சனி, 27 ஜூலை, 2013

அஷ்டாங்க யோகம்

ராதே கிருஷ்ணா 27-07-2013

அஷ்டாங்க யோகம் 

Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
அஷ்டாங்க யோகம்

1. யமம்:

மனமாசு இல்லாமை, கொல்லாமை, களவு குணம் இல்லாமை- ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லவை செய்யும் நெறி ஏற்பட்டுவிடும்.

2. நியமம்:

தூய எண்ணங்களை வளர்த்தல்; கருணை, பொறுமை ஆகியவற்றால் மனதைச் செம்மைப் படுத்துதல்.

3. ஆசனம்:

பத்மாசனம், சுகாசனம்போல ஏழு ஆசனங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் நமக்கு வசதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

4. பிராணாயாமம்:

மூச்சை நிதானமாக இழுத்து, அடக்கி, வெளிவிட்டுச் செய்கின்ற செயலில், உடலுக்கும் மனதுக்கும் வலிமையும் ஆக்கமும் கிடைக்கும். இதை முறையாக யாரிடமாவது கற்றுக்கொண்டால் நல்லது. மூச்சுப்பயிற்சியின் மூலம் எண்ணங்களை ஒடுக்க முடியும்.

5. பிரத்தியாஹாரம்:

மூச்சுப் பயிற்சியால் மனதில் எண்ணங்கள் அடங்கி மனம் ஒரு நிலைக்கு வந்தபின், மனதைவெளிச் செய்திகளில் போகவிடாமல் உள்நோக்கித் திருப்புதல்.

6. தாரணை:

வெளியே செல்ல விடாமல் தடுத்த எண்ணங் களை, மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களில் நிறுத்தி ஒரே கவனத்துடன் இருத்தல்.

7. தியானம்:

தாரணை சித்திக்கப் பெற்றவுடன், தியானம் செய்வது சுலபம். முதலில் 15 நிமிடங்கள், பிறகு 30 நிமிடங்கள்- என்று நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம். 30 நிமிடங்கள் உட்கார்ந்தாலும் 5 முதல் 7 நிமிடங்கள் வரைதான் மனது தியானத் தில் வசப்படும். 30 நிமிடங்கள் அமர்ந்தால்தான் 5 நிமிட தியான அனுபவமாவது கிடைக்கும்.

மனம் விடாமல் ஒன்றைக்குரங்கு பிடியாக பிடிப்பதற்கு பெயரே தியானம் "

8. சமாதி:

தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தியானம் செய்து பழகும்போது அதற்குண்டானஅமைதி, மகிழ்ச்சி கிடைக்கும். அருளாளர்களுக்கும் சித்தர்களுக்குமே நிலைத்த சமாதிநிலை கிடைக்கும்.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக