ராதே கிருஷ்ணா 23-12-2012
வைகுண்ட ஏகாதசி வழிபாடு!
ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம்!சுத்தோபவா:
ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!
வைகுண்ட ஏகாதசி வழிபாடு! செய்திகள்
வைகுண்ட ஏகாதசி வழிபாடு!
ஏகாதச்யாம் து கர்தவ்யம் ஸர்வேஷாம் போஜந த்வயம்!சுத்தோபவா:
ப்ரதம: ஸத்கதா த்ரவணம் தத:!
வைகுண்ட ஏகாதசி வழிபாடு! செய்திகள்
வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்!டிசம்பர் 17,2012
நார, அயந என்னும் இரு சொற்கள் கூடி நாராயண என்னும் ஒரு சொல்லாயிற்று நாரம் என்பது உயிர்த்தொகுதி, அயனம்-இடம் உயிரிங்களுக்கு இடமானவன் நாராயணன். உயிரினங்களைக் காப்பதற்கு இறைவன் சில தலங்களைத் தேர்ந்தெடுப்பது போல சில ...மேலும்
வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?டிசம்பர் 18,2012
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்று பரமேஸ்வரனே சொல்லியிருப்பதாக புராணங்கள் ... மேலும்
ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?டிசம்பர் 18,2012
ஏகாதசிக்கு விரதத்திற்கு வயது வரம்பு ஏகாதசி விரதத்திற்கு எல்லாரும் இருக்கவேண்டிய விரதம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது. எட்டு முதல் எண்பது வயதுக்குள் உள்ளவர்களே மேற்கொள்ள வேண்டும். இதனை, அஷ்ட வர்ஷாதிக: மர்த்ய: ... மேலும்
வைகுண்ட ஏகாதசி தோன்றியது இப்படிதான்!
முரன் என்ற அசுரனால் துன்புறுத்தப்பட்ட இந்திராதியர், சிவனை அணுகி அபயம் கேட்டனர். நாரணனைச் சரணடையுமாறு வழிகாட்டினார் சிவன். சரணடைந்த தேவர்களுக்காக முன்னின்று யுத்தம் புரிந்தான் நாரணன். முரன் கிளர்ந்தெழுந்தான், அமரர் சிதறினர், இறைவனும் ஆற்றலிற் குறையுடையவன் போல் பயந்தோடி வதரி மலையிலுள்ள சிம்ஹவதி என்னும் குகையில் போய் களைப்புதீர கண்ணுறங்கினான். முரன் பின் தொடர்ந்து வாள் கொண்டு வதம் செய்ய முற்பட்டான். அவ்வமயம் இறைவன் திருமேனியினின்று கன்னி ஒருத்தி வெளிப்பட்டுப் போரிட முரனுக்கு முன்னின்றாள். முரன் முடிந்தான். கன்னி வடிவத்தில் தன்னிடமிருந்து வெளிப்பட்ட சக்தி அவ் இறைவனுக்கே வியப்பளிக்கிறது. என் பகவானை முடித்தது யார்? என்று பரமன் கேட்கிறான் அக்கன்னி உலகை அச்சுறுத்தும் அசுரனைத் தானே கொன்றதாக கூறினாள். பேருதவி புரிந்த அக்கன்னியிடம் நன்றி கூற வரம் வேண்டுமாறு கேட்டான் மாயன். ஏகாதசி என்று பெயர் கொண்ட அவ்வனிதை நின் அன்புக்கு உரியவளாக நான் ஆகவேண்டும் , திதிகளுள் முக்கியமானவளாக நான் விளங்க வேண்டும். நான் பிறந்த இந்நாளில் உபவாசம் இருப்போர் சித்திகள் அனைத்தும் பெற வேண்டும் என்னும் வரங்களை வேண்டிக்கொண்டாள். இப்படிதான் ஏகாதசி தோன்றியது, மார்கழி மாதம் கிருஷ்ணபட்சத்தில் ! ஆகையால், மார்கழி மாதத்து கிருஷ்ணபட்ச ஏகாதசி உத்பத்தி ஏகாதசி என்று வழங்கப்பட்டது. மார்கழி மாதத்து சுக்லபட்ச ஏகாதசி மோட்ச ஏகாதசி என்று வழங்கப் பெறும். இதுவே விமோசனம் தரவல்லது இந்த ஏகாதசி விரதத்தைக் கைக்கொண்ட அளவிலே ஒருவன் இன்னல்களிலிருந்து விடுதலை பெறுவதோடு தன் தொடர்புடையவர்களையும் இன்னல்களிலிருந்து விடுவிக்கும் ஆற்றல் பெறுகிறான் என்கிறது சாஸ்திரம். | |
வைகுண்ட ஏகாதசியில் எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்?
ஏகாதசிக்குரிய தலம்: நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோயில் ஏகாதசி விரதத்திற்கு பெயர் பெற்றது. இத்தலம் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால் ஏகாதசி விரதம் இருக்க நினைப்பவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு சென்று விரதத்தை ஆரம்பிப்பது நல்லது. பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் இதுவும் ஒன்று. | |
ஏகாதசி விரதம் யார் இருக்க வேண்டும்?
ஏகாதசி வளர்ந்த கதை: மார்கழி வளர்பிறை ஏகாதசியிலிருந்து பத்து நாட்கள் வேதங்களை ஜெபித்து, ஸ்ரீரங்கத்திலுள்ள நம்பெருமாளை வழிபட்டு வந்தனர். பிற்காலத்தில், வேதத்தோடு நம்மாழ்வாரின் பாசுரங்களையும் பாடும் நடைமுறையை திருமங்கையாழ்வார் ஏற்படுத்தினார். நாதமுனிகள், மற்ற ஆழ்வார்களின் பாடல்களையும் சேர்த்துப் பாடும் வழக்கத்தை உண்டாக்கினார். அதற்காக, ஏகாதசிக்கு 10நாட்களுக்கு முன்பே இவ்விழா தொடங்கப்பட்டது. பாட்டு பாடுவதோடு, அபிநயமாக நடித்துக் காட்டி வியாக்யானம் (பாடலுக்கான விளக்கம்) சொல்லும் முறையை பிற்காலத்தில் மணவாள மாமுனிகள் ஏற்படுத்தினார். ஆடியபடியே பாடுவதற்கு அரையர் சேவை என்று பெயர். இந்த நடைமுறையே ஸ்ரீரங்கத்தில் பின்பற்றப்படுகிறது. | |
தினமலர் முதல் பக்கம் | கோயில் முதல் பக்கம் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக