுருக்கம் : சல்லியனைத் தாக்கிய பாண்டவத் தலைவர்கள்; சல்லியனோடு போரிட்ட யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் குதிரைகளைக் கொன்ற சல்லியன்; சல்லியனின் கவசத்தை அறுத்த பீமசேனன்; தெய்வீக ஈட்டியால் சல்லியனைக் கொன்ற யுதிஷ்டிரன்; சல்லியனின் தம்பிக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் நடந்த மோதல்; யுதிஷ்டிரனிடம் இருந்து தப்பி ஓடிய கௌரவப் படை; கிருதவர்மனுக்கும், சாத்யகிக்கும் இடையில் நடந்த மோதல்; கிருதவர்மனை வீழ்த்திய சாத்யகி; கிருதவர்மனைக் காத்த கிருபர்; துரியோதனனின் வீரம்; கிருதவர்மனைத் தேரற்றவனாக்கிய யுதிஷ்டிரன்; கிருதவர்மனைக் காத்த அஸ்வத்தாமன்; யுதிஷ்டிரனோடு போரிட்ட கிருபர்...

 4333Google +175 111

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "மத்ரர்களின் ஆட்சியாளன் {சல்லியன்},மிக உறுதியானதும், மேலும் கடினமானதுமான மற்றொரு வில்லை எடுத்து யுதிஷ்டிரனைத்துளைத்து ஒரு சிங்கத்தைப் போல முழங்கினான்.(1) அப்போது, அளவிலா ஆன்மா கொண்ட அந்த க்ஷத்திரியக் காளை {சல்லியன்}, மழைத்தாரைகளைப் பொழியும் மேகங்களின் தேவனைப் போல க்ஷத்திரியர்கள் அனைவரின் மேலும் கணைமாரிகளைப் பொழிந்தான்.(2) பத்து கணைகளால் சாத்யகியையும், மூன்றால் பீமனையும், அதே அளவுக்குச் சகாதேவனையும் துளைத்த அவன் {சல்லியன்} யுதிஷ்டிரனைப் பெரிதும் பீடித்தான்.(3) மேலும் அவன், சுடர்மிக்கப் பந்தங்களால் யானைகளைப் பீடிக்கும் ஒரு வேடனைப் போலவே, குதிரைகள், தேர்கள், யானைகளுடன் கூடிய பெரும் வில்லாளிகளான பிறர் அனைவரையும் பல கணைகளால் பீடித்தான்.(4) உண்மையில், அந்தத் தேர்வீரர்களில் முதன்மையானவன் {சல்லியன்}, யானைகள், யானை வீரர்கள், குதிரைகள், குதிரைவீரர்கள், தேர்கள் மற்றும் தேர்வீரர்கள் ஆகியோரை அழித்தான்.(5) ஆயுதங்களைப் பிடித்திருந்த போராளிகளின் கரங்களையும், வாகனங்களின் கொடிமரங்களையும் வெட்டிவீழ்த்திய அவன், குசப்புல் ஈக்குகள் விரவிக் கிடக்கும் ஒரு வேள்விப்பீடத்தைப் போல (கொல்லப்பட்ட) போர்வீரர்களைப் பூமியில் விரவிக் கிடக்கச் செய்தான்.(6)

புதன், ஜூலை 19, 2017

சல்லியன் யுதிஷ்டிரன் மோதல்! - சல்லிய பர்வம் பகுதி – 16

The encounter between Shalya and Yudhishthira! | Shalya-Parva-Section-16 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 16)


பதிவின் சுருக்கம் : குருக்களால் பீடிக்கப்பட்ட பாண்டவர்கள்; கிருபரையும், கிருதவர்மனையும் கணைகளால் மறைத்த அர்ஜுனன்; சல்லியனை எதிர்த்து உறுதியாக நின்ற யுதிஷ்டிரன்; சல்லியனிடம் இருந்து தப்பி ஓடிய பாண்டவர்கள்; கிருஷ்ணனிடமும், தன் தம்பிகளிடமும் பேசி, சல்லியனைக் கொல்வதற்கு உறுதியேற்ற யுதிஷ்டிரன்; யுதிஷ்டிரனின் அருஞ்செயல்; சல்லியனைத் தன் தேரில் ஏற்றிக் கொண்ட அஸ்வத்தாமன்; மற்றொரு தேரில் மீண்டும் சல்லியனுக்கும், யுதிஷ்டிரனுக்கும் இடையில் மீண்டும் நடந்த போர்...

 4333Google +175 111

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "அப்போது, ஓ! தலைவா {திருதராஷ்டிரரே}, அந்தப் போரில் சல்லியனைத் தங்கள் தலைமையில் கொண்ட உமது துருப்புகள், பெரும் மூர்க்கத்துடன் பார்த்தர்களை எதிர்த்து மீண்டும் விரைந்தனர்.(1) போரில் கடுமையானவர்களான உமது துருப்பினர் பார்த்தர்களை எதிர்த்து விரைந்து பீடிக்கப்பட்டாலும், எண்ணிக்கையில் அதிகமானோராக இருந்ததன் விளைவால் மிகவிரைவில் அவர்களை {பார்த்தர்களைக்} கலங்கடித்தனர்.(2) இரு கிருஷ்ணர்களும் {கிருஷ்ணனும், அர்ஜுனனும்} பார்த்துக் கொண்டிருக்கும்போதே குருக்களால் தாக்கப்பட்ட அந்தப் பாண்டவத் துருப்பினர், பீமசேனனால் தடுக்கப்பட்டாலும் களத்தில் நிற்கவில்லை.(3) இதன் காரணமாகச் சினத்தால் நிறைந்த தனஞ்சயன் {அர்ஜுனன்}, கிருபரையும், அவரைப் பின்தொடர்வோரையும், கிருதவர்மனையும் கணைமாரியால் மறைத்தான்.(4)

புதன், ஜூலை 12, 2017

பாண்டவர்களோடு மோதிய சல்லியன்! - சல்லிய பர்வம் பகுதி – 15

Shalya encountered the Pandavas! | Shalya-Parva-Section-15 | Mahabharata In Tamil

(சல்லிய வத பர்வம் - 15)


பதிவின் சுருக்கம் : துரியோதனனைப் பீடித்த திருஷ்டத்யும்னன்; கிருபர் மற்றும் கிருதவர்மனுடன் போரிட்ட சிகண்டி, சாத்யகியுடன் மோதிய சல்லியன்; சல்லியனின் ஆற்றல்; தாய்மாமனைக் கொல்ல விரைந்த மருமக்கள்...

 4333Google +175 111

சஞ்சயன் {திருதராஷ்டிரனிடம்} சொன்னான், "ஓ! மன்னா {திருதராஷ்டிரரே}, துரியோதனனும், பிருஷதனின் மகனான திருஷ்டத்யும்னனும், அபரிமிதமான கணைகளையும், ஈட்டிகளையும் பயன்படுத்தி ஒரு கடும்போரைச் செய்தனர்.(1) அவர்கள் இருவரும், ஓ! ஏகாதிபதி, மழைக்கால மேகங்கள் பொழியும் மழையைப் போலக் கணைமாரியை ஏவினர்.(2) (குரு) மன்னன் {துரியோதனன்}, துரோணரைக்கொன்றவனும், கடுங்கணைகளைக் கொண்டவனுமான பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனை} ஐந்து கணைகளால் துளைத்து, மீண்டும் ஏழு கணைகளால் அவனைத் துளைத்தான்.(3) பெரும் வலிமையும், உறுதியான ஆற்றலும் படைத்த திருஷ்டத்யும்னன், துரியோதனனை அந்தப் போரில் எழுபது கணைகளால் பீடித்தான்.(4) மன்னன் இவ்வாறு பீடிக்கப்படுவதைக் கண்டவர்களான அவனுடன் பிறந்த சகோதரர்கள், ஓ! பாரதக் குலத்தின் காளையே, ஒரு பெரும் படையின் துணையுடன் அந்தப் பிருஷதன் மகனை {திருஷ்டத்யும்னனைச்} சூழ்ந்து கொண்டனர்.(5)

மஹாபாரதத்தின் முக்கிய மனிதர்கள் வரும் பகுதிகள்

அக்ருதவ்ரணர் அக்னி அகம்பனன் அகஸ்தியர் அகிருதவரணர் அங்கதன் அங்காரபர்ணன் அங்கிரஸ்அசமஞ்சன் அசலன் அசுவினிகள் அத்புதன் அத்ரி அத்ரிசியந்தி அதிரதன் அபிமன்யு அம்பரீஷன் அம்பாஅம்பாலிகை அம்பை அயோதா தௌம்யா அர்வாவசு அர்ஜுனன் அரிஷ்டநேமி அருணன் அருணி அருந்ததிஅலம்புசன் அலாயுதன் அவிந்தியன் அவுர்வா அன்சுமான் அனுவிந்தன் அஷ்டகன் அஷ்டவக்கிரர்அஸ்வத்தாமன் அஸ்வபதி ஆணிமாண்டவ்யர் ஆத்ரேயர் ஆதிசேஷன் ஆர்யகன் ஆர்ஷ்டிஷேணர் ஆஸ்தீகர்இந்திரசேனன் இந்திரசேனை இந்திரத்யும்னன் இந்திரன் இந்திரஜித் இராவான் {அரவான்} இல்வலன்உக்கிரசேனன் உக்தன் உச்சைஸ்ரவஸ் உசீநரன் உத்தமௌஜஸ் உத்தரன் உத்தரை உத்தவர் உத்தாலகர் உதங்கர்உதங்கா உபமன்யு உபரிசரன் உபஸ்ருதி உலூகன் உலூபி ஊர்வசி எலபத்திரன் ஏகலவ்யன் ஐராவதன் கங்கன்கங்கை கசன் கடோத்கசன் கண்வர் கணிகர் கத்ரு கந்தன் கபோதரோமன் கயன் கர்ணன் கருடன்கல்கி கல்மாஷபாதன் கலி கவந்தன் கனகன் கஹோடர் காகமா காசியபர் காதி காந்தாரி காமதேனு காயத்ரிகார்க்கோடகன் கார்த்திகை காலகேயர் காலவர் காளி காக்ஷிவத் கிந்தமா கிர்மீரன் கிரது கிரந்திகன் கிராதன்கிரிசன் கிரிடச்சி கிருதவர்மன் கிருதவீர்யன் கிருதாசி கிருபர் கிருஷ்ணன் கீசகர்கள் கீசகன்குணகேசி குந்தி குந்திபோஜன் குபேரன் கும்பகர்ணன் குரோதவாசர்கள் குவலாஸ்வன் கேசின் கேசினிகைகேயி கோடிகன் கோமுகன் கௌசிகர் கௌசிகி கௌதமர் சக்திரி சக்ரதேவன் சகரன் சகாதேவன்சகுந்தலை சகுனி சங்கன் சச்சி சசபிந்து சஞ்சயன் சஞ்சயன் 1 சத்தியபாமா சத்தியவதி சத்தியஜித்சத்யபாமா சத்யவான் சதானீகன் சந்தனு சந்திரன் சம்சப்தகர்கள் சம்பா சம்பை சம்வர்ணன் சமீகர்சர்மிஷ்டை சர்யாதி சரஸ்வதி சல்லியன் சலன் சனத்சுஜாதர் சஹஸ்ரபத் சாகரன் சாண்டிலி சாத்யகிசாத்யர்கள் சாந்தை சாம்பன் சாம்யமணி சாரங்கத்வஜன் சாரிசிரிகன் சாருதேஷ்ணன் சால்வன் சாவித்ரி சிகண்டிசிங்கசேனன் சிசுபாலன் சித்திரசேனன் சித்திராங்கதை சித்ரவாஹனன் சிபி சியவணன் சியவனர் சிரிங்கின்சிருஞ்சயன் சிவன் சீதை சுக்ரன் சுக்ரீவன் சுகன்யா சுசர்மன் சுசோபனை சுதர்சனன் சுதர்மை சுதன்வான்சுதக்ஷிணன் சுதாமன் சுதேவன் சுதேஷ்ணை சுந்தன் உபசுந்தன் சுநந்தை சுப்ரதீகா சுபத்திரை சுமுகன் சுரதைசுருதசேனன் சுருதர்வான் சுருதாயுதன் சுருதாயுஸ் சுவாகா சுவேதகேது சுனந்தை சுஹோத்திரன் சூதன்வான்சூர்ப்பனகை சூரன் சூரியதத்தன் சூரியன் சேகிதானன் சேதுகன் சைகாவத்யர் சைப்யை சைரந்திரி சோமகன்சோமதத்தன் சௌதியும்னி சௌனகர் ததீசர் தபதி தபஸ் தம்போத்பவன் தமயந்தி தமனர் தர்மதேவன்தர்மவியாதர் தளன் தக்ஷகன் தாத்ரேயிகை தார்க்ஷ்யர் தாருகன் தாலப்யர் தியுமத்சேனன் திரஸதஸ்யு திரிசிரன்திரிஜடை திருதராஷ்டிரன் திருஷ்டத்யும்னன் திரௌபதி திலீபன் திலோத்தமைதிவோதாசன் துச்சலை துச்சாசனன் துந்து துர்க்கை துர்மதன் துர்மர்ஷணன் துர்முகன் துர்வாசர் துர்ஜயன்துரியோதனன் துருபதன் துருபதன் புரோகிதர் துரோணர் துவஷ்டிரி துவாபரன் துஷ்கர்ணன்துஷ்யந்தன் தேவ தேவசேனை தேவயானி தேவாபி தௌமியர் நகுலன் நகுஷன் நரகாசுரன் நரன் நளன்நளன்2 நாரதர் நாராயணர்கள் நாராயணன் நிவாதகவசர்கள் நீலன் நைருதர்கள் பகதத்தன் பகர் பகன்பகீரதன் பத்ரசாகன் பத்ரா பப்ருவாஹனன் பர்ணாதன் பர்வதர் பரசுராமர் பரத்வாஜர் பரதன் பராசரர் பராவசுபரீக்ஷித் பரீக்ஷித்1 பலராமன் பலன் பலி பாகுகன் பாண்டியன் பாண்டு பானுமான் பாஹ்லீகர் பிங்களன்பிரகலாதன் பிரத்யும்னன் பிரத்னஸ்வன் பிரதர்த்தனன் பிரதிவிந்தியன் பிரதீபன் பிரம்மத்வாரா பிரம்மா பிரம்மாதிபிரமாதின் பிராதிகாமின் பிருகத்யும்னன் பிருகதஸ்வர் பிருகு பிருது பிருந்தாரகன் பிருஹத்சேனை பிருஹத்பலன்பிருஹத்ரதன் பிருஹந்நளை பிருஹஸ்பதி பீமன் பீமன்1 பீஷ்மர் புரு புருரவஸ் புரோசனன்புலஸ்தியர் புலஹர் புலோமா புஷ்கரன் பூமாதேவி பூரி பூரிஸ்ரவஸ் பௌரவன் பௌலோமர் மங்கணகர் மடன்மணிமான் மதிராக்ஷன் மதுகைடபர் மந்தபாலர் மந்தரை மயன் மருத்தன் மஹாபிஷன் மஹிஷன் மாத்ரி மாதலிமாதவி மாந்தாதா மார்க்கண்டேயர் மாரீசன் மாலினி மிருத்யு முகுந்தன் முசுகுந்தன் முத்கலர் முனிவர்பகன்மூகன் மேதாவி மேனகை மைத்ரேயர் யது யமன் யயவரர் யயாதி யவக்கிரீ யுதாமன்யு யுதிஷ்டிரன்யுயுத்சு யுவனாஸ்வன் ரந்திதேவன் ராகு ராதை ராமன் ராவணன் ரிசீகர் ரிதுபர்ணன் ரிஷ்யசிருங்கர் ரிஷபர்ருக்மரதன் ருக்மி ருத்திரன் ருரு ரேணுகை ரைப்பியர் ரோமபாதன் லட்சுமணன் லட்சுமி லபிதை லக்ஷ்மணன்லோகபாலர்கள் லோபாமுத்திரை லோமசர் லோமபாதன் லோமஹர்ஷனர் வசாதீயன் வசிஷ்டர் வசு வசுதேவர்வசுமனஸ் வந்தின் வர்கா வருணன் வஜ்ரவேகன் வாசுகி வாதாபி வாமதேவர் வாயு வார்ஷ்ணேயன் வாலகில்யர்வாலி விகர்ணன் விசாகன் விசித்திரவீரியன் விதுரன் விதுலை விந்தன் விபாண்டகர் விபாவசு விபீஷணன்வியாக்ரதத்தன் வியாசர் வியுஷிதஸ்வா விராடன் விருத்திரன் விருஷகன் விருஷசேனன் விருஷதர்பன்விருஷபர்வன் விரோசனன் விவிங்சதி வினதை விஷ்ணு விஸ்வகர்மா விஸ்வாமித்ரர் வேதா வைகர்த்தனன்வைசம்பாயனர் வைவஸ்வத மனு வைனியன் ஜடாசுரன் ஜடாயு ஜந்து ஜமதக்னி ஜரத்காரு ஜராசந்தன் ஜரிதைஜரை ஜலசந்தன் ஜனகன் ஜனபதி ஜனமேஜயன் ஜாரிதரி ஜிமூதன் ஜீவலன் ஜெயத்சேனன் ஜெயத்ரதன்ஜோதஸ்நாகாலி ஷாமந்தர் ஸ்தூணாகர்ணன் ஸ்வேதகி ஸ்வேதகேது ஸ்வேதன் ஹயக்ரீவன் ஹர்யஸ்வன்ஹரிச்சந்திரன் ஹனுமான் ஹிடிம்பன் ஹிடிம்பை ஹோத்திரவாஹனர்
 

காப்புரிமை

© 2012-2017, செ.அருட்செல்வப்பேரரசன்
இவ்வலைப்பூவின் பதிவுகளை உரிய சுட்டிகளுடன் இணையத்தில் பகிர்ந்து கொள்ளத் தடையில்லை.
வேறு எவ்வகையிலோ, விதத்திலோ இணையத்திலும், பிற ஊடகங்களிலும் பகிரவும், வெளியிடவும் முன்னனுமதி பெற வேண்டும்.
Blogger இயக்குவது.