ஞாயிறு, 14 அக்டோபர், 2012

அம்பத்தூர் குடும்பம்


ராதே கிருஷ்ணா 14-10-2012

அம்பத்தூர் நரசிங்க ராவ் ரங்க ராவ் அவர்கள் குடும்பம் , 

நாமகிரிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் நரசிங்க ராவ் அவர்கள் புதல்வராக நமது அம்பத்தூர் தாத்தா 1923 மார்ச் மாதம் 31 ஆம் தேதி மூன்றாவது மகனாக பிறந்தார்.
பெரியவர் சீதாபதி ராவ் அவர்கள் மற்றும் ராஜகோபால் அவர்கள் அக்கா சரஸ்வதி பாய் அவர்களுடன் வளர்ந்து வந்தார்.
பெரியப்பா சீதாபதி ராவ் அவர்கள் அந்த கால B.A  படித்து (North Eastern Railway) வடகிழக்கு மாநில ரயில்வேயில் சேர்ந்து பனி புரிந்து வந்தார்.
 துங்கா பாய் அவர்களை மணந்து  கரக்பூரில் வாழ்ந்து வந்தார்.

அடுத்தவர் ராஜகோபால் ராவ் அவர்கள் நல்ல படிப்பறிவு உள்ளவர். பால் பாட்மிண்டன் நன்றாக விளையாடுவார். அவர் திருமணமாகதவர். தனது பருவம் தெரிந்த வயதில் சற்று  மனவளர்ச்சி குன்றியவர் ஆகா இருந்து வந்தார். அண்ணன் கண்காணிப்பில் நமது நாயகன் ரங்கா ராவ் அவர்கள் சென்னை புரசைவாக்கம் முத்தியால்பேட் ஸ்கூலில் படித்து வந்தார். ஷார்ட் ஹேன்ட் படித்து அன்று இருந்த பிரிதிவி இன்சூரன்ஸ் கம்பனியில் சேர்ந்து வேலை செய்ய ஆரம்பித்தார். அண்ணா கரக்பூர் சென்று தனது குடும்பத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை.
சரஸ்வதி பாய் அவர்கள் வக்கீல் நரசிம்ஹ ராவ் அவர்களை மணந்து இல்வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்கு ரங்கநாதன் என்கின்ற மகனும் மற்றும் லக்ஷ்மி, காவேரி, சரோஜா ஆக மூன்று மகள்களும் பிறந்தனர்.
நமது நாயகனான ரங்க ராவ் அக்கா மகள் லக்ஷ்மியை சொந்தத்திலேயே மணந்து இல்வாழ்க்கையைத் தொடங்கினார். அத்துடன் அக்காவின் குடும்பத்தையும் பார்த்துகொள்ளும் பொறுப்பும் வந்து விட்டது. தனது மைத்துனன் ரங்கநாதனை வேப்பேரியில் உள்ள CNT பாலிடெக்னிக்கில் சேர்த்து படிக்க வைத்து, பிறகு B & C மில்லில் பணியில் சேர்த்து வேலை செய்யத்தொடங்கி வைத்தார். அவருக்கு ஹேமா என்கின்ற பெண்ணை (ஆந்திராவில் உள்ள பத்மநாப ராவ் அவர்களின் மகள்) அவர்களுக்கு இரண்டு மகன்கள் நரசிம்ஹன் மற்றும் நாகேந்திரன் , மகள் அனுராதா ஆகா மூன்று செல்வங்கள் பிறந்தனர்.
நமது நாயகனான ரங்க ராவ் அவர்களுக்கு மூன்று மகன்கள், மூன்று மகள்கள் ஆக அறுவர் பிறந்தனர். மூத்தவள் பாமா பாய் , அடுத்ததாக (முரளி) நரசிம்ஹன்  ,   பிருந்தா பாய், அனந்தபத்மநாபன், ராகவேந்திரன், சந்திரா ஆகா அறுவர் பிறந்தோம்.

ரங்க ராவ் அவர்களுக்கு முன் ருக்மணி (நாமகிரி பெரியம்மாவின் அம்மா) அவர்கள் பிறந்தார். ருக்மணி அவர்கள் ராஜ கோபால் ராவ் அவர்களை மணந்து வாழ்ந்து நாமகிரி மகளைபெற்று சிறிது காலத்திற்குப் பிறகு  இறந்து விட்டார்.
அதன் பிறகு ராஜகோபால் ராவ் அவர்கள் லக்ஷ்மி என்பவரை மனந்து குடும்பத்தை நடத்தி வந்தார். அவர்களுக்கு சேஷகிரி (மகன்), ராதா, ருக்மணி, பிரேமா , பத்மா, ரகு (மகன்), லலிதா, வசந்தா  ஆக குடும்பம் வளர்ந்தது.

நாமகிரி பெரியம்மா அவர்கள் கணவர் பெயர் நரசிம்ஹ ராவ்.  எனது பெயரும் நரசிம்ஹன் என்று எனக்கு என்னை பெற்றவர்கள் ரங்க ராவ் லக்ஷ்மி அவர்கள் தாத்தாவின் பெயரான நரசிம்ஹ ராவ் என்பதை நரசிம்ஹன் என்று பெயரிட்டனர். அம்மாவின் அப்பா பெயர் நரசிம்ஹ ராவ்.

அதனால் நாமகிரி பெரியம்மா என் பெயரை நரசிம்ஹன் என்று கூப்பிடமுடியாமல் (தனது கணவன் பெயரை எப்படி கூப்பிடுவது) முரளி என்று மாற்றி கூப்பிட ஆரம்பித்தனர். அதுவே என்னுடைய வீட்டுப் பெயராக மாறியது. பள்ளியில் நரசிம்ஹன் என்றே அழைத்தனர்.

ருக்மணி அவர்களுக்கு நாமகிரி அவர்கள் பிறந்து அவருக்கு (சாமா  ராவ்) பெயர் ராசியாக மாற்றி விஜயன் என்று பெயரிட்டு விளங்கினார். மஞ்சுளா என்கின்ற மகளும் பிறந்து வளர்ந்தனர்.  விஜயன் , சுபத்ராவை மணந்து சந்திரகலா என்கின்ற பெண் பிறந்து அவளுக்கு அமெரிக்காவில் பணிபுரியும் இளைஞ்சருக்கு மணம் முடித்து நல்லதொரு வாழ்க்கையை அமெரிக்காவில் தொடங்கினர்.
விஜயன் (M C M P, AVADI  ) முருகப்ப செட்டியார் மெமோரியல் பாலிடெக்னிக்கில் சிவில் இன்ஜினியரிங் டிப்ளோம படித்து
 சென்னை பல்லவன் ட்ரான்ஸ்போர்ட்டில் பணி புரிந்து வந்தார். மனைவியும் அதே சென்னை பல்லவன் ட்ரான்ஸ்போர்ட்டில் பணி புரிந்து வந்தார். மகளுடைய வாழ்க்கை செட்டில் ஆனதும் இருவரும் தங்களது வேலைகளை விட்டு விட்டு பேரனுடன் இருக்க முடிவு செய்தனர். அவ்வப்பொழுது அமெரிக்க பயணம் சென்று வந்து பேரனை அவனுடைய லீவில் அவனை இங்கு இந்தியாவிற்கு அழைத்து வருவது பிறகு அங்கு என்று இருந்து வருகின்றனர்.

மஞ்சுளாவிற்கு கிருஷ்ணன் (ரயில்வே) என்பவருக்கு மனம் முடித்து அவர்களுக்கு ஒரு மகள் பிறந்து மனம் முடித்து இனிது வாழ்கின்றனர்.

ராஜகோபால் ராவ் அவர்கள் கீத கோவிந்தம் என்கின்ற காவியத்தில் பண்டிதராக விளங்கி "கீதா கோவிந்த ரத்னாகர" பட்டம் பெற்று உபன்யாசங்கள்
செய்து வளர்ந்து வந்தார். அவருடன் நமது ரங்க ராவ் அவர்கள் சென்று பக்தி கதைகள் கேட்டு அதன் வழி பக்தி வழியில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

சேஷகிரி ஹேமா என்கின்ற பெண்ணை மணந்து இல்வாழ்க்கையைத் தொடங்கினர். ஹேமா பம்பாயிலிருந்து படித்து வளர்ந்து வந்தவர். அவர்களுக்கு கிரி என்கின்ற மகனும், கிரிஜா மற்றும் கீதா மகள்களும் பிறந்து வளர்ந்தனர். அவர்கள் அவரவர் திருமணம் முடிந்து வாழ்ந்து வருகின்றனர்.


ராதா தனது மாமாவாகிய (அம்மா லக்ஷ்மியின் தம்பி) பத்மநாப ராவ் அவர்களை மனம் புரிந்து நாகமணி, வெங்கட்ரமணன் (ஒரே மகன்), நளினி, காந்தாமணி ஆகா மூன்று மகள்கள் ஒரே மகனைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். சித்தப்பா பத்மநாப ராவ் தனது பணிகளை முடித்த பின் தனது இறுதி பயணத்தைத் தொடங்கினார். சித்தி சித்தப்பா விட்டுப் போன பணிகளை முடித்து வருகிறார். அனைவரும் அவரவர் திருமணம் முடிந்து அவரவர் இல்வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

ருக்மணி அவர்கள் மணம் புரிந்து  கொண்டு அவரையும் இழந்து தனிமையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார்.

பிரேமா  தனக்கென்று பிடித்த கணவனை கை பிடித்து , ஒரு மகனையும் பெற்ற பின்பு தனது கணவனையும்  இழந்து மகனுடன் (ஸ்ரீநிவாசன்) தனது வாழ்க்கையைத தொடங்கினார். மகன் வயது வந்ததும் ஸ்ரீநிவாசனுக்கு தனது அண்ணன் சேஷகிரியின் மகள் கீதாவை மருமகளாகக் கொண்டு அவர்களுக்கு ஒரு மகளும் பிறந்து நாட்டியத்தில் சிறந்து வாழ்ந்து வருகின்றனர்.

பத்மாவிற்கு அசோக் லேலண்டில் பனி புரியும் ரங்கநாதன் என்பவருக்கு மணம் முடித்து அவர்களுக்கு ஒரு மகள் ஜெயஸ்ரீ மற்றும் ஒரு மகன் பிறந்து அவர்களுக்கும் மண ம் முடிந்து இன்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

ரகு MCMP  Avadi யில் மெக்க்கானிகல் படிப்பு முடித்து பெரியதொரு பதவியில் இருந்து வருகிறார்.
ரகு கனரா பாங்கில் பணி  புரியும் அன்னபூர்ணா என்கின்ற பெண்ணை மணந்து ஒரே மகனைப் பெற்று (பரத்வாஜ்) நல்லதொரு இல்வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

லலிதா கோயம்பத்துரைச் சேர்ந்த ராகவேந்திரன் என்பவருக்கு மனம் புரிந்து இரண்டு மகன்களைப் பெற்று அவர்களுக்கும் மணம் செய்வித்து நன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

வசந்தா கோபிநாத் என்பவரை மணம் புரிந்து கொண்டு இரண்டு மகள்கள் , ஒரு மகன் ஆகா பெற்று வந்தார். தனது கணவனை இழந்து பேட்டர செல்வங்களை வளர்த்து வந்தார். இரண்டு மகள்களில் ஒருத்தியையும் பரி கொடுத்தார்.  மகளுக்கு மணம் புரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இனி நமது குடுபத்திற்கு வருவோம்.


பெரியப்பா சிதாபதி ராவ் துங்கா பாய் அவர்கள் கரக்புரிலிருந்து சென்னை வந்தனர். கமலாபுரம் காலனியில் வீடு வாங்கி இருந்தனர்.
பெரியப்பா ரெயில்வேயிலிருந்து ரிடையர் ஆகி அம்பத்தூர் வந்து பயணத்தைத்  தொடங்கினர். அவர்களது நண்பர் மூலம் (SS Pharmacy) க்வாலிட்டி இண்டஸ்ட்ரீஸில் தனது புது வேலையைத் தொடங்கினார்.

ரிடையர் ஆனா பிறகு 19 வருடம் பணி புரிந்தது பெருமைக்குரியது.

அவரது மனைவி துங்கா பாய் அவர்கள் கை நிறைய பணம் இருந்தும் பிள்ளைச் செல்வங்கள் இல்லாதது வருத்தத்தைக் கொடுத்தது.

ஒரு நாள் அவர்கள் வீட்டிற்கு எலக்ட்ரிஷியன் போல் ஒருவன் வந்தான்.இவர்கள் யாரும் அபபொழுது வீட்டில் இல்லை. கதவை உடைத்து உள்ளே சென்றான். அவர்கள் வைத்திருந்த விலையுயர்ந்த பட்டுப் புடவைகளை எடுத்துச் சென்று விட்டான்.

அவர்கள் வீட்டில் அப்போதைய ரேடியோ இருந்தது. பெரியதாகவும் இருக்கும்.
அதில் ட்யூனிங் செய்வது நன்றாக இருக்கும்.
இதில் தான் பெரியப்பா கிரிக்கெட் ஸ்கோர் கேட்பார்.
இது தவிர அவர் சிறிய ட்ரான்சிஸ்டர் மூலம் கேட்பார்.


பெரியப்பா வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை காலையில் தனது அபூர்வமான பெரிய சைக்கிளில் அவர் வீட்டிலிருந்து நம் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்துப் போவார்.

அவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் பரத் குமார் என்பவனை (கும்பகோணம் சின்னாலு என்பவரின் மகன்) தத்து எடுத்துக் கொண்டனர்.
சிந்தலவாடிநரசிம்ஹ சுவாமி கோயிலில் அதற்குண்டானவற்றை பூஜைகள் செய்து தத்து எடுத்துக் கொண்டனர்.

குமார் திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களுடன் நல்லதொரு வாழ்க்கையை அம்பத்துரிலேயே நடத்தி வருகிறான்.


அம்பத்தூர் தாத்தா தனது மூத்த மகளுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார்.

மகனாகிய நான் முரளி மாப்பிள்ளை வீட்டாரை அழைத்து வரவேண்டும் பெண் பார்த்து முடிந்தது டிபன் முடிந்து பஸ் ஸ்டாப்பிற்கு விட்டு வரவேண்டும்.   ஈரோடு சேர்ந்த குடும்பத்தினர் வந்து பேசி முடித்து திருமணம் நிச்சயமானது.
மூத்தவள் பாமா பாய் சென்னை டெலிக்ராப் ஆபீசில் பணி  புரியும் ராஜகோபாலன் என்பவருக்கு மணம் முடித்து வாழ்க்கையைத் தொடங்கினர்.

முதலில் சைதாபேட்டையில் வசித்தனர். அவர்களுக்கு முதலில் இரட்டையாக பெண்ணொன்று பையன் ஒன்றாக பிறந்தனர்.


பாமா தனது S S L C படிப்பு முடித்து விட்டாள் . பெண் பார்க்கும் படலம் ஆரம்பித்தது.
பாமாவிற்கு ராஜகோபாலன் என்பவரை மணம் முடித்து முதலில் சைதாபேட்டையில் செட்டி தெருவில் இல்லறத்தைத் தொடங்கினர்.

அவர்களுக்கு நல்ல மகன் ஒன்றும் , அழகிய மகள் ஒன்றும் இரட்டையராகப் பிறந்தனர்.

பிறகு சுமதி மகள் பிறந்தார்.

முரளி (MCMP AVADI) முருகப்ப செட்டியார் மெமோரியல் பாலிடெக்னிக்கில்

எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் படிப்பு  முடித்து வேலை தேடத் தொடங்கினேன். கொரட்டூர் மின் வாரியத்தில் அப்பெரேண்டிசாக சேர்ந்தேன். மாதம் Rs .150/- ஆரம்பம்.

பிருந்தா பாய் PUC படித்து டீச்சர் வேலைக்கு வேலூரில் ஜெயில் டிபார்ட்மெண்டில் சேர்ந்தாள்.

சந்திரா SSLC முடித்தாள்.

இப்பொழுது பாமா இரட்டயரைப் பெற்ற விதம்  பார்ப்ப்போம்.


பாமாவிற்கு அம்பத்தூரில் பிரசவ வலி வந்தவுடன் அப்பா நான் (முரளி) பிருந்தா மூவரும் பாமாவுடன் அயனாவரம் சரஸ்வதி ராமச்சந்திரன் நர்சிங் ஹோமிற்கு அழைத்துச் சென்றோம். அங்கு டாக்டர் பார்த்து விட்டு டெலிவரி ரூமிற்கு அழைத்துச் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து வந்து இரண்டு குழந்தைகளில் ஒன்றைத்தான் காப்பாத்த  முடியும் என்றார்.
உடனே நான் டாக்டரிடம் டாக்டர் இரண்டு குழந்தைகளும் காப்பாற்றப்படவேண்டும் என்றேன்.
முதலில் ஆண் குழந்தையை 11:55PM வெளியே எடுத்தனர். பிறகு ஒரு மணி நேரம் கழித்து  12:55AM பெண் குழந்தையையும் காப்பாத்திக் கொடுத்தனர்.

ஆண் குழந்தைக்கு ட்ரீட்மென்ட் கொடுக்கவேண்டும் என்றும் உடனே எக்மோர் ஹாஸ்பிடலுக்கு எடுத்துச் செல்லவேண்டும் என்றும் கூறினார்கள்
பிருந்தாவும் நானும் எக்மோர் ஹாஸ்பிடலுக்கு குழந்தையைத் தூக்கிக்கொண்டு சென்று வைத்தியம் பார்த்துவந்தோம்.

இருவரும் இப்பொழுதும் நன்றாக திருமணம் புரிந்து குருவிற்கு (சதீஷ்) / நரசிம்ஹன்  இரண்டு மகன்கள் , சத்யாவிற்கு (லதா) இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். குருவின் மனைவியின் பெயர் லக்ஷ்மி (சுதா) .

லதா ரகு என்பவரை மணந்து வியாசர்பாடியில் நல்லதொரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு சுருதி, கீர்த்தி என்று இரண்டு மகள்கள் பிறந்து நல்லதொரு இல்லற வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.

சுமதி அருண் விருபாக்ஷன் (ஹைதராபாத் குப்புசாமியின் மகன்) அவர்களை மணம் புரிந்து ஒரு மகனுடன் பம்பாயில் நலமாகவாழ்ந்து வருகின்றனர்.

முரளி MCMP AVADI யில்   DEE (Elective as Electronics) padiththu IIT , முதலில் அப்பெரன்டிஸ் ஆக பணி புரிந்து ஒன்றறை ஆண்டுகள் ஆனதும் பர்மனென்ட் போஸ்ட் வந்தது.

ஆரம்பத்திலேயிருந்து வரும் பணத்தில் சிறிது சேர்க்கவேண்டும் என்கின்ற பழக்கம் இருந்ததால் அப்போதே ஸ்டேட் பாங்கில் அக்கௌன்ட் ஆரம்பித்து ரெக்கரிங் டெபாசிட் ஆரம்பித்தேன்.


முரளி IIT யில் 1971 வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் 1972 டிசம்பர் வரை அப்பெரண்டிஸ் ஆக பணி புரிந்து பிறகு தொடர்ந்து 1973 ஜனவரி 1 ஆம் நாள் முதல் 1977 வருடம் மே மாதம் 31 ஆம் நாள் வரை வேலையில் இருந்து அங்கிருந்து கல்பாக்கம் இந்திரா காந்தி சென்டரில் ஜூன் 1 ஆம் நாளில் வேலைக்கு சேர்ந்தேன்.


மே மாதம் 31 ஆம் நாள் மாலை செங்கல்பட்டு வல்லம் கிராமத்தில் உள்ள ஸ்ரீனிவாசராவ் (பத்மா) பெரியப்பா வீட்டிற்குச் சென்று இரவு தங்கினேன்.
மறு நாள் காலையில் பெரியப்பாவுடன் கல்பாக்கம் சென்று கேட்டில் தங்கச் செய்து  நான் மட்டும் உள்ளே சென்று ஆபீசில் சேர்ந்து மாலையில் வந்தேன். அது வரை பெரியப்பா அங்கேயே கேட்டில் காத்திருந்தார்.

அம்பத்தூரில் ப்ரித்விபாக்கதில் கோபாலக்ருஷ்ண ராவ் மற்றும் அவரது மனைவி துளசி பாய் என்பவர் வசித்து வந்தார். அவரும் LIC யில் பணி புரிந்து வந்தார். அப்பாவின் நண்பரும் ஆவார். நான் பால் பாட்மிண்டன் ஆடுவதை கோபாலக்ருஷ்ண ராவ் மற்றும் திரு வெங்கோபாசார் அவர்களும் பார்த்துச சென்றனர். பிறகு துளசி அத்தை, கோபாலக்ருஷ்ண ராவும்  கலந்து ஆலோசித்து திருவல்லிக்கேணியில் வசிக்கும் வெங்கோபாசார் குடும்பத்தில் பேசி எனது அப்பாவிடம் கூறினார்.
ஜாதக பொருத்தம் நன்றாக இருக்கிறது என்று கூறி திருமனத்திற்கு ஏற்பாடுகள் நடந்தது.

அக்டோபர் 30 ஆம் நாள் திருச்சானூர் SMSO கல்யாண மண்டபத்தில் நடந்தது.
 அம்பத்துரிலும் நான் கல்பாக்கத்திலும் ஆக இருந்தோம். வாரா வாரம் இறுதியில் அம்பத்தூர் வருவேன்.


முதல் முறையாக ஒரே தடவை சாத்தனூர் ட்ரிப் செல்ல பிளான் செய்தோம்.
அங்குள்ள மாலதி மோகன் அவர்களை தற்ச்செயலாக சாத்தனூர் ட்ரிப் பஸ்ஸில் எங்களுக்குப் பின்னால் பார்த்துப் பேசினோம். அவர்கள் எங்களை அவர்கள் வீட்டிலேயே வந்து தங்கிக்கச் சொன்னார்கள்.மூன்று மாதம் அங்கு தங்கி இருந்தோம்.

எவ்வளவு செலவோ மாதத்திற்கு அதில் பாதி கொடுப்போம். அவ்வாறு 3 மாதம் தங்கினோம். சுதா அம்பத்தூர் சென்று விட்டாள். நான் வார நாட்கள் கல்பாக்கம் இருந்து வெள்ளி அன்று மாலை பஸ் பிடித்து அம்பத்துருக்கு 8 மணிக்கு செல்வேன்.
ஒன்பதாம் மாதம் சுதா திருவல்லிக்கேணி சென்று விட்டாள்.
ஜூலை 22 ஆம் நாள் ராஜா பிறந்தான்.  எனக்கொரு மகன் பிறப்பான் அவன் என்னைப் போலவே இருப்பான் என்ற படலுக்கேத்தாற்போல் பிறந்தான்.

அம்பத்தூர் குடும்பத்திற்கு வாரிசு பிறந்து விட்டான். அவனுக்கு தாத்தா அவரது  தம்பி பெயர் ராஜகோபால் என்று பெயரிட்டார்.

ராஜா KVI கல்பாக்கம் படித்தான். பிளஸ் 1 , பிளஸ் 2 AECS ஸில் படித்தான்.

பிரியதர்ஷினி இன்ஜினியரிங் காலேஜில் BE Comp.Science படித்து வேலை பார்க்க ஆரம்பித்தான்.

நவம்பர் மாதம் திருக்கழுக்குன்றம் ஊரில் வீடு பார்த்து சுதாவை அழைத்து வந்தேன். அத்திம்மா வருவார்கள்.

பக்க்கத்து வீட்டில் உள்ள மாமி அவரது மகள்கள் சித்திரா, ஜெயந்தி, சாந்தி, வசந்தி, கணேஷ் அவர்கள் ராஜாவை பார்த்துக்கொள்வார்கள்.
எனது வீடு சொந்தக்காரர் சுப்ரமணியம் அவரது வீட்டில் தான் நாங்கள் தங்கி இருந்தோம். அவர் எங்களை ஈதாவது கொடுத்து விட்டு வீட்டை எடுத்துக்கச் சொல்வார். ருபாய் 20,000/- கொடுத்தால் போதும் என்பார். அப்போது எங்களுக்கு தெரியவில்லை,

அங்கிருந்து காலையில் 108 பஸ் பிடித்து நேராக ஆபீஸ் போவோம் மாலையில் பஸ் பிடித்து 5 மணிக்கு திரும்புவோம். அது ஒரு பொற்காலம்.

1982 பெப்ரவரியில் ஆதிகேசவன் க்ரூப்பில் காஷ்மீர் ட்ரிப் சென்று வந்தோம்.
1981 மார்ச்சில் கல்பாக்கம் டவுன்ஷிப்பில் நுழைந்தோம்.

முதலில் பன்னாரு வீட்டில் சிங்கள் unit வீட்டில் சில காலம், டபுள் unit வீட்டில் சில காலம், ninth டைப் வீட்டில் சில காலம் தங்கினோம்.

ராதிகா 1981 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் நாள் பிறந்தாள்.

ஸ்ரீஹரி 1983 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் நாள் பிறந்தான்.


ராதிகா NTSE 0.1% maths ரேன்க் வாங்கினாள். ஸ்ரீஹரி NTSE Scholar மற்றும் scholarship  வாங்கினான்.

ஸ்ரீஹரி 10 std இல் அதிக மார்குகள் 456 / 500 வாங்கி முதல்வனாக பெயர் பெற்றவன். ஸ்கூல் போர்டில் அந்த வருடத்திற்கு பெயர் பதிக்கப் பெற்றவன்.

ஸ்ரீஹரி டென்த் படிக்கும் போதே ECTV ரிப்பேர் ஆகி வேறு டிவி வாங்கவே இல்லை. அவன் பிளஸ் டூ முடித்தவுடன் ராஜா நேஷனல் கலர் டிவி வாங்கி வந்தான்.

ராஜகோபால், ராதிகா , ஸ்ரீஹரி மூவரும்  நன்றாக படித்ததற்கு முழு காரணமும் அம்மா வாகிய சுதா தான். 

நானும் நண்பர்கள் சுப்பாராவ் மற்றும் singh மூவரும் முழுமையாக 2 வருடம் ஹைதராபாத் ECIL சென்றுவந்தோம்.


(நரசிம்ஹன்) முரளிக்கு 1977 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் திருவல்லிக்கேணி வெங்கோபாச்சார் / நாகம்மா (பத்மா) மகள் சுதாவை பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருச்சானூரில் கல்யாணம் நடந்தது.

ராஜகோபால், ஸ்ரீஹரி இரண்டு மகன்களும் , ராதிகா மகளும் பிறந்தனர்.

மூவரும் B E படித்தனர். ராஜாவும் ஸ்ரீஹரியும் B.E (Computer Science), ராதிகா B.E (ECE) படித்து முடித்தனர்.

பிருந்தாவிற்கும் ராகவேந்திரனுக்கும் (திருநெல்வேலி N,S,பூவராஹமூர்த்தியின் மகன் ) திருமணம் நடைபெற்று நலமாக வாழ்ந்து வந்தனர்.

பாவா கோவர்த்தன கிரியில் உள்ள அவரது வீட்டில் வசித்து வந்தனர். பவா ரெஜிஸ்ட்ரார் ஆபீசில் வேலை செய்து வந்தார். திருநெல்வேலி, தாம்பரம் என வேலை செய்து வந்தார்.
பிருந்தா ரங்கா, சூர்யா, முர்த்திக்கு அங்கு பெரும் செல்வாக்கு இருந்தது.

அவர்களுக்கு ரங்கநாதன், சத்தியநாராயணன் (மூர்த்தி) மகன்களும், சூர்யகலா என்கின்ற மகளும் பிறந்து வளர்ந்தனர்.

ரங்கநாதன் M C A படித்து முடித்தார். சத்தியநாராயணன் M S c (Maths ) படித்தான்.
சூர்யகலா B Sc (Bio - Chemistry ) மற்றும் M A Journalism படித்தனர்.


இயற்கை விளையாடத் தொடங்கியது.

1996 ஆம் வருடம் டிசம்பர் மாதம் அம்பத்தூர் அம்மா (லக்ஷ்மி) உடம்பு முடியாமல் படுத்தார்கள். சுதா பிருந்தா stedford ஹாஸ்பிடலில் சேர்த்து பார்த்துக்கொண்டார்கள். அங்கிருந்து டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு வந்தபிறகு ஒருநாள் முழுதும் ஒன்றும் உண்ணாமல் படுத் துக்கொண்டிருந்தார்கள்
பார்க்க வந்த டாக்டர் ராகவேந்திரன் வீட்டின் வெளியிலிருந்து பார்த்து விட்டு ஒன்றும் இல்லை என்றும் உறவினர்களுக்குச் சொல்லி அனுப்பவும் என்று கூறி சென்றுவிட்டார்.
பிருந்தா எனக்கு போன் செய்து நான் மாலையில் 3 மணிக்கு சென்றடைந்தேன். அருகிலிருக்கும் டாக்டரை கூப்பிட்டோம், வர மறுத்துவிட்டார்.
இருந்தாலும் இரவு நான் பிருந்தா சுதா மற்றும் அப்பாவுடன் காரில் அம்மாவை அழைத்துச் சென்றோம். மூன்று ஹாஸ்பிடலுக்கு சென்று அவர்கள், அம்மாவுக்கு சர்க்கரை இருக்கிறது இங்கு வசதி இல்லை என்றனர்.

அப்பா இறுதிச் சடங்கிற்காக என்னிடம் பணம் கொடுத்துப் பார்துக்கொள்ளச்சொல்லிவிட்டார்.
எனக்கு அன்ன நகர் ஸ்ரீதேவி ஹாஸ்பிடல் மற்றும் சுந்தரம் மெடிக்கல் பௌண்டேஷன் ஞாபகம் வந்தது, அங்கு போகலாம் என்று சென்றோம். அங்கு டாக்டர் சேஷாத்ரி அவர்கள் சோதனை செய்து பார்த்தார். அவரிடம் நாங்கள் நேராக டாக்டரிடம் அம்மா பற்றி கேட்டோம், காரை அனுப்பிவிடலாமா இல்லை அம்மாவை அட்மிட் செய்கிறீர்களா என்று கேட்டோம். அதற்கு அவர் அட்மிட் செய்கிறோம். காரை அனுப்பி விட்டோம். டாக்டர் அம்மாவை குணபடுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். சரியாக 2 வருடம் அம்மா நல்லபடி குடும்பத்தை நடத்திச் சென்றார்.

மீண்டும் 1998 ஆம் ஆண்டு டிசம்பரில் சுந்தரம் மெடிக்கல் பௌண்டேஷனில் அட்மிட் செய்து பிறகு இறந்து போனார்.


1998 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் நாள் கலையில் அம்மா வின் உயிர் பிரிந்தது.
அவரது இறுதிச் சடங்குகள் அம்பத்தூர் வீட்டிலேயே நடத்தினோம். வருஷாப்திகம் அம்பத்துரிலேயே நடத்தினோம்.

அப்பாவிற்கு கை ஒடிந்தாற்போல் ஆயிற்று. கல்பாக்கம் வரச் சொல்லி கூப்பிட்டோம். அவர் அம்பத்தூர் விட்டு வரமாட்டேன்  என்றும், கேரியர் சாப்பாடு சாப்பிட்டும் நாட்களை ஓட்டினார்.

2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்பாவை கல்பாக்கம் அழைத்துப் போனோம்.
ஹாஸ்பிடலில் காண்பித்து டாக்டர் விஜயாவிடம் அபிப்ராயம் கேட்டோம். TB க்கு மருந்துகள் கொடுத்தார்கள். அப்பாவிற்கு ஹாஸ்பிடலில் மெடிக்கல் கார்ட் வாங்கி பார்த்தோம். 
2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் நாள் இரவு 12:50க்கு அப்பா வின் உயிர் பிரிந்தது.
ராகவேந்திரன் அனந்து ஜெயந்தி, விஜி அனைவரும் இருந்தனர்.
அப்பாவின் இறுதிச் சடங்குகள் ஸ்ரீரங்கம் முளுபாகள் மடத்திலேயே எல்லோருமாக சேர்ந்து செய்தோம்.
வர்ஷாப்திகம் வ்யசராஜா மடத்திலேயே செய்தோம்.

2003ஆம் ஆண்டு பிருந்தா பாவா உடம்பு முடியாமல் ஆறு மாதங்களாக இருந்து பிறகு டயாலிசிஸ் செய்ய ஆரம்பித்து  அப்போல்லோ ஹாஸ்பிடலில் அவர் இறந்து போனார்.
ரங்கநாதன் ஹாங்காங் சென்று பாவாவின் இறந்த செய்தி கேட்டு உடனே திரும்பிவிட்டான்,
2004 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 29 ஆம் நாள்  பிருந்தா பாவாவின் உயிர் பிரிந்தது.
காரியங்கள் முடிந்தபிறகு ரங்கா ஹாங்காங் திரும்பி சென்றான்.
அதன் பிறகு பிருந்தா சற்று மனது தேறி வந்தாள். பிருந்தா பாட்டு பாடுவதில் வல்லுநர். அஞ்சநேயருக்காக 50 பாடல்கள் எழுதி பாடக்கூ டியவள்

மெட்டிலோத்சவம் சென்று பாடியவள். முரளிதாஸ் அவர்களிடம் கற்றுக்கொண்டு அவர்கள் குழவில் பாடி வந்தவள்.

2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் நாள் பிருந்தாவின் உயிர் பிரிந்தது

அனந்து , ராகவேந்திரன் வந்திருந்தார்கள். இறுதிச் சடங்குகள் ஆனந்த தீர்த்த வித்யபீட்ட ஸ்ரீ ஜனார்தன ஷேத்திர , பூந்தமல்லி  ஹை ரோடு வேலப்பன்சாவடி யில் தனியாக தில ஹோமம் சேர்த்து செய்தோம்.

எல்லோரும் சேர்ந்து பேசி சுதாவுடனும் பேசி என்னிடம் கேட்டு பிறகு சொல்வதாக சுதா என்னிடம் கேட்டாள். இருவரு ஆலோசித்து இதற்கு ராஜாவிடம் தான் கேட்கவேண்டும் என்றும் அவன் முடிவு தான் முடிவானது.

ராஜாவிடம் கேட்டதற்கு அவனும் சரி என்றான். பிறகு ஏற்பாடுகள் செய்தோம்.

2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் நாள் ராஜகோபால் சூர்யகலா  திருமணம் போரூரில் உள்ள சங்கீதா கல்யாண மண்டபத்தில் (விஜய்) நடந்தது. ரங்கா வேண்டியவற்றை கொடுத்து கல்யாணத்தை நடத்தினான்.
பம்பாயிலிருந்து சேது மாதவ ராவ் அவரது மனைவி கீதா குடும்பத்தினர் அனைவரும் வந்திருந்து நடத்தினார்கள்.
அனந்து ஜெயந்தி, ராகவேந்திரன் விஜி அவர்கள் பெண் வீட்டு சார்பாக இருந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தனர்.

சந்திராவிற்கு மார்கேயன்கொட்டை குட்ம்பத்தில் வந்த கிருஷ்ணா ராவ் அவர்களின் புதல்வரான அனந்தபத்மநாபன் (கனரா பாங்கில் வேலை செய்பவர்) அவர்களுக்கு திருமணம் நடத்தினோம். நல்லதொரு இல்வாழ்க்கை நடத்தி வந்தனர். அவர்களுக்கு கார்த்திக் என்கின்றே குருராஜன் மகனும, சுதா (வரலக்ஷ்மி) மகளும் பிறந்தனர். புழுதிவாக்கத்தில் வசித்து வருகிறார்கள்.

அவர்கள் மகள் சுதா (வரலக்ஷ்மி) தனக்கொரு கணவனை பார்த்து ஸ்ரீலங்காவில் இருந்து தற்போது லண்டனில் வசித்து வரும் அவருடன் லண்டனில் வசித்து வருகிறாள். அவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர். சந்திரா பாவா இருவரும் லண்டன் பயணம் மேற்கொண்டு வருவார்கள்.

சந்திரா தனது மகனான கார்த்திக்கிற்கு திருப்பத்தூரில் வசித்து வரும் நாகராஜன் அவர்களது புதல்வி பானு விற்கு பிப்ரவரி 12 ஆம் நாள் மடிப்பாக்கத்தில் திருமணம் செய்வித்து கார்த்திக் பானு அமெரிக்காவில் புதியதொரு இல்வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.

சந்திரா பாவா இந்த வருடமும் அமெரிக்கா சென்று வந்தார்கள்.


பிருந்தா பாவா இறந்தபிறகு அவர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு எங்களுக்கு வந்தது.

ரங்காவிற்கு பெண்பார்க்க ஆரம்பித்தோம். பல்லாவரம் ரங்கா ராவ் அவர்களின் புதல்வி அர்ச்சனா என்கின்ற வரனை பொருத்தம் பார்த்து ரங்காவிடம் விவரங்களைக் கூறினோம். ரங்கா எங்களுக்கு முழு அதிகாரம் கொடுத்தான். அர்ச்சனா வுடன் ஒரு அக்காவும் , ஒரு அண்ணாவும்  இருக்கிறார்கள். ரங்கா ராவ் ஸ்டேட் பாங்கில் வேலை செய்து விருப்ப ரிடயர் ஆகி பல்லாவரம் ஹிந்துஸ்தான் லிவர் காலனியில் வசித்து வருகிறார்கள்.

நானும் சுதாவும், முர்த்தி ரங்காவும் பெண் பார்க்க சென்றோம். ரங்கா பெண் பிடித்திருக்கிறது என்றும் பேசிவிடலாம் என்றும் கூறினான். அன்று ஞாயிற்றக்கிழமை யாதலால் 6 மணிக்கு மேல் பேசி முடிவிட்டோம்.
நாங்கள் பார்த்த பெண்ணைப்பார்த்து பிடித்து பேசியும் முடித்தது எங்களுக்கு பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

பம்பாயிலிருந்து சித்தப்பா சித்தி மேடையில் அப்பா அம்மா ஸ்தானத்தில் இருந்து ரங்காவின் திருமணத்தை நடத்திக்கொடுத்தனர்.

ரங்கா அர்ச்சனா 2008 ஜூன் மாதம் 25 ஆம் நாள் நல்லதொரு மகளைப் பெற்று அவளுக்கு இப்பொழுது வயது நான்கு ஆகிறது. நல்லதொரு வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.


2010 வருடம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் எங்களது அறுபதாம் ஆண்டு ஷஷ்டியப்த பூர்த்தி திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. ரங்காவும் மூர்த்தியும் இந்த விழாவிற்கு எங்களுக்கு பெரிய உதவியாக இருந்து செயல்பட்டது எங்களுக்கு மனது சந்தோஷமாக இருந்தது. ராகவேந்திரன் விஜி வந்திருந்து நடத்திக் கொடுத்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

செப்டம்பர் 15 ஆம் நாள் இரவு 10:30 மணிக்கு முர்த்தி இறந்து விட்டதாக செய்தி கேட்டு அதிர்ச்சிக்குள்ளானோம்.
விடியற் காலையில் நாங்கள் இருவரும் சென்றோம்.

இறுதிச் சடங்குகள் அவனது வீட்டிலேயே நடந்தது.

சூர்யா வந்திருந்தாள் .


FBTR ANUBHAVAM

1977 ஆம் ஆண்டு ஜூன் முதல் 2010 ஜூன் வரை IGCAR FBTR இல் பணி புரிந்தபோது நடந்தவைகள்.

நானும் தியாகராஜன் என்பவரும் FBTR Instrumentation இல் சேர்ந்தோம். முதலில் நான் REL Inst.லேப் பிலும், தியாகராஜன் RDL லேப் பிலும் வேலை செய்தோம்.

என்னுடன் ஏழுமலை மோகன் ராவ் சாமுவேல் தேவதேனசன் மற்றும் ஸ்ரீனிவாச ராவ் சுவாமிநாதன் தலைமையில் வேலை செய்தோம். நான் printed Circuit Board வரைபடம் வரைந்து எப்படி தயார் செய்வது என்றும் அதற்கான செயல்பாடுகளையும் தயாரித்தோம். transformer  செய்வதற்கான தயாரிப்புகளை உருவாக்கினோம்.

செல்வராஜ் என்பவர் நேரிடையாக சோடியம் எப்படி தீயாக உருவாகிறது என்பதை நேரிடையாக பார்த்துத் தெரிந்துகொண்டோம்.

மற்றொரு முறை செல்வராஜ் சார் உடம்பு முடியாமல் போக ஹாஸ்பிடலில் சேர்ந்து ECG எடுத்து இங்குள்ள டாக்டர்களால் அதை சரிவர புரிந்து கொள்ள முடியாமல்  அவரை அப்படியே செங்கல்பட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்ப அவர் வழியிலேயே காரிலேயே இறந்து போனார்.

அன்று FBTR க்கு வேண்டிய டிராயிங் மற்றும் விளக்கங்கள் தயார்செய்து வைத்தோம.

எங்களுடன் ராமநாதன், குருசுவாமி, D S ராவ் , சிங் பிரகாஷ் லால் ஒன்றாக வேலை செய்தோம்.

நான் REL இல் வேலை செய்ய ஆரம்பித்தபோது ஒவ்ர் டைம் செய்ய ஆரம்பித்தோம். மூன்று வருடங்களுக்குப் பிறகு FBTR க்கு வந்த போது REL இல் ஓவர் டைம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FBTR வந்த பிறகு நான் electronics லேபும் , தியாகராஜன் அவர்கள் ப்ரோசெச்ஸ் லேபும் தயார் செய்தோம். வேண்டிய உபகரணங்களை சுப்பா ராவ் வுடன் சேர்ந்து வாங்கி செட் செய்தோம்.

1977 இல் SA /B  ஆகா சேர்ந்து 1980 இல் SA /C ப்ரோமோஷன் , 1984 இல் SO / SB ஆபீசர் ஆக ப்ரோமோஷன் வாங்கி gasatted Officer ஆகி விட்டேன்., 1989 இல் SO / SC , 1995 இல் SO /SD , 2001 இல் SO / SE மற்றும் 2009 இல் SO / SF ஆக ப்ரோமோஷன்கள் வாங்கி 2010 ஜூன் இல் ரிடையர் ஆனேன்.

1985 ஆம் ஆண்டு   FBTR வேலை செய்யத் தொடங்கியது. படிப்படியாக முன்னேறியது.

என்னுடைய லேபில் கம்ப்யூட்டரில் சுமார் 8000 குறிப்புக்களை குறித்து உடனுக்குடன் பார்த்து தெரிந்து கொள்ள  வழி செய்து வைத்தேன். படிப்படியாக 286 , 386, 486, விண்டோஸ் 94, 2000 என்று கம்யூட்டர் மூலம்  வேலை செய்ய ஆரம்பித்தேன்.
ஒரு சில வேளைகளில் ராமசந்திரன் என்பவரும், பிள்ளை அவர்களும் தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.
இதன் காரணமாகவும் நான் SAFETY SECTION க்குப் போக விருப்பப்பட்டு மாறினேன்.

FBTR இல் SAFETY  OFFICER ஆக பணி புரிந்தேன். பலவற்றைத தெரிந்துகொண்டேன். SV கார்த்திகேயன் சார் அவர்களும், கந்தசுவாமி, ஜெயசூர்யா, சண்முகம், செந்தில்குமார் பாஸ்கர், மற்றும் சத்பதி அவர்களுடன் சேர்ந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது.

1995 ஆம் ஆண்டு ஜூன் மாதம் SL நரசிம்ஹன் அவர்கள் என்னை சேப்ட்டிக்கு வேலை செய்ய வருகிறாயா என்று கேட்டார். நானும யோசித்து சரி என்றேன்.

1999 ஆம் ஆண்டு திரு. S .L .நரசிம்ஹன் சார் அவர்கள் ரிடையர் ஆன பிறகு எனக்கு P .R .சுவாமிநாதன் அவர்களின் கீழே வேலை செய்ய ஆரம்பித்தேன்.
அவர் Planning head தலைவராக இருந்ததால் என்னையே SAFTY OFFICER ஆக்கி வேலை செய்யச் சொன்னார். ஆர்டரும் போட்டுத் தந்தார்.

1997 ஆம் ஆண்டு திரு S .L. நரசிம்ஹன் அவர்கள் உதவியால் R P .கபூர் அவர்கள் ஆசியுடன் சென்னையில் உள்ள R L I யில் (ரீஜினல் லேபர் இன்ஸ்டிட்யுட் ட்டில் (SAFETY OFFICER) பாதுகாப்பு அலுவலருக்கான வகுப்பில் சேர்ந்து டிப்ளோம படிப்பு படித்தேன். ஓராண்டு கால வகுப்பு இது. காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை வகுப்புகள் நடக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை வகுப்புகள் நடக்கும். அக்டோபரில் கல்விச் சுற்றுலா 15 நாட்கள் (வெளியூர் கம்பனிகள்). நவம்பர்  மற்றும் டிசம்பர் ரிப்போர்ட் தயாரிக்கவேண்டும். அவரவர் கம்பனியில் சென்று அங்கு உபயோகமான தலைப்பு ஒன்றிற்கு ஒரு ரிப்போர்ட்டும், இன்னொரு சிறிய ரிப்போர்ட்டும் இரண்டு தயார் செய்யவேண்டும்.

ஜனவரி முதல் ஏப்ரல் வரை வகுப்புகள், மீண்டும் கல்விச் சுற்றுலா (உள்ளூர் கம்பனிகள்) பிறகு தேர்வுகள் எட்டு பாடங்களுக்குத தேர்வுகள் நடக்கும். மற்றும் லேப் வகுப்பிற்கான தேர்வுகள் நடக்கும்.
பிறகு முடிவுகள் அறிவிக்கப்படும்.

நானும் அதற்கு சோடியம் உபயோகப் படுத்துவது, சுத்தப் படுத்துவது, பதுகாப்பு விதிகள், என வகைப் படுத்தி விவரமாக எழுதவேண்டும் சுமார் 200 பக்கங்களுக்கும், சிறியது பாதுகாப்பு உபகரணங்கள் சுமார் 100 பக்கங்களுக்கு என்று 2 ரிபோர்ட் தயார் செய்து கொடுத்தேன். தேர்வு முடிவுகளில் முதல் வகுப்பு எடுத்து பாஸ் செய்தேன்.

ஆனால் ரிபோர்ட்டுகளை தயார் செய்யும்போது சிறிது கஷ்டப்பட்டேன். அதாவது, பேப்பருக்காகவும், போட்டோ காப்பி எடுப்பதற்காகவும் இரவு 10 மணி வரைக்கும் செயல்பட்டு முடித்தேன். இதப்பார்த்து என் செல்வங்கள் ஏன்  இந்தவயதில் கஷ்டப்பட்டு தயாரிக்க வேண்டும் என்றும் மேல் பரிதாபப்பட்டு கேட்டனர்.

ஒரு வழியாக இதை முடித்து வெற்றிகரமாக ஆபீசில் தொடர்ந்து பணியாற்ற ஆரம்பித்தேன்.

எனக்கு உதவி செய்த S V கார்த்திகேயன், R P .கபூர் , பாரதி (RLI ) ,  கந்தசுவாமி, சண்முகம், செந்தில் குமார், ஜெயசூர்யா ஆகியவர்களுக்கு நன்றியை தெரிவித்தேன்.


எங்களது அணு உலை படிப்படியாக உயர்ந்து 18 MW (th ) / 3 MW (e ) என செயல்பட ஆரம்பித்தது.

அக்டோபர் 13 ஆம் நாள் திங்கள் அன்று கல்பாக்கம் வந்து இரவு 12 மணி சுமாருக்கு படுக்கவும் முடியாமல் இருப்பு கொள்ளாமல் இருந்தது. அம்மாவும் நானும் அப்போதே ஹாஸ்பிடல் சென்று மாத்திரைகள் வாங்கி வந்தோம்.

மறு நாள் மாலையில் புதுபட்டினம் சென்று வீட்டிற்கு வேண்டிய பொருட்கள் வாங்கி வந்தோம். அன்று இரவும் நேற்று  மாதிரியே ரெஸ்ட்லெஸ் ஆகா இருந்தது. மறுபடியும் ஹாஸ்பிடல் சென்று வந்தோம். ECG எழுதி வாங்கிக்கொண்டு வந்தோம்.
மறுநாள் கலாலையில்  ECG எடுக்க சென்றேன். விட்டால் வராததால் டென்ஷன் ஆகியது. 8 மணி ஆகியும் வரவில்லை. விட்டால் வீட்டிற்கு போன் செய்தால் இன்னும் வரவில்ல என்றார்கள். பிறகு அவர் வந்து ECG எடுத்து அதில் ப்ராப்ளம் இருக்கு அதனால் நீங்கள் டாக்டரிடம் காண்பித்து வரவும் என்றார்.
அன்று தான் எனக்கு ஆபீசில் AERB இன்ஸ்பெக்ஷன் உள்ளது. அவர்களுக்கு வண்டி, சாப்பாடு ஏற்பாடு செய்திருக்கிறேன். அதனால் சுதாவிடம் ECG கொடுத்து டாக்டரிடம் காண்பிக்க சொல்லி நான் ஆபீஸ் சென்றுவிட்டேன். ஆபீசில் AERB அவர்களை ரூமில் உட்காரவைத்து வந்தவுடன் நண்பர் ஒருவர் வந்து உடனே ஹாஸ்பிடல் போகவேண்டும் , ஆம்புலன்ஸ் ரெடியாக இருக்கிறது என்றார்.

ஹாஸ்பிடலில் அம்மா டாக்டர் விஜயாவிடம் ECG காண்பித்தவுடன் பேஷன்ட் எங்கே என்று கேட்க, அவர் ஆபீசில் இருக்கிறார் என்றவுடன் ஆம்புலன்ஸ் அனுப்பி வரச் செய்து விட்டார்.

நான் நண்பருடன் ஹாஸ்பிடல் சென்று பார்க்க, அங்கு சுதா இல்லை, உடனே நடந்து வீட்டிற்கு செல்ல அங்கு நண்பர்கள் மேலே ஏற வேண்டாம், ஹாஸ்பிடல் செல்லவும் என்றனர்.ஹாஸ்பிடல் சென்று டாக்டர் பார்த்தவுடன் அட்மிட் செய்து விட்டார்.

முதல் மூன்று நாட்களில் உடம்பு சுமாராகி விட்டது. இருந்தாலும் என் வந்தது என்று பார்க்கவேண்டும்.
ஒரு மாதம் வீட்டை மறந்திடவேண்டும். அப்போல்லோ சென்று வரவேண்டும் என்றார். டாக்டர் K S R .மூர்த்தி டிஸ்சார்ஜ் செய்கிறேன் என்றார், ஆனால் டாக்டர் விஜயா அப்போல்லோ அனுப்பி விட்டார்.
எந்த டாக்டர் பார்க்க வேண்டும் அன்று கேட்டதற்கு டாக்டர் P ராமச்சந்திரன் பாருங்கள் என்றார். நண்பர் ராஜகோபால் உமா கணவர் அம்புலன்சில் வந்தார்.
நேராக எமெர்ஜென்சி வழியாக பார்த்து பிறகு டாக்டர் பேரை சொன்னவுடன் வார்டில் அட்மிட் செய்தார். டாக்டர் ராமச்சந்திரன் வந்து பார்த்து ஏஞ்சியோ எடுக்க ஏற்பாடு செய்தார் . செவ்வாய்க்கிழமை செய்தவுடன் ஒரு பிளாக் 98% இருப்பதாகவும் அறுவை சிகிச்சை அல்லது ஏஞ்சியோ பிளாஸ்ட் செய்யவேண்டும், நீங்கள் சொல்லவும் என்றார். நாங்கள் எங்களுக்கு மெடிக்கல் தெரியாது, நீங்கள் டாக்டர் சொல்லவேண்டும். அவர் உடனே ஏஞ்சியோ பிளாஸ்ட் செய்தால் மீண்டும் 5 வருடங்களுக்குள் ஏதாவது செய்யவேண்டும், அதனால் அறுவை சிகிச்சை நல்லது என்றார். சனிக்கிழமை செய்யலாம் என்றார். நண்பர்களிடம் போன் செய்து பேசமுடியவில்லை.

வியாழக்கிழமை அனபரசனே வந்தார், விவரம் அறிந்தார் டாக்டர் வெள்ளிக்கிழமையே அறுவை செய்து விடலாம் என்றார்.
நண்பர் ஏற்பாடு செய்வதாக கூறினார்.

வெள்ளிக்கிழமை அன்று காலையில் பிருந்தா ரங்கா நண்பர்களுடன் வந்தார்.அனபரசனே ஏற்பாடு செய்த நண்பர்கள் வந்தனர்.
அனைவரும் ரத்தம் கொடுத்து சென்றனர். பிருந்தா கூடவே இருந்தாள். மதியம் 1 மணிக்கு இஞ்சக்ஷன் கொடுத்து ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றனர். மாலை 5:50க்கு போஸ்ட் வார்டுக்கு கொண்டு  வந்து விட்டனர்.

ரகு ஏஞ்சியோ செய்த நாள் முழுதும் இருந்து பார்த்துக்க் கொண்டு இருந்தான்.படுக்கையை விட்டு நகரமுடியாது. பாலு ஒவ்வொரு நாளும் இரவில் வந்து படுத்துச் செல்வான். குளிர் தாங்க முடியாது. நாகராஜன் தினமும் காலையில் சுதாவுடன் வந்து பிறகு செல்வான். 
அம்மா மிகவும் கஷ்டப்பட்டாள் . திருவல்லிக்கேணியில் அனைவரும் செய்த உதவிக்கு சொல்லி முடியாது.


1998 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி இரண்டு நாட்களாக இருந்த உடல் வலி காரணமாக ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகி நெஞ்சு வலிக்கு மருந்துகள் என ஆரம்பித்து டாக்டர் விஜயா  மூலம் அப்போல்லோ ஹாஸ்பிடல் சென்று ஒரு பிளாக் 98% என்றும் ஹ்ருதய அறுவை சிகிச்சை 22-10-1999 அன்று வெற்றிகரமாக முடிந்தது.
திருவல்லிக்கேணி யில் தங்கி ரெஸ்ட் எடுத்தேன். 

ஆஜி படி பார்த்து வரவும் அன்று கூறிக்கொண்டே இருந்தவர் பாவம் அவரே 2002 இல் படி தவறி விழுந்து படுத்துவிட்டார்.

டிசம்பர் 15 நான் ஆபீஸ் போக ஆரம்பித்து விட்டேன். ஜனவரி யில் ஒரு மாதம் லீவ் எடுத்து ரெஸ்ட் எடுத்துக் கொண்டேன்.
பெப்ரவரி யில் சட்ராஸ் சிவன் கோயில் கும்பாபிஷேகத்தில் கோபுரம் மேலே சென்று கலச அபிஷேகம் நீர் தெளித்துக் கொண்டு வந்தேன்.

அதன் பிறகு வருடம் ஒருமுறை அப்போல்லோ சென்று செக் செய்து வருகிறேன்.

அம்மாவின் வருஷாப்திகம் 1999 இல் அம்பத்தூரில் நமது வீட்டிலேயே நடந்தது.


ராஜா சூர்யா வின் திருமணம் நடந்து ஆனந்தமாக மொரிஷியஸ் சென்றனர். 2005 ஏப்ரல் / மே மாதங்களில் நாங்கள் இருவரும் மொரிஷியஸ் 35 நாட்கள் இருந்து சுற்றிப் பார்த்து வந்தோம். இது தான் எங்களது முதல் விமானப் பயணம் ராஜா சூர்யாவால் நடந்தது. இந்தப் பயணம் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்று ஆகும். இது வரை விமானம் என்றால் என்ன தெரியாத எங்களுக்கு முதல் விமானப் பயணம் ஆரம்பமாகியது.

ராதகாவிற்கு வரன் தேட ஆரம்பித்தோம்.முக்கியமாக சுதாவிற்கு பிடிக்கவேண்டும். ராதிகாவிற்கு பிடிக்கவேண்டும்.

நிறைய வரங்கள் வந்தது, முதலில் ஜாதகம் பார்க்கவேண்டும், பெண் பார்க்கவேண்டும் , எல்லோருக்கும் பிடிக்கவேண்டும் என பல படிகள் உண்டு.

முதலில் பார்த்த வரன் சுரேஷ் பம்பாயில் வேலை பார்த்து வந்தார். ஒரு வருடத்திற்கு பிறகு அதே வரன் கோயம்புத்தூர் இருந்து வந்தது. 2005 டிசம்பர் 14 ஆம் நாள் திருவான்மியூரில் ராதிகா ப்ப்லாட்டிலேயே பெண் பார்க்கும் படலம் நடந்தது. சந்த்யா ராமு, நாகராஜ் அவரது மனைவி வந்திருந்தனர். அவர்கள் பார்த்தவுடன் சரியென்று மறுநாளே சுரேஷை வரச் சொல்லி பார்க்கவேண்டும் என்றும் கூறினார். நான் ஆபீஸ் சென்று மீண்டும் மாலையே அங்கு வந்து பார்த்து ஒப்புதல் ஆகி விட்டது.

ஜனவரி 20 இல் கோயம்புத்தூர் இல் நிச்சயதார்த்தம் நடந்தது. கல்யாணம் மே மாதம் 29 ஆம் தேதி என முடிவு செய்யப்பட்டது.

அவர்கள் திருவல்லிக்கேணி வந்து ராகவேந்திரா கல்யாண மண்டபம் ஏற்பாடு செய்தனர். முஹுர்த்தம் 29 ஆம் தேதி காலை 6 மணி முதல் 7:30 மணிக்குள் நடக்க முடிவு செய்யப்பட்டது.

மே மாதமும் வந்தது . அவர்களை வரவேற்க சென்ட்ரலிலிருந்து கல்யாண மண்டபம் வர மற்றும் கல்யாணம் முடிந்து மறுநாள் திரும்பிச் சென்று சென்ட்ரல் வரை விடுவதற்கு தண்டபாணி நண்பர் மூலம் ஒரு பஸ் ஏற்பாடு செய்து ரங்கா அவர்களைப் பார்த்துக் கொண்டான்.

கோயம்பத்தூரில் ரிசப்ஷன் நன்றாக நடந்தது.


ராதிகாவும் சுரேஷும் அமெரிக்கா சென்று மகிழ்ச்சியாருக்கிறார்கள்.

வருடத்திற்கு ஒரு தடவை ஆபீசில் போனசுக்கு பதிலாக ஏதாவது ஊருக்குச செல்லும் வழக்கம். இம்முறை தாய்லாந்து ட்ரிப். கனவன் மனைவி வரலாம். கனவனோ / மனைவியோ இல்லையென்றால் மேலும் ஒருத்தரை கூட அழைத்து வரலாம். அந்த வகையில் ஸ்ரீஹரி என்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தான்.
நானும் ஸ்ரீஹரி யும் தாய்லாந்து பயணம் மேற்கொண்டு சுற்றிப்பார்த்து வந்தோம்.

ராதிகாவின் ஷ்ரவன் டெலிவரிக்கு நங்கள் இருவரும் முதல் அமெரிக்கா பயணம் . இதற்கு ராதிகா ஏற்பாடு செய்தாள். சென்னையிலிருந்து நேராக அனந்து  ஜெயந்தி இருக்கும் ராலேக்குச் சென்று அங்கிருந்து  St Louis சென்று அங்கிருந்து பிறகு
ராகவேந்திரன் இடம் சிகாகோ சென்று பல ஊர்களை சுற்றிப் பார்த்து வந்தோம். ராஜா சூர்யாவும் சிகாகோ வந்து விட்டனர். ராகவேந்திரன் விஜி எல்லோரையும் அழைத்துக்கொண்டு நயாகரா நீர்வீழ்ச்சி பார்த்து வந்தோம். அங்குள்ள ட்ரைனில் பயணம் செய்தோம்.
ஷ்ரவன் ஜூலை 23 ஆம் தேதி மதியம் பிறந்தான்.
பிறகு ராலே சென்று ஆனந்து ஜெயந்தி எங்களை வாஷிங்டன் சுற்றிப் பார்த்தோம். அங்கிருந்த (USA ) நாட்களில் 
ஸ்னேஹா, சாதனா, லேகா மற்றும் மாலு எல்லோருடனும் இன்பமாக சுற்றிப் பார்த்து வந்தோம்.

ஆபீசில் 4 மாதம் லீவ் எடுத்துக்கொண்டு வந்தோம்.

2009 நவம்பர் இல் ராஜா சூர்யா இருக்கும் இடமான ப்லோரிடாவிற்குச் சென்றோம். சகானா டிசம்பர் 10 இல் பிறந்தாள் .
கீ வெஸ்ட் போன்ற பல இடங்களை சுற்றிப் பார்த்து வந்தோம்.

இந்தமுறை 4 மாதங்கள் (லீவ் பாதி சம்பளம்) என எடுத்து சுற்றி பார்த்து வந்தோம்.

2010 இல் வட இந்தியா சுற்றுலா சென்று மணாலி, குளு  போன்ற இடங்கள் பார்த்து வந்தோம்.
அதே போல் கேங்டக், டார்ஜீலிங் போன்ற இடங்களையும் சுற்றிப் பார்த்து வந்தோம்.
நேபாளம் சென்று பசுபதிநாதர் தரிசனம் செய்து, முக்திநாத் சென்று அங்குள்ள 108 திவ்யச்தலங்களில்ருந்து வரும் தீர்த்தம் நீரில் குளித்து தர்சனம் செய்து வந்தோம்.

சரஸ்வதி டூர்ஸ் மற்றும் ட்ராவலர்ஸ் மூலம் அலஹாபாத் திருவேணி சங்கமம், காசி, அயோத்யா, காசி, கயா மற்றும் புவனேஸ்வர் பார்த்து திரும்பினோம். எங்களது நண்பர் V R .கிருஷ்ணமுர்த்தி அவர்கள் சொன்னதும் நாங்களும் புறப்பட்டோம்.
2010 ஜூன் 30 உடன் எனது பணிப் பயணம் முடிந்தது.


அக்டோபர் மாதம் இறுதியில் கல்பாக்கம் விட்டு அம்பத்துருக்கு லாரியில் சாமான்களை ஏற்றிக் கொண்டு அம்பத்தூர் சென்றோம்.

அங்கிருந்து வேண்டிய சாமான்களை சிறிய வேன் மூலம் எடுத்துச் சென்றோம்.

எங்களுக்கு திருவல்லிக்கேணி வீட்டில் எங்களுக்கு ஒரு போர்ஷன் கொடுத்தார்கள். மஞ்சு கிருஷ்ணமுர்த்தி இருந்த போர்ஷனில் குடியேறினோம்.


அக்டோபர் மாதம் இறுதியில் கல்பாக்கம் விட்டு அம்பத்துருக்கு லாரியில் சாமான்களை ஏற்றிக் கொண்டு அம்பத்தூர் சென்றோம்.

அங்கிருந்து வேண்டிய சாமான்களை சிறிய வேன் மூலம் எடுத்துச் சென்றோம்.

எங்களுக்கு திருவல்லிக்கேணி வீட்டில்  ஒரு போர்ஷன் கொடுத்தார்கள். மஞ்சு கிருஷ்ணமுர்த்தி இருந்த போர்ஷனில் குடியேறினோம்.

ஸ்ரீஹரிக்கு வரன் பார்க்க ஆரம்பித்தோம். சுதாவின் விருப்பம் / ஸ்ரீஹரி விருப்பம் என பல ஜாதங்கள் பார்த்தோம்.

இறுதியாக ஹரிணி ஜாதகம் ஸ்ரீஹரிக்கு பொருத்தமாக வந்தது.

மேற்கு மாம்பலத்தில் வசிக்கும் பூவராஹமுர்த்தி ராஜாராமன் அவர்களின் புதல்வி ஹரிணி , நிச்சயதார்த்தம் செப்டம்பர் 29 இல் ஐஸ் ஹவுஸ் ஆஞ்சநேயர் கோயில் அருகில் உள்ள ஹாலில் நடத்தினோம்.
பெப்ரவரி 24 ஆம் நாள் திருமணம் நடத்த ஏற்பாடுகளை செய்தோம்.

2012 பிப்ரவரி 24 ஆம் நாள் ஸ்ரீஹரி ஹரிணி திருமணம் நன்றாக நடந்தது.
ராகவேந்திரன் விஜி குடும்பத்தினர், ஜெயந்தி வந்திருந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தனர்.  ராஜா சூர்யா ராதிகா சுரேஷ் சஹானா, ஷ்ரவன் ஸ்ரீமன் உடன் வந்திருந்து நடத்திக்கொடுத்தனர். குழந்தைகள் சஹானா , ஷ்ரவன், ஸ்ரீமன் ஆகியோருடன் நாங்கள் கல்யாணத்தில் விளையாடி மகிழ்ந்தோம்.
உறவினர்கள் அனைவருக்கும், IIT நண்பர்கள், கல்பாக்கம் நண்பர்கள் என அனைவருக்கும் பத்திரிகை அனுப்பி அனைவரு வந்திருந்து நடத்திக் கொடுத்தனர்.

ரங்கா மூலம் கல்யாண மண்டபத்திலிருந்து சாமான்களை சென்னை பேக்கர்ஸ் ஏற்பாடு செய்தோம். நாங்கள் அனைவரும் சதாப்தி எக்ஸ்ப்ரஸில் பெங்களூரூ செல்ல ஏற்பாடு செய்தோம்.

ராதிகா அத்தை மாமா மற்றும் பலர் வந்தது மனதிற்கு மகிழ்ச்சியை தந்தது.

பெங்களூர் ப்ரிகேட் மெட்ரோபாலிஸ் B - 1507 க்கு சென்றோம்.

சாமான்கள் மூன்று நாட்கள் கழித்து வந்தது. சுதா அந்த 3 நாட்களுக்கு சமையலுக்கு வேண்டிய சாமான்களை வாங்கினோம்.

மார்ச் 17 ஆம் நாள் ஹரிணிக்கு திங்கள்நாகவள்ளி பூஜை செய்தோம்.அதற்கு ஹரிணி மாமா (மற்ற்றொரு) ரங்க ராவ் குடும்பத்தினர் வந்திருந்து நடத்திக் கொடுத்தனர்.


ஹரிணி எங்களை நன்றாக அனுசரித்து வருகிறாள். அப்பா அம்மா என்றே எங்களை அழைப்பது மகிழ்ச்சியை கொடுக்கிறது.

ஆபீசிற்கு செல்லும் போது அப்பா போய் வருகிறேன் என்று கூறி விட்டுச் செல்வாள்.
எங்களிடம் அனுசரணையாக நடந்து கொள்கிறாள். எங்களுக்கு ஹரிணி மிகவும் பிடித்து விட்டது.
ஹரிணி குடும்ப வாழ்க்கைக்குத் தயாரானாள்.

நான் அருகில் உள்ள தியேட்டரில் தமிழ் சினிமா பார்த்து வருவேன்.
ஹரிணிக்கு ஆபீசிற்கு சென்று வர தூரமாக இருந்ததால் வேறு வீடு பார்க்க ஆரம்பித்தோம்.

HSR லே அவுட்டில் புர்வா பேர்மவுண்ட் தில் A - 304 வீட்டிற்கு ஜூலை 23 ஆம் நாள் பால் காய்ச்சி 25 ஆம் நாள் சாமான்களை ஏற்றிச் சென்று விட்டோம் .

ஹரிணிக்கு அவளது பஸ் அருகிலேயே வருகிறது. காலையில் 8 மணிக்கு புறப்படுகிறாள்.

ஸ்ரீஹரி சுமார் 9 மணிக்கு புறப்படுகிறான். மாலையில் இருவரும் 6:30 மணிக்கு வந்து விடுகிறார்கள்.

அம்மா சமையல் வேலை பார்த்துக்க் கொள்கிறாள்.

ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஹரிணிக்கு அவர்கள் வீட்டில் தியாகராய நகர் ராகவைய்யா ரோட்டில் உள்ள ராகவேந்திர ஸ்வாமி மடத்தில் வளைகாப்பு நடத்தினார்கள்.

போட்டோ ஆல்பம் நான்கு தொகுப்புக்கள் எங்களுக்கு ஒரு செட் ஆல்பம் கொடுத்தார்கள்.

ஹரிணி சித்தப்பா சிங்கபோரிளிருந்து பெங்களுரு வந்தபோது வீட்டிற்கு வந்து வாழ்த்துக்களை வாழ்த்திச் சென்றனர்.

ஆடுஸ்ட் 30 ஆம் நாள் பசவங்குடி உத்திராதி மடத்தில் இப்போதுள்ள சத்யாத்ம தீர்த்தரு அவர்களிங் மூல ராம பூஜா பார்த்தோம். இந்த வாய்ப்பினை எங்களுக்கு கொடுத்த ஹரிணி மாமா ரங்கராவ் குடுமபத்திற்கு நாங்கள் எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொண்டோம்.
செப்டம்பர் முதல் வாரம் நானு சுதாவும் மந்த்ராலயம் சென்று வந்தோம். சுதாவின் அண்ணன் நாகராஜன் அவரது மனைவியுடன் எங்களுடன் மந்த்ராலயத்தில் தங்கி அருகில் உள்ள ஹம்பி, நவ பிருந்தாவன் தரிசித்து வந்தோம்.

செப்டம்பர் 16 ஆம் நாள் திருவனந்தபுரம் ஆனந்தபத்மநாபஸ்வாமி கோயிலில் நடந்த ஸ்ரீ ஹரி வாயுஸ்துதி  பாராயணத்தில் நானும் சுதாவும் கலந்து கொண்டு இறை அருளைப பெற்று வந்தோம்.

 அதிக மாச புரட்டாசி மாதத்தில் சென்னை வ்யசராஜா மடத்தில் அபூபு தானம் (அதிரசம்) கீதாவிற்கு கொடுத்தோம்.

ஹரிணி ரெகுலராக செக்கப் செய்து வருகிறாள். நவம்பர் 20 ஆம் நாள் அவளுக்கு குழந்தை பிறக்க இருப்பதாக கூறினார்கள்.

அக்டோபர் மாதம் 18 ஆம் நாள் ஹரிணியை பிரசவத்திற்கு அழைத்துச் செல்கிறார்கள்.

இன்று அக்டோபர் 11 ஆம் நாள். நேற்று முன் தினம் ரங்கா தாத்தா மடல் எழுதியது அதற்கு பதில் கடிதம் தமிழில் , என்னை இந்தவிவரங்களை எழுதத் தூண்டியது.

ராதிகா தினமும் ராத்திரி 10 மணிக்கு போன் செய்து பேசுவாள். குழந்தைகள் ராஜாவும் சூர்யாவும் அடிக்கடி போன் செய்து பேசுவார்கள். குழந்தைகள் சாஹானா, ஷ்ரவன் மற்றும் ஸ்ரீமன் இவர்களை கூகிள் டாக்கில் வீடியோ சேட் மூலம் பார்த்து பேசுவோம்.

இன்னும் பல தொடரும்.

     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக