திங்கள், 30 செப்டம்பர், 2013

சுப்ரபாததரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவில்

Radhe Krishna 01-10-2013


சுப்ரபாததரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவில்


Karthik Rajendran likes a link.

  • Uppili Amudhan shared Vishnupriya Textiles's photo.
    சுப்ரபாததரிசனம் திருப்பதி ஏழுமலையான் கோவில் அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணி வரை சுப்ரபாத தரிசனம் நடக்கும். காலையில் சுவாமியை எழுப்புவதற்கு 2 அர்ச்சகர்கள், 2 ஊழியர்கள், தீப்பந்தம் பிடிக்கும் ஒருவர், வீணை வாசிக்கும் ஒருவர் என 6 பேர் சன்னதி முன்னால் உள்ள தங்க வாசலுக்கு வந்து சேருவார்கள்.

    முதலில் துவார பாலகர்களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். பின்னர் அர்ச்சகர் ஒரு ஊழியரிடம் சாவியை வாங்கி சன்னதியை திறப்பார். பின்னர் சுவாமியை வணங்கி விட்டு சன்னதி கதவை சாத்திவிட்டு உள்ளே செல்வார்கள். அந்த நேரத்தில் ``கவுசல்யா சுப்ரஜா ராம...'' என்ற சுப்ரபாதம் வெளியே நிற்கும் ஒரு குழுவினரால் பாடப்படும்.

    சன்னதிக்குள் தீப்பந்தம் கொண்டு செல்பவர் அங்குள்ள விளக்குகளை எல்லாம் ஏற்றுவார். பின்னர் வீணையை இசைக்க வெங்கடாசலபதி அருகில் போக சீனிவாச மூர்த்தி என்பவரை கொண்டு வந்து அமர்த்துவார்கள். அவரை முதல்நாள் இரவில் ஒரு தொட்டிலில் படுக்க வைத்திருப்பார்கள். அந்த தொட்டிலில் இருந்து சுவாமியை எடுத்து மூலவர் அருகில் அமர வைப்பர்.

    சுப்ரபாதம் பாடி முடித்ததும் சன்னதி திறக்கப்படும். சுவாமிக்கு பாலும் வெண்ணையும் படைத்து ``நவநீத ஹாரத்தி'' எனப்படும் தீபாராதனை செய்யப்படும். ``விஸ்வரூப தரிசனம்'' என்றும் இதை சொல்வதுண்டு. இந்த சேவையைக் காண ஒரு நபருக்கு கட்டணம் ரூ. 120. மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

    திருப்பதி மலையில் உள்ள ஆகாயகங்கை தீர்த்தத்திலிருந்து மூன்று குடங்களில் புனிதநீர் வந்து சேரும். ஒரு குடம் நீரை காலை பூஜைக்கும், மற்றொன்றை மாலை பூஜைக்கும், இன்னொன்றை இரவு பூஜைக்கும் எடுத்து வைப்பார்கள். (பிரம்மோற்சவ காலத்தில் மட்டும் யானை மீது தீர்த்தம் எடுத்து வரப்படும்).

    ஒரு குடம் தண்ணீரை ஐந்து வெள்ளி பாத்திரங்களில் நிரப்புவார்கள். பின்னர் உத்தரணி (ஸ்பூன் போனறது)யில் தண்ணீர் எடுத்து சுவாமி முன்பு அர்ச்சகர் நீட்டுவார். சுவாமி அதில் முகத்தை அலம்பிக் கொள்வார் என்பது ஐதீகம். பின்னர் மீதி உள்ள மூலவருக்கு பதிலாக அருகில் உள்ள போகசீனிவாத மூர்த்திக்கு அபிஷேகம் செய்யப்படும்.

    அப்போது சுவாமியின் இடுப்பில் ஒரு துண்டை கட்டி வாசனை தைலம் தேய்த்து, மஞ்சள் கலந்து நீரால் அபிஷேகம் நடத்துவார்கள். பிறகு பசும்பால், சந்தனம், தேன், மீண்டும் அபிஷகத்திற்கு பிறகு வஸ்திரம் சாத்தப்படும்.சுவாமிக்குசுவாமிக்கு நெற்றியில் நாமம் இடுவார்கள். பிறகு அவர் முன்னால் கண்ணாடியை காட்டுவார்கள். குடை பிடித்து, சாமரத்தால் விசிறுவார்கள். இதன்பிறகு தீபாராதனை நடக்கும்.

    இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். அற்புதம் தொடரும்….இத்துடன் காலை சுப்ரபாத பூஜை நிறைவடையும். அற்புதம் தொடரும்…- ஆன்மீகப் பணியில்- S.தன சேகர்

WHY TO VISIT TEMPLES ???

Radhe Krishna 30-09-2013

WHY TO VISIT TEMPLES ???

Ramu Bv shared శ్రీ హరి యాదవ్'s photo.














WHY TO VISIT TEMPLES ???
MUST READ AND SHARE.

Scientific Reason :

There are thousands of temples all over India in different size, shape and locations but not all of them are considered to be built the Vedic way. Generally, a temple should be located at a place where earth's magnetic wave path passes through densely. It can be in the outskirts of a town/village or city, or in middle of the dwelling place, or on a hilltop. The essence of visiting a temple is discussed here.

Now, these temples are located strategically at a place where the positive energy is abundantly available from the magnetic and electric wave distributions of north/south pole thrust. The main idol is placed in the core center of the temple, known as "*Garbhagriha*" or *Moolasthanam*. In fact, the temple structure is built after the idol has been placed. This *Moolasthanam* is where earth’s magnetic waves are found to be maximum. We know that there are some copper plates, inscribed with Vedic scripts, buried beneath the Main Idol. What are they really? No, they are not God’s / priests’ flash cards when they forget the *shlokas*. The copper plate absorbs earth’s magnetic waves and radiates it to the surroundings. Thus a person regularly visiting a temple and walking clockwise around the Main Idol receives the beamed magnetic waves and his body absorbs it. This is a very slow process and a regular visit will let him absorb more of this positive energy. Scientifically, it is the positive energy that we all require to have a healthy life.

Further, the Sanctum is closed on three sides. This increases the effect of all energies. The lamp that is lit radiates heat energy and also provides light inside the sanctum to the priests or *poojaris* performing the pooja. The ringing of the bells and the chanting of prayers takes a worshipper into trance, thus not letting his mind waver. When done in groups, this helps people forget personal problems for a while and relieve their stress. The fragrance from the flowers, the burning of camphor give out the chemical energy further aiding in a different good aura. The effect of all these energies is supplemented by the positive energy from the idol, the copper plates and utensils in the *Moolasthan*am / *Garbagraham*. *Theertham*, the “holy” water used during the pooja to wash the idol is not
plain water cleaning the dust off an idol. It is a concoction of Cardamom,*Karpura* (Benzoin), zaffron / saffron, *Tulsi* (Holy Basil), Clove, etc...Washing the idol is to charge the water with the magnetic radiations thus increasing its medicinal values. Three spoons of this holy water is distributed to devotees. Again, this water is mainly a source of magneto-therapy. Besides, the clove essence protects one from tooth decay, the saffron & *Tulsi* leafs protects one from common cold and cough, cardamom and *Pachha Karpuram* (benzoin), act as mouth fresheners. It is proved that *Theertham* is a very good blood purifier, as it is highly energized. Hence it is given as *prasadam* to the devotees. This way, one can claim to remain healthy by regularly visiting the Temples. This is why our elders used to suggest us to offer prayers at the temple so that you will be cured of many ailments. They were not always superstitious. Yes, in a few cases they did go overboard when due to ignorance they hoped many serious diseases could be cured at temples by deities. When people go to a temple for the *Deepaaraadhana*, and when the doors open up, the positive energy gushes out onto the persons who are there. The water that is sprinkled onto the assemblages passes on the energy to all. This also explains why men are not allowed to wear shirts at a few temples and women are requested to wear more ornaments during temple visits. It is through these jewels (metal) that positive energy is absorbed by the women. Also, it is a practice to leave newly purchased jewels at an idol’s feet and then wear them with the idol’s blessings. This act is now justified after reading this article. This act of “seeking divine blessings” before using any new article, like books or pens or automobiles may have stemmed from this through mere observation.

Energy lost in a day’s work is regained through a temple visit and one is refreshed slightly. The positive energy that is spread out in the entire temple and especially around where the main idol is placed, are simply absorbed by one's body and mind. Did you know, every Vaishnava(Vishnu devotees), “must” visit a Vishnu temple twice every day in their location. Our practices are NOT some hard and fast rules framed by 1 man and his followers or God’s words in somebody’s dreams. All the rituals, all the practices are, in reality, well researched, studied and scientifically backed thesis which form the ways of nature to lead a good healthy life.

The scientific and research part of the practices are well camouflaged as “elder’s instructions” or “granny’s teaching’s” which should be obeyed as a mark of respect so as to once again, avoid stress to the mediocre brains.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தர்ப்பைப்புல்.


Radhe Krishna 30-09-2013

தர்ப்பைப்புல்.
  • Nagarajan Narasimhan shared Srikanchikamakshi Kamakshi's photo.













    தர்ப்பைப்புல்.
    -----------------
    தர்ப்பைப்புல்என்பதுபுதர்ச்செடியாகத்தரையடிமட்டத்தண்டிலிருந்துசெழித்துவளரும். இதில்பலவகைகள்உண்டு. தர்ப்பைப்புல்பொதுவாகஉப்புக்கோரப்புல்எனஅறியப்படுகிறது.பண்டையமனிதஉலகவரலாற்றில்அறியப்பட்டமற்றும்பயன்படுத்தப்பட்டஇத்தாவரம்இந்தியாவில்"தாப்"(Daabh), தர்ப்பை(Dharba),குசம்அல்லதுகுசா(Kusha) முதலியபலபெயர்களால்வழங்கப்படுகிறது. இந்துமற்றும்புத்தசமயத்தில்தர்ப்பைபண்பாட்டுமுதன்மைத்துவம்வாய்ந்தஒருபுனிதத்தாவரமாகும். இதுபுத்தர்ஞானஒளிபெறுவதற்காகத்தியானம்செய்வதற்கானஒருஆசனமாகப்பயன்பட்டுவந்தது.ரிக்வேதத்தில்மதச்சடங்குகள்செய்யப்பயன்படும்ஒருபுனிதத்தாவரமாகத்தருப்பையைக்குறிப்பிடப்படுகிறது. மேலும்இதுதுறவிகள்மதபோதகர்கள். மற்றும்,இறைவனுக்கானஆசனமாகவும்குறிப்பிடப்பட்டுள்ளது. பகவத்கீதையில்தியானம்செய்வதற்குச்சிறந்தஆசனமாகக்கிருஷ்னரால்தர்ப்பையாசனம்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
    தர்ப்பையில்ஏழுவகைஉண்டு.
    1. குசை 2.காசம் 3. தூர்வை 4. விரிகி 5. மஞ்சம்புல்
    6. விசுவாமித்திரம் 7. யவை
    என்பன. மேலும்நுனிப்பகுதிபருத்துக்காணப்படின்அதுபெண்தர்ப்பைஎனவும், அடிப்பகுதிபருத்திருப்பின்அதுஅலிதர்ப்பைஎனவும்,அடிமுதல்நுனிவரைஒரேசமமாகஇருப்பதுஆண்தர்ப்பைஎனவும்வழங்கப்படுகிறது.
    மதச்சடங்குகளில்தர்ப்பைஅணியும்முறை,
    நற்காரியங்களோஅல்லதுமற்றகாரியங்களோசெய்யும்போதுதர்ப்பைஅணிவதுஇந்துமதத்தின்ஒருமரபாகப்பின்பற்றப்படுகிறது. தர்ப்பையைவலதுகைமோதிரவிரலில்அணிவர். இதற்காகதர்ப்பையில்மோதிரம்போன்றவளையம்செய்யப்பட்டிருக்கும். தர்ப்பையின்நுனிப்பகுதிதான்சிறப்பானதாகக்கருதப்படுகிறது. தர்ப்பைமேலும்பலகதிர்வீச்சுகளைஅடக்கிவிடுமென்றும்நம்பப்படுகிறது. அதனால்தான்சிலவேதமந்திரங்களைஉச்சரிக்கும்போதுதர்ப்பைஅணிவதுகட்டாயமாகக்கருதப்படுகிறது.

Gujarat

Radhe Krishna 30-09-2013

Gujarat

Narasimman Nagarajan shared Balasubramaniyam Senthil Vadivel'sphoto.













மோடியை எதிர்ப்பவாரா நீங்கள்?? ஆம் எனில் 2 நிமிடம் இதை படியுங்கள்..

எதுவெல்லாம் சாத்தியமோ அதுவெல்லாம் சாத்தியமல்ல என்று தொடர்ந்து இந்தியர்களாகிய நாம் நம்பவைக்கப்பட்டு வருகிறோம். அந்தப் பட்டியல் மிக நீளமானது.

குடி தண்ணீர்ப் பிரச்னையைத் தீர்க்க முடியுமா? முடியவே முடியாது! நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருகிக்கொண்டே இருக்கிறதே! அதை எப்படித் தீர்க்கமுடியும்?

எல்லோருக்கும் 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் கிடைக்குமா? அது எப்படி முடியும்? மின்சாரம் என்ன மரத்திலா விளைகிறது?

விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படுமா? சாத்தியமே இல்லை.

நதிகளை இணைக்க முடியுமா? நதிகளையாவது, இணைக்கிறதாவது?

ஐ.ஏ.ஏஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், குக்கிராமங்களுக்குச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதைப் பார்க்க முடியுமா? அதெல்லாம் நடக்காது.

ஏழைப்பாழைகளின் தனிப்பட்ட பிரச்னைகளைத் தீர்க்க முதலமைச்சர் வருவாரா? வாய்ப்பே இல்லை.

அரசு அதிகாரிகளிடமிருந்து நமது மின்னஞ்சலுக்குப் பதில் கிடைக்குமா? அதுவும் ஒரே நாளில்? கனவிலும் சாத்தியமில்லை.

ஆனால், மேற்குறிப்பிட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் சாதகமான விடையை நம்மோடு வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் இந்தியர் கொடுத்துக்கொண்டிருக்கிறார். ஆறு கோடி மக்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தை, இந்தியாவின் மாதிரி மாநிலமாக உலகத் தளத்தில் உயர்த்தியுள்ளார். அதுவும் வெறும் 10 ஆண்டுகால ஆட்சியில். புதுப்புது முயற்சிகள் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு அம்மாநிலத்தை எல்லாத் துறைகளிலும் முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். நரேந்திர மோடிதான், அந்த சக இந்தியர்.

மக்களைக் கொண்டே, அவர்களுக்குத் தேவையான முன்னேற்றத்தை அடையச் செய்யும் நரேந்திர மோடி அரசின் சூத்திரங்களை நாம் விரிவாக ஆராயவேண்டியிருக்கிறது. அவை, நமது நம்பிக்கைகளை மீட்டெடுக்க உதவுவதோடு, இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உலகில் ஜொலிப்பது சாத்தியம்தான் என நம்மை நம்ப வைக்கிறது. இந்தப் புத்தகம் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அல்ல. அவருடைய கட்சியின் தேர்தல் அறிக்கையும் அல்ல. என் தேடலுக்குக் கிடைத்த பதில்.

இந்தியாவால் வளர்ச்சி அடைந்த நாடாக முடியுமா, ஏன் இத்தனை வளங்கள் இருந்தும் நாம் தேங்கிக் கிடக்கிறோம், ஊழலில் திளைத்துக்கொண்டிருக்கிறோம், ஏன் நம் மக்கள் ஏழைமையில் உழன்றுகொண்டிருக்கிறார்கள் என்ற வருத்தத்தில் நான் இருந்தபோது குஜராத் பற்றிக் கேள்விப்பட்டேன். சில விஷயங்களை நம்ப முடியவில்லை. எனவே நானே சென்று பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்தேன்.

சில முறை பயணம் செய்தேன். பலரிடம் பேசினேன். தகவல்களைத் திரட்டினேன். நான் கண்டது முதலில் எனக்கு நம்பிக்கை தந்தது. அந்த நம்பிக்கையை உங்களுடன் பகிர்ந்துகொள்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். நம்மாலும் நம் மாநிலத்தை மிகச் சிறந்த மாநிலமாக, வளர்ச்சி அடைந்த பகுதியாக மாற்ற முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது வந்துள்ளது. சரியான தலைவர், தொலைநோக்குள்ள திட்டங்கள், செயல்படுத்தியே தீரவேண்டும் என்கிற வெறி, இவை போதும். ஏனெனில் இவற்றை மட்டும் வைத்துக்கொண்டுதான் நரேந்திர மோடி என்ற சரியான தலைவர், குஜராத்தில் இவற்றைச் செய்துகாட்டியுள்ளார்.

நரேந்திர மோடி சொல்வதைப் போல், நமது கனவுகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்யட்டும். வாருங்கள், குஜராத்தில் கடந்த பத்தாண்டுகளில் என்ன நடந்திருக்கிறது என்பதை ஒரு பார்வை பார்ப்போம்.

*

குஜராத்தில் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது. இது பத்திரிக்கையில் பணம் கொடுத்துப் போடப்பட்ட விளம்பரம் அல்ல. அரசியல்வாதிகளின் பிதற்றலும் அல்ல. கடந்த பல ஆண்டுகளாகவே குஜராத் மாநிலத்தில் அனைத்து மக்களுக்கும் 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. அதுவும் மும்முனை மின் இணைப்பு.

2011-ம் ஆண்டுக் கணக்குப்படி குஜராத்தில் மொத்தம் 18,066 கிராமங்கள் உள்ளன. இதில் 18,031 கிராமங்களுக்கு 2006-ம் ஆண்டே மின்சாரம் போய்ச் சேர்ந்துவிட்டது. அதோடு, அவற்றைச் சார்ந்த சுமார் 9,700 குக்கிராமங்களும் மின்சார ஒளியைப் பெற்றுவிட்டன. மீதமுள்ள 35 கிராமங்களுக்கு மட்டும்மின் இணைப்பு வழங்கப்படவில்லை. ஒருவேளை இந்தக் கிராமங்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளுக்குள் இருக்கலாம் அல்லது எளிதில் மின் இணைப்பு வழங்க முடியாத பகுதியில் இருக்கலாம்.

ஒரு நாள் இரவு அகமதாபாத்தில் தங்கினேன். கடுமையான இடி, மின்னலுடன் மழை கொட்டியது. காதைப் பிளக்கும் இடி ஓசை. மரங்கள்கூடச்சாய்ந்தன. என்ன ஆச்சரியம்! அப்போதும்கூட மின்சாரம் தடைப்படவில்லை. இது மட்டுமல்ல, அங்கு டிவி, ஃபிரிட்ஜ் போன்றவற்றை வாங்கும்போது யாரும் ஸ்டெபிலைசர்களை வாங்குவதில்லை. யூ.பி.எஸ், இன்வெர்ட்டர்கள் போன்றவற்றுக்கு குஜராத்தில் வேலையே இல்லை.

இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களில் விவசாயம் செய்ய முடியாமல் பிற தொழிலுக்கு விவசாயிகள் மாறிக்கொண்டுவரும் சூழ்நிலையில் குஜராத்தில் மட்டும் ஆண்டுக்கு ஆண்டு விவசாயத்தின் பரப்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. இதற்கு முக்கியக் காரணம் அம்மாநில விவசாயிகளுக்குக் கிடைக்கும் தடையில்லாத, தரமான மின்சாரம்.

குஜராத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், அந்த மாநிலத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்தபின், மீதம் இருக்கும் உபரி மின்சாரத்தைபதினாறுக்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார்கள். நமது வீட்டுக்கு வரும் மின்சாரம்கூட ஒரு வேளை குஜராத்திலிருந்து வந்ததாக இருக்கலாம். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. மொத்த இந்தியாவும் மின்சாரத்துக்காகத் தவம் கிடக்கும்போது, நரேந்திர மோடி அரசு மட்டும் அதிகமான, தரமான மின்சாரத்தை எப்படித் தயாரித்து வருகிறது? இது ஒரு ஒப்பற்ற தலைமையின் அடையாளம்.

*

இதே அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு முதலமைச்சர்களின்கீழ் வேலை செய்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மட்டும் எப்படி அவர்களால் திட்டங்களைத் திட்டமிட்ட சமயத்திலோ அல்லது முன்னதாகவோ முடிக்க முடி கிறது? எப்படி அவர்களால் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது? எப்படி அவர்களால் கடினமான பணிகளைக்கூட எளிதாக முடிக்க முடிகிறது? எப்படி அவர்களுக்கு, திடீரென்று குஜராத்தை முன்னேற்றியே தீரவேண்டும் என்கிற உறுதி வந்துள்ளது? எப்படிப் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க முடிகிறது? ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்துள்ளது? எப்படி அவர்களுக்குள், முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் திறன் வந்தது? எப்படி அவர்களுக்கு, அரசு வேலையிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்தது?

அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில், நரேந்திர மோடி என்பவரின் தன்னிகரற்ற தலைமை என்பதுதான். நரேந்திர மோடி குஜராத்தை ஒரு வெற்றிகரமான கார்ப்பரேட் கம்பெனிபோல் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இது அவரது நுணுக்கமான, திடமான திட்டமிடலைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்.

*

நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, பொதுவாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், எல்லாருமே, ‘இது நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். இத்திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் நேரடியாகக் கண்காணிக்கிறார். இத்திட்டத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தாகவேண்டும். அதற்குத் தேவைப்படும் எந்த உதவிகளையும் மோடி செய்வார்’ என்பதாகும்.

திங்கள், 23 செப்டம்பர், 2013

sugar




Manjula Govindarajan shared பசுமைப் புரட்சி Green Revolution'sphoto.
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் நம் குடல் என்ன பாடுபடும்?

இனிப்யை விரும்பி சாப்பிடாதவர்கள் யார் தான் இருக்க முடியும்? காலையில் எழுந்தவுடன் குடிக்கும் காப்பியிருந்து இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கும் பால் வரை சீனி ஒரு ஊடுபொருளாக நமக்குள் செல்கிறது. பதார்த்தத்தில்தான் என்றில்லை; சீனியை அப்படியே அள்ளியும் சாப்பிடுகிறோம்.

இந்த வெள்ளை சீனியை எப்படித் தயார் செய்கிறார்கள் என்கிற விபரத்தை நீங்கள் தெரிந்து கொண்டீர்களானால் இனி அதைத் தொடக்கூட மாட்டீர்கள்.
குறிப்பாக, வெள்ளைச் சீனியைத் தயார் செய்ய என்னென்ன ரசயான‌ப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன என்று பாப்போம்.

1. கரும்பிலிருந்து சாறு பிழியப்படும் நிலையில் பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் எனப்படும் கெமிக்கலை புளுயுடு பாக்டீரியா கண்ட்ரோலாக பயன்படுத்துகிறார்கள்.
2. பிழிந்த சாறு 60 சென்டிகிரேட் முதல் 70 சென்டிகிரெட் பாஸ்போரிக் ஆசிட் லிட்டருக்கு 200 மில்லி வீதம் கலந்து சூடுபடுத்தப்படுகிறது. இந்த இடத்தில் இந்த ஆசிட் அழுக்கு நீக்கியாக பயன்படுத்தப்படுகிறது.
3. இதன் பிறகு சுண்ணாம்பை 0.2 சதவிகிதம் என்கிற அளவில் சேர்த்து சல்பர்-டை-ஆக்சைடு வாயு செலுத்துகிறார்கள்.
4. 102 சென்டிகிரேட் கொதிகலனில் சூடுபடுத்தி நல்ல விட்டமின்களை இழந்து, செயற்கை சுண்ணாம்பு சத்து அளவுக்கு அதிகமாக சேர்ந்துவிடுகிறது.
5. அடுத்து, பாலி எலக்ட்ரோலைட்டை சேர்த்து தெளிகலனில் மண், சக்கை போன்ற பொருள்களாகப் பிரித்து எடுக்கப்பட்டு தெளிந்த சாறு கிடைக்கிறது.
6. சுடுகலனில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா சேர்த்து அடர்த்தி மிகுந்த ஜுஸ் தயாரிக்கப்படுகிறது.
7. மறுபடியும் சல்பர் டை ஆக்சைடும் சோடியம் ஹைட்ரோ சல்பேட்டும் சேர்க்க படிகநிலைக்கு சீனியாக வருகிறது. சல்பர் டை ஆக்சைடு நஞ்சு சீனியில் கலந்துவிடுகிறது.
8. இப்படித் தயாரான சீனியில் எஞ்சி நிற்பது வெறும் கார்பன் என்னும் கரியே.

தயாரான நாளிலிருந்து ஆறு மாத காலத்துக்கும் அதிகமான சீனிகளை சாப்பிடக்கூடாது. காரணம், அதில் உள்ள சல்பர்டை ஆக்சைடு என்னும் ரசாயனம் மஞ்சள் நிறமாக மாறி வீரியுமுள்ள நஞ்சாக மாறிவிடுகிறது.
குடலில் மட்டுமல்ல, பல் வலி, பல் சூத்தை, குடல்புண், சளித்தொல்லை, உடல்பருமன், இதய நோய் மற்றும் சீனி வியாதி, இரத்த அழுத்தம் போன்ற பெரிய வியாதிகள் அனைத்துக்கும் இதுதான் பிரதான காரணியாக அமைகின்றது.

ஆலைகளில் தயாரான வெள்ளை சீனி சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெல்லம், பனங்கட்டி, நாட்டுச் சர்க்கரைகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இதனால் உங்களுக்கு ரத்த அழுத்தமோ, இதய நோயோ, சர்க்கரை வியாதியோ வராது.

மேலதிக தகவலுக்கு எனது "வேதனை தரும் வெள்ளை சீனி" photo வை பார்க்கவும்.

புதன், 18 செப்டம்பர், 2013

புருஷோத்தம வித்யா ஸ்ரீ புரீ ஜகந்நாத யாத்ரா 05-09-2013 to 16-09-2013

ராதே கிருஷ்ணா 19-09-2013



புருஷோத்தம வித்யா ஸ்ரீ புரீ ஜகந்நாத யாத்ரா 05-09-2013 முதல் 16-09-2013 வரை 


ராதே கிருஷ்ணா 18-09-2013


Radhe Krishna 21-09-2013

  We have gone for Vijayawada mangalagiri, Simhachalam, Sree Kurmam, Puri Jagannath, Sri Badrachalam and Ahobilam temples organised by Sri.U.Ve.krishnan Swamigal and he has given us a book contains of details of the temples visited in the beginning of the tour itself and given daily upanyasams about the temples.
I have retyped in tamilthose information given in his book in tamil and sending for your information please. You can get more details in this document.

More and above that, in Sree Koormam temple one adiyavar sponsored any number of tender coconuts for all devottees (about 2000 persons) freely with his group.

I am giving the details of the ornaments provided by shri Badrachala Ramadasar ( Gopannaa ) at badrachalam Ramar temple and even now preserved by the AP Government and I have noted the details and giving for your information please.

Gold and Diamond Ornaments made by (Gopannaa) Badrachala Ramadaasar for Sri Rama Seetha at the Badrachalam Sri Rama temple and even now preserved by AP Government and kept in the museum in the temple and I have noted the details and giving for your information please.

Sri Rama Maala ( Chain )   58 gms

Ravvala Mala  (Haaraa)      78 gms

Kaki kituray                      157 gms

Pachchala Pathaku  (necklace)          132 gms

Bhuja Bendu (on hand)                    67 gms

Diamond rings                                27 gms

Chinthaku Pathaku                             76 gms
Andhyala Mangala Suthra                  258 gms

Koppu Jada                                       370 gms

small coins                                      201 gms

Ashtrafis Haras                              448 gms

Diamond Necklace                        48 gms

Bangara Vaddanam                         196 gms

Billala  moletradu                             192 gms

Kattudu Kasula Danda                    194 gms

Shankhu Chakra                               580 gms      



புருஷோத்தம வித்யா ஸ்ரீ புரீ ஜகந்நாத யாத்ரா 05-09-2013 டு 16-09-2013

ஸ்ரீமான் U .வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள்

க்ஷேத்ர மாஹாத்ம்ய புத்தகம்

ஸ்ரீ ரங்கம் கரிஸைலம் அஞ்ஜநகி ரிம் தார்க்ஷயாத்ரி ஸிம்ஹாசலௌ

      ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமம் ச பதரீ நாராயணம் நைமிசம்

ஸ்ரீமத் த்வாராவதீ ப்ரயாக மதுரா அயோத்யா க யா புஷ்கரம்

  சாலக்ராம கிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனி:


பகவத் ராமானுஜர், திருவரங்கம், திரூவேங்கடம், அஹோபிலம், 

ஸிம்ஹாசலம், ஸ்ரீ கூர்மாம் புரி ஜகந்நாதம் , பதரீ, நைமிசாரண்யம், த்வாரகா , ப்ரயாகம்,  ,மதுரா , அயோத்யா, கயா , புஷ்கரம், ஸாளக்ராமம் , ஆகிய தேசங்களுக்குச் சென்று மங்களாசாசனம் செய்து இன்புறுகிறார்.

மேற்கண்ட ஸ்லோகப் பொருளில் அடிக்கோடிடப்பட்ட முக்யமான திவ்ய க்ஷேத்ரங்கள் மற்றும் மங்களகிரி, பத்ராசலம் ஆகிய திவ்ய க்ஷேத்ரங்களை தரிசிப்பதற்காக புருஷோத்தம வித்யா எனும் யாத்ரை ஏற்பாடாகியுள்ளது. அதைப் பயனுள்ளதாக்க நாம் அறிந்து கொள்ள வேண்டியவற்றையும், ஒவ்வொரு க்ஷேத்ரத்தின் பெருமைகளையும் இனிப்பார்ப்போம்.


மங்களகிரி

இம்மலையின் பெயரிலேயே மங்களம் உள்ளது. அனைத்து மங்களங்களையும் கொடுக்க வல்ல மலை-என்பது இதன் பொருள். ஒரு யானையின் வடிவத்தில் அமைந்திருக்கும் இம்மலையின் பின்னணியில் ஒரு சுவையான வரலாறும் உள்ளது.

பரியாத்ரா எனும் மன்னனின் மகன் ஹ்ரஸ்வ ஸ்ருங்கி என்பவன், அவனது உடல் குள்ளமாக இருந்தது. தன உடலின் அழகைத் திரும்பப் பெற இவன் பல இடங்களில் தவம் புரிந்து இறுதியில் இம்மலையில் எழுந்தருளியிருக்கும் பாநகால நரசிம்ஹ ஸ்வாமியை சுமார் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்து வேண்டினான். தந்தை இவனை வற்புறுத்தித் தன நாட்டிற்குத் திரும்ப அழைத்துப் போக முற்பட்டபோது , இவன் பகவானை வேண்டி யானை வடிவம் பெற்று அவனையே எப்போதும் வணங்கி வருகிறான். " எம்பெருமான் பொன்மலைமேல் ஏதேனும் ஆவேனே!" என்று குலசேகர ஆழ்வார் வேண்டினார். ஆனால் இவனோ பகவானை எப்போதும் வணங்குவதற்காக மலையாகவே ஆகி, இருந்து அனைவருக்கும் மங்களங்களையும் நல்குகிறான்.

இவ்வூரில் மூன்று நரஸிம்ஹர்கள் எழுந்தருளியுள்ளனர் . மலையடிவாரத்தில்
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹஸ்வாமி,  மலையில் பாநகால நரசிம்ஹஸ்வாமி , இன்னம் மேலே கண்டால நரஸிம்ஹஸ்வாமி  ( கண்டால நரஸிம்ஹஸ்வாமி  சன்னிதியில் இப்போது விளக்கு மட்டும் ஏற்றப்படுகிறது) படிக்கட்டுகள் ஏறி மலைக்குச் செல்லும் வழியில் ஸ்ரீ சைதன்ய மகாப்ரபுவின் பாதச்சுவடுகள் காணப்படுகின்றன. மலையில் நரஸிம்ஹஸ்வாமி கோயிலின் பின்புறம் லக்ஷ்மி தேவியின் கோயில் உள்ளது. அங்கிருந்து ஒரு குகைப்பாதை
 " உண்டால் " மலைக்குச் செல்லுகிறது. முன்னாட்களில் இங்கு தவம் புரிந்த ரிஷிகள் இக்குகை வழியே கிருஷ்ணா நதிக்கு நீராடச் செல்வாராம்.

நரஸிம்ஹர் இங்கு எழுந்தருளிய சரித்ரம்

க்ருத யுகத்தில் நமுதி எனும் அரக்கன் கடும் தவம் புரிந்து , தன்னை நனைந்தோ, உலர்ந்தோ உள்ள எந்த ஆயுதமும் கொல்லககூடாது என்று வேண்டி சாகாவரம் பெற்றான். செருக்கின் மிகுதியால் தேவர்களை துன்புறுத்தத் தொடங்கிய அவன் தனக்கு, எப்போது ஆபத்து வந்தாலும் தன ஸ்தூல உடலைத் துறந்து நுண்ணிய உடலோடு இம்மலையில் மறைந்து கொள்வான். இந்திரன் இவனை அழிக்க எண்ணி இம்மலையில் வந்து தவம் செய்தான். அப்போது தோன்றிய சிங்கப்பிரான் தன ஸுதர்சந சக்ரத்தை கடல் நுரையில் தோய்த்து, சக்ரத்தின் நடுவே தானும் அமர்ந்து கொண்டு குஹைக்குள் சென்றார். உள்ளே நரசிம்ஹர் பெருமூச்சுக் காற்று விட அது கடல் நுரையை அள்ளிக்கொண்டு போய் நுண்ணிய வடிவில் இருந்த அரக்கனைக் கொன்றது. பின்னர் நரஹரிப்பெருமானை ஸாந்தமடையச் செய்ய இந்திரன் அமுதத்தை அன்புடன் அர்ப்பணம் செய்தான். இதனை அனுசரித்து த்ரேதா யுகத்த்டில் நெய் , த்வாபர யுகத்தில் பால், கலி யுகத்தில் பானகம் ஆகியவற்றை ஸமர்ப்பித்தால் பெருமாள் குளிர்ந்திருப்பார்- என்பதால் இக்கலியுகத்தில் இவ்வேம்பெருமானுக்கு பானகமே ஸமர்ப்பிக்கப்படுகிறது.

இப்பெருமானை இன்றுள்ள நிலையில் பாண்டவர்களில் மூத்தவரான தர்ம புத்திரரே ஸ்தாபித்தார். இன்றும் அவரே ப்ரகுமொத்ஸவத்தை நடுத்துவதாகக் கருதப்படுகிறது.

பானகப் ப்ரஸாதம்

இம்மலையிலேயே நரசிம்ஹரின் திருமுகம் உள்ளது. புராணத்தின்படி இன்றும் நரசிம்ஹருக்கு அவர் திருவாயிலேயே பானகம் ஸமர்ப்பிக்கபடுகிறது. எவ்வளவு ஸமர்பபித்தாலும்  அதில் பாதியை அருந்தி விட்டு , மீதியை ப்ரசாதமாகக் கொடுக்கிறார். இத்தனை பானகம் இருந்தாலும் இக்கோயிலில் இனிப்பினை மொய்க்கும் ஒரு எறும்பு கூட இல்லாதது வியப்பாக உள்ளது.

காலி கோபுரம்

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ராஜா வாசி ரெட்டி வெங்கடாத்ரி நாயுடு என்பவர், 153 அடி உயரமுள்ள 11 நிலைகளுள்ள இக்கோபுரத்தைக் கட்டினார்.

க்ஷீர வ்ருக்ஷம்

மங்களகிரியில் , பால் மரம் என்று பெண்டிரால் போற்றப்படும் இம்மரம் வேறு யாருமல்ல - தேவ ரிஷியான நாரதரே ஸஸபந்தி எனும் மன்னனைக் குறித்து , அவன் தன மனைவி மக்களைத்துறந்து க்ஷேத்ராடனம் போக நாரதர் உபதேசித்தார். மன்னனும் அப்படியே செய்ய , இது கண்டு கோபாமுற்ற ராணி, நாரதரை இம்மலையில் ஒரு பால் மரமாக இருக்கும்படி ஸபித்தாள் . நாரதர் இதனையே ஒரு வரமாக ஏற்று , இங்கு மக்கட்பேறு வேண்டி வரும் பெண்களுக்கு ஸந்தான ப்ராப்தி வரத்தினை அருளுகிறார்.


ஸிம்ஹாசலம்

பிரஹ்லாதனை ரக்ஷிப்பதர்காக ஸ்ரீ மன்நாராயணனை ஸிம்ஹாசலத்தில் வராஹ நரசிம்ஹனாக அவதரித்தார். பிரஹ்லாதனை ஹிரண்யன் ஸிம்ஹாச்சலத்தின் அருகிலிருக்கும் கடலில் தள்ளிவிட ப்ரஹ்லாதன்               " த்ராஹி, த்ராஹி " என்று பகவானைச் சரணம் புக ஸ்ரீமந்நாராயணன்  கஜேந்த்ராழ்வானை ரக்ஷிப்பதற்க்கு வந்த வேகத்தை விட ஸீக்ரமாகக் குதித்து அவிழும் பீதாம்பரத்தை முடிச்சிட்டால்  நேரம் கடந்து விடும் என்று ஒரு திருக்கையில் பீதாம்பரத்தைப் பிடித்துக்கொண்டு மற்றொரு திருக்கையிலுள்ள கட்டை விரலால் கருடனுக்கு வாயில் அம்ருதத்தைக் கொடுத்துக்கொண்டு குதித்தார். குதித்த அந்த வேகம் தாளாமல் பூமி பிளந்து பகவான் திருவடிகள் பாதாளம் வரை சென்றன. அப்படிக் குதித்த பெருமாள் ஹிரண்யனுடன் (ஹிரன்யகசிபுவுடன்) த்வாத்ரிம்ஸத் (32) ரூபங்கள் எடுத்து யுத்தம் செய்தார். அதில் ஒன்று தான் வராஹந்ருஸிம்ஹாவதாரம் . ப்ரஹ்லாதனுக்காக எடுத்த அதே திருவுருவத்துடன் அர்ச்சாமூர்த்தியாக எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்கிறார் . சிறிது காலம் ப்ரஹ்லாதன் எவரை ஆராதித்தார். பிறகு தன ராஜ்யத்துக்குத் திரும்பினார். அந்த சமயம் பெருமானுக்கு திருவாராதநம் இல்லாமல் போய் பெருமானை வல்மீகம் (புற்று) மூடிக்கொண்டது .  இந்த இடம் காடாக மாறியது.

காலக்ரமத்தில்  புரூரவஸ் சக்ரவர்த்தி இந்த இடத்தைக் கடக்கும்போது அவரது விமானம் இந்த இடத்தைத் தாண்ட முடியவில்லை. வியந்த புரூரவஸ் கீழே இறங்க பகவான் கனவில் தோன்றி "நான் இங்கு இருக்கிறேன்" என்று சொல்ல புரூரவஸ் எம்பெருமானை வேண்ட இங்கிருக்கும் "காங்க தாரா" என்ற தீர்த்தத்தின்  அருகிலிருக்கும் புற்றில் தான் இருப்பதாக எம்பெருமான் அருளினார்.

காங்க தாரா ஸாமம்தீர்த்தம் க்ஷேத்ரம் ஸிம்ஹாத்ரிநாஸமம்

நாரசிம்ஹ ஸமோ தேவ: த்ரைலோக்யே நாஸ்தி நிச்சய:

என்ற சிலாசாஸனம் க்ஷேத்திர மாஹாத்ம்யத்தில் உள்ளது.
எம்பெருமானைப் புற்றிலிருந்து வெளியே எழுந்தருளப் பண்ணி காங்க தாரா தீர்த்தத்தில் திருமஞ்சனம் செய்து பிரதிஷ்டை செய்தான். பிரதிஷ்டை செய்த நாள் வைசாக சுக்ல த்ருதீயையாகும். இது அக்ஷயத்ருதீயை என்று கொண்டாடப்படுகிறது. அன்று சந்தநோத்ஸவம் என்ற உத்சவம் நடக்கிறது. அன்று எம்பெருமானின் நிஜரூபதர்ஸநம் எல்லாருக்கும் கிட்டுகிறது. அதாவது அன்று சந்தனக்காப்பு இல்லாமல் ஸேவை ஸாதிக்கிறார் .

3 மணுகு சந்தனம் என்றால் சுமார் 125 கிலோ  சந்தனமாகும்.
வைசாக சுக்ல திருதீயையன்று 3  மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள் .

வைசாக பௌர்ணமியன்று 3  மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள் .

ஜ்யேஷ்ட பௌர்ணமி  ஆணி பௌர்ணமி யன்று 3 மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள்

ஆஷாட பௌர்ணமி  ஆடி பௌர்ணமியன்று  3 மணுகு சந்தனம் சாற்றுகிறார்கள்

ஆகா 12 மணுகு ( சுமார் 500 கிலோ) சந்தனத்துடன் எம்பெருமான் எப்பொழுதும் ஸேவை ஸாதிக்கிறான் .

பெருமானுக்கு திருமஞ்சனம் மற்றும் ப்ராசாதத்துக்காக இன்றும் காங்க தாரா தீர்த்தம் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகிறது.

ஸ்ரீ ஸிம்ஹாசல க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று .


ஸ்ரீ வராஹ நரஸிம்ஹ ஸ்வாமியின் த்வாத்ரிம்ஸத்  ( 32 ) திருநாமங்கள்

ஸ்தம்போத்பவ  நரஸிம்ஹர்                 காரஞ்ச நரஸிம்ஹர்

பாவன                    நரஸிம்ஹர்                 கருடாரூப நரஸிம்ஹர்

பஞ்சமுகி             நரஸிம்ஹர்                  கண்டபோண்ட நரஸிம்ஹர்

ப்ரஹ்லாதவரத நரஸிம்ஹர்                 வராஹ  நரஸிம்ஹர்

ஜ்வாலா உக்ர     நரஸிம்ஹர்                  அஹோபில நரஸிம்ஹர்

யோகா ஸ்ரீ            நரஸிம்ஹர்                   ஸ்ரீ வித்யா நரஸிம்ஹர்

சாளக்ராம           நரஸிம்ஹர்                   யோகபட  நரஸிம்ஹர்

யோகானந்த       நரஸிம்ஹர்                    மாலோல நரஸிம்ஹர்

வீர                          நரஸிம்ஹர்                     க்ரோட நரஸிம்ஹர்

ஸர்வதோமுக நரஸிம்ஹர்                      அபய நரஸிம்ஹர்

ஸ்ரீ மஹாவிஷ்ணு நரஸிம்ஹர்                லக்ஷ்மி நரஸிம்ஹர்

சாத்ரவட            நரஸிம்ஹர்                        ஸ்ரீ வித்யாசக்ர நரஸிம்ஹர்

ராஜ்யலக்ஷ்மி நரஸிம்ஹர்                யோகவட லக்ஷ்மி நரஸிம்ஹ நரஸிம்ஹர்

ஸ்ரீ பார்கவ        நரஸிம்ஹர்                          கிரிஜா நரஸிம்ஹர்

ஸ்ரீ ஸுதர்ஸந நரஸிம்ஹர்                          கல்யாண நரஸிம்ஹர்

வ்யாக்ர             நரஸிம்ஹர்                          வராஹலக்ஷ்மி நரஸிம்ஹர்



ஸ்ரீ கூர்மம்

ஸ்ரீ கூர்மக்ஷேத்ரமாஹாத்ம்யமானது அஷ்டாதஸ புராணங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணந்தர்கதமான பத்ம புராணத்தில் சொல்லப்பட்டது. இந்த கூர்மக்ஷேத்ரத்திளிருந்து 12 கி.மீ. தொலைவில் காரா என்ற பிராந்தியத்தில் "சாலிஹுண்டா " என்ற இடம் உள்ளது. இவ்விடங்களை ஸ்வேதசக்ரவர்த்தி ஆண்டு வந்தார்.அவருடைய கோட்டைதான் "சாலிஹுண்டா ". வம்ஸ தாரா என்ற நதியல் சூழப்பட்டிருக்கின்றன இவ்விடங்கள் . ராணியின் பெயர் ஹரிப்ப்ரியா . ராணி பீஷ்ம ஏகாதஸிவ்ரதம் இருக்கும்போது காமத்துக்கு வசப்பட்ட ராஜா , ராணியிடம் செல்ல , வ்ரதத்திலிருக்கும் ராணி பகவானை வேண்ட இருவருக்கும் இடையில் ஒரு பெரிய ஊற்று பிறந்தது. அது தான் வம்ஸ தாரா . ராஜா ஏமாற்ற்றத்துடன் கோட்டைக்குத் திரும்பினார். வருத்தத்தில் இருந்த அவரைப்பார்த்த நாரதர் அவருக்கு ( ராஜாவுக்கு) கூர்ம மந்திரத்தை உபதேசித்து இங்கிருக்கும் எட்டு புண்ய தீர்த்தங்களில் நீராடி தவம் புரியும்படி சொன்னார். அரசனும் அவ்வாறே கடுந்தவம் புரிந்தான். ஸ்ரீ மஹாவிஷ்ணு ப்ரத்யக்ஷமாகி என்ன வரம் வேண்டும் ? என்று கேட்டார். ஸ்வேத சக்ரவர்த்தியும் எம்பெருமானை கூர்மாவதாரத்தில் எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்க வேணுமென்று பிரார்த்தித்தார். மற்ற அவதாரங்களை அந்தந்த காலத்தில் இருப்பவர்கள் தான் ஸேவித்திருப்பார்கள் . ஆனால் மந்தரமலை கடலுக்குள் அழுந்திவிடாமல் இருப்பதற்காக பண்ணின கூர்மாவதாரத்தை தேவர்களும் தானவர்கல்ம் கூட ஸேவிக்காமல் விட்டார்கள். அமுதத்தை மட்டும் அவர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருந்ததால் அந்த அவதாரகாலத்தில் அவர்கள் இருந்தும் கூட ஸேவிக்காமல் இருந்தார்கள்.அந்த குறை தீர உலகில் எல்லாருக்கும் ஸேவை ஸாதிக்க கூர்ம ரூபியாக இங்கு எழுந்தருலவேனுமென்று பிரார்த்தித்தான் அரசன். பகவானும் இசைந்து ராஜாவின் பெயரிலேயே மலையை ஏற்படுத்தினார்.

"ஸ்வேதாசல நிவாஸாய கூர்மநாதாய மங்களம்" என்பது இந்த திவ்ய தேசத்து எம்பெருமானுக்கான மங்கலஸ்லோகம் . இந்த ஆலயத்தைப் பிரமன் ஏற்படுத்தினார். இங்கே நூற்றெட்டு  ( 108 ) விதமான தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தீர்த்தம் கிடைக்காமல் போக பகவானே தன சக்ரத்தால் குளத்தை ஏற்படுத்த "சக்ர தீர்த்தம்" இங்கு உண்டாயிற்று. அக்குளத்திளிருந்துதான் "தாயார்" அவதரித்தார். க்ருத யுகத்தில் பிரமன் , த்ரேதா யுகத்தில் லவ குசர்கள் , த்வாபர யுகத்தில் பலராமன் ஆகியவர்கள் இந்த பகவானுக்கு ஆராதநம் செய்திருந்தார்கள். கலியுகத்தில் எம்பெருமானார் எழுந்தருளி மங்களாஸாஸநம் செய்தார்.

ஸ்ரீ கூர்ம க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று .




புரி ஜகந்நாத க்ஷேத்ரம்


வர்ஷாணாம் பாரத ஸ்ரேஷ்ட: தேஸாநாம் உத்கல: ஸ்ம்ருத:

உத்கலஸ்ய ஸமோ தேஸ : தேஸோ நாஸ்தி மஹீதலே


வர்ஷங்களுக்குள் பாரதமும் , தேசங்களில் உத்கலமும் ( ஓடிஷா ) ஒப்பு உயர்வற்றவை .

இந்த உத்கல க்ஷேத்ரம் என்பது சங்க க்ஷேத்ரம் (புரி ), பத்ம க்ஷேத்ரம்
 ( கோனார்க் ) , சக்ர க்ஷேத்ரம் ( புவனேஸ்வர்), கதா க்ஷேத்ரம் (ஜாஜபுரா )

ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை அனைத்தும் சேர்த்து சுமார் 100 சதுர மைல் பரப்பளவு உள்ளது. இவற்ற்றுள் 5 க்ரோசங்கள் ( ( 10 மைல்கள்) உள்ள புரி க்ஷேத்ரம் சாலச் சிறந்தது.. திருமாலின் சங்க வடிவத்தில் இருக்கும் இத்தலத்தின் 6 மைல்கள் கடலுக்குள்ளும் , 4 மைல்கள் நிலத்திலும் உள்ளன.
சுமார் 20 கி.மீ. சுற்றளவு உள்ள இத்தளத்தை பகவானின் சங்கம் தோன்றிய நாளான மார்கழி மாதத்து தேய்பிறையின் பஞ்சமி அன்று வலம் வருவது மரபு.
இத்தளத்தின் மஹாத்ம்யத்தை பத்ம புராணம், பிரம்ம புராணம் , ஸ்கந்த புராணம் ஆகியவற்றில் கூறியபடி இங்கு பார்ப்போம்.

சார் ( நான்கு ) தாம் - பதரீ , புரி, ஸ்ரீரங்கம் , த்வாரகா ஆகியவை பாரதத்தின் நான்கு எல்லைகளில் இருக்கும் புன்யக்ஷேத்ரங்கள். இந்த நான்கு க்ஷேத்ரங்களுக்கும் யாத்ரை செல்வது பரம பாவநமாகக் கருதப்படுகிறது. ஸ்ரீமன் நாராயாணன், விடியற்காலையில் பாதரியில் நீராடி, த்வரகாவில் வஸ்த்ரம் தரித்து, புரியில் அமுது செய்து திருவரங்கத்தில் சயனிக்கிறார்.

இதில் புரி ஜகந்நாதம் கீழ்கண்ட பெயர்களில் விளங்குகிறது.

ஸ்ரீ க்ஷேத்ரம் : ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் கேள்வனே புருஷோத்தமன் என்று வேதாந்தம் கூறுகிறது. ஆகவே புருஷோத்தமன்  உறையும் இவ்விடம் ஸ்ரீ க்ஷேத்ரம்.

சங்க க்ஷேத்ரம்: இவ்விடம் திருமாலின் சங்க வடிவத்தில் இருப்பதால் இப்பெயர்.

புருஷோத்தம க்ஷேத்ரம் : அபுருஷன் என்று அறிவற்ற ஜடமான அசேதனப் பொருள்களையும், என்று   பந்த ( உலகியற்கட்டுண்ட ) ஜீவர்களையும், உத்புருஷன் என்று முக்த ஜீவர்களையும் , உத்தர புருஷன் என்று நித்ய ஸூரிகைகளையும் சொல்வர். இவர்கள் அனைவரையும் விட மிகவும் உயர்ந்தவனான பகவான் உத்தம புருஷன் எனப்படுகிறான். இதக் கண்ணன் கீதை பதினைந்தாம் அத்தியாத்தில் விளக்குகிறார். அந்த புருஷோத்தமன் கோயில் கொண்டிருக்கும் இவ்விடம் புருஷோதமக்ஷேத்ரம் .

நீலாசலம் : இவ்விடம் நீல மலையில் உள்ளபடியால் இப்பெயர். இதுவே இவ்விடத்தின்  புராதனப்பெயர்.

பூஸ்வர்கம் : சுவர்க்கத்தில் உள்ள மிதமான தட்பவெப்பமும் , இன்பமும் இங்கு எப்போதும் இருக்கிறபடியால் இது பூலோகத்தில் உள்ள சுவர்க்கம் எனப்படுகிறது.

நரசிம்ஹ க்ஷேத்ரம் : இத்திருக்கோயில் கட்டி முடிக்கப்பட்டவுடன் பர்மா ஒரு யாகம் செய்ய அதிலிருந்து ஸ்ரீ நரசிம்ஹர் உக்ர வடிவத்துடன் தோன்றி, பின் சாந்தமடைந்தார். ஆகவே இவ்விடத்திற்கு இப்பெயர்.

ஸ்தலபுராணம்

க்ருத யுகத்தில் , சிறந்த விஷ்ணு பக்தனான இந்த்ரத்யும்ணன் எனும் அரசன் அவந்தி நகரத்தைத் தலைநகரமாகக் கொண்ட மலாயா தேசத்தை ஆண்டு வந்தான். அவன் ஒரு நாள் தன குல குருவினிடம் " பகவானை நேருக்கு நேரே தரிசிக்கும் பெருமையுடைய புன்யக்ஷேத்ரத்தைக் கண்டுபிடித்துக் கூறுங்கள்" என்றான்.

குருவும் க்ஷேத்ராடனம் போய் வரும் யாத்ரிகர்களிடம் வினவ, அதில் ஒருவர் " நான் அனைத்துப் புன்யக்ஷேத்ரங்களையும் தரிசிக்கும் பாக்யம் பெற்றவன்.பாரத வர்ஷத்தில் உத்கலதேசத்தில்  ( ஓடிஷா ) கடலுக்கு வடக்கே இருப்பது புருஷோத்தமா க்ஷேத்ரம். அங்கு அடர்ந்த கானகத்தின் நடுவே கம்பீரமான நீலமலை உள்ளது. அங்கிருக்கும் கல்பவடம் எனும் ஆலமரத்தின் மேற்கே ரோகிணி குண்டம் எனும் புண்ய தீர்த்தம் உள்ளது. அதன் கிழக்கே, ஒளி விடும் நீல மணியாலான வாசுதேவர் கோயில் கொண்டுள்ளார். தீர்த்தத்துக்கு மேற்கே சபர் தீபக் எனும் ஆச்ரமத்திலிருந்து சற்றுத் தொலைவில் பகவான் ஜகந்நாதர் கோயில் கொண்டுள்ளார்.
 ஒரு முழு ஆண்டு அவருக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் இந்த ஏழைக்குக்
கிடைத்தது.
 மன்னா ! தாங்கள் உடனே அங்கு சென்றால் பகவானை நேரே தரிசிக்கலாம்" என்று கூறி மறைந்தார்..

உடனே அரசன் குல குருவிடம் நீலாசலம் சென்று ஜகந்நாதனை தரிசித்து மோக்ஷம் பெற உதவ வேண்டினான். குருவும் தன தம்பி வித்யபதியை முதலில் அங்கு சென்று விவரம் அறிந்து வரச் சொன்னார்.

வித்யாபதி ஒரு சுபமுஹுர்த்த தினத்தில்  சில பக்தர்களோடு நேரில் நீலாசலத்தை நோக்கிப் புறப்பட்டான். விரைவில் மகாநதியை அடைந்து அனுஷ்டானங்களை முடித்து ஏகாம்பர கானனம் என்ற புவநேஸ்வரத்தைத் தாண்டி தூரத்தில் நீலாத்ரியை கண்டார். தீர்த்த யாத்ரிகர் வர்நித்தபடியே மலை உச்சியில் கல்ப வடத்தைத் தரிசித்தார். உடனே பெருமாளை தரிசிக்க நினைத்தாலும் இரவாகிவிட்டபடியால் இருட்டில் அடர்ந்த காட்டில் செல்வதற்கு வழி காட்ட ஆளில்லாமல் அங்கேயே தங்கினார். அப்போது சிலரின் குரல் கேட்டுத் தொடர்ந்து சென்றபோது சபர் ( மலைவாசி )  தீபக் ஆஸ்ரமத்தை அடைந்தார். அங்கு பல வைஷ்ணவர்களோடு இருந்த விஸ்வாசு  இவரை வரவேட்ட்று பிரசாதம் அளித்து ஓய்வெடுக்கச் சொன்னார். ஆனால் வித்யாபதி  " நான் நல்ல செய்தியோடு போனால் தான் எங்கள் மன்னர் உபவாசத்தை முடிப்பார். ஆகவே உடனடியாக மலைமேல் போகவேண்டும்" என்று சொல்ல விச்வாசுவும்  : இந்த்ரத்யும்ணன் எனும் மன்னன் இங்கு வந்து தங்குவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். போவோம் வாருங்கள்" என்று இருளில் வழி கட்டினார். போகப்போக பதை குகியும் முள் நிறைந்ததாயும் இருந்தது. விடியலில் புன்யமான ரோஹிணி குண்டத்தை தர்சித்தனர். பின் கல்ப வடத்த வணங்கி , இவ்விரண்டுக்கும் நடுவே உள்ள தோப்பின் உள்ளே சென்று பேரொளியோடு எழுந்தருளியிருந்த பகவானை வியந்து வணகினார்.
பின் வேகமாக மலையிறங்கி ஆஸ்ரமத்தை அடைந்து விஸ்வாசு கொடுத்த அமானுஷ்யமான சுவை உடைய மஹாப்ரசாதத்தை உண்டார்.
" இந்திரன் சமைத்து ஜகந்நாதனை ஆராதித்து அதன் சேஷமான இந்த பிரசாதத்தை உண்டால் பாபமெல்லாம் தொலையும் " என்று ஜகந்நாத பிரசாதத்தின் பெருமையை உரைத்தார். விஸ்வாசு. உடனே வித்யாபதி
 " எங்கள் மன்னர் இங்கு வந்து நீல மாதவனை தரிசித்து ஒரு பெரிய கிளை எழுப்பி சிறப்பான பூஜை முறைகளையும் ஏற்படுத்துவார்" என்றார். ஆனால்  விஸ்வாசு "மன்னர் வருவார். ஆனால் இப்போது இருக்கும் பெருமான் அவர் கண்ணுக்குப் படாமல் மறைந்து விடுவார். மன்னன் உபவாசம் இருக்க, பகவான் வேறு மாற உருவத்தில் தோன்றி , பிரம்மாவால் ஸ்தாபிக்கப்பட்டு, பின் நெடுங்காலம் காட்சி கொடுப்பார். ஆனால் இவ்வுண்மைகளை மன்னனிடம் வெளிடவேண்டாம்" என்று வேண்டினார். வித்யாபதி விடை பெற்றுக்கொண்டு புருஷோத்தம க்ஷேமத்தை ப்ரதட்சிணம் செய்து மீளவும் அவந்தி புரியை அடைந்தார்.

திரும்பிய வித்யாபதியின் உத்ஸாகத்தைக் கண்ட மன்னன் போன கார்யம் ஸித்தித்தது என்று உவந்து அவரை உபசரித்தான். குலகுருவின் தம்பி தன அனுபவத்தை மன்னனிடம் விளக்கி ஜகந்நாத பிரசாதத்தைகே கொடுத்தார்.  நீல மாதவனின் சொல்லொனா வடிவழகைக் கேட்ட இந்த்ரத்யும்ணன் உடன் அங்கு செல்ல விருப்பம் கொண்டான்.அப்போது தெய்வ சங்கல்பத்தால் நாரத ரிஷி அங்கு வந்து " மன்னனின் விருப்பம் ஈடேரும்" என்று ஆசிர்வதித்தார். ஜ்யேஷ்ட மாத்த்தின் பஞ்சமி திதியன்று அவர், நாரதர், ராணி, ப்ரஜைகள்  ஆகியோர் புடை சூழ , தேரில் புறப்பட்டு அன்றிரவே மஹாநதியின்  க்ஸ்ர்சிய்சி ச்ட்சிந்து தங்கினர். உண்டு மடித்து, நாரதர் புருஷோத்தம வைபவம் கூறிக்கொண்டிருந்தபோது வாயிற்காபோன்  வந்து உத்கல தேசத்து மன்னன் வந்திருப்பதாக தெரிவித்தான்.

இரு மன்னர்களும் ஒருவரை ஒருவர் நமச்கரித்தனர். உத்கல மன்னன் , " தங்கள் வரவு நல்வரவு ஆகுக. ஆயின் தற்போது ஒரு சூறாவளியால் தாங்கள் தரிசிக்க நினைக்கும் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டுள்ளார். நாட்டைப் பல ஆபத்துக்கள் சூழ்ந்துள்ளன. உங்கள் வரவு அவற்றைத தீர்க்கும் என நம்புகின்றேன் " என்று கூறினார். இந்த்ரத்யும்ணனின் கவலையைத் தீர்ப்பதற்காக நாரதர் , "அனைத்தும் ப்ரஹ்மா கூறியபடி நடக்கிறது. பகவான் நான்கு உருவங்களோடு உனக்குத் தோன்றுவார். என்னோடு வா! நல்லதே நடக்கும்" என்றார். அனைவரும் நீலாசலத்தை நெருங்கும்போது ஓர் உக்ரமான நரசிம்ஹ விக்ரஹத்தைக் கண்டனர். மேலும் நீல மாதவன் மண்ணால் மூடப்பட்டிருப்பதையும் கண்டனர். நாரதர் கூறியபடி நரசிம்ஹப் பெருமானை மேற்கு முகமாக எழுந்தருளப் பண்ணி அருகே யஞ்ஞ சாலை அமைத்து ஆயிரம் அஸ்வமேத யாகங்களை செய்யத் தொடங்கினான். அனைத்தும் முறைப்படி நடந்து முடியும் தருவாயில் மன்னன் தினத்தில் ஸ்வேத த்வீபத்தைக் கண்டான்  அது ஸ்படிகக்கல்லால் ஆக்கப்பட்டு பார்கடள்ள சூழப்பட்டு இருந்தது. அங்கு ஆதி சேஷ பீடத்தில் ஸ்ரீ மன்நாராயணன் சதுர்புஜனாய் எழுந்தருளியிருந்தார். இக்கனவை மன்னன் கூற நாரதர் ,
 " பெருமாள் எழுந்தருளும் தருணம் நெருங்கிவிட்டது. அவர் மறக்கட்டியாக (தாரு ) உருவேடுக்கவிருக்கிறார் . வா! கடற்கரைக்குச் செல்வோம்"  என்றார்.
கிழக்குக் கடலில் வெண் படலம் உருவாகி ஒரு மரம் உருவாகி மிதந்து வந்தது. அவ்விடம் "சக்ரதீர்த்தம்" எனப்படுகிறது. அந்த மரக்கட்டையை பக்தியோடு ராஜாவும் ராணியும் பெட்ட்ருக்கொண்டனர். உடன் ஓர் அசரீரி வாக்கு "இம்மரத்தை வஸ்த்ரத்தில் சுற்றி வையுங்கள். சில நாட்கள் கழித்து ஒரு தச்சன் வந்து செதுக்குவார். அப்படிச் செதுக்கும் பொது யாரும் உள்ளே செல்லக்கூடாது. செதுக்கும் ஒலி  வெளியில் கேட்காதபடி வாத்யம் வாசிக்கவும் "  என்று ஒலித்தது. அரசர் அதன்படியே செய்தார். தச்சன் வந்து செதுக்கத்தொடங்கினார். பதினைந்து நாட்கள் சென்றன. செதுக்கும் ஒழி நின்றது. ராணி குண்டிச்சா கதவைத் திறந்து பார்க்க விரும்பினாள் . அரசன் தடுத்தும் கேளாமல் ராணி அறையைத் திறக்க ஆணையிட்டாள் . திறந்த பொது தச்சன் அங்கு இல்லை. விக்ரகங்கள் பத்தி முடிந்த நிலையில் இருந்தது கண்டு அனைவரும் திகைத்தனர். ஆனால் அசரீரி வாக்கு " பகவான் இந்த எளிய நிலையிலேயே இங்கு தரிசனம் கொடுப்பார்" என்று கூறவே, அன்று முதல் ஜகந்நாதப் பெருமான் அவ்வண்ணமே இங்கு கோயில் கொண்டுள்ளார்.

புருஷோத்தமன் இவ்வுருவத்தில் இருக்கும் ரஹஸ்யம்

கண்ணன் ட்வரகையில் தன அஷ்ட மகிஷிகளுடன் ஆனந்தமாக ராஜ்யத்தை ஆண்டபோதும் , அவர் நினைவில் கோகுலப்பெண்டிரே நிறைந்து இருந்தனர். இதன் காரணத்தை அறிய முற்பட்ட எட்டு ராணிகளும் ரோகிணி தேவியை வினவினர். ரோஹிணி தேவி " கோகுலத்தில் நடந்த ரஸமான லீலைகள் போல் வேறெங்கும் நடந்தது இல்லை. அதுவே காரணம்"  என்று சொல்ல , கோகுல லீலைகளை மகிஷிகள் கேட்க விருப்பம் கொண்டனர். ரோகினி மாதா, கூறுகிறேன்: ஆனால் கண்ம்ணனும் பலராமனும் வராமல் பார்த்துக்க் கொள்ளுங்கள்" என்றார். காவலுக்கு சுபாத்ராவை நிறுத்திவிட்டு அனைவரும் கதை கேட்கத் தொடங்கினர். கதையில் லயித்துத் தன்னையே மறந்த சுபத்ரா, அருகில் இரு புறத்திலும் ராம கிருஷ்ணர்கள் வந்து நின்றதை கவனிக்கவில்லை. கதை கேட்டு , மூவரும் மெய் மறந்து, கை கால்கள் சுருங்கி, விழிகள் விரிய நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நாரதர் அவ்வரிய சேவையைக் கண்டு ஆனந்தக்கூத்தாடினார். மூவரும் தம் நிலையினை உணர்ந்து , இயல்பு நிலையை அடைய முயன்றனர். நாரதர் அதைத் தடுத்து , " தேவரீர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையை தரிசித்தால் பக்தர்கள் அனைவரும் பாப்பம் தொலைந்து முக்தி அடைவார்கள். ஆகவே தயை கூர்ந்து இந்த விநிதமான எளிய திருக்கோலத்தோடு இங்கு எப்போதும் கோயில் கொண்டருளவேனும் " என்று கேட்டுக் கொள்ள அதன்படியே இன்றும் எழுந்தருளியுள்ளார் "பத்துடையடியவர்க்கு எளியனான " எம்பெருமான்!

கடைத்தலை சீய்த்த அரசன்

கடைத்தலை சீய்க்கப் பெற்றால் கடுவினை கலையலாமென்ற உபதேசத்தால்  சுவாமி நம்மாழ்வார் , திருவனந்தபுரம் ஆனந்தபத்மனபா ஸ்வாமி சந்நிதியில் குப்பை போகப் பெருக்கினால் நம் பாபங்களும் தொலையும் என்கிறார். ஆனால் க்ஷேத்ரத்தில் ஜகந்நாதனின் ரத யாத்ரைக்கு முன் பெருக்கிய அத்தேசத்து அரசன் புருஷோத்தமனுக்கு கல்யாணமே நடந்தது. ( ஆண்டு தோறும் அரசன் ரத யாத்ரைக்கு  முன் தங்கத் துடைப்பத்தால் பெருக்குவது மரபு) மன்னன் ஒரு முறை காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமானை தரிசித்தான். காஞ்சி மன்னனின் மகளைக் கண்டு மையம் கொண்டான். இரு மன்னர்களும் சம்மதித்தனர். புருஷோத்தமன் புரி திரும்பினான். காஞ்சி மன்னன் முறையாகப் பேசி முடிப்பதற்காக தன மந்திரியை புரி அனுப்பினான். அவ்வமயம் ரத யாத்ரை நாளாக இருக்கவே , மன்னன் ரதம் வரும் பாதையை துப்புரவு செய்தான். மன்னன் தாழ்ந்த செயலில் ஈடுபட்டதாகக் கருதி , அது பொறுக்காத மந்திரி காஞ்சி திரும்பி மன்னனிடம் கூற , பெண் பெண் கொடுப்பதில் தடை ஏற்பட்டது. இதனைத் தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய புரி அரசன் காஞ்சி நகரின் மேல் படைஎடுத்தான். ஆனால் அவன் படை சிறியது. இரு மன்னர்களும்-  புரி படை  தோற்றதால் ஜகந்நாதர் பலபத்ரர் ஸுபத்ரா மற்றும் ஸுதர்சனர் விக்ரஹங்களை காஞ்சிக்குக் கொடுத்து விட வேண்டும் என்றும், காஞ்சி படை தோற்றால் அவர்கள் ஆராதிக்கும் விநாயகர் விக்ரஹத்தை புரிக்கு கொடுத்து விட வேண்டும் என்றும் சபதம்செய்தனர். புருஷோத்தமன் ஜகந்நாதரிடம் " தேவரீரது அருளால் அடியேனது சிறிய படை வெற்றி பெற வேணும்" என்று வேண்டினான்.அரசன் புறப்பட்டபோது ஜகந்நாதர் கறுப்புப் புரவியிலும் , பலராமர் வெள்ளைக் குதிரையிலும் அரொஹனித்து யாரோ இரு வீரர்கள் போல் கஞ்சி நோக்கிச் சென்றனர்.வழியில் ஒரு கிராமத்தில் தாகத்துக்காக ஒரு முதிய இடைப் பெண்ணிடம் மோர் வாங்கிக் குடித்தனர். கையில் காசில்லாததால் மோதிரத்தைக் கொடுத்து, அவ்வழியே வரப்போகும் மன்னரிடம் லோதிரத்தைக் காட்டி பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். புருஷோத்தமன் தன படையோடு அவ்வழி வர , முதியவள் கொடுத்த மோதிரத்தைக் கண்டு வியந்து பகவானே தனக்காகப் போரிடுவதை நினத்து உருகினான். இரு வீரர்களின் உதவியால் போர் முடிந்து புரி மன்னன் வெற்றி பெற்றான்.காஞ்சி இளவரசியைச் சிறையெடுத்து வந்து புரியில் மந்திரியிடம் "இவளை தெருவைத் துப்புரவு செய்யும் ஒருவனுக்கு மனம் முடியுங்கள்" என்று பழி தீர்க்கும் வகையில் ஆணையிட்டான். பக்தரான மந்திரி இளவரசியிடம் தனிமையில் பேசி , அவளின் பக்தியையும் மன்னனிடம் அவள் கொண்ட காதலையும் அறிந்து அவர்களை சேர்த்து வைக்கும் தக்க தருணத்திற்குக் காத்திருந்தான். அடுத்த ரத யாத்ரையினபோது , இளவரசியை மணக்கோலத்தில் தயார் செய்தான். மன்னன் தங்கத்துடைப்பத்தால் பெருக்கத் துவங்கியவுடன் மந்திரி இளவரசியை அருகே அழைத்தப் போய் " மன்ன! இவளுக்கு எற்ற தெருப்பெருக்கும் மணமகனைத் தேடினேன். அப்படிப்பட்டவர் நீர் ஒருவரே! எனக்கண்டு கொண்டேன். ஆகவே இவளை இப்போதே ஸ்ரீ ஜகந்நாதப பெருமாளின் முன் திருமணம் செய்து கொள்ளும்" என்று வேண்டினான். அரசனும் மந்திரியின் சமயோசித புத்தியைப் பாராட்டி இளவரசியைக் கல்யாணம் செய்து கொண்டான். ஆகவே கடைத்தலை சீய்க்கப் பெற்றால் க்டுவினையும் களையலாம்: கல்யாணமும் செய்யலாம்.

புண்ய தீர்த்தங்கள்

மஹாநதி

மகாநதி - (கிழக்கு சமுத்ரம் ) - கண்ணன் கீதையில் :ஸரஸம் அஸ்மி ஸாகர: " அதாவது - நீர் நிலைகளுள் நான் கடலாக இருக்கிறேன்) என்கிறார். அதன்படி இங்குள்ள கிழக்குக் கடலே மிக புன்யமான 'சக்ர தீர்த்தம்' என்று கொண்டாடப்படுகிறது. இங்கு தான் " தாரு ப்ரஹ்மம் " (மரக்கட்டை வடிவில் வந்த பரம்பொருள்)  சக்ர முத்ரையோடு தோன்றினார். கருத யுகத்தில் பார்கவி எனும் நதி கடலில் கலக்கும் இவ்விடத்தில்தான் (பாங்கி முஹானா) பங்குனி சுக்ல த்வாதசியன்று தாறு ப்ரஹ்மன் தோன்றினார். கடலில் இவ்விடத்தில் தான் இந்த்ரத்யும்ந மகாராஜாவும் மகாராணியும் தாறு பிரமத்தைப் பெற்று , பெருமானின் பிம்பத்தை வடிவமைக்க வேண்டினார். பாரத தேசத்தின் முக்ய நதிகளான கங்கா, யமுனா,கோதாவரி, காவேரி, தாமரபரணி ஆகியவை இக்கடலிலேயே கலக்கின்றன.

இந்த்ரத்யும்ந ஸரோவரம் - இந்த்ரத்யும்ந மன்னன் பகவானை பிரதிஷ்டை செய்தபோது ஆயிரம் பசுக்களை தானம் செய்தார்.  அவற்றின் குளம்பு பட்டுப்  பள்ளம் ஏற்பட்டு மன்னன் தானம் கொடுத்தபோது விழுந்த தீர்த்தத்தால் அது நிரம்பி இந்தக் குளம் ஏற்பட்டது

 மார்க்கண்டேய ஸரோவரம் -  ரிஷியின் வேண்டுகோளின்படி பகவான், தான் ப்ரளயக்கடலின் ஆளிலைத்தளிரில் சயநித்திருப்பதைக் காட்ட , அன்று முதல் இவ்வூரில் ஏற்பட்ட அந்த தீர்த்தத்தின் கரையிலிலேயே ரிஷி தவம் புரிந்து வந்தார்.

ஸ்வேத கங்கா : இங்கு ஸ்வேத மாதவன் மற்றும் மத்ஸ்ய மூர்த்தியின் கோயில் உள்ளது. இது த்ரேதா யுகத்தில் வாழ்ந்த ஸ்வேத மன்னரால் தோற்றுவிக்கப்பட்டது.

ரோகினி குண்டம் - இது கோயிலுக்குள் உள்ளது. கடந்த ப்ரளயத்தின் சிறிதளவு தீர்த்தம் இதில் உள்ளது. அடுத்த ப்ரளயமும்  இந்த தீர்த்தத்தில் இருந்தே உருவாகும் எனப்படுகிறது. ப்ரஹ்மா இங்கு வந்த பொது ஒரு காக்கை இதில் விழுந்து நான்கு கைகளோடு விஷ்ணு ஸ்வரூபம் பெட்டரு முக்தி அடைந்ததைக் கண்டார்.

ஜகந்நாத் புரி  திருக்கோயிலின் அமைப்பு

இப்போது இருக்கும் இத்திருக்கோயில் சோட கங்க தேவனால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு அநங்க பீமா தேவனால் ஆங்கில ஆண்டு 1200 ல் முடிக்கப்பட்டது. இத்திருக்கோயில் நிலா மட்டத்திலிருந்து 214 அடி உயரத்தில் நீலாசலம் எனும் மலையில் உள்ளது. 10.7 ஏக்கர் நிலப்பரப்பில் இருபது அடி உயரமுள்ள செவ்வக வடிவில் , 15 ம் நூற்றாண்டில் கட்டப்பட்டு, இரண்டு நீண்ட மதிள் சுவர்களால் சூழப்பட்டு உள்ளது. வெளி மதிள் மற்றும் ப்ராகாரத்திற்கு மேகனந்த ப்ராசீரம் (665 x 640 அடி)   என்றும் உல் சுற்றுக்கு கூர்ம பேதம் ( 420 x 315 அடி) என்றும் பெயர்கள்.

திருக்கோயிலின் ப்ராதான கிழக்கு வாசல் ஸிம்ஹ (சிங்கம்) த்வாரம் என்றும், தெற்கு வாசல் அஸ்வ ( குதிரை) த்வாரம், மேற்கு வாசல் வயாக்ரா (புலி) த்வாரம், வடக்கு வாசல் ஹஸ்தி (யானை) த்வாரம் என்றும் பெயர்களைப்பெற்றுள்ளன. அந்தந்த வாசல்களில் அவ்வவ்வற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கிழக்கு வாசலுக்கு வெளியே 36 அடி உயர அருணஸ்தம்பம் உள்ளது. 18 ம் நூற்றாண்டில் கொனாரக்கிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட இதன் உச்சியில் ஸூரியனின் தேரோட்டியான அருணன் அமர்ந்துள்ளார்.

இக்கோயில் நான்கு பகுதிகளாக உள்ளது.

1. போக மண்டபம் - ஜகந்நாதருக்கு ப்ரசாதம் கண்டருளப்பன்னும் மண்டபம் பெரிய மண்டபம் ( 60 x 57 அடி ). இதில் கிருஷ்ணா லீலைகள் அழகான சித்திரங்காக வரையப்பட்டுள்ளன.

2. நட மண்டபம் -   ஜகந்நாதரை உசிப்பிக்க இசை மற்றும் நாட்டியம் நடக்கும்
 ( 70 x 67 அடி) மண்டபம்.

3. ஜகந்மோகன மண்டபம் ( முக ஸாலா ) - இது தான் பக்தர்கள் நின்று கொண்டு பகவானை தர்சிக்கும் இடம். இதில் கருட ஸ்தம்பம் உள்ளது.

4. விமான மண்டபம் - இதுவே கர்பக்ரகாம். இதில் ரத்ன சிம்ஹாசனத்தில்
 ( 16 x 13 x  4 அடி)  பல தேவர் ( 6 அடி உயரம் - வெள்ளை நிறம்) ஸுபாத்ரா (4 அடி - மஞ்சள் நிறம்) ஜகந்நாதர்  ( 5 அடி கருப்பு நிறம்) ஸுதர்சனர் , லக்ஷ்மி, நீல மாதவர், ஸரஸ்வதி  ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் ( ரத்ன வேதிகையில் ஏறி) இவ்வனைவரையும் வளம் வரலாம்.

திருக்கோயில் பூஜாரிகள் ( ஸேவகர்கள்) - சுமார் ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் 36 வகையான கைங்கர்யங்களைச் செய்கின்றனர்.

  கோயிலுக்குள் இருக்கும் மட்டற்ற தர்ஸன ஸ்தலங்கள்

பைஸாபஹாஸா : கிழக்கு வாசலிலிருந்து உள்ளே ஏறிச் செல்லும் 22 படிகள் பக்தர்களின் பாத தூளிபட்டுப் புனிதமானது. இப்படிக்கட்டு யமதர்மராஜனும் கூட ஸாஷ்டாங்கமாக ப்ரணாமம் செய்யும் பெருமை பெற்றது.

கல்பவடம் : பல நூற்றாண்டுகளாக நம் விருப்பங்களை நிறைவேற்றும் ஆலமரம் .

முக்தி மண்டபம் : வேத விற்பன்னர்கள் கூடி ப்ரமத்தைப் பற்றி ஆலோசித்து த்யானிக்கும் 16 கால் மண்டபம். பிரம்மா ஸபா என்றும் இது அழைக்கப்படுகிறது.

நரசிம்ஹர் ஸந்நிதி : முக்தி மண்டபத்துக்கு அருகே உள்ளது.

ஸ்ரீ தேவி பூதேவி ஸந்நிதி : இங்கிருக்கும் மூலிகைச் சாற்றினால் வரையப்பெற்ற சித்திரங்களில் அனைத்து ஆழ்வார்கள் மற்றும் பகவத் ராமானுஜர் ஆகியோர் சித்தரிக்கப்பட்டுள்ளனர்.

கோய்லா  மண்டபம் : ஜகந்நாதரின் திருமேனி சுமார் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புது தாருவால் செய்யப்படும். இந்த உத்ஸவத்திற்க்கு நவ களேவரம் ( புது திருமேனி) என்று பெயர்.  பழைய திருமேனி இவ்விடத்தில் பூமிக்குக் கீழே எழுந்தருளப் பண்ணப்படும்.

ஆனந்தபஜார் : ஜகந்நாதரின் மஹாப்ரஸாதம் விநியோகிக்கப்படும் இடம் இது.

கோயிலுக்கு வெளியே இருக்கும் சந்நிதிகள்

குண்டிசா  மந்திர் : இக்கோயில் ராணி குண்டிசாவின் பெயரில் உள்ளது.
படாதாண்டா சாலையின் (க்ராண்ட் ரோட்) ஒரு கோடியில் ஜகந்நாதர் கோயிலும், மறுமுனையில் குண்டிசா மந்திரும் உள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சாலை இது தான். இக்கோயிலில் தான் முதலில் தாரு ப்ரஹ்மத்திலிருந்து ஜகந்நாதர் முதலான விக்ரஹங்கள் செதுக்கப்பட்டன. ஆகவே பகவானின் பிறப்பிடம் இதுவே. இவ்வளாகத்தில் தான் அரசன் ஆயிரம் அஸ்வமேத செய்தார். ரதோத்ஸவத்தின் போது ஜகந்நாதர், பலதேவர், ஸுபத்ரா , ஸுதர்ஸனர் ஆகியோர் இங்கு தான் எழுந்தருளியிருப்பார்.

யக்ஞ நரசிம்ஹ தேவர் : இப்பெருமான் குண்டிசா மந்திரிலிருந்து இந்த்ரத்யும்ந ஸரோவர் போகும் வழியில் மஹாவேதி எனும் இடத்தில் எழுந்தருளியுள்ளார்.  இந்த்ரத்யும்ந மன்னன் இவ்வூருக்கு வந்தபோது இவரை முதலில் ப்ரதிஷ்டை செய்து ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்து பின்பே ஜகந்நாதர் தோன்றினார். இவருடைய திருமுகம் முன்னால் தர்சிக்க சாந்தமாகவும் , மற்றொரு புறம் உக்ரமாகவும் இருக்கும்.

அலர்னாத் : இங்கிருந்து சுமார் இருபது மைல் தள்ளி உள்ளது. ஆலாலனாதன் என்ற பெயருடைய இவர் உண்மையில் " ஆழ்வர் நாதன்" . அதாவது ஆழங்கால் பட்டோர்க்கு ஆட்படுபவர் . ஸ்ரீகேதன் என்பவர் தனது மகனான மது என்னும் சிறுவனிடம் கொதிக்கும் சர்க்கரைப் பொங்கலைத் தந்து அதனை உண்மையான அன்புடன் பெருமானுக்கு அமுது செய்யச் சொல்ல , அச்சிறுவனும் உண்மையாகவே அமுது செய்வித்தார். பொங்கலின் சூடு பட்டு பெருமாளின் திருவிரல்கள் சிவந்திருப்பதை இன்றும் காணலாம். இங்கு சைதன்ய மஹாப்ரபு தருசிக்க வந்தபோது பெருமானின் ஆச்ரித பாரதந்த்ர்யத்தைக் கேட்டு உருகி பூமியில் மயங்கி வோழுந்து கிடந்ததன் சிவடை இன்றும் காணலாம்.

சாக்ஷி கோபால் : மேற்க்கே 15 மைல்  தொலைவில் உள்ள சந்நிதி இது. கண்ணனின் பேரன் வஜ்ரானாபரால் ப்ரதிஷ்டை செய்யப்பட்டவர்கள் ஐவரும், வ்ருந்தாவனத்தில் இருக்கும் மதன மோகனரும் , இவர் முதலில் புரியில் ப்ரதான கோயிலில் தான் இருந்தார். ஆனால் அனைத்து ப்ரசாதங்களையும்ஜகந்நாதருக்கு முன்னமேயே உண்டு முடித்து விடுவார். ஆகையால் இருவருக்கும் லீலா ரஸமாக ஓர் பிணைப்பு ஏற்பட்டுப் பின் ஒரு முடிவுக்கு வந்து , அதனால் இவர் ஊருக்கு வெளியே கோயில் கொண்டுள்ளதாக ஐதீஹம். ஒரு அந்தண இளைஞனுக்குப் பெண் கொடுக்க இசைந்த முதியவர் ஒருவர், பின் பண வ்யவஹாரத்தால் மறுக்க, அப்போது தன பக்தனுக்காக மக்கள் மன்றத்தில் ஸாக்ஷி சொல்லிக் கல்யாணத்தை நடத்தி வைத்தபடியால் அன்று முதல் இவர் ஸாக்ஷி கோபால் என்று அழிக்கபடுவதாகவும் வரலாறு.

ராமானுஜ ஸம்பந்தம் : பகவத் ராமானுஜர் புரி ஜகந்நாதனை தருசிக்க வந்தபோது இங்கிருக்கும் பூஜை முறை ஆகமத்தின்படி , இல்லாததைக் கண்டு தனை சரிபடுத்த எண்ணினார். அதனால் பள்ளண்டுகலாகத்தொண்டு புரிந்து வரும் பூசாரிகளை விட்டுக் கொடுக்க மனமில்லாத ஜகந்நாதர் , அன்று இரவு துயில் கொண்டிருந்த ராமானுஜரை அவரே அறியாவண்ணம் ஸ்ரீ கூர்மத்தில் கொண்டு போய்விட்டார். விடியற்காலை எழுந்து பார்த்த ராமானுஜர், தான் வேறு இடத்தில் இருப்பதைக் கண்டு ஜகந்நாதரின் ஆச்ரித பக்ஷபாதத்தை உணர்ந்து பல்லாண்டு பாடினார். இன்றும் புரியில் ராமானுஜர் தங்கியிருந்த மேடம், மற்றும் எம்பார் மேடம் ஆகியவை உள்ளன. இம்மாதத்தில் இருக்கும் சன்யாசிகளுக்கு இத்திருக்கோயிலில் பரம்பரையாகப் பெறப்பட்ட கைங்கர்யமும் உள்ளது.

ஜகந்நாதரின் மஹாப்ரசாத மகிமை.:
உலகின் ஜகந்நாதருக்கு நைவேத்யம் பண்ணப்பட்ட ப்ரஸாதம் யாருக்கும் கிடைக்காமலே இருந்தது. தினமும் அதனைச் சமைத்து கண்டருளப் பண்ணும் ஸ்ரீ மகாலக்ஷ்மியிடம் நாரதர் தனக்கு ப்ரஸாதம் வேண்டும் என்று வெகு நாட்களாக வேண்டி வந்தார். இறுதியில் ஒரு நாள் , லக்ஷ்மிதேவி பெருமாளிடம் மன்றாடி நாரதருக்குச் சிறிதளவு ப்ரஸாதம் பெற்றுக் கொடுத்தாள். அதனை உண்ட நாரதர் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று கூத்தாடினார். இதனைக் கண்ட பரமசிவன் தனக்கு ப்ரஸாதம் வேண்டினார். நல்லவேளையாக ப்ரஸாதம் சிறிது மீந்து இருக்கவே, பெட்டரு, உண்டு ஆனந்த நர்தனம் ஆட , அதனால் மேருவும் கைலாஸமும் நடுங்கின. உடனே பார்வதி தேவி தனக்கும் ப்ரஸாதம் வேண்டும் எனக் கேட்க , ஆனால் சிறிதும் ப்ரஸாதம் மீதம் இல்லாதபடியால் கோபப்பட்டு , " இன்று சபதம் செய்கிறேன். இனி உலகில் அனைவருக்கும் ஜகந்நாத ப்ரஸாதம் எப்போதும் கிடைக்கும்படி செய்வேன்" என்று சூளுரைத்தாள். அவளது பக்தியை மெச்சிய பகவானும் " புரி ஜகந்நாதத்தில்  இனி அன்ன பிராமமாகவே இருப்பேன்" என்று அருளினார். மட்டற்ற க்ஷேத்ரங்களில் பெருமானை தரிசித்தாலோ, த்யநித்தாலோ, வலம் வந்தாலோ, சங்கீர்த்தனம் செய்தாலோதான் புண்யம் கிட்டும்: ஆனால் புரியில் ஜகந்நாத பிரசாதத்தை உண்பதாலேயே பாபங்கள் அனைதும்விலகி நமைகளே விளையும்.
புரியி பிரசாதத்தை உன்ன சில முறைகள் உண்டு : பூமியில் அமர்ந்தே உண்ணவேண்டும்: விநியோகம் செய்ய கரண்டி முதலானவைகளை உபயோகப்படுத்தக் கூடாது. இலைகளை உபயோகபடுத்தலாம்: ஜகந்நாதரை நினைத்துக் கொண்டே உண்ணவேண்டும்: உண்டு முடித்தவுடன் வாய் கொப்பளிக்கும்போது முதல் வாய் தண்ணீரைத் துப்பாமல் விழுங்கவேண்டும். அடுத்த வாய் நீரினை மண்ணில்தான் துப்பவேண்டும். சாப்பிட்ட இடத்தைக் கைகளால் தான் சுத்தம் செய்யவேண்டும். இத்தனை பெருமை உடைய மஹாப்ரஸாதத்தை எங்கு எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்ப்போம்.

திருமடைப்பள்ளி மாஹாத்ம்யம் : உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் இதுவே. கோயிலின் தென்கிழக்கு மூலையில் ஒரு ஏக்கர் பரப்பில் திருமடைப்பள்ளி அமைந்துள்ளது. 3 x 4 அளவு கொண்ட 752 மண் அடுப்புகள் கொண்டது. விறகுக்கட்டைகள் , சட்டிப்பானைகள் தவிர அந்தவிதமான யந்த்ரமோ உலோகமோ கிடையாது.   மடப்பள்ளியிலிருந்து சுமார் 20 படிக்கட்டுகள் இறங்கினால் இருக்கும் பெரிய கேணியிலிருந்து ராட்டினம் இல்லாமல் தாம்புக் கயிற்றால் கைகளாலேயே இழுக்கப்பட்ட சுத்தமான தண்ணீரை 30 தொண்டர்கள் இடைவிடாமல் கொண்டு வந்து கொட்டுகிறார்கள். இங்கு மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற நிஷித்தமான பல காய்கறிகள் உபயோகபடுத்தப்படுவதில்லை. திருமடப்பள்ளியில் சுமார் 400 முக்ய கைங்கர்யபரர்களும் மேலும் 400 உதவியாளர்களும் உள்ளனர். காய்கறி  திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளனர். வேற்று  மனிதர் யாருக்கும் ப்ரவேச அனுமதி இல்லை.  பொதுவாக ஒரு நாளைக்கு 72 குவின்டல்  ( சுமார் 500 படி) ப்ரசாதமும் , விசேஷ நாட்களில் 900 குவின்டல் ( சுமார் 6000 படி) ப்ரசாதமும் சமைக்கபடுகின்றன. அனைத்து பிரசாதங்களும் பானைகளில் ஏற்றப்பட்டு , சிறு உரிகளில் கட்டி, மூங்கில் கம்புகளின் இருபுறமும் தொங்கவிட்டுக்கொண்டு கைங்கர்யபரர்கள் தொழில் சுமந்து போய் பெருமான் முன்னே அவை படைக்கப்படுகின்றன. இத்தொண்டை சுமார் 60 பேர் செய்கின்றனர்.

ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் ( சப்பான் போகி) செய்யப்படுகின்றன. அவை 9 வகையான சித்ரான்னம், 14 வகைக் கறியமுது,மற்றும் கூட்டு, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்புகள், 13 வகையான திருப்பநியாரங்கள். போகத்தின் பெயர்கள் மற்றும் நேரம்:

காலை 8 மணி                     : கோபால் வல்லப போகம்

காலை 10 மணி                   :  ஸகல போகம்

பகல் 11 மணி                        :  போக மண்டப விநியோக போகம்

மதியம் 12:30 மணி              :   மத்யாஹ்ந  போகம்

மாலை 7 மணி                     :   ஸயன போகம்

இரவு 11:15 மணி                  :    மகாஸ்ருங்கார போகம்

தினமும் நிகழும் கொடி எற்றம் :  ஜகந்நாதரின் விமான கோபுரம் 214 அடி உயரம். அதன் மேல் நீல சக்ரம் அன்று பெயர் பெற்ற ஸுதர்ஸன சக்ரம் பொருத்தப்பட்டுள்ளது. எட்டு உலோகங்களால் செய்யப்பட இது 36 அடி சுற்றளவு உள்ளது. இதன் மேல் சிகப்பு வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறம் கொண்ட கொடிகள் தினமும் மாலை 6:30 மணி அளவில் ஏற்றப்படுகின்றன . கருட சேவகர்கள் அன்று அழைக்கப்படும் தொண்டர்களில் ஒருவர், பரம்பரையாக தினமும் அனைத்துக் கொடிகளையும் சுமந்த் கொண்டு இக்கோபுரத்தின் 214 அடி உயரத்தையும் 15 நிடங்களில் எந்த யந்த்ரத்தின் உதவியும் இல்லாமல் சர சர வென ஏறி அடுத்த 10 நிடங்களில் கொடிகளைக் கட்டுகிறார். கனத்த மழை, சூறாவளி அடித்தாலும் கோடி காட்டப்படும். இப்பரம்பரையில் வந்தவர்களுக்கு கருட பகவானின் அருளால் 8 வயது முதல் இத்தொண்டில் பழக்கம் ஏற்படுகிறது.

நவ கலேவர ( புது திருமேனி) உத்ஸவம் :

ஜகந்நாதர் , பலதேவர், ஸுபத்ரா , ஸுதர்சனர் ஆகியோரின் திருமேனி சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்பட்டு புது தாருவால் செய்யப்படும். எந்த ஆண்டில் அதிக மாஸமாய் ஆணி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருமோ அந்த ஆண்டு. இவ்வுத்ஸவத்திற்கென்றே நியமனம் பெற்று இருக்கும் பூஜாரிகள் சுமார் 40 மைல் தூரத்தில் ப்ராசீ  நதிக்கரையில் இருக்கும் காகாத்பூர் எனும் ஊரின்  காடுகளில் தகுந்த வெப்ப மரங்களைத் தேடுவர். சில விசேஷ அடையாளங்களோடு இருக்கும் ஒரு மரத்தை எடுத்து வந்து பூசித்து, அதடின கோய்லா வைகுண்டத்தில இருக்கும் மண்டபத்தில் தச்சர்கள் பகவானின் திருவுருவங்கலாகச் செதுக்குவார்கள். புதுத் திருமேனிகள் உருவானவுடன், அமாவாசை இரவு அவர்களை எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து கர்பக்ரஹத்தில் உள்ள பழைய திருமேனிகளுக்கு அருகே வைப்பார். ( அன்று ஊர் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்படும். பூஜாரிகளுள் மூத்தவர் கண்களைக் கட்டிக் கொண்டு , கைகளிலும் துணி சுற்றிக் கொள்வார். பின் பழைய மற்றும் புதுத் திருமேனிகளுக்கு இடையே நின்று கொண்டு, பழிய திருமேனியின் நாபியில் இருக்கும் ப்ரஹ்மபதார்த்தத்தை எடுத்து புதுத் திருமேனியில் பொருத்துவார். பின் பழைய திருமேனிகள் கோய்லா வைகுண்டத்தில் பூமிக்கு கீழே எழுந்தருளப் பண்ணப்படுவர். சுமார் நான்கு மாதங்கள் நடக்கும் இவ்வுத்ஸவம் முழுவதும் பரம ரஹஅச்யமாக நடத்தப்படும். பழிய திருமேனிக்காக , தாயாதிகள் ( தயிதர்கள்) எனும் வர்கத்தினர் 13 நாள்கள் துக்கம் அனுஷ்டிப்பார். கடந்த நவகலேவர உத்ஸவம்
நடந்த சில ஆண்டுகள் 1912, 1931, 1950, 1969, 1977, 1996 ஆகியவை.

ஜகம் புகழும் ரத யாத்ரை :  ராணி குண்டிசாவின் வேண்டுகோளுக்கிணங்க பல்லாயிரம் ஆஅண்டுகலாக மூன்று மூர்த்திகளும் மூன்று தேர்களில் தங்கள் கோயில்களிலிருந்து புறப்பட்டு 2 மைல்கள் உள்ள க்ராண்ட் வீதியில் பவனி வந்து குண்டிசா மந்திர் அடைவர். ஆணி மாதம் பௌர்ணமியில் (நீலாத்ரிபிஜே ) முடியும். இத்தேர்த்திருவிழாவை தரிசிக்க உலகமெங்கும் இருந்து பல லக்ஷம் மக்கள் திரண்டு வருவர். ரத யாத்ரா குண்டிசா யாத்ரா கோஷா யாத்ரா என்று அழைக்கப்படும்  10 , கண்ணன்  கோகுலத்திலிருந்து தன பிறந்த ஊரான மதுராவிற்கு     வந்ததை நினைவு கூர்கிறது.ஆகவே தான் ஜகந்நாதர் தன பிறந்தகமான குண்டிசாவிற்க்குச் செல்கிறார்.

தேர்களின் அமைப்பு :

மூன்று தேர்கலுமே முழுவதும் மரத்தால், கைகளாலேயே செய்யப்பட்டவை. ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு இரண்டு மாதங்களுக்கு முன் புதியதாகவே 125 தச்சர்கள் 2188 மரத்துண்டுகளை இணைத்து இத்தேர்களைச் செய்வர். ஜகந்நாதரின் தேரின் பெயர் நந்தி கோஷ், 7 அடி உயரமுள்ள 16 சக்ரங்கள் ( கலைகள்) பொருத்தப்பட்ட இதன் உயரம் 45 அடி. தேர்ச்சீலைகளின் வர்ணம் மஞ்சள், சங்கிகா, ரேசிகா, மொசிகா மற்றும் த்வாலினி எனும் பெயருடைய நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். இதற்க்கு தாருகன் தேரோட்டி: சங்கசூடன் தேர்க்கயிராக (250 அடி நீளம்) உள்ளான்.

பாலராமரின் தேரின் பெயர் தாலத்வஜம், 14 சக்ரங்கள் (மன்வந்தரங்கள்) பொருத்தப்பட்ட இதன் உயரம் 44 அடி, தேர்ச்சீளைகளின் வர்ணம் மீளம். ருக், யஜுஸ், ஸாம மற்றும் அதர்வணம் எனும் பெயருடைய நான்கு குதிரைகள்: மாதவி தேரோட்டி: வாசுகி தேர்க்கயிறு:

ஸுபாட்ராவின் தேரின் பெயர் பத்மத்வஜம்: தேவதாலனம்: ஓராண்டில் பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும் வண்ணம் 12 சக்ரங்கள் பொருத்தப்பட்ட இதன் உயரம் 43 அடி. தெர்ச்சீலைஒகலின் வர்ணம் சிவப்பு. ப்ரஜ்ஞா , அனுஷா, கோஷா, மற்றும் அக்ரி என்று பெயருடைய நாண்டு குதிரைகள்: அர்ஜுனன் தேரோட்டி: ஸ்வர்ணசூடன்  தேர்க்கயிறு: இத்தேரில் தான் ஸுதர்ஸனர் எழுந்தருளியிருப்பார்.

விழாவுன் முக்யமான நாட்கள் :

ஆணி பௌர்ணமி - ஸ்நான யாத்ரா - தாரு பிரமத்திலிருந்து ஜகந்நாதர் தோன்றிய நாள்.இன்று பகவானை 108 குடம் பன்னீரால் நீராட்டுவர். ஆகையால் அவருக்கு ஜலதோஷம் பிடித்து அடுத்த பதினைந்து நாட்கள் தனிமையில் இருப்பதாக பக்தர்கள் நம்பிக்கை. அதனால் அந்நாட்களில் தரிசனம் கிடையாது.

ஆணி சுக்ல த்வீதியை - முதலில் பலராமர் அடுத்து ஸுபாத்ரா கடைசியாக ஜகந்நாதர் சிறந்த அலங்காரத்தோடு ஒவ்வொருவராக நகர்ந்து  நகர்ந்து வெளியே வந்து தேரில் எழுந்தருளுவர்/அரசன் தங்கத் துடைப்பத்தால்  பெருக்கியவுடன் தேர்கள் புறப்பட்டு மாலையில் குண்டிசா மந்திர் சென்றடையும். மூர்த்திகள் உள்ளே சென்று அடுத்த ஒன்பது நாள்கள் இங்கேயே எழுந்தருளியிருப்பர். அனநிது பிரஸாதங்களும் இங்கேயே தளிகை பண்ணப்படும்.

ஆணி சுக்ல பஞ்சமி - ஹேரா பஞ்சமி - தன்னை விட்டுச் சென்றதற்காகக் கோபம் கொண்ட லக்ஷ்மி பிரதான கோயிலிலிருந்து பல்லக்கில் குண்டிசா மந்திர் வந்து ஜகந்நாதர் தேரில் ஒரு சிறு பகுதியை உடைப்பதாக ஒரு லீலா ரஸமும் உண்டு.

ஆணி சுக்ல தசமி - உல்டா  ரதம் - மூர்த்திகள் அனைவரும் திரும்ப எழுந்தருள்வர். லக்ஷ்மியின் கோபத்தால் (ப்ரணய கலஹமாகிற மட்டையடி உத்ஸவம்) பிரதான கோயில் மூடப்பட்டு பெருமாள் வாசலிலேயே காத்திருப்பார்.

ஆணி சுக்ல ஈகடசி - ஸுனா வேஷ தர்ஸனம் - இன்றிரவு பல கிலோக்கள் ஸ்வர்ண திருவாபரணங்களை மூர்த்திகள் அணிவர். இதை தரிசிக்க ஒரிய மாநிலத்தின் மூலை முடுக்குகளிருந்து மக்கள் வெள்ளமெனப் பெருகி வருவர்.

ஆணி சுக்ல த்வாதசி - இன்றிரவு பெருமாள் உள்ளே எழுந்தறுள்வார். வீதியில் தேரில் இருக்கும்போது மட்டும் பக்தர்கள் அனைவரும் தேரில் ஏறி பெருமானைத் தொட்டு தரிசிக்கலாம்.

இன்னமும் , ஜகன் பகழும் ஜகந்நாதன் உறையும் புரி க்ஷேத்ரத்தின் மாஹாத்ம்யத்தை சொல்லிக் கொண்டே போகலாம்.   ஆயின் அறிவின் வரையறைக்குட்பட்டு இத்துடன் நிற்கிறேன். அனைத்துக்கும் மேலாக, அவனருளையே நாடி நாம் அனைவரும் முழங்கிடுவோம்.


 "  ஜய்  ஜகந்நாத் ! புரி புருஷோத்தம் தாம் கீ - ஜய்

நீலசால நிவாஸாய நித்யாய பரமாத்மநே

ஸுபத்ரா பிராண நாதாய ஜகந்நாதாய மங்களம்




பத்ராசலம் ராமதாஸர் கோயில்

அயோத்யையை ஆண்ட தசரதனின் ஆணைப்படி ஸ்ரீ ராமன் ஸீதையுடனும் , இலக்குவனுடனும் காட்டுக்குப் புறப்பட்டான். நாடே துயரத்தில் ஆழ்ந்தது. அப்பிரிவைத்தான் தேவர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். இது எளியோரைக் காப்பதற்காக பகவான் செய்த லீலையாகும். இந்தப் பிரிவே ஸ்ரீ ராமபிரான் தன் திருவடிப்படும்படி பாரதநாடு முழுவதும் நடப்பதற்கும் காரணமாயிற்று. பத்ராசலம் போன்ற பல க்ஷேத்ரங்கள் உருவாகவும் காரணமாயிற்று. பல்வேறு நதிகள் காடுகளைக் கடந்து தண்டகாரண்யம்  அடைந்தனர். ஸ்ரீ ராமன் அகஸ்த்யர், ஸரபங்கர், ஸுதீஷ்ணர் , மதங்கர் போன்ற ரிஷிகள் நிறைந்த தண்டகாரண்யத்தில் தான் கரன், தூஷணன் , த்ரிஸிரஸ் போன்ற ராக்ஷஸர்களும் இருந்தார்கள். எனவே அவர்களின் தவத்துக்கு மிகுந்த இடைஞ்சல் உண்டாயிற்று. தம்மை ஸேவித்த ராமபிரானுக்கு திவ்யமான வைஷனவவில், அஸ்தரம் (மந்தரத்தால் புனிதப்பட்ட பாணம் ) ஆகியவற்றைப் பரிசாக வழங்கினார் அகஸ்த்யர். இயற்க்கை அழகால் சூழப்பட்டு கோதாவரி சலசலத்து ஓடும் பஞ்சவடியில் ஸ்ரீ ராமபிரான் தங்குவதற்கு அகஸ்த்யர் வழி காட்டினார்.

ஸூர்ய ஒளியைக் கண்டிராத ஸீதை அயோத்யையிளிருந்து இவ்வளவு தூரம் கடந்து வந்ததால் இளைப்பாற வேண்டியிருந்தது.

  அதை அறிந்து கொண்ட ராமபிரான் ஒரு சரியான இடத்தைத் தேடும்போது , ஒரு சிறிய குன்று நன்றாக விரிந்து இளைப்பாற எற்றதாகவிருந்தது. மனமுவந்த ஸ்ரீ ராமபிரான் இந்தக் குன்று அடுத்த ஜன்மத்தில் தன பக்தனாகப் பிறந்து உலகில் விஷ்ணு பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்குவான் என்று ஆசிர்வதித்தார். அந்தக் குன்றே ராமபத்ரனின் அருளால் பதற மஹர்ஷியாய் மேருமளைக்கும் - மேருதேவிக்கும் மகனாய்ப் பிறந்தார். சிறு வயது முதலே ப்ரஹ்லாதன், தருவன், போன்ற விஷ்ணு பக்தியில் ஆழ்ந்திருந்த பத்ரனுக்கு நாரதர் ஸ்ரீராமதாரக மந்த்ரத்தை உபதேசித்தார். நாரதரின் மூலமாகத்தன்னுடய  முற்பிறவியின் ரஹஸ்யத்தை அறிந்த பத்ரன் தாய் தந்தையரின் ஆசியோடு பகவானை நோக்கித் தவம் செய்வதற்காக தண்டகாரண்யத்துக்குப்  புறப்பட்டான். அங்கே புனிதமான கௌதமி நதிக் கரையை அடைந்து தவம் புரியத் தொடங்கினான்.
பத்ரனின் தவ வலிமை தாங்காத இந்த்ராதி தேவர்கள் ப்ரஹ்மனிடம் முறையிட்டனர். அனைவரும் பார்கடலுக்குச் சென்று பகவானை வேண்டினார்கள். எம்பெருமானும் கஜேந்த்ரனை ரக்ஷிப்பதற்க்கு எந்த வேகத்துடன் இறங்கினாரோ அதே வேகத்துடன் இப்பொழுதும் பத்ரனுக்கு ஸேவை ஸாதிப்பதற்க்காக இறங்கினார். அவரைத் தொடர்ந்து பிராட்டி கருடன், ஆதிசேஷன், விஸ்வக்சேனர், நாரதர் முதலான ரிஷிகள் இறங்கினர்.

இதையறிந்த அனுமனும் அவரை வரவேற்பதற்கு கந்த மாதந மலையிலிருந்து விரைந்தார்.ஸ்ரீமந்நாராயணன் பிராட்டியுடன் இதுவரையாரும் ஸேவித்திராத திருக்கோலத்தில் பாஞ்சஜன்யம், மேல் இடது கரத்தில் ஸ்ரீஸுதர்ஸந சக்ரம்,கீழ் இடது கரத்தில் வில், கீழ் வலது கரத்தில் அபாய ஹஸ்தத்துடன் கூடிய அம்புடன் ஸேவை ஸாதித்ததை அனைவரும்  ஸேவித்து "வைகுண்ட ராமன்" என்று போற்றிப பாராட்டினர். பிராட்டி ஸீதையாக ஆதிசேஷன், வில் மற்றும் அமுகளுடன் லக்ஷ்மனனாகச் சேர அனைவரும் "வைகுண்ட ராமன்" என்றும் , ஸ்ரீராமநாராயணன்  என்றும், அகார உகார மகாரங்களுக்கு வாச்யர்கலான பெருமாளும் பிராட்டியும் ஆதி செஷனும் ஒரு சேர ஸேவை ஸாதித்தபடியால் "ஓங்கார ராமன்" என்றும் போற்றினர் . இதே திருக்கோலத்தில் பத்ரனுக்கு ஸேவை ஸாதித்தார்.இடது தொடை மேல் வீற்றிருந்த பிராட்டியுடனும் இலக்குவனுடனும் ஸேவை ஸாதித்த ஸ்ரீராமனின் திருவடியைத் தன தலை மேல் தாங்கவேனும் என்று பிரார்த்தித்தார். இந்த ஸேவை எல்லாருக்கும் கிடைக்கவேணும் என்றும் தானும் பகவானைத் தாங்கும் மலை யாக இருக்கவேணும் என்றும் வேண்டினார். இப்படியாக பத்ரன் பத்ராச்சலமாக உருவெடுத்தார்.

இப்படி அவதரித்த பகவானுக்கு முதன் முதலில் பாஞ்சராத்ர ஆகமப்படி நாரதர் திருவாராதநம் செய்தார். நடந்தவற்றை அறிந்து கொண்ட மேரு தம்பதிகள் தம் குமாரனான பத்ரன் மழையாகி பகவானைத் தாங்குவத வந்து ஸேவித்து ஆனந்தமடைந்தனர். தேவ் சிற்பி விஸ்வகர்மா  ஆலயத்தைத் தங்கமயமாகக் கட்டி முடித்தார். நாரதரும் நித்யதிருவாராதநம் செய்து கொண்டிருந்தார். இவை யாவும் த்வாபர யுகத்தில் நடந்தன.

த்வாபர யுகம் முடிந்து கலி யுகம் ஆரம்பித்த வேளையில் பத்ரன் பகவானிடம் "கலியின் கொடுமையால் மக்கள் துன்பத்துக்கு ஆளாவார்கள்.அவர்களுக்கு கலியின் பிடியிலிருந்து விடுதலை கொடுத்து ஸேவை ஸாதிக்கவேனும்" என்று பிரார்த்தித்தார். காலப்போக்கில் தேவர்களால் கட்டப்பட்ட திருக்கோயில் மறைந்து போயிற்று. அவ்விடத்தில் மற்றொரு திருக்கோயில் தோன்றியது.மகார்ஷிகளாலும் அரசர்களாலும் அத்திருக்கோயிலில் உள்ள ராமபிரான் ஆராதிக்கப்பட்டு வந்தார். திருமங்கையழ்வரும் இப்பெருமானை ஸேவித்ததாகச சான்று உள்ளது. ஆகையால் பெரிய திருவாய்மொழியிலுருந்து இன்றும் சில பாசுரங்கள் இங்கு ஸேவிக்கப்படுகின்றன.

மீண்டும் பதராசலத் திருக்கோயில்  மறைந்தது. பத்நேழாம் நூற்றாண்டில் இவ்விடத்துக்கு அருகில் 'போகல தம்மக்க' என்னும் பெண் வசித்து வந்தாள். மலைஜாதியைச் சேர்ந்த இவளுக்கு பத்ராசலராமன்  கனவில் ஸேவை ஸாதித்து 'நான் அருகில் இருக்கிறேன்' என்றான். இரண்டு நாட்கள் தேடியும் அவளுக்கு பத்ராசல ராமன் கிடைக்கவில்லை. மீண்டும் அவள் கனவில் தோன்றி , தானிருக்கும் இடத்தைக் காட்டினார்.  அவள் அடுத்தநாள் மலையேறி ஒரு புட்ட்ருக்குள் எம்பெருமான் இருப்பதை அறிந்து அவரை வெளியே எடுத்து கோதாவரி தீர்த்தத்தால் திருமஞ்சனம் செய்வித்தாள். ஸ்ரீராமபிரான் வெளியே எழுந்தருளினார். வேடுவச்சியான தம்மக்க பனை ஓலைகளாலான ஒரு மேற்கூரை அமைத்து அதற்குள் பெருமானை எழுந்தருளப் பண்ணினாள். த்ச்ன்ச்க்கு கிட்சிக்கும் காய்கனிகளை அவருக்கு ஸமர்பித்து அங்கேயே வசித்து வந்தாள்.

அக்காலத்தில் தானிஷா என்ற பெயருடைய ஒரு துருஷ்கராஜாவின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது இந்த இடம். அவருக்கு முக்ய மந்திரிகளாக அக்கன்னா, மாதன்னா என்ற இருவர் இருந்தனர். அந்த இருவருக்கும் உறவினர் ' கஞ்சொல் கோபண்ணா' என்பவர் . அவரைஇந்த இடத்துக்கு வரி வசூலிப்பதற்காக நியமித்தான் ராஜ. கிராமத்துக்கு வந்த கோபண்ணா விஷயத்தைக் கேட்டறிந்து மலை மேல் வீற்றிருக்கும் ராமபிரானை ஸேவிப்பதற்க்கு விரைந்தார். வந்த அதிகாரியைப் பார்த்த மூதாட்டியான தம்மக்கா , "ராமபிரான் இப்படி வெயிலிலும் மழையிலும் இருப்பது சரியன்று: உடனே திருக்கோயில் கட்டவேணும்" என்று வேண்டினாள். ராமபக்தரான கோபன்னாவும் ஸ்ரீராமபிரானை ஸேவித்து மெய்மறந்து 'தாசரதி ஸதகம் ' என்ற நூலை இங்கேயே இயற்றிக் கோயிலும் கட்ட இசைந்தார். தம்முடைய ஆசார்யரான ஸ்ரீ ரகு நாத பட்டறை வரவழைத்தார். பிரம்மா புராணத்தில் கௌதமி மாஹாத்ம்ய கண்டத்தில் பத்ராசல மாஹாத்ம்யம் கண்டறியப்பட்டது. இந்தப் பெருமாள் ஸ்வயம் வ்யக்தர்  என்றும் இந்த மலை தான் பத்ரன் என்றும் தெரிந்து கொண்டு இதற்க்கு பத்ராச்சலமென்று பெயரிட்டார். எம்பெருமானை பத்ராத்ரிராமன் என்றும் பத்ராத்ரிநாதன் என்றும் கொண்டாடினார். திருக்கோயிலின்  நிர்மாணம் கோபண்ணாவின் தலைமையில் வேகமாக நடைபெற்றது. பெருமானுக்கு வேண்டிய திருவாபரணங்கள் ஸித்தமாயின. ராஜ கோபுரங்கள், ப்ரகாரங்கள் , கட்டி முடிக்கப்பட்டு ஆலயப் ப்ரதிஷ்டைக்கு நாள் குறித்தாகிவிட்டது. நித்யப்படி திருவாராதநத்துக்கு மட்டுமின்றி நாம சந்கீர்த்தநத்துக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருவரங்கத்திலிருந்து வந்து பாஞ்சராத்ர ஆகம வித்வான்கள் எம்பெருமானின் நித்யப்படி திருவாராதநத்துக்காக வரவழைக்கப்பட்டார்கள். விசித்ரமான பகவத் ஸங்கல்பத்தால்  ஆலயத்தின் ,எல் வைக்கப்படவேண்டிய ஸ்ரீ ஸுதர்ஸந சக்ரம் காணாமல் போயிட்ற்று. கோபண்ணா தம் மேல் தான் குற்றம் என்று தீர்மானித்து கோதாவரி நதியில் விழுந்து தற்கொலைக்கு முயன்றார். நதியில் விழுந்தவர் தலையில் ஏதோ ஒரு வஸ்து பட , பார்த்த கோபண்ணா அதி ஸ்ரீ ஸுதர்ஸந சக்ரம் என்று அறிந்து கொண்டார்.. யாரோஒருவர் தம்மைக் கரைக்கு இழுத்துச் செல்வதையும் உணர்ந்தார். கரையில் ஒதுங்கிய கோபண்ணாவைக் கண்டு  யாவரும் வியந்து அவரை 'ராமதாசர்' என்று போற்றினார்கள். அன்று முதல் கோபண்ணா, பக்த ராமதாஸராகவே பகழ் பெற்றார். ஆலய ஸம்ரோக்ஷனம் இனிதே நிறைவேறியது.பக்தர்கள் தினமும் பெருந்திரளாக வந்து பகவானை ஸேவித்தார்கள். தினமும் எம்பெருமானின் பிரஸாதமாக அன்னதாநம்  நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பாடல்களை ராமதாசர் ஸ்ரீராமபிரானின் மேல் இயற்றினார். ஸ்ரீராமபிரானின் குணங்களை விளக்கும் இவற்றில் நாமஸங்கீர்த்தநமஹிமை,
 ஸரணாகதிததத்வம் , தாயாரின் பெருமை, அடியார்களின் பெருமை ஆகியவை உள்ளன.

ஒரு நாள் திடீரென்று ராமதாஸரின் மகன் குளத்தில் தவறி விழுந்ததில் உயிர் பிரிந்தது. அறிந்த ராமதாஸர்  கோயிலிலிருந்து ஓடி வந்து ராமபிரானைப் பிரார்த்தித்தார். ராமபிரானுடைய அபயஹஸ்தம் ஆகாயத்தில் தோன்றியது. அதிலிருந்து ஒளிகற்றையொன்று குழைந்தையின் மேல் பட்டது. குழைந்தை உயிர் பெட்டரு எழுந்தது. ராமதாஸரின் புகழ் மேலும் பரவியது.

இதையறிந்த சில விஷமிகள் தானிஷா நவாபிடம்புரம் கூறினார்கள். ராமதாஸரைச் சிறைப்பிடித்து அரண்மனைக்கு வரவழைத்தான் நவாப். அவரும் மன்னரின் ஆணைப்படி அரசவைக்கு வந்து திருக்கோயில் முழுவதும் மக்களிடமிருந்து திரட்டப்பட்ட பணத்தால் கட்டப்பட்டது என்றும், தாம் செளுத்தவேண்டிய வரியை இன்னும் சிறிது காலத்தில் கட்டுவேன் என்றும் சொன்னார். அதற்க்கு செவி சாய்க்காத நவாப் அவருக்கு பன்னிரண்டு வருடம் சிறைவாஸம் விதித்தான். கடினமான தண்டனைகளை அனுபவித்துக் கொண்டு சிரையிலிருந்தபோதும் பெருமாளையும் பிராட்டியையும் குறித்தே பாடினார். பத்ராசலத்தில் நடக்கும் ஸ்ரீராமபிரானின் நித்யோத்ஸவங்களை சிறையிலிருந்து கொண்டு மனஸ்ஸாலேயே அனுபவித்தார்.

ஒரு நாள் இரவு ஓர் அற்புதம் நடந்தது. ஸ்ரீராமபிரானும் இலக்குவனும் காவலாளிகள் வேடத்தில் தானிஷாவின் கோட்டைக்கு வந்து ராமதாஸர் திருக்கோயில் கட்டுவதற்க்குச் செலவழித்த ஆறு லக்ஷம் வெள்ளிக்காசுகளுக்காக அந்த அளவுக்கான தன்காகாசுகளைக் கொடுத்தார்கள். அதில் ஒவ்வொரு காசிலும்  பட்ராச்சலராமனின் திருவுருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இன்றும் அந்தக் காசுகளில் இரண்டு காசுகள் இருக்கின்றன. அவர்கள் தங்களது பெயர் ராமோஜி, லக்ஷ்மோஜி என்று கூறி " உடனே ராமடாஸரை  விடுதலை செய்யவேணும்" என ஆணையிட்டனர்.
நாணயங்களைப் பார்த்த நவாப் அதில் ராமபிரானின் உருவத்தைப் பார்த்து ராமதாஸரின் பக்தியை உணர்ந்து அவரை விடுவித்து அவரிடம் மன்னிப்பு வேண்டினான். "பத்ராசலம் முதலிய இடங்கள் இனி உங்கள் வசமாகட்டும், அவட்ட்ருக்கு இனி நீங்கள் கப்பம் கட்டத்தேவைஇல்லை", என்றும் கூறினான்.

ஆககவியான ராமதாஸர் இருபத்துநாலு (24) எழுத்துக்கள் கொண்ட காயத்ரி மந்த்ரத்தைப் போல இருபத்து நாலாயிரம் (24000) ஸ்லோகங்கள் கொண்ட ஸ்ரீராமாயனத்தை இருபத்து நாலு (24) சுலோகங்களில் சுருக்கமாகப் பாடினார்.
தமது இறுதிக்காலம் வரை பத்ராசலராமனுக்கு கைங்கர்யம் செய்து பரமபுருஷனுடைய திருவடியடைந்தார் ராமதாஸர்.

பத்ராசல க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று


.
ஸ்ரீ அஹோபிலம்

அஹோ வீர்யம் அஹொசௌர்யம் அஹோபாஹுபராக்ரம:

நாரஸிம்ஹம் பரம் தைவம் அஹோபலம் அஹோபலம்

எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்ற  ஆழ்வார்களது மங்களாசாஸனம் பெற்ற நூற்றெட்டு திவ்யதேசங்களில், ஆந்திரப்ப்ரதேசத்தில் அமைந்துள்ள நரசிம்ஹ க்ஷேத்ரமான ஸ்ரீ அஹோபிலம்
திருமங்கையாழ்வாரது  பெரிய திருமொழி முதற்பத்து- ஏழாம் திருமொழிப் பாசுரங்களால் மங்களாசாஸனம் செய்யப்பெற்று "திருச்சிங்கவேள் குன்றம் "
என்று போற்றப்படுகிறது.

பகவானது திருவதாரங்கள் பலவற்றில் நரசிம்ஹ அவதாரத்திற்கு ஒப்பட்ட்ரதோர் தனிச் சிறப்பு உண்டு. ஒரே சமயத்தில் மனித உருவையும் சிங்க உருவையும் இணைத்துக் காட்டியது போல், தனது ஸர்வாந்தர்யாமித்வத்தையும் , ஸர்வ வியாபகத் தன்மையையும் இவ்வதாரத்தில் ஒரு சேரக் காட்டியருளினான் எம்பெருமான். ஒரே சமயத்தில் பக்தனான ப்ரஹ்லாதன் மீது கருணைப் பார்வையினைப் பொழிந்தும், அசுர வேந்தனான இறநியனைத் தன உக்ரமான பார்வை ஒன்றாலேயே உருக்குலைய வைத்ததும் இந்த அவதாரத்தில் தான்.

நல்லோரை நலியும் தீயோரை அழித்தொழிக்க வெளிப்படுத்திய அளப்பரிய ஆற்றல் ! பக்தனான ஒரு பாலகன் தன கையால் காட்டிய இடத்திலிருந்தும் விரைந்து வந்து காத்தருளும் பேரன்பு! எங்கும் நிறைந்து உறையும் தன்மை! 'அக டித கலனா ஸாமார்த்யம் ' எனப்படும் செராதவட்ட்ரையும் சேர்த்துவைக்கும் திறல்! இது போன்ற தன மகிமைகள் பலவற்றைப் பிரகடனப்படுத்திய சிங்கப்பிரானின் சீர்மை குறித்து நம்மாழ்வார் , 'எங்கும் நாடி நாடி, நரசிங்க!' என்றழைத்து உருகுகிறார். 'ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்' என்று ஸ்ரீஸுகரும் ஸ்ரீமத் பாகவதத்தில் இந்த வைபவத்தைக் கொண்டாடுகிறார்.


ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தில் 'நாரசிம்ஹ வபு: ஸ்ரீமான்' என்ற திருநாமம் ஸ்ரீ லக்ஷ்மீ நருசிம்ஹனை அழகியசிங்கப்பெருமாளாக எடுத்துக் காட்டுகிறது. இதனையே திருமழிசைப்பிரானும், 'அழகியான்தானே! அறியுருவம்தானே!' என்று அறுதியிடுகிறார். வேயர் புகழ் வில்லிபுத்தூர்க்கோன் கோதையும் 'கோளரி மாதவன் ' என்றும் 'அரிமுகன் அச்சுதன்' என்றும் கல்யாணக் கனவில் தான் கண்ட கண்ணனின் அழகை சிங்கத்திருவுருவுடன் சேர்த்து அனுபவிக்கிறாள்.

ஸ்ரீ ருக்மணிப் பிராட்டியாரும் கண்ணனுக்கு அனுப்பிய தன் சரணாகதிக் கடிதத்தில் 'காலே ந்ருசிம்ஹ!' என்றழைத்து, "பக்தனுக்காக சடக்கென நரசிங்கமாய்த் தோன்றிக் காத்தருளியது போல என்னையும் காலம் தாழ்த்தாது கடிதொடிவந்து கைக்கொள்ளவேனும்!" என்று பிரார்த்திக்கிறாள். அப்போது அவள் சிந்தையுள்ளே சிங்கப்பிரானே திகழ்கின்றான்.

உக்கிரமான அவனது அறியுருவம்கூட பக்தநிடத்தில் அவன் கொண்ட பேரன்பின் வெளிப்படன்றோ!

வெட்வேத்யனான ஸர்வேஸ்வரனின் வுஹமூர்தியான ஸங்கர்ஷண ஸ்வரூபமே நரஸிம்ஹனாய்த் தோன்றியதை ஸ்ரீந்ருஸிம்ஹபூர்வதாபிநீ
உபநிஷத் பரக்க உரைக்கின்றது.திருமால் தன் நாபிக்கமலத்தில் நான்முகனைப் படைத்தபின் அவன் முன்னே தனது திவ்யமான நரசிம்ஹ ரூபத்தில் தோன்றி ,
" உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் பத்ரம் மருத்யு - ம்ருத்யும் நமாம்யஹம் "

என்ற நரஸிம்ஹ அனுஷ்டுப் மந்த்ரத்தைக் கொண்டு, தன்னைக் குறித்துத் தவம் செய்து உலக சிருஷ்டிக்கு ஆதாரமான நான்மரைகளைப் பெரும் திறலடைய உபதேசித்தார்.

இந்த நரஸிம்ஹ அனுஷ்டுப் மந்திரம் எம்பெருமானுடைய எண்ணிறந்த திருக்கல்யானகுனங்களில் ஒன்பது மஹா குணங்களை உணர்த்தும் வண்ணம் 1. உக்ர நரஸிம்ஹர் ,  2. வீர நரஸிம்ஹர்,  3.  ஸர்வ வ்யாபக நரஸிம்ஹர்,  4. ஜ்வாலா நரஸிம்ஹர்,  5. ஸர்வஜ்ஞ நரஸிம்ஹர்,  6. ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹர்,  7. பீஷண நரஸிம்ஹர், 8. மங்கள நரஸிம்ஹர், 9.ஸம்ஸார நரஸிம்ஹர் ஆகிய நவ நரஸிம்ஹர்கலை நம் கண்முன்னே எழுந்தருளச் செய்கிறது.

ஞானக் கண்ணுக்கு இலக்காகும் இந்த நரஸிம்ஹர்களும் நம் ஊனக்கண்ணுக்கும் இலக்காயின்  எத்தனை இனிது! அதற்காகவே, பின்னானார் வணங்கும் ஜோதியாய் - அர்ச்சாமூர்தியாய் - இந்த நவ நரஸிம்ஹர்களும் 'ஸ்ரீ அஹோபிலம்' என்ற திவ்யதேசத்தில் சேவை ஸாதித்தருல்கின்றனர்.

மார்க்கம் : மிகப்புராதனமான இந்த நரஸிம்ம திவ்யக்ஷேத்ரம் ஆந்திராவில் நந்தியால் ரயில்வே நிலையத்திலிருந்து 68 கி.மீ. தூரத்திலும், அர்லகட்டா தாலுக்கா தலைமையிடத்திலிருந்து 24 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. நந்தியாலிலிருந்து அர்லகட்டா வழியாகவோ அல்லது சென்னை - மும்பை மார்கத்தில் உள்ள கடப்பா ரயில் நிலையத்திலிருந்து 64 கி.மீ. தூரத்தில் உள்ள அர்லகட்டாவிர்க்கு வந்தோ அங்கிருன்துன் 32 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ அஹோபிலத்தினை பேருந்துப் பயணத்தின் வாயிலாக வந்தடையலாம். தான் (Dhone )ரயில் நிலையத்திலிருந்து பங்கனபள்ளி, கொஇல்குண்ட வழியாகவும் இந்த திவ்யதேசத்தை அடையலாம்.

பெயர்க்காரணம் : இந்த திவ்ய தேசம் அஹோபிலம், அஹோபலம், சிங்கவேள்  குன்றம், நவ நரஸிம்ஹ க்ஷேத்ரம், பஞ்சக்ரோஸ  க்ஷேத்ரம் (பத்து மைல் / 16 கி.மீ. சுற்றளவுப்ப்ரதேசம் )  வேதாசலம், கருடாச்சலம், வீரக்ஷேத்ரம் என்ற பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இங்குள்ள கல்வெட்டுகளில் ' அஹோபலம்' என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஹோ வீர்யம் அஹோ சௌர்யம் அஹொபாஹூ பராக்கிரம

நாரஸிம்ஹம் பரம் தைவம் அஹோபலம் அஹோபலம்

என்ற நரஸிம்ஹ ப்ரபத்தி ஸ்லோகத்தில் தேவர்கள் சிங்கப்பெருமானது வலிமையைக் குறித்து 'அஹோபலம்' (என்னவொரு வலிமை) என்று வியந்து துதித்த அச்சொல்லே இந்தக்ஷேத்ரத்திர்க்குப பெயராகியது என்பர்.

தன்னைக் குறித்துத் தவம் செய்த கருட பகவானுக்கு இந்த மலையின் அகன்ற (அஹோ) குகையில் (பிலத்தில்)  பகவான் நரஸிம்ஹ திவ்ய மங்கள ரூபங்களில் ஸேவை ஸாதித்ததால் இதற்க்கு "அஹோபிலம்" என்ற பெயர் ஏற்பட்டதாகவும் வரலாறு.

புராணப் பெருமைகள் :

   ஆந்திரப்பிரதேசம் கர்நூலில் தொடங்கி சித்தூர் மாவட்டம் வரை நெடுகவிரிந்த 'நல்லமலா' என்றழைக்கப்படும் நல்லமளைத்தொடர் ஆதிசேஷா வடிவாய் திருமலை திருப்பதியைத் தன தலைப்பகுதியாகவும் ஸ்ரீ அஹோபிலத்தைத் தன மையப்பபகுதியாகவும் , ஸ்ரீ சைலத்தைத் தன வாழ் பகுதியாகவும் கொண்டது என்ற புராணப் பிரசித்திபெட்ட்றது.

'ஸிம்ஹாச்ச்ள மஹாத்ம்யம் ' என்கிற ஸிம்ஹாச்ச்ள ஸ்தலபுராணமும் இப்பூவுலகில்  மிகுந்த முக்யத்வம்  வாய்ந்த நான்கு திவ்ய க்ஷேத்ரங்களில் அஹோபிலமும் ஒன்று என அறுதியிடுகிறது. இந்த திவ்யதேசத்தின் ஸ்தலபுராணம் பதிநேன்புரானங்களில் ஒன்றான ப்ரஹ்மாண்ட புராணத்தின் பத்து அத்தியாயங்களில் விளக்கப் பெட்ட்ருள்ளது. அவையாவன : 1. இந்த திவ்ய தேசத்தின் மேன்மை 2. பகவத் தரிசனத்திற்காக கருடன் செய்த தவம் 3. க்ஷேத்ரத்தில் உள்ள தீர்த்தங்களைப் பற்றிய விவரங்கள் 4. இந்த நரஸிம்ஹ க்ஷேத்ரத்தில் பர்மா, பரத்வாஜ - கோபில ரிஷிகள், பரசுராமர் ஆகியோர் செய்த தவம் 5. ஜெயா- விஜயர்கள் ஹிரண்யாக்ஷ - ஹிரன்யகசிபுக்கலாக அசுரப்பிரவிஎடுத்த வரலாறு, 6. ஸ்ரீ ப்ரஹ்லாதாழ்வானின் பிறப்பு , தந்தையான இரணியன் அவனுக்கிழைத்த துன்பங்கள் 7. பாலகன் ப்ரஹ்லாதனுடைய  உறுதியான பகவத்பக்தி, அவனுக்காகத் தூணிலிருந்து வெளிப்பட்ட சிங்கப்பிராநிரனியன் மார்வம் கீண்டாமை 8. சிவனுடைய சரபரூபத்தை சிங்கப்பெருமான் அழித்ஹோழித்தமை , 9. பனாசினி என்ற புண்ய நதியினை இந்த திவ்யக்ஷேத்ரத்திற்குகே கொண்டுவர கடும் முயற்ச்சிகள் செய்த பைரவமூர்த்தி இந்த ஸ்தளத்திற்குக் காவல் தெய்வமாக அனா சரித்திரம் , 10. சாஸ்திர விதிகளைக் கடைபிடிக்க இயலாத ஒரு பாமரனும் கூட பக்தியுடன் இங்குள்ள ஸ்ரீலக்ஷ்மீ நரஸிம்ஹனை வழிபட அதனால் மோக்ஷ உலகினையே அடையமுடியும் என்கிற பேருண்மை ஆகியவற்றை விரிவாக விளக்குகிறது ப்ரஹ்மாண்டபுரானம் .

ஸந்நிதியின் அமைப்பு :

ஸ்ரீ அஹோபில டியதேசத்தை அடைந்தஉடன் மலையடிவாரத்தில் உள்ள கோயிலில் ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப் பெருமானின் ஸந்நிதி அமைந்துள்ளது. இது 'சின்ன அஹோபிலம்' என்றும் 'திகுவ திருப்பதி' என்றும் அழைக்கப்படுகிறது.

இங்கிருந்து 8 கி.மீ. தொலைவில் மேல அஹோபிலம் எனப்படும் மலை மேல் உள்ள கோயிலுக்கு வாகனம்களில் செல்லமுடியும். கடல் மட்டத்திலிருந்து 2800 அடிக்கு மேல் உள்ள இந்த மேல் அஹோபிலத்திற்க்குச் செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சம் பசுமையான வனப் பிரதேசங்களும் , மனங்கவர் மலைகளும், அவற்றின் சுனைகளிலிருந்து பொங்கிப்பாயும் அருவிகளும் நம்மை வியக்கவைக்கின்றன. ஆங்கே, செழுமையும் வனப்பும் மிக்க வேதாத்ரி, கருடாத்ரி என்ற இருமலைச் சிகரங்களின் இடையே பவநாசினி என்ற புன்யதீர்த்தம் அந்தர்வாகினியாகப் பாய்கிறது.

மேல அஹோபிலம் 'நகரி நிதினி', ஏகுவ திருப்பதி', பெத்த (பெரிய) அஹோபிலம்' என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. பெரிய திருவடி, விநதாசுதன் , வைனதேயன், பக்ஷிராஜன், கருத்மான் என்றெல்லாம் போட்ட்ரப்படும் கருடன் தனது நாதனான பகவான் ஸ்ரீ மன்நாராயணனது ஆவேச அவதாரத்தை - பக்தவாக்ய பரிபாலகனாய், பர்மா இரணியனுக்குக் கொடுத்தவரம் பழுதாகாவண்ணம்  அவதரித்தருளிய நரஸிம்ஹ ரூபத்தைத் தரிசிக்கும் வேட்கையுடன் இந்த மலையில் நெடிய தவம் புரிய, அவருக்கு இங்குள்ள பெரிய மலைக்குகையொன்றில் ச்வயம்புமூர்த்தியாக ஸ்ரீ அஹோபில நரஸிம்ஹப பெருமான்  காட்சிகொடுத்து, பிற்காலத்தவரான நம்போல்வாரும் கண்ணாரக் கண்டு உருகும் வண்ணனம் எழுந்தருளியிருக்கிறார்.

பின்னும், கருடனுக்குத் தன ஒலியுருவைக் காட்டியருல்வதர்க்காக ஸத்ஸ்வரூப மகாபுருஷ்ணாகிற பகவான் அவரை அன்புடன் அழைக்க, அங்கிருந்து பத்துக்கல் தொலைவில் உள்ள மலைக்குகைக்கு மகிழ்வுடன் சென்ற கருடாழ்வானுக்கு ஜ்வாலா நரஸிம்ஹனாகக் காட்சி தந்தருளினார். :அஹோபிலமே அஹோபலம் அடியேனுக்கு!" என்று குதூஹலத்துடன் துதித்தான் 'வினைதைதன் சிறுவனான' வைநதேயன். 'தெய்வமல்லால் சொல்லவொன்னா சிங்கவேள் குன்றமே!' என்ற மங்கை மன்னன் பாசுரவரிக்கு எடுத்த்க்கட்டி அமைந்துள்ளது இந்த பவித்ரச்தலம்.

ஸத்யமும் தர்மமும் எங்கும் நிறைந்திருந்த மிகப்பழங்காலத்தில் இந்த அஹோபிலம்க் குகையின் ஒரு பகுதியிலிருந்து, பசும்புல் கூடப்பற்றி அறியும்படியான உக்ரமான பெருவெப்பம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது என்றும், அதனால் இக்குகையின் அந்த வாயில் பெரும் கற்பாறையினால் அடைக்கப்பட்டது என்பதும் கர்ண பரம்பரைச் செய்தி.

கருடன் தவம் புரிந்ததால் கருடாச்சலம் என்ற பெயர் பெற்ற இம்மலைக்கு வேதாசலம் என்ற பெயரும் உண்டு. ஸோமகன் என்ற அரசன் ப்ரஹ்மனிடமிருந்து நான்மரைகளைக் கவர்ந்து செல்ல அவற்றை மீட்க வேண்டி நான்முகன் இத்தளத்தில் எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப பெருமானை வேண்ட, அவர் அவ்வசுறனைக் கொன்று வேதங்கள பிரமனுக்கு மீட்டுக் கொடுத்ததால் இம்மலைக்கு /வேதாசலம்' என்ற பெயரும் ஏற்பட்டது என்பர். ப்ரஹ்மாண்ட புராணத்தைத் தவிர கூர்மபுராணம், பாத்மபுராணம், விஷ்ணுபுராணம்-ஏன் -ஐந்தாவது வேதம் எனப்போற்றப்படும் இதிகாசமான மகாபாரதத்திளும்கூட இந்த அஹோபில க்ஷேத்ரத்தின் வைபவமும் இங்கு எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப பெருமானின் மகிமைகளும் பரக்க உரைக்கப்பெற்றுள்ளன.

ஸ்ரீ ப்ரகுலாதாழ்வானின் பக்திச் சரித்தரமும், அவனிடத்து அபசாரப்பட்ட அவனது தந்தையான வாளெயிற்று அவுணன் ஆணவத்தால் தூன்புடைப்ப ஆங்கோர் ஆளுகிர்ச்சிங்கவுருவாய் சிந்தி பறக்கச் சீறிவந்து அந்தியம்போதில், அரண்மனைப்படியில் , கோளரி தன மடி மேல் இட்டு கூர்ணகன்கொண்டு அவன் மார்வகம் கீண்ட வரலாறும் அனைவரும் அறிந்ததே!

அந்த ஈரானிய வதைக் காட்சியினை தத்ரூபமாக இன்று நாமும் கண்டு மெய் சிலிர்க்கும்படியாக கீழ் அஹோபிலத்தில் எழுந்தருளியிருக்கும் உக்ர நரஸிம்ம  உத்ஸவமூர்த்தி பத்துத் திருக்கரங்களுடன் ஸம்ஹாரமூர்த்தியாகக் காட்சி தருகிறார்.

அகன்ற விழிகளில் கோபம் கொப்பளிக்க , அனலாய்க் கிளர்ந்தெழும் ஆவேசத்துடன் தனது மடியில் இரணியனைக் கிடத்தி ஒரு கரத்தால் அவனது தலையையும், மறு கரத்தால் இரு கால்களையும் நெருக்கிப்பிடிக்க, மட்டற்ற இரு கரங்கள் அவன் வயிற்றினைக் கிழிக்க, அடுத்த இரு கரங்கள் குருதியைக் குடிக்க, மேலெழுந்த இரு கரங்கள் துஷ்டனிக்ரஹ திவ்யாய்தங்கள் தரித்திருக்கும் கட்சி தந்து நம்மிடத்தேயுல் அநாதிகால பாபவாசனைகலாக்கி அசுரனை ஒழித்தருள்கிறார்.

நல்லோரை நலியும் வலியோரை நடிங்கவைப்பதாய்த் தனது ரௌத்ர ரூபம் இருப்பினும், அது ஆறாத காதல் கொண்ட அடியார்களது கண்களில் படாமலிருக்க, தனது திருமேனியை அலங்கரிக்கும் திவ்ய வஸ்த்ர-ஆபரனங்களுக்கிடையே அதனை மறைத்தக் கொண்டு ஸேவை ஸாதிக்கிறேன் போலும் அழகிய சிங்கப்பெருமான்.

ஸ்ரீ அஹோபில திவ்ய தேச ஸ்தலபுராணம் காட்டும் நரஸிம்ஹர்கலை வரிசையாக நாம் இங்கு அனுபவிப்போம் இனி.

1. ஸ்ரீ ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப பெருமான்

அஹோபில மலையடிவாரத்தில் உள்ள கோயிலில் ப்ரஹ்லாத வரதனான ஸ்ரீ லக்ஷ்மீ நரஸிம்ஹர் கிழக்கு நோக்கிய திருமுகமண்டல்த்துடன் ஸேவை ஸாதிக்கிறார். மூலமூர்த்தியின் இடப்புரத்தில்பாவன நரஸிம்ஹரம், அவருக்கு முன் புறத்தே உபய நாச்சிமார்களுடன்  கூடிய ப்ரகுலாதவரதப் பெருமானும் உத்சவமூர்த்திகளாக எழுந்தருளியிருக்கின்றனர். அவர்களுக்கு முன்புறம் புறப்பட்டு கண்டருளும் மூர்த்தியாக பத்துத் திருக்கரங்களுடன் கூடிய ஜ்வாலா நரஸிம்ஹப பெருமான் ஸ்ரீதேவி,பூதேவி ஸமேதராக எழுந்தருளியிருக்கிறார். ஸ்ரீ அஹோபில மடத்தினை ஸ்தாபித்தருளிய ஒன்றான ஸ்ரீ ஆதிவன்சடகோப ஜீயர் ஸ்வாமியும் அருகிலிருந்து பெருமாளை ஸேவிக்கும் திருக்கோலத்தில் தெற்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் அர்ச்சா திருமேனியில் ஸேவை ஸாதிக்கிறார்.

2. ஸ்ரீ பார்கவ நரஸிம்ஹப பெருமான்

 இங்கு முதலில் ஸேவித்த கீழ் அஹோபிலம் ப்ரஹ்லாத வரத நரஸிம்ஹப பெருமான் ஸந்நிதி இலிருந்து 2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த பார்கவ
நரஸிம்ஹப பெருமான் ஸந்நிதி . அஹோபில க்ஷேத்திர மலையொன்றில் 'பார்கவராமர்' எனப்படும் பரசுராமர், நரஸிம்ஹ பகவானைக் கானத்தவம் செய்த இடத்தில் அவரது பெயரால் 'பார்கவா தீர்த்தம்' என்றழைக்கப்படும் பவித்ரமான நீர்நிலை உள்ளது. அதனருகே அமைந்துள்ள இந்த ஸந்நிதியில் பார்கவராமனாகிய பரசுராமனுக்குக் காட்சி அளித்த சிங்கப்பிரான் பார்கவா நரஸிம்ஹன் என்ற திருநாமத்துடனே ஸேவை ஸாதிக்கிறார்.

3. ஸ்ரீ யோகானந்த நரஸிம்ஹப் பெருமான்

கீழ் அஹோபிலத்திலிருந்து தென்கிழக்கே 2 1/2 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது இந்த ஸந்நிதி . ஹிரன்ய ஸம்ஹாரத்திற்க்குப் பிற நரஸிம்ஹர்கு தன பக்தனாகிய பாலகன் ப்ரகுலாதனுக்கு, பல்வேறு யோக நிலைகளிலிருந்து கொண்டு, தன்னை எப்போதும் நெஞ்சில்நிலை நிறுத்தி ஆனந்தமாகத்யநிக்கும் முறைகளைக் கற்பித்த நரஸிம்ஹப பெருமானாக ஸேவை ஸாதித்தருள்கிறார்.

4. மேல அஹோபில நரஸிம்ஹப் பெருமான்


கீழ் அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் மேல் அஹோபிலத்தில் உழல கோயிலில் நரஸிம்ஹப பெருமான் ஸ்வயம்பு மூர்த்தியாக மழைக் குகையின் உட்பாறையில் புடைப்புச் சிற்ப வடிவில் ஸேவை ஸாதித்தருள்கிறார். மலைக் குகையின் உட்புறமே இங்கே கர்பக்ரஹமாக அமைந்துள்ளது. சக்கரத்தாழ்வாரும் இங்கு எழுந்தருளியுள்ளார். வேடுவர்களின் குலதேய்வமான ஸ்ரீ மஹாலக்ஷ்மி , 'ஸ்ரீ செஞ்சுலக்ஷ்மி ' என்ற திருநாமத்துடன் கர்பக்ரஹத்தின் அருகே உள்ள இடைக்கழியின் அறையில் கோயில் கொண்டுள்ளார். அருகில் காலியான அரை ஒன்றுள்ளது. ஸ்ரீ வைகுண்டபதியான ஸ்ரீ மகாவிஷ்ணுவை அனைத்து அவதார காலத்திலும் 'அகலகில்லேன் இரையும்!' என்று உலகோர்க்கு உணர்த்தும் வண்ணம் ஜகந்மாதாவான ஸ்ரீ மஹாலக்ஷ்மி இங்கு ஸாந்நித்யம் செய்தருல்வதாக ஐதிஹ்யம் .

இந்த மேல அஹோபிலக் குகைகொஇலில் எழுந்தருளியிருக்கும் நரஸிம்ஹப் பெருமானே இந்த திவ்யதேசத்தின் ப்ரதான மூர்த்தியாவார். இவருடைய உத்ஸவமூர்த்த்தி கீழ் அஹோபில லக்ஷ்மீ நரஸிம்ஹப் பெருமானின் ஸந்நிதியில் எழுந்தருலிஉள்ளார்.

5. ஸ்ரீக்ரோடகர நரஸிம்ஹப் பெருமாள் :

மேல அஹொபிலத்தின் பிரதானக் கோவிலிலிருந்து 1  கி.மீ.தூரத்தில் மலையில் உள்ள நரஸிம்ஹ க்ஷேத்ற்றத்தில் கரோடகார நரஸிம்ஹப் பெருமாள் எழுந்தருலிஉல்லார். 'க்ரோட' என்ற சொல் வராஹத்தைக் குறிக்கிறது. எனவே வராஹ வதனத்துலன் எழுந்தருளியிருந்து கொண்டு பெரிய ப்ராட்டியாருலன் ஸேவை ஸாதித்தருளும் இந்த சிங்கப்பிரானுக்கு 'க்ரோடகர' நரஸிம்ஹர்' என்றே திருநாமம்.
வராஹ காண்டத்தில் உள்ள நாராயண ஷடாக்ஷர ஜபபாராயனத்தை இந்த கோவிலில் தொடர்ந்து மூன்று நாள்கள் செய்து வர ஆத்மக்ஷேமத்திற்க்கான நற்பலன்கள் பெருகுவது இக்கோவிலின் தனிச் சிறப்பு என்பர்.

6. ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹப் பெருமான்

மேல அஹோபிலத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ள மற்றொரு திருத்தலம் ஸ்ரீ காரஞ்ச நரஸிம்ஹப் பெருமான் ஸந்நிதி . இது கீழ் அஹொபிலத்திர்க்குச் செல்லும் பாதையிலிருந்து ஒரு பர்லாங்க் தூரத்தில் அமைந்துள்ளது. காரஞ்ச வ்ருக்ஷத்தின் கீழ் எழுந்தருளியிருப்பதால் இங்கு எம்பருமானுக்கு 'நரஸிம்ஹர் ' என்று திருநாமம். இங்கு சிங்கப்பெருமான் ஒரு திருக்கரத்தில் 'ஸார்ங்கம் ' எனும் வில்லினையும், மற்றொரு திருக்கரத்தில் ஸுதர்ஸன சக்ரத்தையும் தரித்துக்கொண்டு , வீற்றிருந்த திருக்கோலத்தில் ஸேவை ஸாதிக்கிறார்.

இங்குள்ள புன்யதீர்த்தம் 'பைரவகுண்டம்' என்று அழைக்கப்படுகிறது. துர்வாஸ மகரிஷியால் சபிக்கப்பட்ட கோபிலரிஷி என்ற முனிவர் இங்கு வந்து பெருமானைக்குரித்து பக்தியுடன் தவம் செய்து பிரார்த்திக்க, இந்தக் காரஞ்ச மரத்தின் கீழ் அவருக்கு எம்பெருமான் நரசிம்ஹ வடிவில் தரிசனம் கொடுக்க, அதனால் சாபம் நீங்கப் பெட்டரு உய்வடைந்தார் என்பது இத்திருத்தலத்தின் வரலாறு.


7. ஸ்ரீ மாலோல் நரஸிம்ஹப் பெருமான்

மேல் அஹோபிலம் பிரதான ஸந்நிதியான சென்ச்லக்ஷ்மித் தாயாருடன் ஸேவை ஸாதிக்கும் நரஸிம்ஹப் பெருமான் கோவிலிலிருந்து 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மற்றொரு முக்யமான ஸந்நிதி ஸ்ரீ மலோலப் பெருமான் ஸநிதி.சிங்கப்பிரான் கருணையே உருவான் ஸ்ரீ மகாலக்ஷ்மியுடன் கூடியவனாய் பக்தர்களைக் குளிரக் கடாக்ஷித்தருல்கிறான் இங்கே! 'மா' என்பது பெரிய பிராட்டியாருக்குத் திருநாமம். 'லோலன்' என்ற சொல்லுக்கு லீலாரசம் அனுபவிப்பவன் என்பது பொருள். 'அலகிலா விளையாட்டுடையனான'  அவன் இந்த லீலாவிபூதியின் தனது பக்தர்களைப் பக்குவப்படுத்தி இன்புறும் விளையாட்டினை ஸ்ரீ மகாலக்ஷ்மித் தாயாருடன் சேர்ந்து அனுபவிப்பதற்காக ' மாலோலன்' என்ற திருநாமத்துடன் இங்கு ஸேவை ஸாதித்தறுலள்கிறான் என்பதை உணர்கையில் உள்ளம் உருகுகிறது.

இந்தப் பெருமானின் உத்சவமூர்த்தியான ஸ்ரீ நரஸிம்ஹப் பெருமான் ஸ்ரீ மத அஹோபிலமடத்தினை ஸ்தாபித்தருளிய ஒன்றான ஸ்ரீ ஆதிவண்சடகோப ஜீயர் ஸ்வாமியின் நித்ய திருவாராதனத்தில் எழுந்தருளியிருந்த காலம் தொடங்கி அந்த ஆசார்ய பரம்பரையில் தொடர்ந்து வரும் ஸ்ரீமத் அழகியஸ்ருங்கர்கள்  அனைவரது நித்ய திருவாராதனத்திலும் எழுந்தருளியிருந்து கொண்டு , விசேஷமாக இன்றளவும் அவர்களது சிஷ்யபரிபாலன மங்களாசாஸன யாத்திரைகளிலும் கூடவே எழுந்தருளி ' ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி , வழுவிலா அடிமைகளைப் பெற்று' செல்லுமிடமெல்லாம் திவ்ய \தேசமாக்கியருளும் பெருமை பெற்றவர்!.

8. ஸ்ரீ ஜ்வாலா நரஸிம்ஹப் பெருமான்

ஸ்ரீ மாலோல நரஸிம்ஹப் பெருமான் கோயில் கொண்டிருக்கும் மேல அஹொபிலதிலிருந்து 4 கி.மீ.தூரத்திற்கு மேல் நோக்கிச் செல்லும் மலைமுகட்டில் அமைந்துள்ள ஆச்சர்யகரமான இந்த ஸந்நிதியில் எழுதருளியுள்ளார் ஸ்ரீ ஜ்வாலா நரஸிம்ஹப் பெருமான். 'அசசாயா மேருமலை' என்றழைக்கப்படும் இந்த மலையில் தான் வெஞ்சினம் அனலாய்க் கிளர்ந்தெழ எம்பெருமான் ஆளரியாய்த் தோன்றி அசுர வேந்தன் இரணியனைக் கிழித்தெறிந்த சரிதம் நடந்ததாகக் கருதப்படுகிறது. இங்கு உக்ர நரஸிம்ஹப் பெருமான் மூன்றடி உயர மூர்த்தியாக 'ஜ்வாலா நரசஸிம்ஹன்'      என்ற திருநாமத்துடன் பத்துத் திருக்கரங்களுடன் ஸேவை ஸாதிக்கிறார்.

மேர்கரங்கள் சங்கசக்ரங்களை தரித்திருக்க, இரு கைகள் இராணியனைத்தன்
மடியில் கிடத்தி நெருக்கிப் பிடித்திருக்க இரு கரங்கள் ஆவேசமாய் அவனது குதலி பிரித்தெறிய, மற்ற திருக்கரங்கள் துஷ்டநிக்ரஹ திவ்யாயுதங்களை ஏந்தியிருக்க, இடது திருவடியை மடித்தும் வலது திருவடியைத் தொங்கவிட்டுக் கொண்டும் ஸுகாஸனத்தில் வீற்றிருந்தருள்கிறார்.

அருகிலேயே வலப்புறத்தில் ஸ்ரீப்ரஹலாதாழ்வான் கூப்பிய கரங்களுடன் பாலகனாய்ச் சிறு உருவில் வணகி நிற்க, நரஸிம்ஹப் பெருமாநின் ஸநிவேசம் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

9. ஸ்ரீ பாவனா நரஸிம்ஹப் பெருமான்

மேல அஹஹோபிலத்திளிருந்து 6 கி.மீ. தொலைவில் பாவனா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த ஸந்நிதியில் அந்த நதியின் பெயரையே தன திருநாமத்துடன் இணைத்தக் கொண்டு பாவனா நரஸிம்ஹராய் ஸே வை ஸாதித்து நம்மை பவித்ரமடையச் செய்கிறான் எம்பெருமான்.

உக்ர ஸ்தம்பம் :

மேற்சொன்ன ஒன்பது திருத்தலங்களைத் தவிர, மேல அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் தூண் போன்ற பெரும்பாறை அம்மளையையே இரண்டாகப் பிளப்பது போல் அமைந்துள்ளது. இந்தப் பாறைத் தூநிளிருந்துதான் சிங்கப்பிரான் வெளிப்பட்டார் என்பது நெடுங்கால நம்பிக்கை. சங்கம், சக்ரம், திருமண்காப்பு ஆககியவை இந்தப் பாரைத்தூணில் பொரறிக்கப்பெற்றுல்லன.

ப்ரஹ்லாத மேடு:

உக்ர ச்தம்பத்திர்க்கும் மேல் அஹோபிலத்துக்கும் இடையே அமைந்துள்ள குகையொன்றில் உள்ள ப்ரஹ்லாத நரஸிம்ஹப் பெருமாநின் சிறு ஸந்நிதி ப்ரஹ்லாத மேடு என்றழைக்கப்படுகின்றது . இந்தச் சிறுகுகையில் ஸ்ரீ ப்ரகுலாதாழவான் எழுந்தருளியுள்ளான்.

அஹோபில க்ஷேத்ரத்தின் தீர்த்தங்கள் :

1. ரக்தகுண்டம் :

இந்த திவ்யக்ஷேத்ரத்தில் உள்ள பல புண்ய தீர்த்தங்களில் ரக்தகுண்டம் என்கின்ற தடாகம் மிகவும் முக்யத்வம் வாய்ந்தது.சிங்கப்பிரான் இரணியனைக் கொன்றழித்த பின்னர் தன திருக்கரங்களை இத்தடாகத்தில் அமிழ்த்தி சுத்தம் செய்து கொண்டதாய்க் கருதப்படுகிறது.

2. லாஞ்ச கோனேரி :

பார்கவா நரஸிம்ஹப் பெருமான் ஸந்நிதிக்கு வடகிழக்கில் 3 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள தீர்த்தம் லாஞ்ச கோனேரி என்றழைக்கப்படுகிறது. முற்காலத்தில் ராஜசபை நடனமாது ஒருத்தி அஹோபில திவ்யதேசத்தில் நரஸிம்ஹப் பெருமானின் திருவடிகளில் வீழ்ந்து, தனதுபாவங்களை மன்னிக்க வேண்டி மன்றாடிப் பிரார்த்தித்தாள். அப்போது எம்பெருமானது ஆணைப்படி இத்தடகத்தினை ஏற்படுத்தி, அதனால் தன பாபங்கள் நீங்கப்பெற்றாள் என்பது வரலாறு.

3. ராம தீர்த்தம் :

கீழ அஹோபிலத்திளிருந்து 8 கி.மீ. தொலைவில் ராமதீர்த்தம் என்கின்ற திவ்யதடாகம் அமைந்துள்ளது. சக்ரவர்த்தித் திருமகனான ஸ்ரீராமன் இந்த திவ்ய தடாகத்தில் நீராடி அனுஷ்டானங்களைச் செய்ததால் இந்தத தீர்த்தம் அவரது திருப் பெயராலேயே வழங்கப்படுகிறது.

4. பவானி தீர்த்தம் :

ஸ்ரீ அஹோபில திவ்யதேசத்தின் பிரதானமான தீர்த்தம் பவநாசினி ஆகும். ஸம்ஸாரமாகிறது பவத்தை நாசம் செய்து முக்தி அடைவதர்க்கான தகுதியை
உண்டாக்குவதால் இதற்க்கு பவநாசினி என்று பெயர். இந்தத தீர்த்தத்தில் பதிமூன்று புன்யதீர்த்தங்களும் கலந்துள்ளன.அவை நரஸிம்ஹ தீர்த்தம், ராம தீர்த்தம், லக்ஷ்மண தீர்த்தம், பீம தீர்த்தம், சங்க தீர்த்தம், வராஹ தீர்த்தம், ஸுதா தீர்த்தம், தொர தீர்த்தம், கஜ குண்டம், விநாயக தீர்த்தம், பிரவ தீர்த்தம், ராஜாத குண்டம் ஆகியன. இவையனைத்தும் பவ நாசினியின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

இத்திஉத்தலத்தின் மற்றைய  சிறப்புக்கள் :

ஸ்ரீ அஹோபிலமடத்தின் ஏழாவது ஜீயராக எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் அழகிய ச்ருங்கர் இங்குள்ள வேடுவர்களின் குலதெய்வமான சென்சுலக்ஷ்மித்தாயாருக்கும் எம்பெருமானுக்கும் நடந்த திருக்கல்யாணத்தை 'வாசந்திகா பரிணயம்' என்கிற தமது ஸம்ஸ்க்ருத நாடகத்தில் விவரித்துள்ளார்.

இத்திருத்தலத்து எம்பெருமான் ப்ரகுமாவாலும், ஸாக்ஷாத் பகவானது திருவவதாரங்களான ஸ்ரீ ராமபிரானாலும், ஸ்ரீ வேங்கடீப் பெருமானாலும் வானகப் பெற்றவர் என்ற பெருமை முக்யத்வம் வாய்ந்தது.

ஸ்ரீ அஹோபிலேசனான ஸ்ரீந்ருஸிம்ஹப் பெருமானை வழிபட்டதன் பலனாக திருவேங்கடமுடையான் ஸ்ரீபட்மாவதித்தாயாரை திருக்கல்யாணம் செய்து கொண்டான் எனும் மங்கள வைபவம் இத்துத்தலத்திர்கேயான மேன்மை!

அது போலவே, ஸ்ரீராமன் இந்தப் பெருமானின் புகழை ஐந்து ஸ்லோகங்களால் துதிக்க , அது 'நரசிம்ஹ பஞ்சம்ருதம்' என்று பிரசித்தி பெட்ட்ருள்ளது. இந்த ஸ்தோத்ரங்களும், வரலாறும் பரம ப்ரமாணமான நூல்களான ஹரி வம்சம், மோக்ஷ தர்மம் ஆகியவற்றில் பீஷ்ம- யுதிஷ்டிரர்களுக்கிடையே உரையாடலில் குறிப்ப்டப்பெற்றுள்ளன. இந்த திவ்யதேசத்து எம்பெருமானது அருளால், சிறையிலிருந்த சீதாப்பிராட்டியாரை பற்றிய விபரங்கள் ஸ்ரீராமபிரானுக்குக் கிடைக்க, அதனால் அவர் ராவணனைக் கொன்றொழித்து ஜகந்மாதாவான ஜானகியை மீட்டெடுத்தான் என்பர்.

இந்த திவ்யதேசத்தின் வைபவமும், ஸ்ரீமத் அஹோபில மடத்தின் திவ்யச்சரித்ரமும் பிரிக்கமுடியாதபடி ஒன்றினைந்தவை. பதினான்காம் நூற்றாண்டின் இறுதியில் மேல்கோட்டை எனப்படும் திருநாராயனபுரத்தில் கிடாம்பி கேசவாச்சாரியார் ஸ்வாமியின் திருக்குமாரராக அவதரித்த ஸ்ரீநிவாசாச்சார்யர் இளம்பிராயத்திலேயே ஸகல ஸாஸ்த்ர

த திகழ்ந்து விஜயநகரப்பேரரசரான கிருஷ்ணதேவராயரது  ராஜசபை வாத ஸதஸ்ஸில் விசிஷ்டாத்வைத தர்சனத்தை நிலைநாட்டியப புகழ்ப் பெற்றார்.
பின்னர், ஒரு நன்னாளில் திருச்சிங்கவேள்குன்றத்து எம்பிரானே ஒரு அந்தன வடிவில் வந்து அவருக்கு சந்யாச தீக்ஷை அளிக்க, அன்று முதல் ஸ்ரீ ஆதிவண்சடகோப ஜீயர் என்ற திருநாமத்துடன் ஸ்ரீ அஹோபிலத்து சிங்கப்பெருமானுக்கு ஒழிவில் காலமெல்லாம் உடனே மன்னி வழுவிலா அடிமை செய்து கொண்டு எம்பெருமானார் தரிசனத்த எங்கும் பரவச் செய்ய ஸ்ரீமத் அஹோபில மடத்தை நிறுவினார். அவர் அன்று தொடங்கி வைத்த கைங்கர்யஸ்ரீயானது அறுநூறு ஆண்டுகளுக்கும் மேலாகப் பெருகி, இன்றளவும் செழி[ப்புற நடந்து வருவது கண்கூடு.
பெரும்புலவர்களால் கொண்டாடப்பெற்ற ப்ரதாபருத்ரன் என்ற காகதீய மன்னனை ( ஆட்ச்க்காலம் கி.பி. 1295 - 1323 ) . இத்திருத்தலத்து சிங்கப்பிரான் தடுத்தாட்கொண்டு இந்த திவ்யதேசத்திற்க்கான பற்ப்பல திருப்பணிகளையும் அவனைக் கொண்டு செய்வித்தான் எனும் வரலாட்ட்ருப்பின்னணி கண்டு உய்த்துனரத்தக்கது .

விஜய நகரப் பேரரசர்கள் அனைவரும் இந்தப் பெருமானின் பரமபக்தர்கள் , ஹரிஹரர் தொடங்கி கிருஷ்ண தேவராயர், அச்சுத தேவராயர் போன்ற விஜய நகரப பேரரசர்கள் அனைவரும் இந்த திவ்யதேசத்து எம்பெருமாங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் வழிபாட்டு வந்தனர் என்பதற்கு வரலாறு சான்று பகர்கின்றது.

அஹோபில க்ஷேத்திர மாஹாத்ம்யம் முற்றிற்று