ராதே கிருஷ்ணா 19-04-2017
பொலிக! பொலிக!! ராமானுஜர் 1000 பகுதி - 3
என் செல்லப் பிள்ளையே!
Advertisement
பதிவு செய்த நாள்
19ஏப்2017
02:37
'ஆம். நீங்கள் சொல்லுவது சரி. இந்தப் பகுதியில் ஒரு பெரும் படையெடுப்பு நிகழ்ந்தது. வருடங்கள் ஆகிவிட்டாலும் அதன் வடுக்கள் மறையவேயில்லை. திருநாராயணப் பெருமாளின் உற்சவ மூர்த்தியை மட்டுமல்ல. பிராந்தியத்தில் உள்ள பல கோயில்களில் இருந்தும் விக்கிரகங்களை டெல்லீசன் கவர்ந்து சென்று விட்டான்!' என்று வருத்தத்துடன் பேசினான் விஷ்ணுவர்த்தன்.
உடையவர் புன்னகை செய்தார். 'அப்பனே, முகமதிய மன்னனை டெல்லியின் ஈசனாக்கிக் குறிப்பிட்ட உன் சுபாவத்தை ரசிக்கிறேன். ஆனால் உற்சவர் விக்கிரகம் இல்லாமல் நாம் விழாக்களை நடத்த முடியாது. பெருமாள் கோயில் என்றால் வீதி வலம் மிக முக்கியம். நான் டெல்லிக்குப் புறப்
படுகிறேன்' என்றார் ராமானுஜர்.மன்னன் தன் வீரர்கள் சிலரைத் துணைக்கு அனுப்பி வைத்தான். உடையவரின் சீடர்கள் ஒட்டுமொத்தமாகத் திரண்டு கிளம்பினார்கள். ஒருபுறம் தனக்குப் பிறகும் வைணவ தருமம் தழைக்கவென்று உடையவர் உருவாக்கி நியமித்து வைத்திருந்த எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகள். மறுபுறம் ஹொய்சள தேசத்தில் அவருக்குச் சேர்ந்திருந்த ஆயிரக்கணக்கான புதிய பக்தர்கள். அத்தனை பேரும் உடன் புறப்பட்டு மாபெரும் ஊர்வலமாக அவர்கள் டெல்லிக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.டெல்லி சுல்தான் திகைத்துப் போனான். இத்தனை பேரா! ஒரு படையே போலல்லவா திரண்டு வந்திருக்கிறார்கள்? அத்தனையும் ஒரு சிலைக்காகவா!'மன்னா, பெருமானின் விக்கிரகம் தங்கள் அரண்மனையில் ஓர் அலங்காரப் பொருளாக இருக்கக்கூடும்.
ஆனால் அவர் எங்கள் கோயிலில் குடிகொள்ள வேண்டிய பெருந்தெய்வம். தயவுசெய்து அதைக் கொடுத்து உதவுங்கள்!'சுல்தானுக்கு ராமானுஜரைப் பற்
றித் தெரிந்திருந்தது. காஷ்மீரத்துப் பண்டிதர்களும் மன்னனும் அந்தப் பிராந்தியங்களில் அவரைப் பற்றி ஏராளமாகப் பேசியிருந்தது அவன் காதிலும் விழுந்திருந்தது. கேவலம் ஒரு சிலைக்காக இத்தனை பேர் திரண்டு வந்திருக்கிறார்களே என்று அவனுக்கு வியப்பாக இருந்தது. சின்ன விஷயம்தானே? சரி பரவாயில்லை என்று நினைத்தான்.'இங்கே ஏராளமான சிலைகள் இருக்கின்றன. அவை என் மகளுக்கு விளையாட்டுப் பொருள்கள். உங்களுடைய சிலை எதுவென்று தேடி எடுத்துக் கொள்ளுங்கள்!' என்றான் சுல்தான்.திறந்து விடப்பட்ட மாபெரும் மண்டபத்தில் நுாற்றுக்கணக்கான விக்கிரகங்களும் சிலைகளும் மலையெனக் குவிந்திருப்பதை ராமானுஜர் பார்த்தார். 'அதோ, நமது உற்சவர்!' உடன் வந்திருந்த ஹொய்சள தேசத்து மூத்த குடி ஒருவர் அடையாளம் காட்ட, உடையவர் அந்த விக்கிரகத்தை எடுக்கப் போனார். 'பெரியவரே, ஒரு நிமிடம். நீங்கள் விரும்பும் சிலை அதுதான் என்பதை நான் எப்படி அறிவது?''எப்படி அறிய விரும்புகிறாயோ, அப்படியே அறியலாம்.' என்றார் ராமானுஜர். 'சரி, உங்கள் பெருமாளை நீங்கள் கூப்பிடுங்கள். அவராக வந்து உம்மிடம் சேருகிறாரா பார்க்கிறேன்!'சற்றும் தயங்காமல், 'சரி, அப்படியே!' என்றார் ராமானுஜர். கண்மூடி, கணப் பொழுது தியானித்தார். கண்ணைத் திறந்து, 'என் செல்லப் பிள்ளையே, வா என்னிடம்!' என்று கூப்பிட்டார்.அந்த அதிசயம் அப்போது நிகழ்ந்தது. அரங்கில் நிறைந்திருந்த நுாற்றுக்கணக்கான விக்கிரகங்களுள், திருநாராயணபுரத்து உற்சவர் விக்கிரகம் அப்படியே ஒரு சிறு குழந்தையாக உருவெடுத்துத் தவழ்ந்து வந்தது. மன்னன் திகைத்துப்
போனான். அமைச்சர்கள் வெலவெலத்துப் போனார்கள். உடையவரின் சீடர்களும் பக்தர்களும் பரவசத்தில் திக்குமுக்காடி நின்றார்கள்.
தவழ்ந்து வந்த குழந்தை உடையவரின் மடியில் ஏறிய மறுகணமே பழையபடி விக்கிரகமாகிப் போனது. சுல்தான் பேச்சு மூச்சில்லாது போனான். 'இதற்குமேல் நான் சொல்ல ஒன்றுமில்லை ஐயா. நீங்கள் விக்கிரகத்துடன் புறப்படலாம்!' என்று வணங்கி வழிவிட்டான். வந்த காரியம் சரியாக நடந்தேறிய மகிழ்ச்சியுடன் ராமானுஜர் புறப்பட்டார். திரும்பும் வழியில் அடர்ந்த காடொன்றில் ஓரிரவு தங்கும்படி ஆனது. 'சுவாமி, இங்கு தங்குவது நமக்குப் பாதுகாப்பல்ல. கள்வர் பயம் மிகுந்த பிராந்தியம் இது.' வீரன் ஒருவன் எச்சரித்தான். 'கள்வர் வந்தால் வரட்டுமே. எடுத்துச் செல்ல நம்மிடம் என்ன இருக்கிறது?''அப்படி இல்லை சுவாமி. உற்சவ மூர்த்தி சேதாரமின்றி ஊர் சென்றடைய வேண்டுமே.''அவனை நாம் காப்பாற்றுவதா! நல்ல நகைச்சுவை. நம்மைச் சேர்த்து அவன் காப்பான். கவலையின்றி நிம்மதியாக உறங்குங்கள்!' என்றார் உடையவர்.ஆனால் அன்றிரவு அவர்களால் அப்படி நிம்மதியாக உறங்க முடியவில்லை. சொல்லி வைத்த மாதிரி ஒரு பெரும் கள்வர் கூட்டம் ஆயுதங்களுடன் அவர்கள் தங்கியிருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தது.
'யாரும் தப்பிக்க நினைக்காதீர்கள். கையில் உள்ள அனைத்தையும் ஒப்படைக்காவிட்டால் ஒரு உயிரும் தங்காது!' கர்ஜித்த குரலில் கலங்கிப் போன பக்தர்கள் அபயம் கேட்டு அலற ஆரம்பித்தார்கள். கோபமடைந்த கள்வர்கள் அவர்களைக் கண்மண் தெரியாமல் தாக்க ஆரம்பிக்க, அலறல் சத்தம் மேலும் அதிகரித்தது.'எம்பெருமானே, இதென்ன சோதனை!' என்று ராமானுஜர் திகைத்து நின்றபோது, சத்தம் கேட்டு அந்த இடத்துக்குச் சிறிது தொலைவில் குடியிருந்த மக்கள் தீப்பந்தங்களுடனும் சிறு ஆயுதங்களுடனும் ஓடி வந்தார்கள். யாரோ வழிப்போக்கர்களைச் சூறையாட நினைக்கிற கள்வர்கள். இன்று அவர்களை ஒரு வழி பண்ணாமல் விடுவதில்லை என்று வெறி கொண்டு தாக்க ஆரம்பித்தார்கள்.சில மணி நேரம் இரு தரப்புக்கும் பலத்த சண்டை ஏற்பட்டது. இறுதியில் கிராமத்து மக்கள் கள்வர்களை அடித்துத் துரத்தி, ராமானுஜரையும் பக்தர்களையும் பத்திரமாகக் காப்பாற்றி அழைத்துப் போனார்கள்.
'ஐயா, நீங்கள் எங்கே செல்ல வேண்டும்?''ஹொய்சள தேசம். மேல்கோட்டை நகரம்.''நல்லது. நாங்கள் உங்களுக்குத் துணைக்கு வருகிறோம்!' என்று சொல்லி திருநாராயணபுரம் வரை உடன் நடந்து வந்தார்கள். வழி முழுதும் அவர்களுக்கு உடையவரைப் பற்றியும் திருநாராயணபுரத்தில் எழுந்துள்ள ஆலயத்தைப் பற்றியும், டெல்லிக்குச் சென்று உற்சவ மூர்த்தியைப் பெற்று வந்தது பற்றியும் உடையவரின் சீடர்கள் சொல்லிக்கொண்டே வந்தார்கள்.
ஊர் வந்து சேர்ந்ததும், 'நல்லது ஐயா. நாங்கள் கிளம்புகிறோம்' என்றார்கள் அந்த மக்கள். 'இத்தனை துாரம் வந்துவிட்டு கோயிலுக்கு வராமல் போவதா? அதெல்லாம் முடியாது!' என்றார் ராமானுஜர்.'அதெப்படி ஐயா முடியும்? நாங்கள் தீண்டத்தகாதவர்கள். கோயிலுக்குள் நுழைந்தால் பாவமல்லவா!'
துடித்துப் போனார் ராமானுஜர். 'யார் சொன்னது? பரம பாகவதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்த நீங்களும் பாகவத உத்தமர்கள். எம்பெருமான் திருமுன் உமக்கில் லாத இடம் வேறு யாருக்கு உண்டு? வாருங்கள் என்னோடு!'அதுவரை சரித்திரம் காணாத அச்சம்பவம் அன்று நடந்தேறியது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன் -

திறந்த கதவு
2017
00:47
Advertisement
பதிவு செய்த நாள்
20ஏப்2017
00:47
ஊர் திரண்டு விட்டது. மன்னன் விஷ்ணுவர்த்தன் தனது முழுப் பரிவாரங்களுடன் முன்னால் வந்து நின்றான். இங்கே உடையவர். அங்கே அவர் நியமித்த சிம்மாசனாதிபதிகள். தவிரவும் கோயில் கைங்கர்யத்துக்கெனப் பிரத்தியேகமாக அவர் அமர்த்தியிருந்த ஐம்பத்தி இரண்டு பேர் கொண்ட நிர்வாகக் குழு. சீடர்களும் பக்தர்களும் முண்டியடித்தார்கள்.
ராமானுஜர் அமைதியாகப் பேச ஆரம்பித்தார். 'மனிதர்களில் வேற்றுமை பார்ப்பதே மகாபாவம். இதில் பக்தர்களுக்குள் பிரிவினை ஏது? மண் கண்ட உயிர்கள் அனைத்தும் பரமாத்மாவின் படைப்பு. இவன் மேல் அவன் கீழ் என்பது வாழும் விதத்தால் மட்டுமே வருவது. செல்லப் பிள்ளையின் அருளாட்சி நடைபெறவிருக்கிற இத்தலத்தில் எந்நாளும் சாதிப் பிரிவினை வரக்கூடாது. கோயில் அனைவருக்கும் சொந்தம். அனைவருக்கும் கோயிலுக்குச் செல்ல உரிமை உண்டு. கைங்கர்யங்களில் பங்குண்டு!'நாங்கள் தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி ஒதுங்கி நிற்கப் பார்த்த கிராமத்து மக்கள் மெய் சிலிர்த்து நின்றார்கள். 'ஐயா நீங்கள் யார்? இப்படிக் கடலளவு பரந்த மனம் இவ்வுலகில் வேறு யாருக்கு உண்டு? காலகாலமாகத் தீண்டத்தகாதவர் என்று சொல்லியே ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் நாங்கள். பிறர் சொன்ன வார்த்தைகள் காதில் நுழைந்து, புத்தியில் ஏறி அமர்ந்து, அங்கேயே படிந்து தலைமுறை தலைமுறையாக எங்களை நாங்களே தாழ்த்திக் கருதப் பழகிப் போனோமே! அது தவறென்று இப்போதல்லவா புரிகிறது!''மனத்தில் பக்தி. நடவடிக்கை
களில் ஒழுக்கம். நெஞ்சில் நேர்மை, உண்மை. துயரில் அவதிப்படும் யாரைக் கண்டாலும் ஓடோடிச் சென்று உதவுகிற சுபாவம். இவ்வளவுதான் வேண்டியது. இவை இருந்தால் நீ ஒரு வைணவன். வைணவனுக்கு இடமில்லை என்று எந்தப் பெருமான் சொல்லுவான்? வாருங்கள் கோயிலுக்கு!' சொல்லிவிட்டு கம்பீரமாக அவர் முன்னால் நடக்க, அவர் பின்னால் திருக்குலத்தார் அத்தனை பேரும் வரிசையாக வணங்கியபடியே உள்ளே போனார்கள். உடையவரின் பரிவாரங்கள் அவர்களுக்குப் பின்னால் சென்றன.
அவர்களுக்கும் பின்னால் அரசன் போனான்.அதற்குமுன் எக்காலத்திலும் எந்த தேசத்திலும் நடவாத அதிசயம் அன்று திருநாராயணபுரத்தில் நடந்தது. யாரைத் தீண்டத்தகாதவர் என்று ஒதுக்கி வைத்திருந்தார்களோ, அவர்கள் முதல் முதலில் ஆலயப் பிரவேசம் செய்தார்கள். வானம் இடிந்து விழவில்லை. வையம் புரண்டு கவிழவில்லை. காற்று வீசுவது நிற்கவில்லை. ஒளி மங்கிப் போகவில்லை. ஆலயக் கதவுகள் அகன்று திறந்தன. 'வாரீர் என் பரம பக்தர்களே!' என்று திருநாராயணன் அவர்களை ஏந்திக் கொண்டான்.'சுவாமி! இன்று புத்தி தெளிந்தோம். இனி பிரிவினை பேச மாட்டோம். பாகவத இலக்கணம் புரியவைத்த தாங்கள் இத்தலத்திலேயே தங்கியிருந்து என்றென்றும் எங்களைக் காக்க வேண்டும்!' என்று கரம் குவித்தான் விஷ்ணுவர்த்தன்.சட்டென்று ஒரு குரல் கலைத்தது. 'பாகவத இலக்கணம் புரிந்தது இருக்கட்டும். என் மணாளனைக் கொள்ளையடித்துக் கொண்டு வந்து இங்கு வைத்தது எந்த விதத்தில் பாகவத தருமம்?'சபை அதிர்ந்தது. அங்கே ஒரு பெண் நின்றிருந்தாள். பெண்ணல்ல, சிறுமி. முக்காடிட்டு முகம் மறைத்த முஸ்லிம் சிறுமி. அவள் பின்னால் டெல்லி சுல்தானின் வீரர்கள் சிலர் வேல் தாங்கி நின்றிருந்தார்கள்.'என்ன பிரச்னை குழந்தாய்?' என்றார் ராமானுஜர்.
'நீங்கள் எடுத்து வந்த விக்கிரகம் என்னுடையது. நான் இல்லாத சமயத்தில் என் தந்தையை ஏமாற்றிக் கவர்ந்து வந்துவிட்டீர்கள்.
என்னால் அவனை விட்டுப் பிரிய முடியாது ஐயா. தயவுசெய்து கொடுத்து விடுங்கள்!' என்று கண்ணீருடன் பேசினாள் அந்தச் சிறுமி.சுல்தானின் வீரர்கள் விவரம் சொன்னார்கள். அவள் சுல்தானின் ஒரே மகள். அரண்மனையில் உள்ள அத்தனை விக்கிரகங்களுள் அந்தக் குறிப்பிட்ட விக்கிரகம்தான் அவளைக் கவர்ந்தது. நாளும் பொழுதும் அதை வைத்துக்கொண்டு அதனோடே பேசிக் கொண்டிருப்பாள். தான் உண்ணும்போது அதற்கும் உணவு ஊட்டுவாள். உறங்கும்போது அருகே கிடத்திக் கொள்வாள். தான் குளிக்குமுன் அதற்கு அபிஷேகம் செய்வாள். ஆடை அலங்காரங்கள் செய்து அழகு பார்ப்பாள். அவளுக்கு அது சிலையல்ல. விக்கிரகமல்ல. உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனிதன். உள்ளம் கவர்ந்த கள்வன்.ராமானுஜர் வியந்து போனார். 'சிறுமியே, இது இந்தக் கோயிலின் உற்சவ மூர்த்தி. யுத்தத்துக்கு வந்தபோது உன் தந்தையோ அவரது முன்னோர் யாரோ இங்கிருந்து இந்த விக்கிரகத்தைக் கவர்ந்து சென்றிருக்கிறார்கள். நீ புரிந்துகொள்ள வேண்டும்.''எனக்கு அதெல்லாம் தெரியாது. இவன் என் காதலன். என்னை மணந்து கொள்வதாகச் சொல்லியிருக்கிறான். இவன் இருக்கும் இடத்தில்தான் நான் இருப்பேன். என்னோடு இவனை அனுப்பி வைக்க உங்களுக்கு விருப்பமில்லாவிட்டால், இங்கேயே நானும் இருந்து விடுவேன்!' என்றாள் தீர்மானமாக.கூட்டம் குழம்பிப் போனது.
இப்படியொரு சிக்கல் வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. டெல்லி சுல்தானின் மகள் விக்கிரகத்தைத் தர மறுக்கிறாள். ஏதோ ஒரு நல்ல மனநிலையில் கொடுத்தனுப்பிவிட்ட சுல்தான், இப்போது மகளையே அனுப்பி, திருப்பிக் கேட்டிருக்கிறான். மாட்டேன் என்று சொன்னால் கவர்ந்து செல்ல அவனுக்கு கணப் பொழுது போதும். முடியாது என்று மறுத்தால் யுத்தம் வரும். என்ன செய்வது?உடையவர் யோசித்தார். 'சிறுமியே, உன் தந்தை உள்பட அரண்மனையில் அனைவருக்கும் என்ன நடந்ததென்று தெரியும். நான் இந்த விக்கிரகத்தைக் கேட்டது உண்மை. ஆனால் என் செல்லப் பிள்ளையான இவன், தானே தவழ்ந்து வந்துதான் என்னிடம் சேர்ந்து கொண்டான். அப்படியானால் அவன் விருப்பம் என்னவென்று புரியவில்லையா?''ஓஹோ. அவனே வந்து உங்கள் மடிமீது ஏறிக் கொண்டான். அவ்வளவுதானே? இதோ நானே அவனிடம் செல்கிறேன். என்னை இறக்கிவிட்டு விடுவானா? அதையும் பார்க்கிறேன்!' என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று சன்னிதியை நோக்கி விரைந்தாள்.சில வினாடிகள்தாம். என்ன நடக்கிறது என்பது முழுதும் புத்தி
யில் தெளிவாகும் முன்னர், சன்னிதிக்குள் நுழைந்த சிறுமி, செல்லப் பிள்ளையை இறுகக் கட்டிக் கொண்டாள். 'டேய், நீ என் சொந்தம். இவர்கள் யார் நம்மைப் பிரிப்பதற்கு? எடுத்துச் சொல்லு உன் ராமானுஜருக்கு!' என்று ஆவேசமாகக் கூறியபடியே விக்கிரகத்தின் மீது தன் பிடியை இறுக்கினாள். அடுத்த வினாடி அவள் விக்கிரகத்துக்குள் ஒடுங்கிக் கரைந்து காணாமல் போனாள்! உடையவர் கரம் கூப்பினார். 'இது அவன் சித்தம். சொன்னேனல்லவா? பக்தி நெஞ்சுக்கு பேதமில்லை. சுல்தான் மகளானால் என்ன? அவள் நம் பெருமானின் நாயகி. இனி பீபி நாச்சியாராக அவளும் இங்கு கோயில் கொள்ளுவாள்!'

சுல்தான் மாமனார்
2017
02:46
Advertisement
பதிவு செய்த நாள்
21ஏப்2017
02:46
பிரம்மனின் முதல் நான்கு படைப்புகளுள் ஒருவரான சனத்குமாரர் பூமிக்கு வந்தபோது கால் பதித்த இடம் அது. கிருத யுகத்தில் அந்த மலையடிவாரத்தில் அவர் நாராயணனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் அம்மலைக்கு அன்று நாராயணாத்ரி என்று பெயர்.
திரேதா யுகத்தில் நான்கு வேதபுருஷர்களையும் நான்கு சீடர்களாக வரித்துக்கொண்டு அங்கே வந்து வாசம் செய்தார் தத்தாத்ரேயர். மாபெரும் யோகி. அவர் அமர்ந்த இடத்தின் அருகிருந்த நீர்நிலை என்பதாலேயே அது வேத புஷ்கரணி என்று அழைக்கப்படலாயிற்று. மலையும் வேதாத்ரி என அப்போது வழங்கப்பட்டது. துவாபர யுகத்தில் மாடு மேய்த்துக்கொண்டு கண்ணனே அங்கு வந்தான். சனத்குமாரர் பிரதிஷ்டை செய்த நாராயண மூர்த்தியை
வணங்கி ஆராதித்துவிட்டுப் போனான். யாதவ குலக்கொழுந்தின் வருகை அந்த மலையை யாதவாத்ரி ஆக்கியது. ஏதோ ஒரு மலையடிவாரம், எப்படியோ அங்கு திருமண் கிடைக்கிறது என்று கிளம்பி வரவில்லை. அனைத்தும் பெருமானால் திட்டமிடப்படுகிறது. நாம் யார்? சொன்னதைச் செய்யும் வேலையாள் என்பதைத் தவிர? ராமானுஜர் திருநாராயணபுரத்தின் பூர்வ கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். துக்கமும் ஆனந்தமும் ஒருசேரத் தாக்கியிருந்த நிலையில், பேசச் சொல்லின்றிக் கேட்டுக் கொண்டிருந்தார் டெல்லி சுல்தான்.'சுல்தானே, உன் மகள் உன்னை விட்டுப் பிரிந்த துக்கம் சிறிது காலம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த உலகில் யாருக்குமே கிடைக்காத புருஷோத்தமன் அவளுக்குக் கணவனாகக் கிடைத்திருக்கிறான். நீ பரமாத்மாவுக்கு மாமனாராகியிருப்பவன். அதை எண்ணிப் பார்!' என்றார் ராமானுஜர்.
'புரிகிறது ஐயா. அவளது தெய்வீகக் காதலை நான் அறிவேன். ஆனால் குழந்தைதானே, வளர்ந்தால் சரியாகி விடுவாள் என்று நினைத்தேன். அவளது காதல், பெருமான் உள்ளம்வரை சென்று தைத்திருக்கிறது என்பது பெருமையாகவும் நம்ப முடியாததாகவும் இருக்கிறது.''இது நம்பமுடியாததல்ல மன்னா. எங்கள் ஊரிலும் ஒருத்தி இருந்தாள். கோதை என்று பெயர். பரிசுத்தமான அவளது பிரேம பக்தியே அவளை நாராயணனின் நெஞ்சக்கமலத்தில் கொண்டு சேர்த்தது.''அப்படியா!' என்றான் சுல்தான்.'இன்னொன்று தெரியுமா உங்களுக்கு? அந்தக் கோதை எங்கள் உடையவரின் தங்கை!' என்றார் முதலியாண்டான். திடுக்கிட்டு உடையவரைப் பார்த்த சுல்தான் கண்ணில் மாளாத வியப்பு.'ஆச்சரியப்படாதீர்கள் சுல்தானே. தங்கைதான். ஆனால் இவருக்கு ஐந்நுாறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவள்.''புரியவில்லையே ஐயா?''சொல்கிறேன். வில்லிபுத்துாரில் பிறந்து அரங்கப் பெருமான் மீது மாளாத காதல் கொண்ட ஆண்டாள் அரங்கனோடு இரண்டறக் கலந்து போனவள். அவளுக்கு ஒரு ஆசை இருந்தது. பெருமானுக்கு நுாறு அண்டாக்கள் நிறைய அமுது
செய்து சமர்ப்பிக்கும் ஆசை. சிறுமியால் அன்று அதெல்லாம் எப்படி முடியும்? அந்த ஆசை நிறைவேறும் முன்னரே அவள் அரங்கனோடு இணைந்து விட்டாள். சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் உடையவர் திருமாலிருஞ்சோலைக்கு யாத்திரை சென்றபோது கோதையின் கனவை நிறைவேற்றி
வைத்தார். நுாறு தடாய் நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் என்று அவள் பாடியதைச் செய்து முடித்தவர் இவர்!''அப்படியா!''அதோடு முடியவில்லை. தன் விருப்பத்தை ஒரு தமையன் ஸ்தானத்தில் இருந்து நிறைவேற்றிய உடையவர், வில்லிபுத்துாரில் அவள் சன்னிதிக்கு வந்தபோது, கருவ
றைக்குள் இருந்து எழுந்து வந்து அண்ணா என்று அவள் அழைத்ததை நாங்கள் அத்தனை பேரும் கண்ணாரக் கண்டோம் மன்னா!'கரம் குவித்துக் கண்ணீர் உகுத்தான் சுல்தான். ஊர் திரும்பும் முன்னர் திருநாராயணபுரத்துப் பெருமாளுக்குப் பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்துவிட்டுப் போனான். 'என் மருமகன் கோயில் கொண்டிருக்கும் தலம் இது. என்றும் இந்நகரம் திருவிழாக்கோலம் கொண்டிருக்க வேண்டும்!'அப்படித்தான் இருந்தது நகரம். எப்போதும் உற்சவம். எப்போதும் பெருமகிழ்ச்சி. எங்கு நோக்கினும் வேதபாராயணம். பாரதம் முழுவதிலும் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து குவிய ஆரம்பித்தார்கள். நடந்த சம்பவங்கள் எட்டாத இடமில்லை என்றாயிற்று.இப்போது திருவரங்கத்தில் இருந்தவர்களுக்கும் தகவல் எட்டி, உடையவர் மேல்கோட்டையில் இருக்கிற விவரம் தெரிந்து போனது. உடனே கிளம்பி வந்து அவரைச் சந்தித்தவர்களிடம் ராமானுஜர் ஊர் நிலவரம் விசாரித்தார்.
'எப்படி இருக்கிறது அரங்கமாநகர்? என் கூரேசர் எப்படி இருக்கிறார்?''சுவாமி, மனத்தை திடப்படுத்திக் கொள்ளுங்கள். நடக்கக் கூடாததெல்லாம் நடந்துவிட்டது அங்கே.''என்ன சொல்கிறீர்கள்?''ஆம் சுவாமி. சோழன் கொடுமை பொறுக்காமல் கூரேசர் தமது கண்களைத் தாமே பறித்துக் கொண்டார். சோழன் பெரிய நம்பியின் கண்களைப் பிடுங்கி எறிந்து விட்டான். வலி பொறுக்காத அம்முதியவர் கங்கை கொண்ட சோழபுரத்துக்கு அருகே காட்டில் உள்ள திருமேனியார் கோயிலில் தன் உயிரை விட்டார்.'
'பெருமானே! மகாபூரணரான பெரிய நம்பி பரமபதம் அடைந்து விட்டாரா!' மூர்ச்சையாகிப் போனார் ராமானுஜர். அவரைத் தெளிய வைத்து, ஆசுவாசப்படுத்தி நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார்கள். சோழனின் சபையில் இருந்து ஒரு பணிப்பெண்ணின் உதவியுடன்
அத்துழாய் அவர்கள் இருவரையும் அழைத்துச் சென்றது. திருமேனியார் கோயிலைத்தாண்டி பெரிய நம்பியால் பயணம் செய்ய முடியாமல் போனது. அங்கேயே கூரத்தாழ்வான் மடியில் தலை வைத்துக் கண் மூடியது.பேச்சற்றுப் போனார்கள் ராமானுஜரும் சீடர்களும்.'அது மட்டுமல்ல சுவாமி. தங்களது ஆசாரியர்களான திருக்கோட்டியூர் நம்பி, திருமாலையாண்டான், திருக்கச்சி நம்பி, அரையர் போன்றோரும் எம்பெருமான் திருவடி சேர்ந்து விட்டார்கள். இதையெல்லாம் தங்களுக்கு எப்படித் தெரிவிப்பது என்று தெரியாமல் ஆண்டுக்கணக்காகத் தவித்துக் கொண்டிருந்தோம். தங்கள் இருப்பிடம் எங்களுக்கு இப்போதுதான் தெரியவந்தது.'உடையவர் ஒன்றும் பேசவில்லை. மகாத்மாக்களான தமது ஆசாரியர்களுக்குத் தாம் செய்ய வேண்டிய கிரியைகளைச் செய்து
முடித்தார். 'துயரங்களில் துவள்வது வைணவன் லட்சணமல்ல. வாழ்ந்த காலத்தில் மகத்தான பணிகளை நிறைவேற்றியவர்கள் அவர்கள். எம்பெருமான் அவர்களைத் தன் பக்கத்தில் இருத்திக் கொள்ள விரும்பியதில் வியப்பென்ன?''ஆனால் கூரேசர் என்ன ஆனார்? அதைச் சொல்லவில்லையே?' என்று
பதைப்புடன் கேட்டார் முதலியாண்டான்.'அவர் இப்போது திருவரங்கத்தில் இல்லை சுவாமி. உடையவர் இல்லாத இடத்தில் எனக்கு வேலை
யில்லை என்று சொல்லிவிட்டு, திருமாலிருஞ்சோலைக்குக் குடிபோய் விட்டார்.'ராமானுஜர் உடனே தமது சீடர்களுள் ஒருவரான சிறியாண்
டானை அழைத்தார். 'உடனே மாலிருஞ்சோலைக்குக் கிளம்புங்கள். கூரேசர் எப்படி இருக்கிறார் என்று நேரில் சென்று பார்த்து வந்து தகவல் சொல்லுங்கள். நான் அவரைச் சந்தித்தாக வேண்டும்.'சிறியாண்டான், மாலிருஞ்சோலையை அடைந்த நேரம், சோழ மன்னன் குலோத்துங்கன் இறந்துவிட்ட செய்தி அங்கு வந்து சேர்ந்தது.
(நாளை தொடரும்...)
writerpara@gmail.com
- பா.ராகவன்

என்றும் உள்ளவன்
2017
01:56
Advertisement
மாற்றம் செய்த நாள்
22ஏப்2017
01:56
பதிவு செய்த நாள்
ஏப் 22,2017 01:27
ஏப் 22,2017 01:27
செய்தி திருநாராயணபுரத்துக்கு வந்து சேர்ந்தபோது, ராமானுஜரின் மடத்துக்கு விஷ்ணுவர்த்தனும் அவனது மகள் வகுளாவும் வந்திருந்தார்கள்.
ஹொய்சள தேசம் அதுகாறும் கண்டிராத வகையில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனுக்கு ஐந்து பெரும் கோயில்கள் கட்டும் திருப்பணியில் ஈடுபட்டிருந்தான் விஷ்ணுவர்த்தன். வகுளாதான் வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்து கொண்டிருந்தாள். தொண்டனுாரில் ஒரு கோயில். அது நம்பி நாராயணம். தலக்காட்டில் ஒரு கோயில். கீர்த்தி நாராயணம். மேல்கோட்டையில் செல்வ நாராயணம். வேளாபுரி என்கிற பேலுாரில் விஜய நாராயணம். கதக்கில் வீர நாராயணம்.'எத்தனை எத்தனைக் கோயில்கள் எழுப்புகிறோமோ, அத்தனையும் மக்களுக்கு நல்லது விஷ்ணுவர்த்தா. பிரபஞ்ச
மெங்கும் பரவி உதிர்ந்து கிடக்கும் மூலாதார சக்தியின் துகள்களை ஒருங்கிணைத்து பிரதிஷ்டை செய்கிறோம். அது ஞான ரூபமாக உருக்கொண்டு கர்ப்பகிரகத்தில் பிரவகிக்கத் தொடங்குகிறது. சன்னிதியில் நிற்கிற கணம்தோறும் நாம் மூலாதார சக்தியுடன் நேரடியாகத் தொடர்பு கொள்கிறோம். பக்தி நம் சிந்தையைப் பரமாத்மாவிடம் கடத்திச் செல்கிறது. உடல் விடுத்து, உள்ளம் விடுத்து, ஆன்மாவை நெருங்க வழி செய்கிறது. உன் ஆன்மாவைப் பரமாத்மாவின் பாதாரவிந்தங்களில் கொண்டு சேர்க்க முடிந்துவிட்டால் போதும். மோட்சம் நிச்சயம். நீ செய்வது நல்ல காரியம். இந்தப் பஞ்ச நாராயண க்ஷேத்திரங்களும் காலம் உள்ளவரை உன் பேர் சொல்லும்.' என்றார் ராமானுஜர்.'சுவாமி, இது நான் செய்யும் காரியமல்ல. தங்கள் பெருங்
கனவைக் கல்லாக ஏந்திச் சுமந்து செல்லும் பாக்கியம் மட்டுமே எனக்கு வாய்த்திருக்கிறது. என்றென்றும் தாங்கள் என் பக்கத்தில் இருந்து வழிகாட்டிக் கொண்டே இருக்க வேண்டும்!'ராமானுஜர் சிரித்தார். 'என்றென்றுமா! என்றும் உள்ளவன் பரமன் ஒருவன் மட்டுமே.''அவனை நெருங்க நீங்கள் அவசியம் சுவாமி.''மனிதப் பிறவி முடிவுக்கு உட்பட்டது மன்னா. ஆனால் ஆசாரிய சம்பந்தம்தான் பரமபத வாயிலை அடைய வழி செய்யும் என்பது உண்மை. ஆளவந்தார் சுவாமிகளும் பெரிய நம்பியும் திருக்கோட்டியூர் நம்பியும் திருமாலையாண்டான் சுவாமியும் அரையரும் பெரிய திருமலை நம்பியும் இல்லாது போயிருந்தால் நானில்லை. திருக்கச்சி நம்பிகள் இல்லாவிட்டால் மேற்சொன்ன யாருமே எனக்கில்லை. இது ஒரு தொடர்ச்சி. என்றும் இருப்பது. என்றும் இருக்க வேண்டியதும் கூட. எக்காலத்திலும் நமது ஜனங்கள் ஆசாரிய அனுக்கிரகம் இன்றிப் போய்விடக் கூடாதே என்றுதான் எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளைக் கண்டெடுத்து நியமித்தேன்.
சற்றும் தன்னலமற்ற, ஞானப் பெருஞ்சுடர்களான அவர்கள், தேசமெங்கும் பரவி வைணவம் வளர்ப்பார்கள். நான் உனக்குச் செய்தவற்றை அவர்கள் நாட்டுக்குச் செய்வார்கள்.''புரிகிறது சுவாமி.''இந்த குரு பரம்பரை மிக முக்கியமானது விஷ்ணுவர்த்தா! எவனொருவன் தன் ஆசாரியரைக் கண்டடைந்து, அவரிடம் பஞ்ச சம்ஸ்காரங்களைப் பெற்று பாகவத உத்தமனாக வாழ்கிறானோ அவனே எம்பெருமானுக்கு உகந்தவன் ஆகிறான். ஆசாரிய சம்பந்தம் இல்லாமல் அவனை நெருங்குவது அத்தனை எளிதல்ல.''உண்மை சுவாமி. அவ்விதத்தில் நானும் என் மகள் வகுளாவும் புண்ணியம் செய்தவர்கள். என்ன காரணத்தாலோ என் மனைவி இந்த வழிக்கு வர மறுக்கிறாள்.'உடையவர் புன்னகை செய்தார். 'அறிவைப் புகட்ட முடியும் விஷ்ணுவர்த்தா. ஆனால் ஞானத்தையல்ல. ஞானம் என்பது தன்னால் திரண்டு வரவேண்டியது. ஒரு தரிசனத்தில் சித்திப்பது. ஆசாரிய சம்பந்தம் தேடிச் செல்வதே ஞானத்தேடலின் தொடக்கம். உன் மனைவியைப் பற்றி வருந்தாதே. முதலில் இந்தத் திருக்கோயில் பணிகளைச் சிறப்பாகச் செய்து முடிக்கிற வழியைப் பார்.'
அவர்கள் பேசிக் கொண்டிருந்த போதுதான் அத்தகவல் வந்தது. குலோத்துங்கன் இறந்து விட்டான்.அடடே என்று துள்ளியெழுந்தார்கள் ராமானுஜரின் சீடர்கள்.'வேண்டாம். ஒரு மரணத்தை யாரும் கொண்டாடாதீர்கள். வெறுப்பு அல்ல; வெறுத்தவர்களையும் அரவணைப்பதே வைணவம்' என்றார் ராமானுஜர்.'சுவாமி, சிறியாண்டான் கூரேசரைத் தேடி மாலிருஞ்சோலைக்குப் போயிருக்கிறாரே, அவர்கள் இருவருக்கும் நிச்சயம் இத்தகவல் எட்டியிருக்கும். இனி திருவரங்கம் திரும்ப நமக்குத் தடையிருக்காது என்றே நினைக்கிறேன்' என்றார் முதலியாண்டான்.
ராமானுஜர் எதுவும் பேசவில்லை. சிறிது நேரம் அமைதியாக யோசித்தார். நேற்று நடந்த மாதிரி இருக்கிறது. திடீரென்று ஒரு காலைப் பொழுதில் எல்லாமே கலைந்து விட்டாற் போன்ற காட்சி மங்கலாக நினைவுக்கு வந்தது. கூரேசரும் பெரிய நம்பியும் சோழன் சபைக்குச் சென்ற பிறகு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளவே எத்தனை வருடங்களாகி விட்டன! காலமும் துாரமும் பிரித்துப் போட முயற்சி செய்தாலும் நினைவுச் சரத்தில் இடைவெளி இல்லாமல்தான் இருக்கிறது.ஒரு திருப்தி இருந்தது அவருக்கு. துக்கத்தில் துவண்டு அமர்ந்து விடவில்லை. செய்ய வேண்டிய எந்தப் பணியையும் தள்ளிப் போடவில்லை. எத்தனை தேசங்கள், எத்தனை ஆயிரம் மக்கள், எவ்வளவு பண்டிதர்கள், எப்பேர்ப்பட்ட மன்னர்களைச் சந்தித்தாகி விட்
டது! உக்கிரமும் வன்மமும் வெறுப்பும் மேலோங்க வாதுக்கு வந்த விற்பன்னர்கள். எம்பெருமான் அருளால் எல்லோரையும் வெல்ல முடிந்திருக்கிறது.
குலப்பெருமையல்ல; குறைவற்ற பக்தியே பெரிது என்று மானிட சமூகத்துக்குப் புரிய வைக்க முடிந்திருக்கிறது. சாதியை முன்வைத்து மேலோர், தாழ்ந்தோர் என்று பேசுவதன் அறமின்மையை உணர்த்த முடிந்திருக்கிறது. ஒரு திருக்கச்சி நம்பியைக் காட்டிலும் மேலோர் உண்டா! மாறநேர் நம்பியினும் புண்ணியாத்மா இருந்துவிட முடியுமா! பிறப்பால் வைணவனாக இருந்தாலும், கூரேசரின் சீடனாகவே இருந்தாலும் சோழனின் அமைச்சன் நாலுாரான் நடந்துகொண்ட விதத்தை எப்படி மதிப்பிடுவது?இன்னொன்றும் இருக்கிறது. செல்வம். செழிப்பு கொடுக்கிற அகம்பாவம். ராமானுஜருக்கு இன்னொரு சம்பவம் நினைவுக்கு வந்தது. பல வருடங்களுக்கு முன்னர் திருவரங்கத்தில் இருந்து காஞ்சிக்குப் புறப்பட்டுப் போனபோது வர
தாழ்வான் வீட்டில் தங்கிய சம்பவம். உண்மையில் யக்ஞேசன் என்னும் தமது சீடன் ஒருவனின் இல்லத்தில்தான் அவர் தங்க நினைத்திருந்தார். அவனது பணத்திமிர் அங்கு செல்ல விடாமல் தடுத்து விட்டது. பின்னர் அதே யக்ஞேசன் கதறிக்கொண்டு வந்து காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதை எண்ணிப் பார்த்தார். உன் பணம் உனக்கு என்ன கொடுக்கும்? ஆசாரிய சம்பந்தம் இருந்தும் அறிவில் தெளிவில்லாமல் என்ன பயன்?
ஆசாரியரே விட்டு விலகிச் செல்வதுதான் நிகர லாபமாக இருக்கும்.'எம்பெருமானே! மனித குலத்தைப் பீடித்திருக்கும் குலச் செருக்கு, செல்வச் செருக்கு முற்றிலும் நீங்கக் கருணை புரி. அகந்தையற்று இருப்பதே வைணவம், கைங்கர்யமே வைணவன் இலக்கணம் என்பதை வாழும் வரை நான் சொல்லிக் கொண்டே இருக்க வழி செய்!' என்று மானசீகமாகப் பிரார்த்தனை செய்தார்.

அரங்கா, வருகிறேன்!
2017
06:40
Advertisement
பதிவு செய்த நாள்
23ஏப்2017
06:40
ஹேவிளம்பி வருடத்தின் சித்திரை பிறந்தது. அன்று சனிக்கிழமை. வளர்பிறை திரயோதசி. ஹொய்சள தேசமே விளக்கொளியிலும் மங்கல வாத்திய அணிவகுப்புகளிலும் வாண வேடிக்கைகளிலும் ஒளிர்ந்து கொண்டிருந்தது. ஐந்து கோயில்களிலும் ஒரே முகூர்த்தத்தில் விக்கிரகப் பிரதிஷ்டைக்குத் திட்டமிட்டிருந்தார் ராமானுஜர். பொறுப்பு முதலியாண்டானிடம் தரப்பட்டிருந்தது. முன்னதாக அதற்குச் சில தினங்களுக்கு முன்புதான் ராமானுஜருக்கு நுாறு வயது நிறைந்திருந்தது. தொண்ணுாறு நிறைந்திருந்த முதலியாண்டான்தான் அந்நாளையும் திருவிழாவாக்கிக் கொண்டாடினார்.
'முதலியாண்டான்! நமக்கு இதனைக் காட்டிலும் பெருமகிழ்ச்சி, பேலுாரைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் அனைத்து சமணர்களையும் நீர் வைணவராக்கி வைத்ததுதான். அது நடந்ததால்தான் பஞ்ச நாராயணர் கோயில்களை அங்கே நிறுவ முடிந்தது!' என்றார் ராமானுஜர். 'சுவாமி, அடியேன் தங்கள் பாதுகை. இதைத் தாங்களே ஒப்புக் கொண்டிருக்கிறீர்கள். அப்படி இருக்க நான் சென்று சாதித்தேன் என்று சொல்லுவதில் நியாயமே இல்லையே? உங்களை நெஞ்சில் ஏந்திச் சென்றது ஒன்றே என் பணி.' என்று கரம் குவித்தார் முதலியாண்டான்.
உடையவர் அவரைத் தோளோடு அணைத்து ஆசீர்வதித்தார். காஞ்சியில் சன்னியாசம் ஏற்ற கணத்தில் 'முதலியாண்டானைத் தவிர அனைத்தையும் துறந்தேன்' என்று சொன்னது நினைவுக்கு வந்தது. அது உணர்ச்சி வயத்தில் சொன்னதல்ல. முதலியாண்டானை எப்படித் துறக்க முடியும்? தான் மட்டுமல்ல; வைணவ உலகமே தலைமேல் ஏந்திச் சீராட்ட வேண்டிய சுத்த ஆத்மா அல்லவா!'நீங்கள் சொல்லுவது சரி. முதலியாண்டான் இல்லாது போனால் ஆலயக் கட்டுமானமும் இன்றைய விக்கிரகப் பிரதிஷ்டையும் இத்தனைக் குறுகிய காலத்தில் நடைபெற்றிருக்க வாய்ப்பே இல்லை. எதிர்த்து வந்த அத்தனை சமணர்களையும் அவர் தனியொருவராக வாதில் வென்று பணிய வைத்த காட்சி இப்போதும் என் கண்ணில் நிற்கிறது சுவாமி!' என்று பரவசப்பட்டுச் சொன்னான் விஷ்ணுவர்த்தன்.அது மிகப்பெரிய காரியம். பல்லாண்டு காலக் கடும் உழைப்பு. ஆயிரமாயிரம் பேர் ரத்தமும் வியர்வையும் சிந்தி உழைத்ததன் பலன். ஹொய்சள மன்னன் விஷ்ணுவர்த்தனின் குறைவற்ற பக்தி சாத்தியமாக்கிய திருப்பணி. அனைத்துக்கும் மேலாக முதலியாண்டான் அங்கே முன்னால் நின்றிருந்தார். இரவு பகல் பாராமல் பணியில் ஈடுபட்டிருந்த அத்தனை பேருடனும் தொடர்பில் இருந்தார். ஆகமம் பிசகாமல், இலக்கணம் வழுவாமல், புனித பங்கம் ஏதும் நேராமல், ஒரே சித்தமாகச் சுழன்று சுழன்று உழைத்துச் சாத்தியமாக்கிய திருக்கோயில்கள்.அன்று ஐந்து ஆலயங்களிலும் விக்கிரகப் பிரதிஷ்டை விமரிசையாக நடந்தேறியது. எங்கும் நாராயண கோஷம். இனி என்றென்றும் ஹொய்சள மண்ணில் வைணவம் தழைத்து வாழும் என்ற முழு நிறைவு உடையவர் நெஞ்சில் உண்டானது.போதும். திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டு ஹொய்சள தேசத்துக்கு வந்து தங்கத் தொடங்கிப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு
மேல் ஆகிவிட்டன. ஒரு மாபெரும் துயர காலத்தைக் கடந்து செல்ல இந்த மண் பேருதவி செய்திருக்கிறது. அனைத்து முகங்களும் புதியவை. அத்தனை பேரும் அறிமுகமில்லாதவர்கள். ஆனால் தங்கள் மண்ணின் தவப்புதல்வன் போலவே ஏந்தியெடுத்துச் சீராட்டியவர்கள்.'மன்னா இதில் ஒரு செய்தி இருக்கிறது. நாம் போதிக்கும் சித்தாந்தம், நாம் பிரசாரம் செய்யும் கருத்து சரியானதாக, இயற்கையானதாக, உண்மைக்குச் சற்றும் வெளியில் நில்லாததாக இருக்குமானால் மக்கள் அதை அங்கீகரிப்பதில் எந்தச் சங்கடமும் நேராது.' என்றார் ராமானுஜர்.'உண்மைதான் சுவாமி. ஆனால் யார் செய்கிறார்கள் என்பதும் இங்கு முக்கியமாகிறது.
தங்களின் இருப்பு ஒன்றே அனைத்துக் காரியங்களையும் குறைவின்றி நிறைவேற்றியிருக்கிறது என்பதை மறுக்காதீர்கள்!' என்றான் விஷ்ணுவர்த்தன். அவனுக்கு அடி மனத்தில் அச்சம் எழுந்து விட்டிருந்தது. சோழ மன்னன் குலோத்துங்கன் இறந்து விட்டான் என்ற செய்தி வந்தபோதே அவன் கலக்கமடைந்தான். எங்கே ராமானுஜர் தன் தேசத்தை விட்டுப் போய் விடுவாரோ என்கிற கலக்கம். இழுத்துப் பிடித்து உட்கார வைக்க அவனுக்குப் பஞ்ச நாராயண ஆலயக் கட்டுமானப் பணிகள் கைகொடுத்தன. அவை சிறப்பாக உருவாகி, குடமுழுக்கு நடைபெறும் வரை உடையவர் கிளம்ப மாட்டார் என்று நிம்மதி கொண்டிருந்தான்.காலம் என்று ஓய்வு கொண்டிருக்கிறது? கண்ணுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அது நகர்ந்து கொண்டேதான் இருக்கிறது. இதோ கோயில்கள் எழுந்து விட்டன. விக்கிரகப் பிரதிஷ்டை முடிந்து விட்டது. பாண்டிய தேசம் சென்ற உடையவரின் சீடர் சிறியாண்டானும் சோழ தேச நிலவரம் கண்டறிந்து வந்திருக்கிற நடாதுார் ஆழ்வானும் ஒரே தகவலைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.குலோத்துங்கனுக்குப் பிறகு பட்டத்துக்கு வந்திருக்கிற விக்கிரம சோழன், தனது தந்தையின் தவறுகள் புரிந்து தெளிந்தவனாக இருக்கிறான். திருவரங்கம் ஆலயத்துக்கும் உடையவர் சமூகத்துக்கும் செய்த பிழைகளை மன்னிக்கக் கோரியிருக்கிறான். உடையவர் மீண்டும் திருவரங்கம் வரக் கோரிக்கை விடுத்திருக்கிறான்.ராமானுஜர் சில வினாடிகள் அமைதியாகக் கண்மூடி யோசித்தார். பிறகு கண்ணைத் திறந்து பேச ஆரம்பித்தார்.
'விஷ்ணுவர்த்தா! என்னைத் திருவரங்கத்தில் இருந்து கிளப்பி அனுப்பியது குலோத்துங்கன் என்றா கருதுகிறாய்? நிச்சயமாக இல்லை. இது அரங்கன் சித்தம். பாரத தேசமெங்கும் வைணவ நெறியைப் பரப்பவே என்னை அவன் படைத்தான்.''உண்மைதான் சுவாமி. ஆனால்
இன்று குலோத்துங்கன் இறந்து விட்டானே! தாங்கள் கிளம்புகிறேன் என்கிறீர்களே! வைணவருலகில் குலோத்துங்கன் இறப்புக்காகக் கவலை கொள்பவன் நான் மட்டுமாகத்தான் இருப்பேன்!'உடையவரும் சீடர்களும் சிரித்தார்கள். 'புரிகிறது விஷ்ணுவர்த்தா. அவன் மறைவு என்னை மீண்டும் திருவரங்கத்தை நோக்கி இழுப்பதை எண்ணிப் பேசுகிறாய். ஆனால் இதை நீ ஏற்கத்தான் வேண்டும். அரங்க நகரைவிட்டு நான் பிரிந்து பல வருடங்களாகி விட்டன. என் வயதும் நுாறைத் தொட்டு விட்டது. இனியும் நான் தாய்மடியை விட்டு விலகியிருப்பது சரியல்ல.'ராமானுஜர் அங்கிருந்து போகவே கூடாது என்று மன்னனோடு மக்களும் சேர்ந்து குரல் கொடுத்தார்கள். என்ன சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்துவது என்று அவர்
யோசித்தார். 'சரி, என் திருமேனி ஒன்றைச் சிலையாக வடித்து வாருங்கள்.'சிலை வந்தது. அச்சு அசல் ராமானுஜரை அப்படியே ஒத்திருந்தது. கலையும் பக்தியும் கைகோத்த தருணம். உடையவர் அச்சிலையை எடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். தமது அருளையும் தெய்வீக சக்திகளையும் அதில் சேர்த்து இறக்கி வைத்தார்.'இனி என் இடத்தில் இது இருக்கும். இதனுள்ளே நான் இருப்பேன். என்றென்றும் இதன் வாயிலாக உங்களுடனேயே இருப்பேன்!' என்று சொன்னார். 'தமர் உகந்த திருமேனி' என்றழைக்கப்பட்ட அச்சிலை திருநாராயணபுரத்தின் அடையாளமாயிற்று.ராமானுஜர் தமது சீடர்களுடன் திருவரங்கம் நோக்கிப் புறப்பட்டார்.

திருவரங்கம் அழைக்கிறது
2017
08:39
Advertisement
பதிவு செய்த நாள்
24ஏப்2017
08:39
'சுவாமி, நான் சொன்னதற்கு இன்னும் பதிலே சொல்லவில்லையே? சோழன் போய்ச் சேர்ந்துவிட்ட தகவல் எப்படியும் எம்பெருமானாருக்குத் தெரிந்திருக்கும். இந்நேரம் அவர் கிளம்ப ஆயத்தமாகியிருப்பார். தாமதிக்காமல் தாங்களும் குடும்பத்தோடு திருவரங்கம் புறப்படுவதே எனக்குச் சரியென்று படுகிறது!' என்றார் சிறியாண்டான்.
கூரேசர் பதில் சொல்லவில்லை.
அமைதியாக யோசித்துக் கொண்டிருந்தார். அடுக்களையில் சமையலை முடித்துவிட்டு மெல்ல வெளியே வந்த ஆண்டாள் அம்மாள், 'முதலில் சாப்பிட்டு விடுங்களேன். பிறகு உட்கார்ந்து யோசிக்கலாமே!''அம்மா, யோசிக்க அவகாசமில்லை. கூரேசர் பக்கம் இல்லாமல் உடையவர் தவித்துப் போயிருக்கிறார். இங்கு நடந்த சம்பவங்களைக் கேள்விப்பட்ட பிறகு அவருக்கு அங்கு நிச்சயம் இருப்புக் கொள்ளாது. காலமும் நமக்குச் சாதகமாகிக் கொண்டிருக்கிறபோது தாமதிப்பதில் அர்த்தமில்லையே!' என்றார் சிறியாண்டான்.
அப்போது பட்டர் உள்ளே வந்தார். சட்டென்று எழுந்து வணங்கிய சிறியாண்டான், 'சுவாமி நலமா?'
'எம்பெருமானார் திருவருளால் மிக்க நலம். அங்கே சுவாமி எப்படி இருக்கிறார்?'
'எப்போதும் தங்கள் தந்தையின் நினைவாகவே உள்ளார். இப்போதுதான் இங்கு நடந்தவை அங்கே எங்களுக்குத் தெரியவந்தது. உடனே என்னை இங்கு அனுப்பினார்!' என்றார் சிறியாண்டான்.
ஒரு கணம் யோசித்த பட்டர், 'அப்பா, நாம் திருவரங்கம் புறப்பட்டு விடலாம்.' என்று சொன்னார்.
அதுவரை அமைதியாக இருந்த கூரேசர் முகத்தில் சட்டென்று ஒரு முறுவல் பூத்தது. 'சரி, அப்படியே!' என்று உடனே சொன்னார்.
ஆண்டாள் அவர்களுக்கு இலை போட்டாள். பட்டரின் மனைவி அக்கச்சி பரிமாற ஆரம்பித்தாள்.
அப்போது ஒரு சம்பவம் நடந்தது. சிறியாண்டான் திகைத்துப் போய் விட்டார். உண்ண அமரும் முன் ஒரு சொம்பில் நீர் எடுத்து வந்த கூரேசரின் மனைவி ஆண்டாள், அதைத் தம் மகன் பராசர பட்டரின் பாதங்களில் விட்டுக் கழுவினார். கழுவிய நீரை ஒரு பாத்திரத்தில் ஏந்தி எடுத்துக் கொண்டு உள்ளே சென்று வைத்தார்.
இதென்ன விசித்திரம்! எந்தத் தாயும் தன் மகனிடம் செய்யாத காரியத்தையல்லவா ஆண்டாள் செய்து கொண்டிருக்கிறாள்!
கேட்பதா வேண்டாமா என்ற குழப்பத்துடனேயே சிறியாண்டான் சாப்பிட்டு முடித்தார். ஆண்டாள் பட்டரின் பாதங்களை அலம்பியது மட்டுமல்ல அவரது அதிர்ச்சி. அருகிலேயே கூரேசர் இருந்தும் அவருக்கு அப்படியொரு சேவையை அவள் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியே பிரதானமாக இருந்தது.
அவர்கள் சாப்பிட்டு முடித்து எழுந்த பிறகு ஆண்டாள் உண்ண அமர்ந்தாள். மருமகள்கள், பராசர பட்டரின் மனைவியான அக்கச்சியும், வேதவியாச பட்டரின் மனைவியான மன்னியும் அவளுக்குப் பரிமாற ஆரம்பித்தார்கள். உண்ணத் தொடங்கும் முன் தாம் எடுத்து வைத்த பட்டரின் பாத தீர்த்தத்தை ஒரு வாய் அருந்திவிட்டு, அதன் பிறகே ஆண்டாள் உணவில் கை வைத்தாள்.
அதிர்ந்து போன சிறியாண்டான், 'தாயே, இதென்ன காரியம்? தங்கள் மகனின் பாத தீர்த்தத்தை தாங்கள் எதற்காக அருந்துகிறீர்கள்?' என்று பதறிக் கேட்டார்.
'ஏன், இதிலென்ன தவறு? சிற்பி ஒருவன் சிலையைச் செதுக்குகிறான். செதுக்கும்போது அவன் சிற்பி. அது கல். செதுக்கி முடித்ததும் அந்தக் கல் பெருமாள் சிலையாகி விடுகிறது. முறைப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட அந்தச் சிலையை சிற்பி வணங்க மாட்டானா? தான் வடித்த சிலைதானே என்று அகம்பாவம் காட்ட முடியுமா? என் மகன் எனக்கு அப்படித்தான்!'
சுரீரென்று மின்னலடித்தது சிறியாண்டானுக்கு. திருவரங்கம் கிளம்பச் சொல்லி தான் கேட்டபோதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, பட்டர் ஒரு வார்த்தை சொன்னதும் கூரேசர் உடனே ஒப்புக் கொண்டதை எண்ணிப் பார்த்தார். 'அது பிறப்பல்ல; அவதாரம்' என்று உடையவரே ஒருமுறை சொன்னதும் அவர் நினைவுக்கு வந்தது. சட்டென்று எழுந்து பட்டரை வணங்கினார்.
பிறந்த கணத்தில் எம்பாரால் காதில் த்வயம் ஓதப்பட்ட குழந்தை.
ஆளவந்தாருக்கு செய்து கொடுத்த சத்தியங்களில் முதலாவதாகப் பராசர முனியின் பெயரை உடையவரால் வழங்கப்பட்ட பிள்ளை. மிகச் சிறு வயதிலேயே பூரண ஞானம் எய்திய மகான் என்று முதலியாண்டான், எம்பார், அருளாளப் பெருமான் எம்பெருமானார் போன்றோரால் சுட்டிக் காட்டப்பட்டவர்.
ஒரு சமயம் திருவரங்கம் கோயில் கருவறைக்குள் நாயொன்று நுழைந்து விட்டது. இதென்ன அபசாரம் என்று வருத்தப்பட்ட அர்ச்சகர்கள் சிறிய அளவில் குடமுழுக்கொன்றை நடத்திவிட முடிவு செய்தார்கள். (லகு சம்ப்ரோக்ஷணம் என்பார்கள்.) இது தெரிந்ததும் பராசர பட்டருக்கு சுறுசுறுவென்று கோபம் வந்துவிட்டது. நேரே சன்னிதிக்குப் போனார். 'பெருமானே, தினசரி நான் இங்கு வருகிறேன். நினைவு தெரிந்த நாளாக தினமும் வந்து கொண்டிருக்கிறேன். அப்படியானால் எத்தனை ஆயிரம் சம்ப்ரோக்ஷணங்கள் இதுவரை செய்திருக்க வேண்டும்? அதையெல்லாம் விட்டுவிட்டு, இன்று இந்த நாய் நுழைந்ததற்காக மட்டும் குடமுழுக்கு என்பது என்ன நியாயம்? நாயினும் கடையோன் நானே அல்லவா?' என்றதும் திடுக்கிட்டுப் போனார் அர்ச்சகர்.
பட்டரின் தன்னடக்கம் அப்படிப்பட்டது.
இச்சம்பவம் நினைவுக்கு வர, சிறியாண்டான் புன்னகை செய்தார்.
'தாயே, நீங்கள் சொல்லுவது சரி. பட்டரின் பாதம் பட்ட நீர் மகத்தானதுதான்.'
'போதும் சுவாமி. உடையவரைப் பற்றிச் சொல்லும். கன்னட தேசத்தில் அவர் சௌக்கியமாக இருக்கிறாரா?'
'ஆம் சுவாமி. ஆயிரக்கணக்கான சீடர்கள் அவருக்கு அங்கே கிடைத்திருக்கிறார்கள். மன்னன் விஷ்ணுவர்த்தன் உடையவரின் சொல்லுக்கு மறு சொல் பேசுவது கிடையாது. எம்பெருமானார் கருத்துப்படி பேலுாரைச் சுற்றி ஐந்து நாராயண க்ஷேத்திரங்களை உருவாக்கி இருக்கிறான். இந்நேரம் விக்கிரகப் பிரதிஷ்டை நடந்தேறியிருக்கும்.' என்றார் சிறியாண்டான். தொடர்ந்து, திருவரங்கத்தில் இருந்து புறப்பட்டது முதல் அவர்கள் சென்ற இடங்களில் நடந்த சம்பவங்களை எல்லாம் விவரித்துச் சொல்லிக்கொண்டே வந்து, இறுதியில் 'கூரேசருக்குக் கண் போய்விட்டதுதான் இந்நாள்களில் உடையவரின் ஒரே பெரும் வருத்தம். தன் கண்ணே போனது போல உணர்ந்தார்.'
கூரேசர் கரம் குவித்துத் தம் மானசீகத்தில் ராமானுஜரை வணங்கினார். 'அமுதனார் பாடியபடி அவர் மேகத்தைப் போன்ற கருணை உள்ளம் படைத்தவர். எப்போதும் அடுத்தவர்களுக்காகத் தான் சிந்தித்துக் கொண்டிருப்பார். இத்தனை வருடம் அவரை விட்டு விலகியிருக்க நேர்ந்ததை எண்ணிப் பார்க்கிறேன். ஒரு பாவியாக இல்லாமல் இப்படியொரு தண்டனை எனக்கு வாய்த்திருக்காது!' என்றார் கூரேசர்.
அவரை சமாதானப்படுத்தி, விரைவில் திருவரங்கம் புறப்பட ஏற்பாடுகள் செய்தார் சிறியாண்டான். 'நான் போய் உடையவருக்குத் தகவல் சொல்லி அவரை அங்கே அழைத்து வந்து விடுகிறேன். அதற்குமுன் நீங்கள் அங்கே வந்துவிடுவது தான் அவருக்கு சந்தோஷமாக இருக்கும்' என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.

விழாக்கோலம்
2017
00:11
கண்ணழகர்
2017
00:29
பதிவு செய்த நாள்
25ஏப்2017
00:11
பொங்கிப் பெருக்கெடுத்த காவிரியின் கரையோரம் மற்றொரு நதிப்பெருக்கே போல் திரண்டிருந்தது ஜனக்கூட்டம். கோயில் அத்தியாபகர்கள் ஒருபுறம் திருவாய்மொழி சொல்லிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் திருக்கோயில் மாலை மரியாதைகளுடனும் தீர்த்தப் பிரசாதங்களுடனும் அர்ச்சகர்கள் காத்திருந்தார்கள். எப்போது வருவார், எப்போது வருவார் என்று ஆண்களும் பெண்களும் கண்ணெட்டிய துாரங்களில் பார்த்துப் பார்த்துத் தவித்துக் கொண்டிருந்தார்கள். மங்கல வாத்திய விற்பன்னர்கள் என்றுமில்லா உற்சாகத்துடன் ஏகாந்தமாக வாசித்துக் கொண்டிருக்க, சூரியன் உதித்து மேலெழும்ப ஆரம்பித்த நேரம் காவிரியில் ஓடங்கள் வரிசையாக அணி வகுத்து வருவது தெரிந்தது.
'அதோ வந்துவிட்டார்! அங்கே பாருங்கள்!' யாரோ கூக்குரலிட்டார்கள். மொத்தக் கூட்டமும் பரவசத்தின் எல்லையைத் தொட்டுத் திளைத்துக் கொண்டிருந்தது. வாத்தியங்களின் இசை வேகமெடுத்தது. வாழ்த்தொலிகள் விண்ணைத் தொட்டன. இழந்த தன் பொலிவை அரங்கநகர் மீண்டும் பெற்று விட்டதன் அத்தாட்சியாக அந்தக் கொண்டாட்டக் கோலாகலங்கள் காற்றில் ஏறி விண்ணை நிறைத்தன.ஓடங்கள் கரையை வந்தடையவும், காத்திருந்த அத்தனை பேரும் இரு கரை கட்டினாற்போல் ஒதுங்கி நின்று விழுந்து சேவித்தார்கள். அர்ச்சகர்களும் பிரபந்த கோஷ்டியாரும் முன்னால் வந்து மங்கல வார்த்தைகள் சொன்னார்கள்.ராமானுஜர் திருவரங்கத்து மண்ணில் மீண்டும் காலெடுத்து வைத்தார். முதலியாண்டான் இறங்கினார்.
வில்லிதாசர் இறங்கினார். திருக்குருகைப் பிரான் பிள்ளான் இறங்கினார். கிடாம்பி ஆச்சான், நடாதுாராழ்வான், வடுக நம்பி, தெற்காழ்வான், உக்கலாழ்வான் என்று வரிசையாக உடையவரின் சீடர்கள் ஒவ்வொருவராக இறங்கினார்கள். அவர்களுக்குப் பின்னால் கோஷ்டியில் புதிதாக இணைந்த அத்தனை பேரும் வந்திறங்கினார்கள். நுாறு, இருநுாறு, முன்னுாறு, ஐந்நுாறு என்று எண்ண எண்ணக் கூட்டம் பெருகிக் கொண்டே போனது.'வாரீர் எம்பெருமானாரே! எம்மை வாழ வைக்க மீண்டும் வந்துதித்து விட்டீரோ!' என்று நெகிழ்ந்து தாள் பணிந்த அரங்கமாநகர் அன்பர்களைக் கனிவோடு நோக்கினார் ராமானுஜர். நுாறு வயதின் முதுமையைப் புறந்தள்ளிய ஆகிருதி அது. சரியாத தோள்களும் குனியாத முதுகும் தாழாத சுடர் விழிகளும் நீங்காத முறுவ
லும் அவர் உடன்பிறந்தவை. காவியாடை காற்றில் அலைய, திரிதண்டம் ஏந்தி நடக்க ஆரம்பித்தால் அந்த கம்பீரத்தின் பேரெழிலைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் திருவரங்கம். கூப்பிய கரங்கள் இறங்க வெகுநேரமாகும்.பதிமூன்று ஆண்டுகள் ஓடியே விட்டன. உடையவர் இல்லாத அரங்க நகரில் திருக்கோயிலுக்குச் செல்லவே ஆயிரத்தெட்டு கெடுபிடிகள் இருந்தன. 'நீ ராமானுஜரின் ஆளா?' என்று காவலர்கள் நிறுத்தி விசாரிக்கும் வழக்கம் ஏற்பட்டிருந்தது. இல்லை என்று பொய் சொல்லிவிட்டு யாரும் உள்ளே போகிற வழக்கம் கிடையாது.
ஆமாம் என்று சொன்னால் அப்படியே திருப்பி அனுப்பி விடும் சோழர் காவல் படை.இப்படித்தான் ஒருநாள் கூரத்தாழ்வான் கோயிலுக்குப் போக முயன்றபோது காவலர்கள் தடுத்தார்கள். 'நீர் ராமானுஜரின் சீடர்தானே?''ஆம். அதிலென்ன சந்தேகம்?''உடையவர் சம்பந்தமுடைய யாருக்கும் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. ஆனால் நீர் குருடர். தவிர தள்ளாடும் கிழப்பருவம் வேறு. ஒழிகிறது. சீக்கிரம் உள்ளே போய்விட்டு வாருங்கள்!' என்றான் ஒரு காவலன். வெகுண்டு விட்டார் கூரேசர். 'அடேய், உடையவர் சம்பந்தம் இருந்தால் எனக்கு அரங்கன் சன்னிதிக்குச் செல்ல அனுமதி இல்லை என்றால் எனக்கு அரங்கன் சம்பந்தமே வேண்டாம், ஒழியுங்கள்!' என்று கத்திக் கூப்பாடு போட்டுவிட்டுத் திரும்பிப் போய் விட்டார்.அன்று திருவரங்கத்தை விட்டுக் குடும்பத்தோடு வெளியேறியவர்தான். அன்றுவரை திரும்பி வரவில்லை.'எம்பெருமானாரே, இன்று இந்நகரம் தன் பழைய பொலிவை மீட்டுக் கொண்டது. குலோத்துங்கன் மறைந்து விட்டான். அவன் மகன் நல்லவனாக இருப்பான் போலிருக்கிறது. உங்களைச் சந்திக்க விரும்பித் தகவல் அனுப்பியிருக்கிறான். இனி நமக்குச் சிக்கலேதும் இருக்காது. வாருங்கள்!'கோயில் மரியாதைகளை அளித்து, தீர்த்தப் பிரசாதம் வழங்கி உடையவரையும் அவரது சீடர்களையும் அரங்கநகர் மக்கள் ஊர்வலமாக அழைத்துச் சென்றார்கள்.'எம்பெருமானே! என் அரங்கா! இதோ வந்துவிட்டேன். நீ அளித்த பணிகளை முடிந்த அளவுக்கு நிறைவேற்றிவிட்டு இளைப்பாற உன் மடி தேடி வந்திருக்கிறேன்.' என்று நெஞ்சு விம்ம சன்னிதியை நோக்கி விரைந்தார் ராமானுஜர்.
ஆதி யுகத்தில் இஷ்வாகு குலத்தோரால் ஆராதிக்கப்பட்டு வந்த ரங்கநாதரை ராமபிரான் விபீஷணனுக்கு அளித்தான். ராம பட்டாபிஷேகம் முடிந்தபின் இலங்கை திரும்பும் வழியில் திருவரங்கத்தில் விபீஷணன் அப்பெருமானை விட்டுப் போனான். அன்றுமுதல் தென் திசை நோக்கிக் கிடந்த கோலத்தில் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் அன்று தம் தவப்புதல்வரை நெஞ்சு நிறை வாஞ்சையுடன் வரவேற்றான்.சன்னிதியில் அர்ச்சனைகள்
வெகு விமரிசையாக நடந்தேறின. பிரபந்த பாராயணம் விண்ணதிர முழங்கியது. எங்கெங்கும் மகிழ்ச்சிப் பெருக்கு. எல்லோர் மனத்திலும் நிம்மதியின் ஊற்று. ஒரு தாயற்ற சிசுவைப் போலத் தாங்கள் இத்தனை ஆண்டுக்காலம் இருந்திருக்கிறோம் என்பதே அவர்களுக்கு
ராமானுஜர் திரும்பி வந்தபோதுதான் தெளிவாகப் புரிந்தது. இனி கவலையில்லை. அரங்கனையும் ஆலய நிர்வாகத்தையும் திருவரங்கத்து வைணவர்களையும் ஒருசேர கவனித்துக் கொள்ள உரிமைப்பட்டவர் வந்துவிட்டார்.அரங்கன் சன்னிதியில் சேவை முடிந்தபின் ராமானுஜர் ரங்க நாச்சியார் சன்னிதிக்குப் போனார். ஒவ்வொரு சன்னிதியாக வரிசை வைத்துச் சென்று கண் குளிர தரிசித்து மனம் குவியப் பிரார்த்தனை செய்தார்.
'சுவாமி, திருமடத்துக்குச் செல்லலாமா?' அர்ச்சகர் கேட்டதும் ஒரு கணம் யோசித்தார். 'சரி, நீங்கள் எல்லோரும் மடத்துக்குப் போங்கள். நான் வந்து விடுகிறேன்' என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென பெரிய நம்பியின் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.மாபெரும் இழப்பின் வடு இன்னும் அங்கு மறைந்திருக்கவில்லை. அழுது இளைத்திருந்த அத்துழாயும், அழக்கூடத் தெம்பற்று இருந்த அவளது சகோதரன் புண்டரீகாட்சனும் உடையவரைக் கைகூப்பி வரவேற்றார்கள். அவர்களுக்கு ஆறுதலாகச் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு கிளம்பியபோது, வீதியின் இரு புறங்களில் இருந்தும் சீடர்கள் சிலர் ஓடி வந்தார்கள்.'சுவாமி, விக்கிரம சோழன் தங்களைக் காண வரலாமா என்று கேட்டனுப்பியிருக்கிறான்!' என்றது ஒரு தரப்பு.அதே நேரம் எதிர்ப்புறமிருந்து வந்த வேறொரு சீடன், 'சுவாமி, கூரேசர் வந்து கொண்டிருக்கிறார்!'ஒரு கணம்தான். உடையவர் ஒரு சொல்லும் பேசவில்லை. விறுவிறுவென்று கூரேசரை எதிர்கொண்டழைக்கக் கிளம்பி விட்டார்.'வைணவப் பெருஞ்செல்வமே! என் கூரேசரே! உம்மைக் காணாமல் இத்தனைக் காலமாக இந்தக்
கிழவன் எப்படித் துடித்துப் போயிருக்கிறேன் தெரியுமா? வந்து விட்டீரா! இனி வைணவ தரிசனம் வானளாவ வளர்வது உறுதி.' சொற்களற்று நெஞ்சில் முட்டி மோதிய உணர்வுப் பெருக்குடன் வீதியில் விரைந்தார் ராமானுஜர்.

26ஏப்2017
00:29
நின்று சுழலும் புவியும், நில்லாது ஓடும் காலமும் கணப் பொழுது உறைந்து மீண்டாற் போலிருந்தது. தடதடத்து ரதம் ஓடும் அகண்ட பெரும் வீதியில் ராமானுஜரும் கூரேசரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்தபோது பரவசக் கண்ணீரைத் தவிர இருவரிடமும் ஏதும் இருக்கவில்லை. 'சுவாமி..!' என்று பாதம் பணிய வந்த கூரேசரை அப்படியே அள்ளி அணைத்துக் கொண்டார் ராமானுஜர்.
'இதுவோ விதி? இதுவோ உம் சேவைக்குப் பரமன் அளித்த பரிசு? ஞானச் சுடரொளி வீசும் தங்கள் விழிகளை அல்லவா இத்தனைக் காலமாக உமது அடையாளமாக என் நினைவில் ஏந்தி பத்திரப்படுத்தி இருந்தேன்! அதைப் பிடுங்கி எறிந்தது காலத்தின் உக்கிரமா, கலியின் வக்கிரமா? இப்படி ஆகிவிட்டதே கூரேசரே!''வருந்தாதீர்கள் சுவாமி. கலி கெடுக்க வந்த புருஷர் தாங்கள். ஆயிரமாயிரம் பேர் அகக்கண் திறந்து வைத்தவர் தாங்கள். அடியேனும் அதிலொருவன் அல்லவா? இந்த விழிகள் எனக்கெதற்கு? இதனால் எதைக்கண்டு மகிழப் போகிறேன்? நெஞ்சில் நீங்கள் இருக்கிறீர்கள். நினைவில் எம்பெருமான் இருக்கிறான். விழிகொண்டு கண்டறிய வேறேதும் எனக்கில்லை சுவாமி!' என்றார் கூரேசர். வீதி குழுமி விட்டது. உடையவரின் சீடர்கள் எழுநுாறு பேரும் ஓடோடி வந்து கூரேசரின் தாள் பணிந்தார்கள். யாருக்கும் பேச்சு எழவில்லை. நடந்த கோர சம்பவத்தின் எச்சமாகக் குழிந்திருந்த அவரது கண்கள் அவர்களது வாயடைக்கச் செய்திருந்தன. எப்பேர்ப்பட்ட மகான்! யாருக்கு இந்த நெஞ்சுறுதி வரும்! மன்னனே ஆனாலும் மற்றொரு கருத்தை ஏற்க மாட்டேன் என்று அடித்துப் பேசுகிற தெளிவு எத்தனை பெரிய வரம்! மிரட்டல் அவரை அச்சுறுத்தவில்லை.
தண்டனை அவரை பலவீனப்படுத்தவில்லை. வலியும் வேதனையும் குருதிப் பெருக்கும்கூட அவருக்கொரு பொருட்டில்லை. 'எம்பெருமானாரே, இத்
தனை ஆண்டுகள் தங்களைக் காணாமல், தங்கள் நிழலில் வசிக்காமல் அனலில் வாடினேனே, அதனைக் காட்டிலும் ஒரு துயர் எனக்கில்லை'
என்றார் கூரேசர். 'இல்லை. இது மிகக் கொடுமை. ஒரு பாவமும் அறியாத தங்களுக்கு இது நேர்ந்திருக்கவே கூடாது!''யார் கண்டது? பரம பாகவதர் யாருடைய திருமண்ணாவது நேராக இல்லை என்று எப்போதாவது மனத்துக்குள் நினைத்திருப்பேன். அந்த பாகவத அபசாரமாவது செய்யாமல் இது எனக்கு நேர்ந்திருக்காது சுவாமி!''ஐயோ நீங்களா! இன்னொரு முறை அப்படிச் சொல்லாதீர் கூரேசரே. உலகுக்கும் மக்களுக்கும் உங்கள் மூலம் பகவான் ஒரு செய்தி சொல்லியிருக்கிறான் என்று மட்டும்தான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. நிபந்தனையற்ற அன்பும் அப்பழுக்கற்ற தியாகமும் பரிசுத்தமான சேவையுமே வைணவம் என்பதை நீங்கள் உணர்த்தியிருக்கிறீர்கள்.'துயரத்தின் கனத்தைச் சொற்களின் மூலம் வெளியே இறக்கப் போராடிக் கொண்டிருந்தார் ராமானுஜர். முடியவில்லை. அன்றும் மறுநாளும் ஒவ்வொரு நாளும் கூரேசரைக் காணும்போதெல்லாம் அவரைத் துக்கம் வ்விக் கொள்ளும். அம்மெலிந்த தேகத்தையே அவரது விழிகள்தாம் தாங்கிக் கொண்டிருந்தாற்போல் இருக்கும். அப்படியொரு சுடர். அப்படியொரு பெருங்கருணை. அது இல்லாது போய்விட்டதே.
ஒருநாள் இதை யோசித்தபடியே தனித்து அமர்ந்திருந்த உடையவர், சட்டென்று ஏதோ தோன்ற, எழுந்தார். விறுவிறுவென்று திருவரங்கத்து அமுதனார் இல்லத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். கோயில் அதிகாரியாக இருந்து, தொடக்க காலத்தில் ராமானுஜரின் சீர்திருத்தங்கள் பிடிக்காமல் போர்க்கொடி துாக்கிய அமுதனார். பிறகு உடையவரின் நோக்கத்தில் இருந்த பரிசுத்தம் புரிந்து பாதம் பணிந்த அமுதனார். 'கூடாது; வேண்டாம்' என்று ராமானுஜர் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், ராமானுச நுாற்றந்தாதி என்னும் காலத்தால் அழியாத பேரற்புதப் படைப்பைத் தந்து, அதை அரங்கன் அருளால் நிரந்தரமாக்கும் கொடுப்பினை பெற்ற அமுதனார்.அது நல்ல நண்பகல் நேரம். தன் வீட்டு வாசலுக்கு உடையவர் வந்து நிற்பது கண்டு திடுக்கிட்டு ஓடி வந்தார் அமுதனார். 'சுவாமி! வெளியே ஏன் நிற்கிறீர்கள்? உள்ளே வர வேண்டும்!''நான் பிட்சை கேட்டு வந்துள்ளேன் அமுதனாரே!''திருவுள்ளம் என்னவென்று தெரிந்தால் நான் இயன்றதைச் செய்வேன்.''திருவரங்கம் திரும்பிய கூரேசர் குடும்பத்துக்குத் தங்குவதற்குச் சரியான இடம் இல்லை. பெரிய நம்பியின் மகன் புண்டரீகாட்சனும் இடிந்து விழும் தறுவாயில் உள்ள ஓரிடத்தில் வசித்துக் கொண்டிருக்கிறார். பாகவத உத்தமர்களைப் பராமரிப்பதைக் காட்டிலும் பெரிய கைங்கர்யம் வேறில்லை...'அமுதனாருக்குப் புரிந்தது. சித்திரை வீதியில் இருந்த தமது இரண்டு நிலங்களை அந்தக் கணமே கூரேசருக்கும் பெரிய நம்பி குடும்பத்தாருக்கும் தந்துவிட்டதாகச் சொன்னார். உடையவர் தமது சீடர்களைக் கொண்டு அங்கு இரு குடும்பங்களும் தங்குவதற்கேற்ப வீடுகளைக் கட்டினார். அவர்களைக் குடியேற்றி அழகு பார்த்தார். எதிரெதிர் வீடுகளில் இரு பெரும் சூரியச் சுடர்கள்.'ஆனால் இதெல்லாம் எனக்குப் போதாது கூரேசரே. நீங்கள் என்னோடு காஞ்சிக்கு வரவேண்டும். வரம் தரும் கடவுளான பேரருளாளன் தங்களுக்குக் கண்டிப்பாகப் பார்வை
யைத் திருப்பித் தருவான்''என் பார்வை அத்தனை அவசியமா சுவாமி?''எனக்கு அவசியம்' என்றார் ராமானுஜர். வற்புறுத்தி அவரைக் காஞ்சிக்கு அழைத்துச் சென்று சன்னிதியில் நிறுத்தினார்.
கூரேசர் நெஞ்சுருகப் பாடிய சுலோகங்களைக் கேட்டுக் கனிந்த பேரருளாளன் திருவாய் மலர்ந்தான்.'என்ன வரம் வேண்டும் கூரே சரே?'ஒரு கணமும் யோசிக்காமல் அவர் பதில் சொன்னார், 'நாலுாரான் இறந்தால் அவனுக்கு நல்லகதி கிடைக்க வேண்டும்.'திடுக்கிட்டுப் போனார் ராமானுஜர். 'என்ன இது கூரேசரே? நான் என்ன சொன்னேன், நீங்கள் என்ன கேட்டீர்?''சுவாமி, என்னை மன்னித்து விடுங்கள். என் கண்ணைவிட மேலான தாங்கள் என்னுடன் இருக் கிறீர்கள். ஆனால் வைணவனாகப் பிறந்தும் பாவம் பல புரிந்ததால் அவன் நரகம் போவான். நாலுாரான் நரகம் போனான் என்று சொல்லாமல் ஒரு வைணவன் நரகம் போனானென்று சரித்திரம் பேச இடம் தர விருப்பமில்லை எனக்கு' என்று சொன்னார்.கேட்டுக் கொண்டிருந்த உடையவர் மட்டுமல்ல; அருளாளனே வியந்து போனான். 'ஓய் கூரேசரே, இன்னொரு வரம் இந்தாரும். நாலுாரான் மட்டுமல்ல; உமது சம்பந்தமுள்ள அத்தனை பேருக்கும் இனி சொர்க்கம்தான்!' என்று திருவாய் மலர்ந்தான்.குரு சொல் மீறினால் நரகம் என்று முன்பொருமுறை திருக்கோட்டியூர் நம்பி எச்சரித்தும், மீறிய சம்பவம் ராமானுஜருக்கு நினைவுக்கு வந்தது. 'கூரேசரே, உமது சம்பந்தத்தால் எனக்கும் இனி சொர்க்கம் நிச்சயம்!' என்று சொல்லிப் புன்னகை செய்தார்.

ஞான புத்திரர்கள்
2017
02:59
Advertisement
பதிவு செய்த நாள்
27ஏப்2017
02:59
ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து கந்தாடையாண்டான் வந்திருந்தார். முதலியாண்டானின் புதல்வர். வயது அளித்த தளர்ச்சியால் இனி திருவரங்கத்தை விட்டு எங்கும் போக முடியாது என்று தெரிந்தபின் வெளியூர் தொடர்புகளை எல்லாம் அவர் மூலம்தான் ராமானுஜர் கவனித்துக் கொண்டிருந்தார். குறிப்பாக, காஞ்சியிலும் ஸ்ரீபெரும்புதுாரிலும் நடக்கிற விவரங்களை எல்லாம் அவர்தான் அடிக்கடி வந்து சொல்லுவார்.
தேசம் முழுவதிலும் இருந்து சீடர்களும் பக்தர்களும் வந்து கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே நடக்கிற திருவிழாக்கள், உற்சவங்கள், சத்சங்கங்கள், வாதப் போர்கள் குறித்த விவரங்களை ஆர்வமுடன் விவரிப்பார்கள். ஏராளமான திருக்கோயில்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஒழுங்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தார் ராமானுஜர். அனைத்தும் செம்மையாக நடைபெறுகிறதா என்று ஒவ்வோர் இடத்தில் இருந்தும் தகவல் வரும். காலட்சேப நேரங்கள், சீடர்களுக்கு வகுப்பெடுக்கும் நேரங்கள் நீங்கலாகப் பெரும்பாலும் இத்தகைய வெளியூர் பக்தர்கள் பேசுவதைக் கண்மூடிக் கேட்டுக் கொண்டிருப்பதிலேயே அவருக்குப் பொழுது போய்க் கொண்டிருந்தது.உடல் தளர்ந்து விட்டாலும் மனத்தில் ஒரு நிறைவு இருந்தது. ஒரு மாற்றத்தை அவர் உத்தேசித்தார். சமூகத் தளத்தில். ஆன்மிகத் தளத்தில். அறிவுத் தளத்தில். வாழ்நாள் முழுதும் அதற்காகவேதான் உழைத்துக் கொண்டிருந்தார். ஒரு வரமே போலக் கிடைத்த சீடர்கள் அவரது பணிச்சுமையைப் பெருமளவு பகிர்ந்து கொண்டார்கள். முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் வில்லிதாசரும் பிறரும் ராமானுஜர் உருவாக்கிய வைணவ சித்தாந்தத்தின் எல்லைகளைக் கணிசமாக விஸ்தரித்தார்கள். கோயிலும் பெருமாளும் சாஸ்திரங்களும் இன்ன
பிறவும் அந்தணர்களுக்கு மட்டுமே என்றிருந்த ஆதிகால வழக்கத்தை, உடையவரும் அவரது சீடர் படையும் முயன்று மாற்றி வைத்தனர். பஞ்சபூதங்களும் அனைவருக்கும் பொதுவென்றால் அதைப் படைத்தவனும் அப்படியே.வெறும் சொல்லல்ல. செயலில் நிரூபித்தார் ராமானுஜர். தமது வாழ்க்கையை ஒரு கருவியாகக் கொண்டு வாழ்ந்து காட்டினார். திருநாராயணபுரத்தில் நிகழ்ந்த ஹரிஜன ஆலயப் பிரவேசம், அதன்பின் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து நடக்க ஆரம்பித்தது. பிறப்பால் உயர்ந்தவர் என்றும் தாழ்ந்தவர் என்றும் பேதம் பார்ப்பது ஒரு சமூக வியாதியெனக் கருதப்படலாயிற்று. மறுபுறம் ஆழ்வார்களின் பிரபந்தங்களை ஆலயங்கள் தோறும் ஒலிக்கச் செய்வதில் அவர் மிகத் தீவிரமாக இருந்தார். வடமொழி சுலோகங்கள் இருக்கட்டும். நம் தமிழுக்கு இல்லாத மரியாதையா? வைணவ ஆலயங்களில் பிரபந்தங்களுக்கே முன்னுரிமை என்னும் நிலை வந்ததற்கு உடையவரே காரணம். அவர் நியமித்த திருக்குருகைப் பிரான் பிள்ளான், குரு சொல் தட்டாமல் திருவாய்மொழிக்கு ஓர் அழகிய உரை எழுத, அதன் பேரெழிலில் மயங்கிய மக்கள் ஒவ்வோர் ஆழ்வாரின் பாசுரங்களையும் தேடித்தேடிப் பொருளுடன் பயில விரும்பினார்கள்.
ராமானுஜர் தன்னைத் தேடி வரும் பக்தர்கள் ஒவ்வொருவருடனும் அக்கறையுடன் உரையாடினார். வேதாந்த விளக்கங்கள். பிரபந்தப் பெருங்கடல் முத்துக்குளிப்பு வைபவம். ஒருபுறம் ராமாயணப் பேச்சு. மறுபுறம் பிரம்ம சூத்திர விளக்கம். அவர் ஓயவேயில்லை.நெஞ்சில் நிலைத்த ஒரே துயரமாக, அவரது பிரியத்துக்குரிய முதல் தலைமுறைச் சீடர்கள் அவருக்கு முன் பரமபதம் அடைந்ததுதான் இருந்தது. 'போதுமே இருந்தது?' என்று என்றோ ஒருநாள் உரையாடலின் இடையே அவர் குறிப்பிட, அந்தக் கணமே கூரத்தாழ்வானுக்கு நெஞ்சில் சுருக்கென்று தைத்தது. நேரே கிளம்பி அரங்கனின் சன்னிதிக்குப் போய் விட்டார்.'பெருமானே, நீ என்ன செய்வாயோ தெரியாது. என் ஆசாரியருக்கு முன்னால் நான் போய்ச் சேர வேண்டும்.' என்று கண்டிப்புக் கலந்த வேண்டுகோளை வைத்தார். கூரேசர் கேட்டுக் கொடுக்காமல் இருப்பதா? 'சரி உம் இஷ்டம்' என்று உத்தரவாகிவிட்டது.கூரேசருக்குத் தாங்க முடியாத சந்தோஷம். நேரே ராமானுஜரிடமே வந்து இந்தத் தகவலைச் சொன்னார் 'ஒரு கவலை விட்டது சுவாமி. தாங்கள் சொர்க்கத்துக்குப் போகும்போது அங்கே உம்மை வரவேற்க யார் இருப்பார்களோ என்னமோவென்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். இப்போது எனக்கே உத்தரவு கிடைத்துவிட்டது. வருகிறேன்!' என்று சொல்லிவிட்டுப் போய்ப் படுத்தார். போய் விட்டார்.அழுவதா? திகைப்பதா? யாருக்
கும் எதுவுமே புரியவில்லை. ராமானுஜர் உடைந்து போனார். தமது எழுநுாறு சீடர்களுள் அவருக்குக் கூரேசர் என்றால் தனி அபிமானம். எத்தனை பெரிய பணக்கார வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்! ஒரு கணத்தில் அனைத்தையும் துாக்கிப் போட்டுவிட்டுத் தன் பின்னால் வந்து நின்றவர். நிறைவாழ்வுதான். ஆனாலும் இழப்பு தரும் வலி பெரிதல்லவா?ஐந்தாறு வருடங்கள் ராமானுஜர் தனக்குள் ஒடுங்கிப் போனவராகவே உலவிக் கொண்டிருந்தார். துயரத்தின் பிடியில் இருந்து சிறிது மீளத் தொடங்கியபோது முதலியாண்டான் இறந்து போனார். பின்னாலேயே வில்லிதாசர் போய்ச் சேர்ந்தார். அவர் மறைந்த சில நிமிடங்களில் அவரது மனைவியான பொன்னாச்சியும் உடன் சென்றாள்.உடையவர் திகைத்து விட்டார்.'ஒரு மகள் தன்னை உடையேன் உலகம் நிறைந்த புகழால்திருமகள் போல் வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு
போனான்'என்ற பெரியாழ்வார் பாசுரம் அவருக்கு நினைவுக்கு வந்தது. ஆண்டாள் எம்பெருமானோடு ஐக்கியமானதைச் சுட்டிக் காட்டுவது. ஒரு தந்தையாகப் பெரியாழ்வார் அடைந்த விவரிக்க முடியாத உணர்வெழுச்சியின் வெளிப்பாடு.
அப்படித்தான் இருந்தது ராமானுஜருக்கு. பெரியாழ்வாருக்கு ஒரே ஒரு மகள்தான். உடையவருக்கு எத்தனை எத்தனை ஞானபுத்திரர்கள்! அடுத்த தலைமுறை, அதற்கடுத்த தலைமுறை, அதற்கும் அடுத்த தலைமுறை என்று சீடர்கள் பெருகிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் நுாறாண்டு காலம் ஒரு பெரும் பயணத்தின் உடன் வந்த தோழர்கள் அல்லவா அவர்கள்! இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்தவர்கள் அல்லவா! அடுத்தத் தலைமுறைக்கு அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் அல்லவா!மனத்துக்குள் நொறுங்கிப் போயிருந்தார் ராமானுஜர். ஆனால் இதுவும் நிகழத்தானே வேண்டும்?
ஆனால் வாழ்வின் சாரம் பரமன் அடி பற்றல் என்பது புரிந்து வாழ்ந்தவன் வைகுந்தம் தவிர வேறெங்கும் போவதில்லை. துறவு ஏற்பதற்கு முன்னர் திருக்கச்சி நம்பியின் மூலம் காஞ்சி அருளாளப் பெருமான் தனக்களித்த ஆறு பதில்களை அவர் எண்ணிப் பார்த்தார்.
நானே பரம்பொருள்.ஜீவனும் பரமனும் வேறு வேறு.சரணாகதியே பெருவழி.அந்த வழி வந்தவர்கள் இறக்கும்போது என்னை நினைக்கத் தேவையில்லை.
தேகம் விடுத்துப் புறப்படும்போது அடியார்களுக்கு மோட்சம் நிச்சயம்.பெரிய நம்பியே உமது ஆசாரியர்.இதை உணர்ந்தவர்களாகத்தான் அவரது அத்தனை சீடர்களுமே இருந்தார்கள். மோட்சத்தின் வாயிலில் உம்மை வரவேற்கக் காத்திருப்பேன் என்று சொன்ன கூரேசரின் சொற்கள் காதில் ஒலித்தன. 'சுவாமி...'கந்தாடையாண்டான் மெல்ல அழைத்தார்.'ம்ம்? கூப்பிட்டாயா ஆண்டான்?''சுவாமி, திருநாராயணபுரத்து பக்தர்களுக்கு அருளியது போல ஸ்ரீபெரும்புதுாருக்கும் தங்களது திருமேனிச் சிலையொன்று அருள வேண்டும் என்று அங்குள்ளவர்கள் பிரியப்படுகிறார்கள்.'பிறந்த மண் கூப்பிடுகிறது. மகனே, என்னிடம் வா.

ஏழு நாள்கள்
2017
00:21
Advertisement
பதிவு செய்த நாள்
28ஏப்2017
00:21
அமைதி.
ராமானுஜர் கண் மூடி வெகுநேரம் யோசித்துக் கொண்டே இருந்தார். கந்தாடையாண்டான் காத்திருந்தார். மடத்தில் இருந்த சீடர்கள், உடையவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறிய சுற்றி வந்து சூழ்ந்து நின்றார்கள். ஸ்ரீபெரும்புதுார் அவர் பிறந்த மண். அந்தத் தலத்தில் உடையவரின் திருமேனிச் சிலையொன்று நிறுவ நினைப்பது நியாயமே. பதிமூன்று ஆண்டுக்காலம் வாழ்ந்துவிட்டுக் கிளம்பிய திருநாராயணபுரத்துக்குத் தனது திருமேனியைச் சிலையாகச் செய்து வைத்துக் கொள்ள அனுமதித்தவர், இதற்கு எதற்கு இவ்வளவு யோசிக்க வேண்டும்?
யாருக்கும் புரியவில்லை. நெடு நேரம் கழித்து ராமானுஜர் கண்ணைத் திறந்தார். 'சரி ஆண்டான்! உன் விருப்பப்படி நடக்கட்டும்!'சட்டென்று அங்கே மகிழ்ச்சிப் பெருக்கு நிறைந்து பரவியது. தாமதமின்றி சிற்பி ஒருவர் வரவழைக்கப்பட்டார். உடையவரை நேருக்கு நேர் தரிசித்து அமர்ந்து வரைந்து எடுத்துச் சென்று அவரது தோற்றத்தை அச்சில் வார்த்துக் கொண்டு வந்து சமர்ப்பித்தார்.'சுவாமி, தங்கள் திருமேனி. எப்படி இருக்கிறது என்று பார்த்துச் சொல்லுங்கள்!' கந்தாடையாண்டான் முன்னால் வந்து சிலையை ராமானுஜர் முன் நிறுத்தினார். அவர் முகத்தில் புன்னகை விரிந்தது.'அடடே, அப்படியே என்னை ஒத்திருக்கிறதே!'சிற்பிக்குப் பேருவகையாகிப் போனது. விழுந்து பணிந்து வணங்கி நின்றார்.'அப்படியானால் இதை ஸ்ரீபெரும்புதுாரில் எழுந்தருளப் பண்ணலாம் அல்லவா?''ஒரு நிமிடம். அதை இப்படிக் கொடு!' உடையவர் கரம் நீட்ட, கந்தாடையாண்டான் அச்சிலையை அவர் அருகே எடுத்து வந்து நீட்டினார்.ராமானுஜர் அதை வாங்கி அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
'சுவாமிக்கு சிலை அவ்வளவு பிடித்துவிட்டது போலும்' என்று சுற்றியிருந்தவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும்போது, உடையவர் அவர்கள் அறியாத வேறொரு செயலில் ஈடுபட்டிருந்தார். காலக் கணக்கற்று, பாற்கடலில் எம்பெருமானைத் தாங்கி நிற்கும் சக்தி. ஞானக் கிடங்காக சேகரித்த பெரும் சக்தி. கருணைக் கடலாக ஊற்றெடுத்த சக்தி. தவம், ஒழுக்கம், சீலம் காத்து ஐம்பெரும் ஆசாரியர்களின் திருவடி நிழலில் தங்கிப் பயின்ற பெரும் பாடங்களின் மூலாதார சக்தி. தானே ஆசாரியராகி, ஜகதாசாரியரென்று வழங்கப்பட்டதன் பின்னணியில் இயங்கிய பரம்பொருளின் அருளாசி வடிவ சக்தி. அனைத்தையும் திரட்டி அந்தச் சிலைக்குள் செலுத்தினார். தன் மானசீகத்தில் அரங்கனை நெக்குருகி வேண்டிக்கொண்டு சிலையைக் கந்தாடையாண்டானிடம் நீட்டினார்.'ஆண்டான், இனி இது மக்களுடையது. இதில் நான் இருக்கிறேன். இதன் வடிவில் என்றும் அவர்களோடு இருப்பேன்!'தானுகந்த திருமேனி என்று பக்தர்கள் கொண்டாடிக் களித்தார்கள். உடையவரே அதைப் பிரதிஷ்டை செய்ய நாள் பார்த்துச் சொன்னார். 'தை மாதம் பூச நட்சத்திரத்தில் இது பிரதிஷ்டை ஆகட்டும்.''அப்படியே சுவாமி!' என்று அதை வாங்கிக்கொண்டு கந்தாடையாண்டான் புறப்பட்டார்.ஒரு பெரும் வட்டம் சுற்றி வந்து நின்றாற் போலிருந்தது ராமானுஜருக்கு. நுாற்றி இருபது வருட வாழ்க்கை என்பது சிறிதல்ல. உடலும் உள்ளமும் சலிக்காது ஒத்துழைக்காமல் இது சாத்தியமும் அல்ல. ஒரு பிரம்மாண்டமான கனவும் அதன் புனிதமும் மேலான மனித குல நேயமும் அதைச் சாத்தியமாக்கியது. பவுத்தமும் சமணமும் தலையெடுத்துப் பரவத் தொடங்கியபோது அவற்றைத் தடுத்து நிறுத்துவது அவசியம் என்று அவர் கருதினார்.
மக்களை நெருங்குவதில் இருந்த இடர்பாடுகளை உத்தேசித்து, மன்னர்களைத் தம் பக்கம் ஈர்ப்பதில் சமணர்கள் மும்முரமாக இருந்த சமயம் அது. ஏனெனில் கடவுள் இல்லை என்று சொல்லு வோரை மக்கள் நிராகரித்து விடுவார்கள். முற்றிலும் நிராகரிக்காதவர்கள் கூட மனமார ஏற்பதில்லை. எனவே சமணர்களுக்கு மன்னர்களின் துணை அவசியமாக இருந்தது. எளிய பேயோட்டும் வழிமுறைகளே மன்னர்களைக் கவரப் போதுமானதாக இருந்தது. தவிர
வும், புராதன வைத்திய உபாயங்கள்.மாயாவாதப் பரவலுடன்கூட இத்தகு சூனியவாத வீச்சும் தடுக்கப்பட வேண்டும் என்று கருதினார் ராமானுஜர்.சரணாகதியே சர்வரோக நிவாரணி என்று அவர் முன்வைத்த தீர்வும் பேதமற்ற பேருலகு சார்ந்த பெரும் கனவும் மக்களைக் கவர்ந்தன. தன்னலமற்ற சேவையில் விளைவது வைணவம். பேதம் காணாத விரிந்த மனமே அதன் அடையாளம். இங்கு வாழும் வாழ்வானாலும் சரி. இறந்த பின் அடையும் இடமானாலும் சரி. ஒளி பொருந்தியதாக, திருப்தி தருவதாக, அர்த்தம் மிக்கதாக அமைய எளிய உபாயம் சரணாகதியே என்ற குழப்பமற்ற வழிகாட்டலே அவர் வாழ்வின் சாராம்சமானது.போதுமே? இனியும் சுமந்து கிடக்க வேண்டாமே என்று அவருக்குத் தோன்றியது. ஒரு கணம்தான். சட்டென்று உடல் நடுங்கித் தளர்ந்து போனது. அது தை மாதம். அன்று பூச நட்சத்திரம்.புரிந்துவிட்டது. ஸ்ரீபெரும்புதுாரில் அவரது சக்தி வடிவ விக்கிரகப் பிரதிஷ்டை நடந்து கொண்டிருந்தது. மானசீகத்தில் அதை உணர்ந்த ராமானுஜர், உடனே கிளம்பிக் கோயிலுக்குப் போனார். காஞ்சியை விட்டு வந்த நாளாகக் காத்து நிற்கும் கரிய பெருங்கடவுள். கண்ணழகன். கமல இதழழகன். அரவணைத்துக் காக்கும் கரத்தழகன். ஜீவநதியெனப் பொங்கும் கருணை குணத்தழகன். என்றும்
பெரியவன். அனைத்திலும் பெரியவன்.சன்னிதிக்குச் சென்று கரம் கூப்பி நின்றார். 'பெருமானே! போதுமே?'என்ன கேட்டாலும் அடுத்த வினாடி பதிலிறுக்கும் அரங்கப் பெருமான் அன்று அமைதியாக இருந்தான்.'கடமைப்பட்ட அனைத்தையும் செய்திருக்கிறேன். வைணவ தருமம் தழைக்கப் பொருத்தமான எழுபத்தி நான்கு சிம்மாசனாதிபதிகளை நியமித்திருக்கிறேன். அந்தத் தலைமுறை காலகாலத்துக்கும் தொடரும். திருக்கோயில் நடைமுறைகள் ஒழுங்கு செய்து கொடுத்திருக்கிறேன். இதுவும் தழைக்கும். வைணவத் தல ஆக்கிரமிப்புகள் இனி இராது. அப்படியே நிகழுமானால் தட்டிக் கேட்கவும் தடுத்துப் போராடவும் எதிர்வரும் தலைமுறை தயாராக இருக்கும். அதற்கான சித்தாந்த பலத்தை அளித்து, ஆத்ம நிவேதன உபாயங்களைச் சொல்லித் தந்திருக்கிறேன்.'இப்போதும் அரங்கன் அமைதியாகவே இருந்தான்.'எம்பெருமானே, தோள் துவண்டு நான் உன்னிடம் வந்து நிற்கவில்லை. சுமக்க ஏராளமான தோள்கள் காத்திருக்கிறபோது விட்டுத் தந்து அழகு பார்க்க நினைக்கிறேன். கூரேசருக்குக் கேட்டதும் கொடுத்தாயே? அந்த பாக்கியம் எனக்கில்லையா?'இப்போது அவன் குறிப்பால் உணர்த்தினான். 'சரி, இன்னும் ஏழு தினங்கள்.'கரம் குவித்து வணங்கி விடைபெற்றார் ராமானுஜர். மடத்துக்
குத் திரும்பும்போது மிகுந்த உற்சாகமாக இருந்தார். இதுதான். இவ்வளவுதான். இன்னும் உள்ளவை ஏழே தினங்கள். இந்த ஏழு தினங்களையும் அர்த்தமுள்ளதாக வாழ்ந்து முடித்தால் போதும். எம்பெருமான் திருவாசல் திறந்து விடுவான். தேசமெங்கும் பரவியிருக்கும் தமது சீடர்கள் அனைவரையும் திருவரங்கம் வரச் சொல்லி செய்தி அனுப்பினார்.

வளரும்
2017
01:53
Advertisement
பதிவு செய்த நாள்
29ஏப்2017
01:53
சமுத்திரத்தின் அடியாழத்தில் இருந்து எழுந்து மேலேறி வந்து உதித்த ஒரு பெரும் வெண்சங்கமேபோல் வீற்றிருந்தார் ராமானுஜர்.
முதுமையின் தளர்ச்சி மீறிய மினுமினுப்பொன்று எப்போதும் அவரிடம் உண்டு. கொஞ்சம் ஆஜானுபாகுவான தோற்றம்தான். அமர்ந்திருக்கும்போதும் நிற்பது போலத்தான் இருக்கும். சலிப்பின்றிச் சொற்பொழிவாற்றிக்கொண்டே இருக்கும்போது சட்டென்று கண்மூடி கணப் பொழுது எதிலோ லயித்து நின்றுவிடுகிற வழக்கம் உண்டு. அப்போது முகத்தில் மெலிதாக ஒரு முறுவல் விரியும். அதுவும் கணப் பொழுதே. ஆனால் இழுத்துக் கட்டப்பட்ட கம்பியை மீட்டினால் பரவி நிறையும் நாதம் போல் அது மேலும் பல கணங்களுக்கு வெளியை நிறைத்திருக்கும்.திருவாய்மொழி காலட்சேபமென்றால் உற்சாகம் துள்ளும். ராமாயணமென்றால் பரவசத்தில் அடிக்கடிக் கண் நிறையும். சஹஸ்ரநாமம், பிரம்ம சூத்திர விளக்கங்களென்றால் வார்த்தைக்கு வார்த்தை இடைவெளிவிட்டு, நிறுத்தி நிதானமாகச் சொல்லுவார். பேசப்படுகிற விஷயம் தாண்டி யார் கவனமும் நகர்ந்து விடாதபடி ஒரு மாயத் தடுப்புச் சுவரை எழுப்பி நிறுத்தியிருப்பார். இன்று இது போதும் என்று அவரே நிறுத்திவிட்டு எழும் வரை கூட்டம் கண்ணிமைக்காது கவனித்துக் கொண்டிருக்கும்.
ஆனால் இன்று என்ன எல்லாமே விசித்திரமாக இருக்கிறதே! சீடர்கள் அத்தனை பேரையும் கூப்பிட்டு உட்கார வைத்துக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமாக ஒன்றைத் தெரிவிக்கும் விதமாக அல்லவா பேசிக் கொண்டிருக்கிறார்? எல்லாம் பொதுவான விஷயங்கள்தாம். எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிற விஷயங்கள்தாம்.
ஆனாலும் ஒவ்வொருவரும் அன்றைக்கு உடையவர் தமக்காக மட்டுமே பேசிக் கொண்டிருப்பது போல உணர்ந்தார்கள்.'வடுகா, மூன்று விஷயங்கள் மகா பாவம். ஒரு வைணவன் உயிருள்ளவரை செய்யக்கூடாதவை. என்னவென்று சொல்லு பார்ப்போம்?'மூவாயிரம் விஷயங்கள் இருக்கின்றன. வாழ்நாள் முழுதும் அவர் எத்தனையோ தருணங்களில் எடுத்துச் சொன்னவை. வடுக நம்பிக்குச் சட்டென்று நினைவுக்கு வந்தது, பாகவதர்களுடைய ஸ்ரீபாத தீர்த்
தத்தை வெறும் தண்ணீர் என்று எண்ணுவதும் இழிப்பதும். பரம பாகவதர்களின் பாதம் அலம்பிச் சேகரித்த தீர்த்தத்தைக் காட்டிலும் புனிதம் வேறில்லை என்பார் ராமானுஜர். 'பாகவத அபசாரமே பெரும் பாவம்.' சட்டென்று குரல் கொடுத்தார் வேறொரு சீடர். 'சந்திக்கிற மனிதர்களின் நல்ல குணங்களை விடுத்து, குறைகளைப் பெரிது படுத்திப் பேசுவதே பாவம்' என்றார் இன்னொருவர். 'பக்தர்களைப் பழிப்போரைப் பார்ப்பதே பாவம்' என்றார் வேறொருவர்.
'எல்லாம் சரியே. ஆனால் தலையாய பாவங்கள் மூன்று. எம்பெருமானுடைய பிரதிஷ்டை செய்யப்பட்ட அர்ச்சாரூபத்தைக் கல்லென நினைப்பது முதல் பெரும் பாவம். தெய்வத்தினும் மேலானவரான ஆசாரியரை சராசரி மனிதரென நினைப்பது அடுத்தது. இந்த இரண்டினும் கொடிய பாவம், ஒரு வைணவனின் ஜாதி என்னவென்று ஆராய்ச்சி செய்வது.'அன்றைக்கு முழுதும் இதே போலக் கேள்விகளாகக் கேட்டு பதில் சொல்லிக்கொண்டே இருந்தார். உரையாடல் ஒரு புள்ளியில் நகராமல் தோகை விரித்த மயிலே போல் வெளி அடைத்து முன்னேறிக் கொண்டிருந்தது. இருட்டி வெகு நேரம் வரை ராமானுஜர் நிறுத்தவேயில்லை. 'சுவாமி, தாங்கள் ஓய்வுகொள்ள வேண்டும். மிச்சத்தை நாளை வைத்துக் கொள்வோம்' என்று எம்பார் முனைந்து சபையைக் கலைத்து அனுப்பி வைக்கும்படி யானது.மறுநாள் ராமானுஜர் மீண்டும் விட்ட இடத்தில் ஆரம்பித்தார். 'மந்திரங்கள் பரிசுத்தமானவை. அவற்றின் உள்ளுறைப் பொருளாக விளங்கும் சக்தியை உணர்வது அவசியம். மந்திரங்கள் வெறும் சொற்களல்ல. நமக்கு விளங்காதவை அனைத்தும் அர்த்தமற்ற
வையும் அல்ல.''உண்மை சுவாமி!''இன்னொன்று மறந்து விட்டேனே. பெருமானைத் தனியே சேவிப்பதில் பிரயோஜனமே கிடையாது.
பிராட்டியை விலக்கிவிட்டு அவனுக்கு எந்தப் பெருமையும் இல்லை.'உடையவர் அதை அடிக்கடி சொல்லுவார். வேறு எதைக் கேட்டார்களோ இல்லையோ, திருவரங்கத்துவாசிகள் அந்த ஒரு விஷயத்தில் அவர் சொன்னதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்ற ஆரம்பித்தார்கள். தெற்கு நோக்கி வீற்றிருக்கும் பெருமாளைச் சேவிக்கக் கிளம்பினால் வடக்கு வாசல் தாயார் சன்னிதி வழியாகத்தான் போவார் கள். சமயத்தில் தாயாரைச் சேவித்து விட்டு அப்படியே திரும்பி வந்து விடுவதும் உண்டு. 'சொல்ல வேண்டிய விஷயத்தைச் சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லியாகிவிட்டது. பெருமானிடம் எடுத்துச்
சொல்லி, வேண்டியதைச் செய்து தருவது அவள் பொறுப்பு' என்று திடமாக இருந்து விடுவார்கள்.இதை ஒரு சீடர் குறிப்பிட, உடையவர் புன்னகை செய்தார். 'ஆம். அவள் தாய் அல்லவா? நம் தேவை அவளுக்குத்தான் தெரியும். தாய் ஒப்புக்கொண்டு விட்டால், தந்தையைச் சம்மதிக்க வைப்பது பிரமாதமில்லை.'மூன்று நாள் மூச்சு விடாமல் பொழிந்து கொண்டே இருந்தார். நற்கதிக்கான வழிகள். 'ஸ்ரீபாஷ்யத்தைப் படியுங்கள். பிறருக்குச் சொல்லிக் கொடுங்கள். முடியவில் லையா? பிரபந்தம் படியுங்கள். அதுவும் முடியவில்லையா? திவ்யதேசங்களில் கைங்கர்யம் செய்யுங்கள். கஷ்டமா? திருநாராயணபுரத்தில் ஒரு குடிசை கட்டிக்கொண்டு வாழுங்கள். சிரமமா? யாராவது ஒரு பாகவத உத்தமரை அண்டி, அவருக்குச் சேவை செய்து வாழுங்கள். அதுவும் முடியவில்லையா? மூச்சுள்ளவரை த்வய மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருங்கள்.'எல்லாம் தெரிந்ததுதான். என்றும் அவர் சொல்லிக் கொண்டிருப்
பதுதான். இன்று ஏன் இத்தனை அழுத்தம் திருத்தமாக? அதுவும் திரும்பத் திரும்ப? சீடர்களுக்குச் சந்தேகம் வந்தது. அது மூன்றாவது நாள். தமக்குள் கூடிப் பேசிக்கொண்டு அவரிடமே கேட்டார்கள். 'சுவாமி, இடைவெளியின்றித் தங்கள் போதனைகளைக் கேட்பது வரம்தான். ஆனால் இப்படி ஆவேசம் வந்தாற்போல் பொழிந்து கொண்டே இருக்கிறீர்களே, இது மிகுந்த குழப்பமும் கவலையும் அளிக்கிறது.''கவலை கொள்ள என்ன இருக்கிறது? எனக்கு அரங்கன் ஏழு நாள் தந்தான். இன்று மூன்றாம் நாள். இன்னும் நான்கே நாள்.'துடித்துப் போனார்கள். அழுது அரற்றி, அதிர்ச்சியில் நிலைகுலைந்து, ஒடுங்கி நின்றார்கள். ஆனால் என்ன செய்ய முடியும்? இதுதான் என்றால் இதுதான். ஆறாம் நாள் காலை உடையவர் பராசர பட்டரை அழைத்தார். 'வாரும், கோயிலுக்குச் சென்று வருவோம்.'அரங்கன் திருமுன் அழைத்துச் சென்று நிறுத்தினார். 'பெருமானே! கூரேசருக்குப் பிறந்து உன்னால் சுவீகரிக்கப்பட்ட பிள்ளை இவர்.
எனக்குப் பின் வைணவ தரிசனத்தைப் பரப்பும் பொறுப்பை இவரிடம் தருகிறேன். எனக்கு அளித்த ஒத்துழைப்பை எல்லோரும் இவருக்கும் அளிக்க வேண்டும்.'தீர்த்தம், சடாரி உள்ளிட்ட திருக்கோயில் மரியாதைகள் அதுவரை ராமானுஜருக்குத்தான் முதலில் வழங்கப்பட்டுக் கொண்டிருந்தன. அன்று அவர் அதைப் பராசர பட்டருக்கு வழங்க வைத்தார். வைணவ உலகுக்கு அதன் உட்பொருள் புரிந்தது. ஒரு ஞானத்தருவின் விழுதாகி, பின் விதையாக உருப்பெற்று விளைந்து நிற்கிற பேராற்றல். அதைத்தான் உடையவர் அடை யாளம் காட்டுகிறார்.ஏழாம் நாள் விடிந்தது. பெரிய நம்பியின் பாதுகைகளைத் தொட்டு வணங்கிவிட்டு ராமானுஜர் எம்பார் மடியில் தலை வைத்துப் படுத்தார். அவரது பாதங்கள் வடுக நம்பியின் மடி மீதிருந்தன.

வாழும்!
2017
00:05
Advertisement
பதிவு செய்த நாள்
30ஏப்2017
00:05
எல்லாம் சரியாக உள்ளதாகவே பட்டது. சீடர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். அரங்க நகர்வாசிகள் அத்தனை பேரும் சேரன் மடத்தின் வெளியே குவிந்திருந்தார்கள். யாரும் விரும்பாத ஒரு சம்பவம் நடந்துவிடத்தான் போகிறதென்ற, அறிந்த துயரத்தின் சுவடுகள் அவர்கள் முகமெங்கும் நிறைந்திருந்தன.
'சுவாமி, நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி உயிருடன் இருப்போம்? இருத்தல் என்பதே சுமையாகி விடாதா?' கண்ணீரோடு கேட்ட சீடர்களைக் கருணையுடன் பார்த்தார் ராமானுஜர். 'அப்படி எண்ணக்கூடாது. பிறவி என்பது கர்மத்தினால் வருவது. கணக்குத் தீரும்போது யாரானாலும் விடைபெற்றே ஆக வேண்டும். ஆனால் ஒன்று. கிடைத்த பிறவியை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா? அது முக்கியம். நாம் கட்டிக்காக்க நினைக்கும் தருமம் தழைக்கப் பணியாற்றியிருக்கிறோமா என்பது அதனினும் முக்கியம். இருப்பது பற்றியும் போவது பற்றியும் கவலை கொள்வது ஒரு
வைணவனின் லட்சணமல்ல. செயல் ஒன்றே நமது சீலம்.' என்றவர், பராசர பட்டரை அருகே அழைத்தார். 'பட்டரே, ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நான் சிலகாலம் வசித்த ஹொய்சள தேசத்தில் மாதவாசாரியார் என்றொரு அபாரமான ஞானஸ்தர் இருக்கிறார். அங்கே அவரை வேதாந்தி என்று
குறிப்பிடுவார்கள். யாரும் இது வரை வாதில் வென்றிராத பெரும் பண்டிதர்...''சொல்லுங்கள் சுவாமி. அடியேன் என்ன செய்ய வேண்டும்?'
'அரங்கன் சாட்சியாக வைணவ தரிசன நிர்வாகப் பொறுப்பை உம்மிடம் கொடுத்திருக்கிறேன். ஞானஸ்தரான அந்த வேதாந்தியை நமது சித்தாந்தத்துக்குத் திருத்திப் பணி கொள்ளும்.''அப்படியே!' என்றார் பட்டர். ராமானுஜருக்குப் பின் சிறிது காலம் எம்பாரின் வழிகாட்டலில் மெருகேறி, பொறுப்புக்கு வந்த பட்டர், தனக்குப் பின் அப்பொறுப்பை ஏற்கவிருக்கும் 'நஞ்சீயர்' அந்த வேதாந்திதான் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.'திருக்கோயில் பணியாளர்களை வரச் சொல்லுங்கள்' என்றார் ராமானுஜர். அவர் உருவாக்கிய பணிக் கொத்து ஊழியர்கள். தமது முப்பத்தி ஒன்றாவது வய
தில் திருவரங்கத்துக்கு வந்து கைங்கர்யப் பொறுப்பை ஏற்றபோது அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களின் மகத்தான பெரும் விளைவு அவர்கள். கோயில் கைங்கர்யங்களில் அனைத்து சாதியினருக்கும் அவரளித்த முக்கியத்துவம் தேசத்துக்கே முன்னுதாரணமாயிற்று.
'வந்துவிட்டார்களா?''ஆம் சுவாமி. இதோ!' என்று கோயில் ஊழியர்கள் முன்னால் வந்து கரம் குவித்து நின்றார்கள். தன்னலமில்லாமல், பூசல் இல்லாமல், அரங்கன் பணி ஆற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சில சொற்களில் அவர்களிடம் எடுத்துச் சொன்னார். 'நீங்கள் வருந்தும்படி நான் எப்போதாவது நடந்து கொண்டிருந்தால் அதைப் பொறுக்க வேண்டும்!'ஐயோ என்று அவர்கள் பதறித் தடுத்தார்கள். இன்னொருவர் வாழ முடியுமா இப்படியொரு வாழ்க்கை? ராஜேந்திர சோழன் காலத்தில் ராமானுஜர் பிறந்தார். பிறகு ராஜாதிராஜ சோழன் பட்டத்துக்கு வந்தான். இரண்டாம் ராஜேந்திரனும் வீர ராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் அடுத்தடுத்து வந்தார்கள். முதலாம் குலோத்துங்கன் வந்தான். விக்கிரம சோழன் வந்தான். அடுத்தவன் வந்தான், அவனும் போனான்...எத்தனை மன்னர்கள்! எத்தனை ஆட்சிகள், நல்லதும் கெட்டதுமாக எத்தனை எத்தனை சம்பவங்கள்! எதிலும் சமநிலை குலையாமல்,
எத்தருணத்திலும் விட்டுக்கொடுக்காமல், எவர்க்கும் அஞ்சாமல், தன்னெஞ்சு அறிந்ததைத் தயங்காமல் எடுத்துச் சொல்லி, எல்லாக் காலங்களுக்கும் சாட்சியாக இருந்துவிட்டுப் படுத்திருக்கும் பெரியவர்.'சுவாமி, உங்கள் சொற்கள் எங்களிடம் இருக்கின்றன. என்றென்றும் உங்கள் ஆசியும் இருக்கப் போகிறது. கோயில் பணிகள் குறைவற நடக்கும்!' என்று அவர்கள் நம்பிக்கை சொன்னார்கள். 'சரி. அவ்வளவுதானே?' என்பதுபோல் அனைவரையும் ஒரு
பார்வை பார்த்தார் ராமானுஜர்.
உதட்டில் சிறு முறுவலொன்று பிறந்தது. அந்தப் புன்னகையே அவரது ஆசியாக இருந்தது. மெல்லக் கண்களை மூடிக்கொண்டார். நெஞ்சில் த்வயம் நிறைந்தது. அது உடையவர் பிறந்த அதே பிங்கல வருடம். மாசி மாதம். வளர்பிறை தசமி திதி. அதே திருவாதிரை நட்சத்திரமும்கூட.சீடர்கள் ஒருபுறம் தைத்ரீய உபநிடதத்தில் இருந்து பிருகுவல்லி, ஆனந்தவல்லி என்ற பகுதிகளை ஓதினார்கள். திருவாய்மொழி சேவித்தார்கள். கட்டுக்கடங்காத கண்ணீரோடு காரியங்கள் நடைபெறத் தொடங்கின. ஞான புத்திரனாக அவர் சுவீகரித்திருந்த திருக்குருகைப் பிரான் பிள்ளான் அந்திமக் கிரியைகளைச் செய்தார்.
ராமானுஜர் ஒரு தத்துவத்தை நெஞ்சில் சுமந்தார். எளிய, பாமர மக்களுக்கான மோட்ச உபாயம். மூச்சிருந்த நுாற்றி இருபதாவது வயது வரை தான் நம்பிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தையும் சரணாகதி என்கிற பெருந்தத்துவத்தையும் மட்டுமே போதித்து வந்தார். பேதமற்ற ஒரே பெரும் சமூகமென்ற வண்ணமயமான கனவைத் தரையில் இறக்கி வைத்து, அதை நெருங்கப் பாதை அமைத்துக் கொடுத்தார். நிகரற்ற செயல்வீரராகத் திகழ்ந்து, பரவி, அடங்கிய தனது புத்திரரை அரங்கன் தனது திருக்கோயிலுக்குள்ளேயே ஐந்தாம் சுற்றில் பள்ளிப்படுத்தத் திருவுள்ளம் கொண்டான். அது அரங்கனின் வசந்த மண்டபமாக இருந்த இடம். அங்கே ராமானுஜரின் திருவுடலைப் பள்ளிப்படுத்தினார்கள். 'தானுகந்த திருமேனி'யைச் சுமந்து சென்று ஸ்ரீபெரும்புதுாரில் பிரதிஷ்டை செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பியிருந்த கந்தாடையாண்டான், இப்போது மடை திறந்த கண்ணீர் வெள்ளத்துடன் அங்கே உடையவரின் இன்னொரு திருமேனிச் சிலையைப் பிரதிஷ்டை செய்ய, அது 'தானான திருமேனி' ஆயிற்று. தனது சூட்சுமத்தில் என்றும் உறங்காத எம்பெருமானாரின் ஞானச்சுடர் விழிகள் அவரது ஸ்துாலத்தில் இருந்து எழுந்து வந்து பொருந்தி ஒளிர்ந்தன.
அதே முகம். அதே தோள்கள். அதே பத்மாசனம். அதே தவத்திருக்கோலம்.உடையவரின் சீடர்கள் அனைவரும் சன்னிதியில் கரம் கூப்பிக் கண்ணீரோடு நின்றிருந்தார்கள். அது சொற்கள் கைவிட்ட பெருந்து யரத்தின் தருணம். அத்தனை பேரின் மானசீகத்திலும் அவரது குரல் ஓங்கி ஒலித்தது.'அறியவொண்ணாப் பெருந்தத்துவமான பிரம்மத்தின் வெளிப்பாடுகள் இரண்டு. ஒன்று ஜீவாத்மா. இன்னொன்று பரமாத்மா. நீ பரமாத்மாவைச் சரணடைந்து விட்டால் உன் பொறுப்பு அவனுடையது. மோட்சத்துக்கென்று தனியே மெனக்கெட அவசியமில்லை. அவன் பார்த்துக் கொள்வான்.'வைணவம் அநாதியானது. ராமானுஜர் அத்தத்துவத்துக்கு ஒரு வண்ணமும் வடிவமும் அளித்தார். வையமெங்கும் அதைப் பரப்பும் பணியில் வாழ்நாள் முழுதும் ஈடுபட்டார். மனித குலத்தின் மீதான மாசற்ற நேசம் ஒன்றே அவரை இதைச் செய்ய வைத்தது. தாம் பிறந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு இன்றும் அவர் வாழ்வது நிகரற்ற அப்பெரும்பணியால்தான். ராமானுஜ சித்தாந்தம் இன்னொரு ஆயிரமாண்டுகள் தாண்டியும் வாழும்.
(நிறைந்தது-)
* ராமானுஜரின் 1000வது திருநட்சத்திரமான நாளைய தினம், முடிவுரையாகச் சில சொற்கள்.
பா.ராகவன்

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் திருமேனியை பாதுகாக்கும் ரகசியம்!
ஏப்ரல் 20,2017
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுாரில் ஸ்ரீராமானுஜர் அவதரித்த, 1,000மாவது ஆண்டு விழா அடுத்த ஆண்டு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் உள்ள ஸ்ரீ ராமனுஜரின் திருமேனியை பருவ நிலைக்கு ஏற்ப பல நுாறு ஆண்டுகளாக பாதுகாக்கும் ரகசியத்தை இந்த பகுதியில் விரிவாக பார்ப்போம்.
ஸ்ரீபெரும்புதுாரில், 1,017ம் ஆண்டு, ராமானுஜர், சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம், ஆந்திர மாநிலம் திருப்பதி, கர்நாடக மாநிலம் மேலக்கோட்டைதிருநாராயணபுரம் ஆகிய பல திவ்ய தேசங்களில் வாழ்ந்து, ஆன்மிக பணிகளிலும் சமய சீர்திருத்த பணிகளையும், வைணவத்தை தழைத்தோங்கச் செய்ய, விசிஷ்டாத்வைதம் என்ற உயரிய கோட்பாட்டையும் வகுத்து தந்தார்.பல கோவில் கோட்பாடுகளையும், பூஜை முறைகளையும் வகுத்து தந்தார். சிறந்த மகானாகவும், தலைச்சிறந்த வைணவ ஆச்சாரியராகவும் திகழ்ந்தார்.
ராமானுஜர் பற்றி பிற்கால தலைமுறையினர் அறிய, அவர் வாழ்ந்த காலத்திலேயே ராமானுஜர் போல, இரண்டு உற்சவ விக்ரங்களை பிரதிஷ்டைச் செய்தனர். அவற்றுள் ஒன்றை, ராமானுஜர், ஆரத் தழுவி தன் உடலில் இருந்த ஆத்மசக்தி முழுவதையும் அதில் பிரதிஷ்டை செய்தார்.இந்த திருமேனி, தானுகந்த திருமேனி (ராமானுஜரே மிகவும் உகந்த திருமேனி) என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று மற்றொரு திருமேனியை திருநாராயணபுரத்தில் பிரதிஷ்டைச் செய்தனர். அது, தமக்குகந்த திருமேனி , அதாவது, அடியார்கள் மிகவும் உகந்த திருமேனி என, அழைக்கின்றனர்.ராமானுஜர், 120 ஆண்டுகள் வாழ்ந்து, இறுதியாக ஸ்ரீரங்கத்தில் ஜீவித காலத்திற்கு பின் அவருடைய திருமேனியை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இது, தானான திருமேனி என, அழைக்கப் படுகிறது.
வெந்நீர், போர்வை, சந்தனம்... ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ராமானுஜர் திருமேனி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம், மூலம் நட்சத்திரம் அன்று ஸ்ரீ மணவாள மாமுனிகளின் அவதார திருநாள் தொடங்கி, தை மாதம் ஹஸ்தம் நட்சத்திரம் அன்று, ஸ்ரீ கூரத்தாழ்வாரின் அவதார தினம் வரை உள்ள இடைப்பட்ட மழைக் காலம் மற்றும் குளிர் காலங்களில், ராமானுஜரின் உற்சவ திருமேனிக்கு திருமஞ்சனம் செய்யும் போதும், திருவாராதனம் செய்யும் போதும், வெந்நீரை உபயோகிக்கின்றனர்.மேலும், அந்த காலங்களில், இரவு நேரங்களில் ராமானுஜரின் திருமேனிக்கு குளிராமல் இருப்பதற்கு, சால்வைகள், ரஜாய் எனப்படும் போர்வைகள் சாற்றப்பட்டு மிகவும் பாதுகாக்கின்றனர். இதேப்போல் கோடை காலத்தில் மிகவும் குளிர்ந்த, துாய்மையான நீரில் திருமஞ்சனம் செய்கின்றனர்.அதிக வெப்பம் உள்ள காலங்களில் வெப்பத்தால் ஏற்படும் சூட்டை தணிக்க, அவருடைய திருமேனியின் பின்புறம் சந்தனம் பூசப்படுகிறது. இந்த மரபு, தொடர்ந்து பல நுாறு ஆண்டுகளாக மிகவும் சிறப்பாக போற்றி பாதுகாத்து வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
தானுகந்த திருமேனி: இந்தியாவில் உள்ள அனைத்து வைணவ கோவில்களிலும் ராமானுஜரின் சிலை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யப்படுகிறது. இதில் இந்த இரண்டு திருமேனி விக்ரங்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.இவை தொடர்ந்து பல வருடங்களாக வழிபட்டு,பாதுகாக்கப்படுகின்றன. இதில், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள மிகவும் சிறப்பு வாய்ந்த தானுகந்த திருமேனியை வைணவ அடியார்கள், கோவில் கைங்கர்யகாரர்களும், பல நுாறு ஆண்டுகளாக மிகவும் பாதுகாப்பாக பாதுகாத்து வருகின்றனர்.

மோருக்கு விலை மோட்சம்
ஏப்ரல் 21,2017
திருமலை திருப்பதியில் ராமானுஜர் தம் சீடர்களுடன் அமர்ந்திருந்தார். அப்போது மோர் விற்கும் பெண்மணி ஒருத்தி சென்று கொண்டிருந்தாள். அவளிடம் குடிப்பதற்கு மோர் கேட்டனர் சீடர்கள். அவளும் விலை ஏதும் சொல்லாமல், சீடர்களுக்கு வேண்டிய அளவுக்கு மோர் கொடுத்தாள். ராமானுஜரையும், சீடர்களையும் கண்ட அவளுக்கு மனதிற்குள் தானும் இவர்களைப் போல பக்தியில் லயித்து முக்தி பெற வேண்டும் என்ற எண்ணம் உண்டானது. ராமானுஜர் அவளிடம், “மோர் என்ன விலை?” என்று கேட்டார். “சுவாமி! எனக்கு காசு வேண்டாம். பெருமாளுடன் வாசம் செய்யும் பரமபதத்தில் மோட்சம் பெற வழிகாட்டுங்கள்” என்று கேட்டாள். “உனக்கு நிச்சயம் மோட்சம் கிடைக்கும். ஆனால், மோட்சத்தை வழங்கும் தகுதி தான் எங்களுக்கு இல்லை.
திருமலையின் மேலே நம் எல்லோரு க்கும் மோட்சம் தரும் பெருமாள் அமர்ந்திருக்கிறார். அவரிடம் போய் கேள்!” என்றார் ராமானுஜர். “சுவாமி! திருமலையில் இருக்கும் பெருமாள் வாய் திறந்து பேச மாட்டாரே! நீங்கள் தான் எனக்காக சிபாரிசு ஓலை தரவேண்டும்” என்றாள். ராமானுஜரும் மோர் விற்கும் இடைச்சியின் நம்பிக்கையை மதித்து சிபாரிசு கடிதம் ஒன்றினை திருமலை திருப்பதி பெருமாளுக்கு எழுதத் தொடங்கினார். சீடர்கள் அனைவரும் வேடிக்கை செய்கிறாரா, விநோதம் செய்கிறாரா என்று புரியாமல் விழித்தனர். ராமானுஜரின் சீட்டோலையை வாங்கிய மோர் விற்கும் பெண், திருமலைக்கு புறப்பட்டாள். பெருமாளின் சன்னதி அர்ச்சகர்களிடம் ஓலையைக் கொடுத்தாள். “இது என்ன சீட்டோலை?” என்று அவர்கள் கேட்டனர். ராமானுஜர் எழுதிய ஓலை என்பதை அறிந்ததும் மறுப்பு ஏதும் சொல்லாமல் பெருமாளின் திருமுன் சமர்ப்பித்தனர். பெருமாளே கைநீட்டி ஓலையை எடுத்துக் கொண்டு,“உனக்கு மோட்சம் கொடுத்தேன்” என்றார். அப்போது வானில் ஒரு பிரகாசமான விமானம் ஒன்று வந்தது. விஷ்ணுதூதர்கள் மோர் விற்கும் பெண்ணை ஏற்றிக் கொண்டு பரமபதம் கிளம்பிவிட்டனர்.

குருவை மிஞ்சிய சீடர்கள்!
ஏப்ரல் 21,2017
ராமானுஜர் வைஷ்ணவத்தை நிலைநாட்டிய பெரும் ஆச்சாரியர். ராமகிருஷ்ணர், ராமானுஜர் இருவருமே விஷ்ணுவின் பிரசித்தி பெற்ற இரு பெரும் அவதாரங்கள். ராமானுஜரின் பெற்றோர்களான காந்திமதி, கேசவர் தம்பதியருக்குப் பல ஆண்டுகள் மகப்பேறு இல்லை. எனவே கேசவர் தம் மனைவியுடன் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோயிலுக்குச் சென்று ஒரு வேள்வி நடத்தினார். அப்போது பெரு மாள் கேசவரின் கனவில் தோன்றி, உலகினரை உய்விக்கத் தாமே அவரது மகனாக அவதரிக்கப் போவதாக அறிவித்தார். அவ்விதமே ஸ்ரீபெரு ம்புதூரில் பிறந்த குழந்தையிடம் விஷ்ணுவின் சின்னங்கள் இருக்க, அதற்கு ராமானுஜன் என்று பெயரிடப்பட்டது. ராமகிருஷ்ணரும் இவ்விதமே ÷ தான்றினார். அவரது தந்தையான சுதிராம் 1835-ஆம் ஆண்டு கயைக்குச் சென்று, தம் மூதாதையர் நலனுக்காக சிராத்தம் செய்தார். இரவில் கயையி லுள்ள விஷ்ணுமூர்த்தியான கதாதரப் பெருமாள் அவன் கனவில் தோன்றி, தாமே அவரது மகனாகப் பிறப்பதாகக் கூறினார். இவ்விதம் பிறந்த குழந்தைக்கு கதாதரர் என்றே பெயர் வைக்கப்பட்டது. ராமகிருஷ்ணர், ராமானுஜர் ஆகிய இருவருமே பல குருமார்களிடம் பயின்றனர். ராமானுஜர் முதலில் காஞ்சிபுரத்தில் யாதவப்பிரகாசர் என்ற குருவிடம் வேதாந்தம் கற்றார். அவர் தீவிரமான அத்வைதி. ராமானுஜரோ தீவிர விஷ்ணு பக்தர். எனவே குருவுக்கும் சீடருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேற்றுமை ஏற்பட்டது.
சாந்தோக்ய உபநிஷதத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷணீ - இந்த மந்திரத்திற்கு யாதவப் பிரகாசர், கப்யாஸம் என்பதற்குக் குரங்கின் பின்புறம் என்று கூறப்பட்ட நேரடிப் பொருளைக் கூறி, அந்தப் பொன்னிறமான புருஷனின் கண்கள், குரங்கின் பின்புறத்தைப் போல் சிவந்த இரு தாமரை மலர்களை ஒத்திருந்தன என்று உரை செய்தார். பகவானின் திருக்கண்களுக்கு, குரங்கின் பின்புறத்தையா உவமையாகக் கூறுவது ? அது அபசாரம் என யாதவப் பிரகாசருக்குத் தோன்றவில்லை. ஏனெனில் அத்வைத வேதாந்தத்தின்படி உயர்ந்தது, தாழ்ந்து ஆகிய அனைத்தும் பிரம்மமே! இந்த உவமையைக் கேட்ட ராமானுஜர் பதைபதைத்துப் போனார். பக்தரான அவரது காதுகள் கூசின, கண்களில் நீர் வடிந்தது.; பிறகு குருவின் அனுமதி பெற்று, ராமானுஜர் கப்யாஸம் என்பதை வேறுவிதமாகப் பிரித்து அதற்கு, சூரியனின் கதிர்களால் மலர்ந்த என்று பொருள் கூறினார். அந்த இடத்திற்கு அப்புருஷனின் கண்கள். சூரியனில் உள்ள பொன்னிறமான கதிர்களால் மலர்ந்த தாமரைகள் போல் அழகாக இருந்தன என்று பொருள் கூறினார். உடனே யாதவப்பிரகாசர், நீ கூறுவது நேரடி அர்த்தமல்ல. சுற்றி வளைத்துப் பெறப்பட்ட பொருள் என்றார். இ ருந்தாலும் அவர், வேதாந்தத்திற்கு விளக்கம் சொல்வதில் ராமானுஜருக்குத் தனித் திறமை இருந்ததை அறிந்தார்.
பிற்காலத்தில் ராமானுஜர் புகழ்பெற்ற வைஷ்ணவ ஆச்சாரியராகத் தலையெடுத்தார். அப்போது குருவான யாதவப் பிரகாசர் அத்வைதத்தைக் கைவிட்டு, வைஷ்ணவராகி ராமானுஜருக்கே சீடரானார். இது குறித்து ராமகிருஷ்ணர் இவ்விதம் கூறினார் : ராமானுஜர் விசிஷ்டாத்வைதத்தை ஏற்றுக் கொண்டவர். அவரது குருவோ சுத்த அத்வைதி. அவர்கள் ஒத்துப் போகவில்லை. ஒருவரது வாதத்தை மற்றொருவர் நிராகரிப்பார். அது எப்போதும் நடப்பதுதான். இருப்பினும் குருவிற்குச் சீடன் தம்முடையவனே ஆவான். யாதவப் பிரகாசர் தமது சீடரான ராமானுஜரிடமிருந்து பாடம் கற்றது ÷ பாலவே, அத்வைத குருவான தோதா புரியும் தமது சீடரான ராமகிருஷ்ணரிடமிருந்து பலவற்றைக் கற்றார். தோதாபுரி ஆதிபராசக்தியை ஏற்றுக் கொள்ளவில்லை. காளிதேவியின் சிலை மேல் ராமகிருஷ்ணருக்கு இருந்த பக்தியை அவர் மூடநம்பிக்கை என்று கருதினார். குருதேவர் ராமகிரு ஷ்ணர் காலையிலும் மாலையிலும் கைகளைத் தட்டிக் கொண்டு, இறைவனின் திரு நாமங்களை உரக்கச் சொல்வார். அப்போது தோதாபுரி, கைகளால் தட்டி சப்பாத்தி தட்டுகிறாயா, என்ன? என்று அவரைக் கேலி செய்வார். காளி தேவி தோதாபுரிக்குப் பாடம் கற்பிக்கத் திருவுளம் கொண்டாள். ÷ தாதாபுரிக்குக் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இறுதியில் அவர் கங்கையில் மூழ்கி உயிரை விடத் தீர்மானித்தார். ஆனால் என்ன அதிசயம் ! அவர் க ங்கையில் இறங்கி மூழ்குவதற்குப் போதுமான நீரில்லை!
உடனே தோதாபுரி, இது எல்லாம் வல்ல மகாமாயையின் திருவிளையாடல் ! என உணர்ந்து சக்தியை ஏற்றுக் கொண்டார். காளி கோயிலுக்குச் சென்று வணங்கினார். இவ்விதம் குருவான தோதாபுரி, சீடரான ராமகிருஷ்ணரிடமிருந்து பிரம்மமும் சக்தியும் ஒன்றே ! என்பதை உணர்ந்தார். ராமகிரு ஷ்ணர், ராமானுஜர் ஆகிய இருவருமே விக்கிரக ஆராதனையை மிகவும் ஆதரித்தவர்கள். ராமானுஜர் நிலை நாட்டிய வைஷ்ணவ சமயத்தில் விஷ்ணுவின் விக்கிரக வழிபாட்டிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருமலை ஸ்ரீநிவாசர் போன்ற மூர்த்தியர் வைகுண்டத்ததிலிருந்து நேரடியாக பூலோகத்திற்கு வந்திறங்கிய அர்ச்சாவதாரங்களாகப் போற்றப்படுகின்றனர். ஓர் இறைவனின் அவதாரம் மறைந்த பிறகு, அவரது சக்தியும் அருளும் திவ்ய மூர்த்தங்கள் மூலம் தேக்கி வைக்கப்பட்டு, பின் வரும் தலைமுறைகளுக்கு சேர்க்கப்படுகின்றன. 19-ஆம் நூற்றாண்டின் இந்து விக்கிரக ஆராதனையை வெளி நாட்டினர் இகழ்ந்தனர். அப்போது ராமகிருஷ்ணரோ விக்கிரக வழிபாட்டின் பயனை விளக்கி மூர்த்தங்கள் வெறும் சிலைகள் அல்ல; அவை ஆன்மிக விழிப்புணர்வுடைய இறைவனின் திருவுருவங்களே என்று நிலைநாட்டினார். மக்களிடம் பக்தியைப் பரப்புவதே சாதி வேற்றுமைகளைக் களைவதற்கான வழி என்று ராமகிருஷ்ணர் கூறினார். உண்மையான பக்தர்கள் சாதி ÷ வற்றுமைகளைப் பார்ப்பதில்லை. வைஷ்ணவத்தில், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ராமானுஜர் முக்கியமான இடத்தை அளித்தார். ராமானுஜரின் காலத்திற்குப் பிறகே, ஆன்மிகத்தின் கதவு அனைவருக்கும் திறக்கப்பட்டது என்று சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார்.

பக்த லட்சணம்!
ஏப்ரல் 21,2017
ஒருசமயம் ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த தமது துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார். அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக ர ங்கநாதரின் துணிகளை இனி, நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் ராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல் ரங்கநாதரின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, ராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். ராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார்.
ஒரு நாள் அவன் ராமானுஜரிடம், நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க... ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே என்றான். அது கேட்டு ராமானுஜர் அவனை ரங்கநாதரிடம் அழைத்துச் சென்று, உங்களுக்காக இவன் தினமும் சிரத்தையாக, துணிகளைத் துவைத்துக் கொண்டு வந்து கொடுக்கிறான்! ஒருநாள் அவனிடம் பேசினால்தான் என்ன? எனக் கேட்டார். உடனே ரங்கநாதர் அவனிடம், உனக்கு என்ன வேண்டும் கேள்? என்றார். சாமி, கிரு ஷ்ணாவதாரத்திலே, உங்களுக்கு துவைத்த துணிகளைத் தர மாட்டேன்னு சொன்னானே... அவனை மன்னித்து அவனுக்கு நீங்கள் முக்தி அளிக்க ÷ வண்டும்! என்றான். அவனை மன்னித்து விட்டேன். அப்பொழுதே அந்த விஷயத்தை மறந்தும் விட்டேன் என்றார் ரங்கநாதர்.
இதைக் கேட்டுக்கொண்டிருந்த ராமானுஜர் கிருஷ்ணாவதாரத்தில் தவறு செய்த ஒருவனுக்காக முக்தி கேட்டியே, உனக்காக நீ ஏன் ஒண்ணுமே கேட்க லே எனக் கேட்டார். அதற்கு அந்தச் சலவைத் தொழிலாளி, அதை நீங்கப் பார்த்துக்குவீங்க சாமி என்றான். இதனைக் கேட்ட ராமானுஜர், மனம் நெகிழ்ந்து அவனை ஆசீர்வாதம் செய்தார். உண்மையான பக்தர்கள் மற்றவர்களைப் பற்றித் தான் கவலைப்படுவார்கள். தம்மைப் பற்றி நினைப் பதில்லை. அதை குருவிடம் விட்டு விடுவார்கள்.

ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கு தாய்வீட்டு சீதனம்!
ஏப்ரல் 25,2017
ராமானுஜர் அழகர் கோயிலில் ஆண்டாளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார். பின் நித்ய கைங்கரியங்கள் தொடர்ந்து நடத்திவர ராமானுஜ மடம் ஒன்றை உருவாக்கினார். பிறகு அங்கிருந்து மதுரை சென்று கூடலழகரை வணங்கி வாழ்த்தினார். அப்போது அங்கிருந்த புலவர்களுடன் வாதிட்டு வென்றார். அதன்பின் திருமோகூர், திருதங்கால் ஆகிய இடங்களில் உள்ள பெருமாளை சேவித்து திருவில்லிபுத்தூர் சென்றடைந்தார். திருவில்லிபுத்தூர் கோயிலுக்குள் புகும்போது ஆண்டாள் நாச்சியார் தன் நேர்த்திக் கடனை திருமாலிருஞ்சோலையில் தன் சார்பாக நிறைவேற்றியதால் தாமே நேரில் வந்து ஸ்ரீராமானுஜரை ‘வாரும் என் அண்ணனே’ என்று தன் மூத்த சகோதரராக விளித்ததாக கூறப்படுகிறது. அங்கு ஆண்டாளுக்கும் ரங்கமன்னாருக்கும் தாய்வீட்டு சீதனம் சமர்ப்பித்து வாழ்த்தி வணங்கினார்.
ராமானுஜர் அஷ்டோத்திர சத நாமாவளி
ஏப்ரல் 20,2017
ஓம் ராமாநுஜாய நம:
ஓம் புஷ்கராக்ஷõய நம:
ஓம் யதீந்த்ராய நம:
ஓம் கருணாகராய நம:
ஓம் காந்திமத்யாத்மஜாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம:
ஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வஞாய நம:
ஓம் ஸர்வஞாய நம:
ஓம் ஸஜ்ஜனப்ரியாய நம:
ஓம் புஷ்கராக்ஷõய நம:
ஓம் யதீந்த்ராய நம:
ஓம் கருணாகராய நம:
ஓம் காந்திமத்யாத்மஜாய நம:
ஓம் ஸ்ரீமதே நம:
ஓம் லீலாமானுஷ விக்ரஹாய நம:
ஓம் ஸர்வசாஸ்த்ரார்த்த தத்வஞாய நம:
ஓம் ஸர்வஞாய நம:
ஓம் ஸஜ்ஜனப்ரியாய நம:
ஓம் நாராயணக்ருபா பாத்ராய நம:
ஓம் ஸ்ரீ பூதபுரநாயகாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் பக்தமந்தாராய நம:
ஓம் கேசவாநந்தவர்த்தநாய நம:
ஓம் காஞ்சீபூர்ணப்ரியஸகாய நம:
ஓம் ப்ரணதார்த்தி வினாசகாய நம:
ஓம் புண்ய ஸங்கீர்த்தநாய நம:
ஓம் புண்யாய நம:
ஓம் ப்ரம்மராக்ஷஸ மோசகாய நம:
ஓம் ஸ்ரீ பூதபுரநாயகாய நம:
ஓம் அநகாய நம:
ஓம் பக்தமந்தாராய நம:
ஓம் கேசவாநந்தவர்த்தநாய நம:
ஓம் காஞ்சீபூர்ணப்ரியஸகாய நம:
ஓம் ப்ரணதார்த்தி வினாசகாய நம:
ஓம் புண்ய ஸங்கீர்த்தநாய நம:
ஓம் புண்யாய நம:
ஓம் ப்ரம்மராக்ஷஸ மோசகாய நம:
ஓம் யாதவ அபாதித அபார்த்த வ்ருக்ஷச்சேத குடாரகாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் லக்ஷ்மண முநயே நம:
ஓம் சாரதா சோகநாசனாய நம:
ஓம் நிரந்தரஜநாஞானநிர்மோசன விசக்ஷணாய நம:
ஓம் வேதாந்தத்வய ஸாரக்ஞாய நம:
ஓம் வரதாம்பு ப்ரதாயகாய நம:
ஓம் பரேங்கிதஞாய நம:
ஓம் நீதிஞாய நம:
ஓம் யாமுனாங்குலி மோசகாய நம:
ஓம் அமோகாய நம:
ஓம் லக்ஷ்மண முநயே நம:
ஓம் சாரதா சோகநாசனாய நம:
ஓம் நிரந்தரஜநாஞானநிர்மோசன விசக்ஷணாய நம:
ஓம் வேதாந்தத்வய ஸாரக்ஞாய நம:
ஓம் வரதாம்பு ப்ரதாயகாய நம:
ஓம் பரேங்கிதஞாய நம:
ஓம் நீதிஞாய நம:
ஓம் யாமுனாங்குலி மோசகாய நம:
ஓம் தேவராஜ க்ருபாலப்த ஷட்வாக்யார்த்த மஹோததயே நம:
ஓம் பூர்ணார்யலப்த ஸந்மன்த்ராய நம:
ஓம் சௌரி பாதாப்ஜஷட்பதாய நம:
ஓம் த்ரிதண்டதாரிணே நம:
ஓம் ப்ரம்மஞாய நம:
ஓம் ப்ரம்மத்யானபராயணாய நம:
ஓம் ஸ்ரீரங்கேச கைங்கர்ய ரதாய நம:
ஓம் வீபூதித்வயதாயகாய நம:
ஓம் கோஷ்டீ பூர்ணக்ருபாலப்த மந்த்ர ராஜப்ரகாசகாய நம:
ஓம் வாரங்காநுகம்பாத்தத் ராவிடாம்நாய பாரகாய நம:

ஓம் மாலா தரார்யஸுக்ஞாதத் ராவிடாம் நாயத்தவதியே நம:
ஓம் சதுஸ் ஸப்ததி சிஷ்யேட்யாய நம:
ஓம் பஞ்சாசார்ய பதாச்ரயாய நம:
ஓம் ப்ரபீதவிஷதீர்த்தாம்பு ப்ரக டீக்ருத வைபவாய நம:
ஓம் ப்ரணதார்த்தி ஹராசார்ய தத்தபிøக்ஷக போஜநாய நம:
ஓம் பவித்ரீக்ருத கூரேசாய நம:
ஓம் பாகினேய த்ரிகண்டகாய நம:
ஓம் கூரேச தாசரத்யாதி சரமார்த்த ப்ரதாயகாய நம:
ஓம் ஸ்ரீரங்கேச வேங்கடேசாதி ப்ரகடீக்ருத வைபவாய நம:
ஓம் தேவராஜார்ச்சனரதாய நம:

ஓம் மூகமுத்தி ப்ரதாயகாய நம:
ஓம் யக்ஞமூர்த்தி ப்ரதிஷ்டாத்ரே நம:
ஓம் மந்நாதாய நம:
ஓம் தரணீதராய நம:
ஓம் வரதாசார்யஸத்பக்தாய நம:
ஓம் யக்ஞேசார்த்தி விநாசகாய நம:
ஓம் அநந்தாபீஷ்டபலதாய நம:
ஓம் விடலேசப்ரபூஜிதாய நம:
ஓம் ஸ்ரீசைலபூர்ணகருணாலப்த ராமாய ணார்த்தகாய நம:
ஓம் ப்ரபத்தி தர்மைகரதாய நம:

ஓம் கோவிந்தார்யப்ரியானுஜாய நம:
ஓம் வ்யாஸ ஸூத் ரார்த்தத்வஞாய நம:
ஓம் போதாயனமதா நுகாய நம:
ஓம் ஸ்ரீ பாஷ்யாதி மஹாக்ரந்தகாரகாய நம:
ஓம் கலிநாசகாய நம:
ஓம் அத்வைத மதவிச்சேத்ரே நம:
ஓம் விசிஷ்டாத்வைத பாலகாய நம:
ஓம் குரங்க நிகரீபூர்ண மந்த்ர ரத்னோபதேச காய நம:
ஓம் வினாசிதாகில மதாய நம:
ஓம் சேஷீக்ருதரமாபதயே நம:

ஓம் புத்ரீக்ருத சடாராதயே நம:
ஓம் சடஜித்ருணமோசகாய பாஷாதத்த ஹயக்ரீவாய நம:
ஓம் பாஷ்யகாராய நம:
ஓம் மஹாயசஸே நம:
ஓம் பவித்ரீக்ருத பூபாகாய நம:
ஓம் கூர்மநாத ப்ரகாச காய நம:
ஓம் ஸ்ரீவேங்கடாசலாதீச சங்கசக்ரப்ரதாயகாய நம:
ஓம் ஸ்ரீ வேங்கடேச ச்வசுராய நம:
ஓம் ஸ்ரீரமாஸக தேசிகாய நம:
ஓம் கருபாமாத்ர ப்ரஸன்னார்யாய நம:

ஓம் கோபிகமோக்ஷதாயகாய நம:
ஓம் ஸமீசிநார்ய ஸச்சிஷ்ய ஸத்க்ருதாய நம:
ஓம் வைஷ்ணவப்ரியாய நம:
ஓம் க்ரிமிகண்டந்ருபத்வம்ஸிநே நம:
ஓம் ஸர்வமன்த்ர மஹோத்தயே நம:
ஓம் அங்கீக்ருதாந்த்ர பூர்ணார்யாய நம:
ஓம் ஸாலக்ராம ப்ரதிஷ்டிதாய நம:
ஓம் ஸ்ரீபக்த க்ராம பூர்ணேசாய நம:
ஓம் விஷ்ணுவர்த்தன ரக்ஷகாய நம:
ஓம் பௌததத்வாந்த ஸஹஸ்ராம் சவே நம:
ஓம் ஸமீசிநார்ய ஸச்சிஷ்ய ஸத்க்ருதாய நம:
ஓம் வைஷ்ணவப்ரியாய நம:
ஓம் க்ரிமிகண்டந்ருபத்வம்ஸிநே நம:
ஓம் ஸர்வமன்த்ர மஹோத்தயே நம:
ஓம் அங்கீக்ருதாந்த்ர பூர்ணார்யாய நம:
ஓம் ஸாலக்ராம ப்ரதிஷ்டிதாய நம:
ஓம் ஸ்ரீபக்த க்ராம பூர்ணேசாய நம:
ஓம் விஷ்ணுவர்த்தன ரக்ஷகாய நம:
ஓம் பௌததத்வாந்த ஸஹஸ்ராம் சவே நம:
ஓம் சேஷரூபப்ரதர்சகாய நம:
ஓம் நகரீக்ருத வேதாத்ரயே நம:
ஓம் டில்லீச்வர ஸமர்ச்சி தாய நம:
ஓம் ஸாது லோக சிகாமணயே நம:
ஓம் ஸம்பத்புத்ர விமோசகாய நம:
ஓம் ஸம்பத் குமார ஜனகாய நம:
ஓம் ஸாதுலோக சிகாமணயே நம:
ஓம் ஸுப்ரதிஷ்டித கோவிந்தராஜாய நம:
ஓம் பூர்ண மனோரதாய நம:
ஓம் கோதாக்ரஜாய நம:
ஓம் நகரீக்ருத வேதாத்ரயே நம:
ஓம் டில்லீச்வர ஸமர்ச்சி தாய நம:
ஓம் ஸாது லோக சிகாமணயே நம:
ஓம் ஸம்பத்புத்ர விமோசகாய நம:
ஓம் ஸம்பத் குமார ஜனகாய நம:
ஓம் ஸாதுலோக சிகாமணயே நம:
ஓம் ஸுப்ரதிஷ்டித கோவிந்தராஜாய நம:
ஓம் பூர்ண மனோரதாய நம:
ஓம் கோதாக்ரஜாய நம:
ஓம் திச்விஜேத்ரே நம:
ஓம் கோதாபீஷ்டப்பூரகாய நம:
ஓம் சர்வஸம்சயவிச்சேத்ரே நம:
ஓம் விஷ்ணுலோகப்ரதாய நம:
ஓம் அவ்யாஹதமஹத் வர்த்மனே நம:
ஓம் யதிராஜாய நம:
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் ஸ்ரீமதேராமாநுஜாய நம:
ஓம் கோதாபீஷ்டப்பூரகாய நம:
ஓம் சர்வஸம்சயவிச்சேத்ரே நம:
ஓம் விஷ்ணுலோகப்ரதாய நம:
ஓம் அவ்யாஹதமஹத் வர்த்மனே நம:
ஓம் யதிராஜாய நம:
ஓம் ஜகத்குரவே நம:
ஓம் ஸ்ரீமதேராமாநுஜாய நம:
இராமானுஜர் நாமம் வாழி!
ஏப்ரல் 20,2017
5 0 Google +0
திருப்பெரும் புதூர் தன்னில்
திரு அவதார மெடுத்து
அரும்பெரும் செயல்க ளாற்றி
அளவிலா வேதக் கடலை
பருகிடச் செய்த அண்ணல்!
பழந்தமிழ் நாட்டி னுள்ளே
இருந்திடும் வைணவ நெறியை
இனித்திட செய்த வல்லோன்!
திருக்கச்சி நம்பி அன்பால்
திருக்கச்சி நாதன் அருளால்
உருவான அறிவுக் கடல்தான்
உடையவர் என்னும் நாமம்
தரித்திட்ட எம்பெரு மானார்
தமிழ்மண்ணின் வேத வித்து
அரிதான விஷய ஞானம்
அமைந்திட்ட அருள்மொழி அரசு!
யாதவர் பிரகாச ரென்னும்
யாதும் துறந்த ஞானிபால்
மாதவம் செய்த பெருமான்
மந்திர விளக்கங் கற்றார்!
ஆதலால் யாவ ருக்கும்
ஆற்றல் புரிந்த ஆண்டு
சாதனை பலவும் செய்து
சரித்திரம் பதிவு செய்தான்!
அற்றை நாள் காஞ்சி நகரை
அரசாட்சி செய்த மன்னன்
நற்றவப் புதல்வி தன்னை
நரகுசூழ் பேய்தான் பிடிக்க
கொற்றவன் கவலை நீங்க
குருவையே விஞ்சும் சிஷ்யன்
பற்றிய பேயை விரட்டி
பலப்பல வித்தை செய்தான்!
திருவரங்க நாதன் புகழை
தினந்தோறும் சேவித்தி ருக்கும்
பெருமைசால் ஆள வந்தார்
பெருமைக்குப் பெருமை சேர்க்க
அருமையாய் வைணவ நெறியை
அகிலத்தில் பரப்பு தற்கு
இராமாநுசர் இருந்தால் போதும்
இப்படி நினைக்கும் வேளை!
ஆளவந்தார் திருநாடு ஏக
அவர்விரல் மூன்று மட்டும்
மீளாமல் மடக்கிக் கொண்டு
மெய்ப்பொருள் மறைத்துக் காட்ட
மூலத்தை உரைத்த அக்கணம்
அவிழந்தன விரல்கள் மூன்றும்
ஞாலத்தில் உடையவர் பெயரோ
நிலைத்தது பாரீர்! பாரீர்!
கோட்டியூர் நம்பி என்னும்
கடலொத்த ஞானம் பெற்றோன்
காட்டிய மோட்ச நெறியை
கருணைகூர் இராமா நுசரோ
மேட்டோடு பள்ளத் தார்க்கும்
மொழிந்திட எண்ணங்கொண்டு
கூட்டினார் கூட்டந் தன்னை
கோபுர வாசல் பக்கம்!
உலகீரே வாரும்! வாரும்
உறுதிப் பொருள்தான் ஒன்றை
நலம்பெற சொல்வேன் கேளீர்
நல்லதோர் மோட்சம் செல்வீர்!
வலம்புரி சங்க நாதம்
வழங்கிடும் ஓசை போலே
சொல்லிய வார்த்தை யாலே
சொர்க்கத்தின் வாசல் சென்றார்!
தான்மட்டும் வாழு கின்ற
தன்னலம் மிக்க நாட்டில்
நான்மட்டும் நலத்தை வேண்டேன்
நானில மக்கள் யாரும்
ஏன் இங்கு அனைத்து பேறும்
எய்திடல் நலமே ஆகும்!
வேண்டிய புரட்சித் துறவி
பேதத்தின் புதிய சிறகு!
மதத்திலே புரட்சி செய்து
மகானாய் வாழ்ந்த அவர்தான்
சதத்தினை வாழ்நாள் கடந்தார்
சகமெலாம் புகழே அடைந்தார்!
புதரினை நீக்கிப் பொலிவைப்
புகுத்திய வைணவத் தோன்றல்!
பதமலர் பற்றி நிற்போம்
பணிவோம் இராமா நுசரையே!
திரு அவதார மெடுத்து
அரும்பெரும் செயல்க ளாற்றி
அளவிலா வேதக் கடலை
பருகிடச் செய்த அண்ணல்!
பழந்தமிழ் நாட்டி னுள்ளே
இருந்திடும் வைணவ நெறியை
இனித்திட செய்த வல்லோன்!
திருக்கச்சி நம்பி அன்பால்
திருக்கச்சி நாதன் அருளால்
உருவான அறிவுக் கடல்தான்
உடையவர் என்னும் நாமம்
தரித்திட்ட எம்பெரு மானார்
தமிழ்மண்ணின் வேத வித்து
அரிதான விஷய ஞானம்
அமைந்திட்ட அருள்மொழி அரசு!
யாதவர் பிரகாச ரென்னும்
யாதும் துறந்த ஞானிபால்
மாதவம் செய்த பெருமான்
மந்திர விளக்கங் கற்றார்!
ஆதலால் யாவ ருக்கும்
ஆற்றல் புரிந்த ஆண்டு
சாதனை பலவும் செய்து
சரித்திரம் பதிவு செய்தான்!
அற்றை நாள் காஞ்சி நகரை
அரசாட்சி செய்த மன்னன்
நற்றவப் புதல்வி தன்னை
நரகுசூழ் பேய்தான் பிடிக்க
கொற்றவன் கவலை நீங்க
குருவையே விஞ்சும் சிஷ்யன்
பற்றிய பேயை விரட்டி
பலப்பல வித்தை செய்தான்!
திருவரங்க நாதன் புகழை
தினந்தோறும் சேவித்தி ருக்கும்
பெருமைசால் ஆள வந்தார்
பெருமைக்குப் பெருமை சேர்க்க
அருமையாய் வைணவ நெறியை
அகிலத்தில் பரப்பு தற்கு
இராமாநுசர் இருந்தால் போதும்
இப்படி நினைக்கும் வேளை!
ஆளவந்தார் திருநாடு ஏக
அவர்விரல் மூன்று மட்டும்
மீளாமல் மடக்கிக் கொண்டு
மெய்ப்பொருள் மறைத்துக் காட்ட
மூலத்தை உரைத்த அக்கணம்
அவிழந்தன விரல்கள் மூன்றும்
ஞாலத்தில் உடையவர் பெயரோ
நிலைத்தது பாரீர்! பாரீர்!
கோட்டியூர் நம்பி என்னும்
கடலொத்த ஞானம் பெற்றோன்
காட்டிய மோட்ச நெறியை
கருணைகூர் இராமா நுசரோ
மேட்டோடு பள்ளத் தார்க்கும்
மொழிந்திட எண்ணங்கொண்டு
கூட்டினார் கூட்டந் தன்னை
கோபுர வாசல் பக்கம்!
உலகீரே வாரும்! வாரும்
உறுதிப் பொருள்தான் ஒன்றை
நலம்பெற சொல்வேன் கேளீர்
நல்லதோர் மோட்சம் செல்வீர்!
வலம்புரி சங்க நாதம்
வழங்கிடும் ஓசை போலே
சொல்லிய வார்த்தை யாலே
சொர்க்கத்தின் வாசல் சென்றார்!
தான்மட்டும் வாழு கின்ற
தன்னலம் மிக்க நாட்டில்
நான்மட்டும் நலத்தை வேண்டேன்
நானில மக்கள் யாரும்
ஏன் இங்கு அனைத்து பேறும்
எய்திடல் நலமே ஆகும்!
வேண்டிய புரட்சித் துறவி
பேதத்தின் புதிய சிறகு!
மதத்திலே புரட்சி செய்து
மகானாய் வாழ்ந்த அவர்தான்
சதத்தினை வாழ்நாள் கடந்தார்
சகமெலாம் புகழே அடைந்தார்!
புதரினை நீக்கிப் பொலிவைப்
புகுத்திய வைணவத் தோன்றல்!
பதமலர் பற்றி நிற்போம்
பணிவோம் இராமா நுசரையே!
ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவப் பெருமாள் கோயில்
ஏப்ரல் 24,2017
ராமானுஜர் அவதரித்ததால் இது, நித்ய சொர்க்கவாசல் தலமாகக் கருதப்படுகிறது. எனவே, இங்கு சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்ட ஏகாதசியன்று ஆதிகேசவர், ராமானுஜர் இருவரும் பூதக்கால் மண்டபத்தில் எழுந்தருளுவர். அவ்வேளையில் சொர்க்கவாசல் திறப்பதைப்போல, இங்குள்ள மணிக்கதவை (சன்னதிகதவு) திறப்பர்.
இருப்பிடம்: சென்னையிலிருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் ஊரின் நடுவே கோயில் அமைந்துள்ளது.
.. மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும்

ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் திருக்கோயில்
ஏப்ரல் 21,2017
2 1 Google +0
அருள்மிகு ரங்கநாத பெருமாள் திருக்கோயில்
ஸ்ரீரங்கம், திருச்சி
நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மிக அழகிய மண்டபங்களும் திருக்குளங்களும் தனி சன்னதிகளும் 21 கோபுரங்களும் 7 சுற்று பிரகாரங்களும் உடைய கோயில். இத்தலத்தில் தங்கி பலகாலம் ரங்கநாதருக்கு சேவை செய்த ராமானுஜர், இங்கேயே மோட்சம்அடைந்தார். அவரது உடலை, சீடர்கள் பத்மாசனத்தில் அமர வைத்தபடி அடக்கம் செய்தனர். சிலகாலம் கழித்து அவர் அதே கோலத்திலேயே பூமிக்கு மேலெழுந்தார். இவர் இங்கு தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். இவருக்கு திருமஞ்சனம் கிடையாது. சித்திரை திருவாதிரையன்று குங்குமப்பூ, பச்சைகற்பூரம் சேர்ந்த கலவை சாத்தப்படுகிறது.
இருப்பிடம்: திருச்சியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் ஸ்ரீரங்கம் உள்ளது.

திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் திருக்கோயில்
ஏப்ரல் 21,2017
அருள்மிகு சவுமியநாராயணர் திருக்கோயில்
திருக்கோஷ்டியூர், சிவகங்கை
மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் நாராயண மந்திரத்தை தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக இக்கோயில் விமானத்தில் ஏறி, அங்கிருந்து மக்களை அழைத்து மந்திரத்தை உபதேசித்த தலம்.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 95 வது திவ்ய தேசம்.
இருப்பிடம்: மதுரையிலிருந்து 62 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் உண்டு.

காஞ்சிபுரம் ராமானுஜர் திருக்கோயில்
ஏப்ரல் 21,2017
காஞ்சிபுரம் அருள்மிகு ராமானுஜர் திருக்கோயில்
சாலைக்கிணறு, காஞ்சிபுரம்
காலசர்ப்பதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், ராமானுஜரின் அவதார நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரத்தன்று இங்கு சிறப்புபூஜை நடத்துகிறார்கள். புத்திரபாக்கியம் பெற தீர்த்தத்தில் நீராடி அங்கப்பிரதட்சணம் செய்வர். மனக்குறை தீரவும், உடல் குறைபாடு நீங்கவும் அர்ச்சனை செய்கிறார்கள்.
இருப்பிடம்: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்- செவிலிமேடு சாலையில் உள்ள கூட்டுரோட்டிலிருந்து 1 கி.மீ.,

பக்தர்களுக்கு அருள்பாலித்தார் வெள்ளை ஆடையில் ராமானுஜர்
ஏப்ரல் 28,2017
0 0 Google +0
காஞ்சிபுரம் : செவிலிமேடு ராமானுஜர் கோவிலில், அவரது ஆயிரமாவது ஆண்டு விழாவில், நேற்று, வெள்ளை சாத்துப்படி விழா வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். செவிலிமேடு ராமானுஜர் கோவிலில் அவரது ஆயிரமாவது ஆண்டு விழா, 22ம் தேதி முதல் நடந்து வருகிறது. முதல் நாள், 108 கலசாபிஷேகம் மூலவருக்கு நடந்தது. தினமும் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. வழக்கமாக, ராமானுஜர் காவி ஆடையில் தான் இருப்பார். நேற்று, வெள்ளை ஆடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். எப்போதும் வெள்ளை உடையில் காணப்படும் ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார், ராமானுஜரை காப்பாற்ற காவி உடையில் சென்றதால் அவர் தான் ராமானுஜர் என கருதி, மன்னன் அவர் கண்ணை பறிக்க உத்தரவிட்டான். அதை நினைவு கூரும் வகையில் இந்த உற்சவம் நடைபெறுவதாக கூறப்படுகிறது. நேற்று காலை ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெள்ளை ஆடை அணிவிக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மூலவருக்கு பலவகை மலர் அபிஷேகம் நடைபெறுகிறது.
ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் விழா ஏற்பாடு போலீஸ் ஐ.ஜி., ஆய்வு
ஏப்ரல் 26,2017
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜர், ஆயிரமாவது ஆண்டு விழாவின் பாதுகாப்பு ஏற்பாடுகளை, ஐ.ஜி., ஸ்ரீதர், நேற்று ஆய்வு செய்தார். ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் அவதரித்த ஆயிரமாவது ஆண்டு விழா, ஆதிகேசவப்பெருமாள் கோவிலில், ஏப்., 22ல் துவங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான, ஏப்.,30ல் நடைபெறும் தேரோட்டம் மற்றும் மே1ல் நடைபெறும் சாத்துமுறை விழாவில் கலந்து கொள்ள , பல மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீபெரும்புதுார் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது. விழாவிற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு, முன்னேற்பாடுகளை, வடக்கு மண்டல, ஐ.ஜி., ஸ்ரீதர், நேற்று ஸ்ரீபெரும்புதுார் வந்து பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இதில், காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட டி.ஐ.ஜி., நஜ்மல் ஹோடா, காஞ்சிபுரம் எஸ்.பி., சந்தோஷ் ஹதிமனி, ஸ்ரீபெரும்புதுார் டி.எஸ்.பி., சிலம்பரசன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
ராமானுஜர் ஆயிரமாவது அவதார விழாவிற்கு வரும் பக்தர்கள் அவதி
ஏப்ரல் 28,2017
0 0 Google +0
ஸ்ரீபெரும்புதுார் : ராமானுஜரின், ஆயிர மாவது ஆண்டு திருஅவதார விழா, ஆறு நாட்கள் கடந்த நிலையிலும், தற்போது தான் அவசர, அவசரமாக கோவிலின் முன், கட்டுமான பணிகள் நடக்கின்றன. இதனால், விழாவிற்கு வரும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர் ராமானுஜர். இவரின், ஆயிரமாவது ஆண்டு திருஅவதார விழா ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் நடந்து வருகிறது. தமிழகம் மட்டுமின்றி இந்திய முழுவதும் உள்ள வைணவர்களால் ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, பல இடங்களில் கொண்டாடப்படுகிறது. ராமானுஜர் பிறந்த ஸ்ரீபெரும்புதுாரில் தமிழக அரசு சார்பில் வெகுவிமரிசையாக விழா நடத்த, சில ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. அதிகாரிகளின் அலட்சியத்தால், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழாவின், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், எதிர்பார்த்த படி இல்லை என, பக்தர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா ஆறு நாட்கள் நிறைவுற்று, இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே விழா எஞ்சியுள்ள நிலையில், கோவிலின் முன் கட்டுமான பணிகள், 15 நாட்களுக்கும் மேலாக அவசர அவசரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளால், கோவிலுக்கு உள்ளே செல்லும் பக்தர்கள் அவதிக்குள்ளாகின்றனர். வயதான பக்தர்கள் கட்டுமான பணிகளுக்காக போடப்பட்டுள்ள கம்பங்களுக்கு இடையே நுழைந்து செல்ல வேண்டி யுள்ளது. ஏப்ரல் 12ல், ஆதிகேசவப் பெருமாள் உற்சவ விழா துவங்கி, ஏப்ரல் 21ல் முடிவுற்றது. இதை தொடர்ந்து, ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா, 22ல் துவங்கி நடைபெற்று வருகிறது. விழா துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்து பணிகளையும் திட்டமிட்டு முடிக்காமல், விழா நடந்து வரும் நிலையில் கட்டுமான பணிகள் நடைபெறுவது, பக்தர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக