ராதே கிருஷ்ணா 29-10-2012
முரளி என்கின்ற நரசிம்ஹன்
அப்பா 31-03-1023 / 01:40AM / EDDAPPADI SALEM DISTRICT
AMMA 10-09-1927 04:30pm ATTUR SALEM DISTRICT ANANTHAVRATHAPANDIGAI
BAMA 16-12-195-47
MURALI 05-05-1950 VAIKASI 23, / 12:25 PM MONDAY
SUDHA 10-02-1958 VILAMBI VARUDAM MAGA BAGULA SHASHTI SUNDAY 03:55 AM
THULAM
BRINDHA 18-06-1953 / 06:44 AM AANI MADHAM 4 ,
CHANDHRA 01-06-1956 FRIDAY 06-05 PM / DHUNMUKHI VARUDAM VAIKASI 19 ,
SADHAYAM
CHANDRA BAWA 07-09-1948 SUKLA CHADHURTHI FRIDAY 10:55AM SADHAYAM
ANANTHAPADMANABHAN 26-09-1058 NIGHT 12:12 AM / PURATTASI 10 , FRIDAY
POORATTADHI 3 PADHAM
JAYANTHI 28-05-1962 MONDAY 2 PM / VAIKASI 15 (SUBHAKIRUDHU VARUDAM)
UTHTHIRATTADHI
RAGAVENDHIRAN 04-05-1961 / 07-45 AM PILAVA VARUDAM CHITTHIRAI 22, / AMBATTUR
MOOLAM
VIJAYALAKSHMI 16-07-1965 FRIDAY 05:20AM
AVITTAM
B.K.RAJAGOPALAN 04-12-1942 CHITHRABANU VARUDAM KAARTHIGAI 18, THURSDAY
அம்பத்தூர் : சென்னையிலிருந்து 15 Kms தூரத்தில் அம்பத்தூர் இருக்கிறது.
அங்கு 48, ஏகாம்பர ஐயர் தெருவில் ரங்கராவ் லக்ஷ்மி அவர்கள் வசித்து வந்தனர். அவர் அந்த காலத்தில் முதலில் ப்ரித்வி இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். பிறகு அதே கம்பெனி (L .I . C ) லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் என்ற பெயரில் மாறியது. எனது தந்தையும் லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் என்ற கம்பெனியில் தொடர்ந்து வேலை பார்த்து வந்தார்.
அவருக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் உண்டு. அதில் சிலரை இங்கே குறிப்பிட விரும்புகிறேன். முதலில் ராமச்சந்திரன் (சப்தரிஷி) மாமா மிகவும் நெருங்கிய நண்பர் ஆவார். V . G . ராமச்சந்திர ஐயர் , சுந்தரம் மாமா, R . S . மணி என்று பல நண்பர்கள் இருந்தனர்.
அப்பாவின் உறவினர் சிலர் அம்பத்தூரில் வசித்து வந்தனர். அப்பாவின் அக்கா ருக்மணி அம்மாள் ராஜகோபால் ராவ் குடும்பத்துடன் பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் வசித்து வந்தனர்.
எங்களது ஏகாம்பர ஐயர் தெருவில் அனைவரும் அப்பாவின் நண்பர்கள் ஆவர்.
எதிர் வீட்டில் குருவம்மா என்று ஒரு மூதாட்டி வசித்து வந்தார். அவரிடமிருந்து அரச மரக் கன்று கொண்டு வந்து அப்பா அதை நட்டு மரமாக்கி அருகில் ஒரு வேப்ப மரத்தையும் வளர்த்து இரண்டிற்கும் முறைப்படி கல்யாணம் செய்வித்து அதன் அடியில் ஒரு விநாயகர் கோவில் கட்டி பராமரித்து வந்தார்.
எங்களது ஏகாம்பர ஐயர் தெருவில் முதல் வீட்டில் ராமநாத வாத்தியார் , அடுத்ததாக ராம ராவ், V . V . நாராயணன் , வேணுகோபால் ஐயங்கார், ஷர்மா காலனி , கந்தசுவாமி சாஸ்த்ரிகள், ராமகிருஷ்ணன், ஆதி நாராயண சாஸ்திரிகள் , L .K .துரைசுவாமி, அலமேலு மாமி ராமமூர்த்தி வைத்தியார், V .S .ரங்கநாதன் (சுப்ரமணியம் அவர்கள் புத்திரர்) அடுத்து பள்ளத்தில் எங்களது வீடு, மற்றும் எங்கள் வீட்டு எதிர்புறம் ராமநாராயணன் என்று வசித்து வந்தனர்.
அப்பாவின் அக்கா ருக்மணி அவர்களின் கணவர் K .ராஜகோபால் ராவ் அவர்கள் தனது முதல் மனைவியான ருக்மணி இறந்த பிறகு லக்ஷ்மி என்பவரை மணந்து குடும்பம் நடத்தி வந்தார். அவர் திருவேங்கட நகரில் உள்ள அம்பத்தூர் சாஸ்வத நிதியில் பிரசிடென்ட் ஆகா இருந்தார்.
1950 இல் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தார். அப்பொழுது வீட்டிற்காக சாஸ்வத நிதியில் Rs . 5000/- கடன் வாங்கி வீடு கட்ட ஆரம்பித்தார்.
அப்பொழுது கந்தசுவாமி சாஸ்திரிகள் வீட்டில் வசித்து வந்தார். அங்கு தான் நான் பிறந்தேன். எனக்கு முன் 1947 டிசம்பர் மாதம் பாமா என்கின்ற பெண் பிறந்தாள். 1955 இல் எங்கள் வீட்டு எதிரில் உள்ள சங்கம் ஸ்கூலில் என்னை முதல் வகுப்பில் சேர்த்து படிக்க ஆரம்பித்தேன். அங்கு கோவிந்தம்மா டீச்சர் பாடம் நடத்துவார்கள்.
எனக்கு நரசிம்ஹன் என்று பெயர் இட்டனர். அம்மாவின் அம்மா வழி தாத்தா வக்கீல் நரசிம்ஹ ராவ் , அதனால் எனக்கு நரசிம்ஹன் என்று பேரிட்டனர்.
எனக்குப் பிறகு ஜூன் 1953 இல் பிருந்தா , பிறகு சந்திரா ஜூன் 1956 இல் பிறந்தார். அனந்து (அனந்தபத்மநாபன்) செப்டம்பர் 1961 இல் பிறந்தார். ராகவேந்திரன் மே 1961 இல் பிறந்தனர்.
அனந்தவ்ரத பண்டிகையின் போது பிறந்ததால் அனந்தபத்மநாபன் என்று பெயரிட்டனர்.
பிறகு மகா கணேசா வித்யாசாலா பள்ளியில் படித்தேன். அங்கு சங்கரன் என்கின்ற தலைமை ஆசிரியர் பாடங்கள் நடத்துவார் .
ஆறாவது வகுப்பு முதல் பதினோராவது வகுப்பு வரை சர்.ராமசுவாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படித்து முடித்தேன்.
ஒன்பதாவது வகுப்பு முடிந்தவுடன் இன்ஜினியரிங் பிரிவு எடுத்துப் படித்தேன்.
அப்பொழுது எனக்கு தமிழ் ஆசிரியர் கலாநிதி அவர்கள், ஆங்கிலத்திற்கு சுப்ரமணியம் அவர்கள், ராதாக்ருஷ்ணன் என்று வகுப்புக்கள் எடுத்தனர்.
எங்களது தலைமை ஆசிரியர் பத்மநாபன் அவர்கள் கணக்கு பாடம் எடுத்தார்.
எனது ஆங்கில வாத்தியார் சுப்ரமணியம் அவர்களின் மகளை நமது கல்பாக்கத்தில் இருக்கும் எனது நண்பர் சங்கரன் அவர்கள் மணந்து இல்வாழ்க்கை நல்லபடி நடத்தி வருகின்றனர்.
1966 ஆம் வருடம் ஏப்ரல் மாதத்துடன் எனது பள்ளி வாழ்க்கை முடிந்தது.
அப்பாவின் விருப்பப்படி நியூ காலேஜில் சேர்ந்து P .U .C படித்தேன்.
எனது உறவினர்கள் ரகு, சாமா (விஜயன்), ரவிசங்கர், கண்ணன் என்று பலர் பாலிடெக்னிக்கில் சேர்ந்து படித்தனர். நான் மட்டும் கல்லூரியில் படித்தேன்.
1967 இல் தேர்வு முடிவுகள் வந்தது. அதில் தமிழில் பெயில் ஆகிவிட்டேன்.
ஒரு வருடம் வீணாகுமே என்று பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். ஆவடி முருகப்பச் செட்டியார் மெமோரியல் பாலிடெக்னிக்கில் (MCMP) சேர்ந்து எலெக்ட்ரிகல் பிரிவு எடுத்து படித்தேன்.
முதல் வருடம் கணக்கு, சயின்ஸ், எலெக்ட்ரிகல் என்று எல்லா பிரிவுகளும் படிக்கவேண்டும்.
எங்களது பாலிடெக்னிக்கின் பிரின்சிபால் ராம ராவ் அவர்கள் அம்பத்தூரில் கமலாபுரம் காலனிக்கு அருகில் வசித்து வந்தார்.
முதல் வருடம் தாரகராமன் என்பவர் கணக்கு வகுப்பில் தேர்ச்சி பெற்றவர். அவர் Logrithemic என்று ஆரம்பித்தால் வகுப்பு முடிவதே தெரியாது. இரசாயண பிரிவில் ராமநாதன் நன்றாக நடத்துவார்கள்.ஹைட்ராலிக் பிரிவில் வாசுதேவன் மற்றும் ஸ்ரீனிவாச ராவ் சிறந்தவர்கள் வகுப்புக்கள் எடுத்தனர். வைத்திலிங்கம் அவர்கள் மெக்கானிக்கல் வகுப்புக்கள் எடுத்தனர்.
வடிவேலு என்பவர் பிரின்சிபாலுக்கு உதவியாளராக இருந்தார். ஆச்ச்சரியம் என்னவென்றால் 1997 ஆம் வருடம் TC Transfer Certificate வாங்கச் சென்ற போதும் அவரைப்பார்த்து பேசி நலம் விசாரித்து, அவர் எனக்கு சர்டிபிகேட் பெறுவதற்கு உதவி புரிந்தார். எனது பாதுகாப்பு வகுப்புக்காக RLI Regional Labour Institute இல் படிப்பதற்காக பாலிடெக்னிக் சர்டிபிகேட் வேண்டும் என்று கேட்டதால் அதைப் பெறுவதற்கு ஆவடி சென்று கேட்டு வாங்கி வந்தேன்.
இரண்டாம் வருடம் எலெக்ட்ரிகல் பிரிவில் பாடங்கள் படித்தோம். அஸ்வத்த நாராயணன் எங்களது பிரிவு தலைமையில், கல்யாணசுந்தரம், மகாலிங்கம், பழனியப்பன் என்று பலர் வகுப்புக்கள் நடத்தினர்.
பாலிடெக்னிக் சென்று வர முதல் வருடம் அம்பத்தூரிலிருந்து ஆவடிக்கு காலையில் 5.45க்கு ட்ரைன் பிடித்து ஆவடி செல்வோம். ஆவடி அடுத்த ஸ்டேஷன் தான். ஆவடியிலிருந்து பாலிடெக்னிக்கிற்கு சுமார் 2 கி.மீ.நடந்து செல்வோம். 8 மணி முதல் மாலை வரை வகுப்புகள் இருக்கும்.
வொர்க்ஷாப் லேபரேடரி இருக்கும்.
இரண்டாம் வருடம் அப்பா சைக்கிள் எடுத்து கொடுத்தார். அப்பாவின் சைக்கிளில் சென்று வருவேன். காலையில் 7.15 க்கு கிளம்பி மாலை வருவேன்.
மூன்றாம் வருடம் பஸ்ஸில் சென்று வந்தேன்.
மூன்றாம் வருடம் என்னுடைய ப்ராஜெக்ட் வால்வு ரேடியோ செய்வதாக எடுத்துக்கொண்டேன். வாழ்வே ரேடியோ நன்றாகவே வேலை செய்து வந்தது.
பாலிடெக்னிக் படிக்கும் காலத்தில் அவ்வப்பொழுது கிளாஸ் கட் செய்வது, சினிமா பார்ப்பது எல்லாமே இருந்தது.அங்கிருந்து வில்லிவாக்கம் ராயல் தியேட்டர் , நாதமுனி, புரசைவாக்கம் மேகலா தியேட்டர் மற்றும் கெல்லீஸ் உமா தியேட்டர் என்று பல தியேட்டர்களில் சினிமா பார்த்தேன்.
அம்பத்தூர் வீட்டில் அப்பொழுது கும்பகோணம் பாட்டி, குஞ்சவ்வா
(அப்பாவின் சித்தி), பெரியப்பா ராஜகோபால் அவர்கள், காவேரி சித்தி, சரோஜா சித்தி, நெய்வேலி குடும்பம் எல்லோரும் இருந்தனர்.
48, ஏகாம்பர ஐயர் தெருவில் எங்கள் வீடு பிரபலமாக இருந்தது. எங்கள் வீடு எப்படி இருக்கும் பார்ப்போம்.
வடக்கு நோக்கி இருக்கும். வாசலில் நுழைந்ததும் இரண்டு பக்கமும் திண்ணைகள் இருக்கும். தலை பக்கம் தலை வைப்பதற்கு சாய்வாக அமைக்கப்பட்டு இருக்கும். உள்ளே ஹால் , பிறகு தேவரு மனே , இடது பக்கத்தில் ஹால்லிலிருந்து செல்ல ரூம் இருக்கும். தேவரு மனே அருகில் சமையல் ரூம் இருக்கும்.
பின் பக்கம் துளசி மாடம் கிணறு இருக்கும். ஓரத்தில் பழைய கால கக்கூஸ் இருக்கும்.
வீட்டிற்கு வெளியில் வந்தால் அரச மரத்து விநாயகர் கம்பீரமாக இருப்பார். அந்த பத்ர விநாயகர் அருளால் தான் ரங்கராவ் குடும்பம் இன்றும் நன்றாக இருந்து கொண்டு வருகிறது.
மூன்றாம் வருடம் பாலிடெக்னிக் படிக்கும் பொழுது மனதில் ஒரு சபதம் எடுத்துக்கொண்டு இந்த வருடம் முழுதும் சினிமா பார்ப்பது கிடையாது என்று அந்த ஒரு வருடம் எந்த ஒரு சினிமாவும் எந்த இடத்திலேயும் பார்க்காமல் இருந்தேன்.
பாலிடெக்னிக்கில் மூன்றாம் வருட இறுதியில் ஒரு படம் காண்பிக்க எலெக்ட்ரானிக்ஸ் மாணவர்களாகிய நாங்கள் தான் ஏற்பாடு செய்யவேண்டும்.
அதற்காக அரசகட்டளை MGR நடித்த படம் கொண்டு வந்தோம். 16mm ப்ரொஜெக்டர் ஸ்க்ரீன் எல்லாம் செட் செய்து விட்டு நண்பர்களை பார்த்துக்க சொல்லிவிட்டு நான் வீட்டிற்கு வந்துவிட்டேன்.
அப்படி ஒரு சபதம் செய்து வெற்றி பெற்றேன்.
பிறகு 1971 வரை வீட்டில் இருந்தேன்.
ஒரு நாள் இரவு அப்பா ஆபீஸ் விட்டு வீட்டிற்கு வந்ததும் என்னைக் கூப்பிட்டு
வேலைக்காக பேப்பர் பார்ப்பது கிடையாது. இன்று IIT யில் வேலைக்கு விளம்பரம் வந்திருக்கிறது , இதைப் பார்த்து அனுப்புமாறு சொன்னார். அதற்கு நான் உடனே அதற்கு காலையிலேயே பார்த்து அப்ப்ளிகேஷனுக்கு அனுப்பி விட்டேன் என்று கூறினேன்.
என்னுடன் பிறந்தவர்கள் அனைவரும் வளரத் தொடங்கிவிட்டனர்,
1959 ஆகஸ்ட் 1 ஆம் நாள் காவேரி இறந்தாள். காவேரி எனக்காக ஸ்வெட்டர் தெய்த்துக் கொடுத்தாள் .
அப்பா நெய்வேலி குடும்பத்தாரையும் பார்த்துக் கொள்ளவேண்டியதாயிற்று.
ரச்குட்டி மாமாவை வேப்பேரியில் உள்ள CNT பாலிடெக்னிக்கில் படிக்கவைத்து B & C மில்லில் வேலைக்கு நம் வீட்டிலிருந்து பெரம்பூர் சென்று வர ஏற்பாடு செய்தார்.
ரங்கநாதன் (ராஸ்குட்டி மாமா) , ஹேமா (பத்மநாப ராவ் அவர்கள் புதல்வி) அவர்கள் திருமணம் நடத்தினார்.
பாமாவிற்கு 1971 இல் கல்யாணம் நடந்தது. அதில் எனிக்கு உபநயனம் செய்வித்தார்கள். No .9, நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சத்திரத்தில் நடந்தது.
சரோஜா கல்யாணம் ஸ்ரீனிவாச ராவ் மடப்பட்டு சுப்ப ராவ் அவர்களின் புதல்வர்) அவர்களுடன் இனிதாக நடந்தது. அவர்கள் அசோக் நகரில் வசித்து வந்தனர்.
1975 இல் பிருந்தாவின் கல்யாணம் NB ராகவேந்திரன் அவர்களுடன் நடந்தது.
ராகவேந்திரன் அவர்கள் திருநெல்வேலி ஹிந்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.பூவராகமூர்த்தி அவர்கள் புதல்வர் ஆவார்.
பிருந்தா பாவாவிற்கு ஒரு தம்பியும், மூன்று தங்கைகளும் ஆவார்கள்.
கல்யாணம் முடிந்து மணமக்களை திருநெல்வேலிக்கு செல்லும் பொது நானும் எனது தங்கை பிருந்தாவை மாமியார் வீட்டிற்கு கொண்டு விடுவதற்கு அவர்களுடன் சென்று வந்தேன்.
நம் குடும்பத்தில் அப்போதைய இளையதளைமுறையினரான முரளி, ரகு, சாமா (விஜயன்), கிருஷ்ணன், முர்த்தி (கிருஷ்ணமுர்த்தி) ஆகிய ஐவரும் ஒன்றாக வளர்ந்து வந்தோம். இதில் முதலில் விஜயன், மூர்த்தி பெரியவர்கள், அடுத்து கிருஷ்ணன் அடுத்து முரளி (நான்) , இறுதியாக ரகு என்று வளர்ந்தோம்.
சாமா PTC யில் வேலை பார்த்து வந்தார். முர்த்தி காஞ்சிபுரம் பக்தவத்சலம் பாலிடெக்னிக்கிலும் கிருஷ்ணன் MIT யிலும் வேலை பார்த்து வந்தனர்.
நானும் ரகுவும் MCMP ஆவடியில் படித்து முடித்து வந்தோம்.
ரகு மெக்கானிக்கல் படித்தான். நான் எலெக்ட்ரிகல் படித்து முடித்தோம்.
எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது. அதாவது அன்று தீபாவளித் திருநாள் , நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 100 வது படம் நவராத்திரி ரிலீஸ் ஆகும் தினம். இன்று மாதிரி வசதி இல்லாத அந்த நாள் ஐவரும் நவராத்திரி சினிமா பார்க்க கிளம்பி விட்டோம். வில்லிவாக்கம் நாதமுனி தியேட்டர் சென்றோம். கும்பல் அலை மோதியது. டிக்கெட் வாங்க வரிசையில் நின்றோம். டிக்கெட் கொடுக்க ஆரம்பித்தவுடன் மக்கள் இடித்துக் கொண்டு முன்னே சென்றதில் பேசிக்கொண்டு இருந்த எங்களில் ரகு காரணமாகி வெளியே வந்து விட்டோம். அவ்வளவு தான் அன்றைய சினிமா சினிமா தான்.
அப்பாவுடன் பிறந்தவர்கள் பெரியப்பா சீதாபதி ராவ் அவர்கள், ராஜகோபால் ராவ் அவர்கள், சரஸ்வதி பாய் அவர்கள், ருக்மணி அவர்கள் ஆவர்.
இதில் ருக்மணி அவர்கள் இறந்ததும் அவரது கணவர் ராஜகோபால் ராவ் அவர்கள் லக்ஷ்மியை மனம் புரிந்து வாழ்ந்து வந்தனர். சீதாபதி ராவ் அவர்கள் வடகிழக்கு ரயில்வேயில் வேலை பார்த்து வந்தார். அதனால் கரக்பூரில் வசித்து வந்தனர். அதில் இருந்து ரிடையர் ஆகி அம்பத்தூர் வந்தனர். கமலபுரம் காலனியில் வீடு வாங்கி அவரும், அவரது மனைவி துங்கா பாய் அவர்களும் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு மகப்பேறு இல்லை. அதனால் பரத்குமார் மகனை தத்து எடுத்துக் கொண்டு வளர்த்து வந்தனர்.
மற்றொரு அண்ணன் ராஜகோபால் அவர்கள் சிறிது மன நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டிலேயே இருந்து பார்த்துக் கொண்டு வந்தார். என் மேலும், பிருந்தா மேலும் பாசம் வைத்து வந்தார். தினமும் காலை மாலை இரண்டு வேலையும் அம்பத்தூர் ஸ்டேஷன் வரை சென்று, அங்குள்ள் உடுப்பி ஹோட்டல் அருகில் நின்று நேரத்தைக் கழித்து பிறகு வீட்டிற்கு வருவார். வரும் பொழுது அங்களுக்கு பட்டாணிக் கடலை வாங்கி வருவார்.
நன்றாக பாட்மிண்டன் விளையாடுவார். ஏதோ காரணத்தால் மன நிலை சரியில்லாமல் போய்விட்டது. கல்யாணம் ஆகாமலே இறந்தும் விட்டார்.
கும்பகோணம் அவ்வா வும் இறந்து விட்டார். குஞ்சவ்வா பாட்டி தினமும் காலையில் மடியாக குளித்துவிட்டு சமையல் அறைக்கு சென்று சமையல் செய்ய ஆரம்பித்து விடுவார். அம்மா சமையலுக்கு வேண்டிய எல்லா வேலையையும் வெளியிலிருந்து தயார் செய்துவருவார்.
அப்பா தனது அக்கா சரஸ்வதி அவர்களின் புதல்வி லக்ஷ்மி அவர்களை சொந்தத்திலேயே கல்யாணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர்.
அப்பாவின் மற்ற சகோதரர்கள், அதாவது அப்பாவின் அம்மாவும் அவரது தங்கை மகன்களுமாகிய அறுவர் இருக்கின்றார்கள். திருநெல்வேலி துங்க குடும்பத்தினர் ஆவர். ஆறு மகன்களும் மூன்று மகள்களும் இருக்கின்றார்கள். அவர்கள் முறையே நாமகிரிபேட்டை ராஜகோபால் ராவ் அவர்கள், செங்கல்பட்டு ஸ்ரீனிவாச ராவ் அவர்கள், குரோம்பேட்டை ராமச்சந்திர ராவ் அவர்கள், சஞ்சீவி சித்தப்பா அவர்கள, சித்தப்பா அவர்கள் ஆவர். மகள்கள் காவேரி அத்தை அவர்களும் சகுந்தலா அத்தை அவர்களும் அம்பத்தூர் லக்ஷ்மி அவர்களும் ஆவர்.
ராஜகோபால் அவர்கள் முதல் மனைவி மூன்று மகள்களைப் பெற்றுத் தந்துவிட்டு காலத்திற்குப் பிறகு இறந்துவிட்டார். அதன் பிறகு பெரியப்பா ராஜகோபால் அவர்கள் சரோஜாம்மா செய்து கொண்டார். பெரியப்பா இறந்தபிறகு சரோஜாம்மா பெங்களூரில் வசித்து வருகின்றார்கள். முதல் மனைவிக்குப் பிறந்த மூவர் சாந்தா , கௌரி மற்றும் காயத்திரி ஆவர்.
சாந்தா வெங்கட் ராவ் என்பவரை மணந்து வாழ்ந்து வந்து இப்பொழுது இறந்தும் விட்டார்.
கௌரி ஓபுல் ராவ் (சக்ரபாணி ராவ்) அவர்களை மணந்து மூன்று மகன்களையும் ஒரு மகளையும் பெற்று வளர்த்தனர். இப்பொழுது கௌரியும் ஓபுல் ராவ் இருவரும் இறந்து விட்டனர்.
காயத்திரி கோவிந்தன் அவர்களை மனந்து மகன் ஒன்று, மகள் ஒன்று ஈன்றெடுத்து இந்தே வானது வருகின்றனர். மக்களுக்கு மனம் செய்வித்து அவர்களும் இந்தே வாழ்ந்து வருகின்றனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு ஸ்ரீனிவாச ராவ் அவர்கள் பத்மா அவர்களை மணந்து ஒரு மகனையும் நான்கு மகள்களையும் பெற்று வளர்த்து வந்தனர்.
மகன் கிருஷ்ணமுர்த்தி ரஜூலா என்பவரையும், சுபத்ரா பீமா ராவையும், கௌசல்யா குண்டு ராவையும், விஜய ராகவேந்திரன் என்பவரையும், பானு பத்ரி நாராயணன் அன்பவரையும் மணந்து வாழ்ந்து வந்தனர். விதி வசத்தால் பெரியப்பா ஸ்ரீனிவாச ராவ் அவர்களும், பீமா ராவ் அவர்களும் இறந்து விட்டனர். மற்றவர் அனைவரும் நலமாக மழலைச் செல்வங்கள் பெற்று வாழ்ந்து வருகின்றனர்.
கௌசல்யா குண்டு ராவ் அவர்களுக்கு ஆனந்த் , ராஜேஷ் இரண்டு மகன்கள்.
ஆனந்த் தனது மாமா மகள் இந்துமதியை மனது தனது மக்கட்ச் செல்வங்களுடன் இனிதே வாழ்ந்து வருகின்றனர்.
விஜயா ராகவேந்திரன் அவர்கள் பிரேம்நாத், அமர்நாத் இரண்டு மகன்களைப் பெற்று அவர்களுக்கு மணமுடித்து அவர்களுக்கு குழந்தைகள் பிறந்து நலமாக வாழ்ந்து வருகின்றனர்.
பானு பத்ரி நாராயணன் அவர்கள் ஜனனி மகளைப் பெற்று வளர்த்து ஜனனிக்கு மணமுடிக்கவும் (மணமகன் பரத்வாஜ்) ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.
குரோம்பேட்டை ராமச்சந்திர ராவ் அவர்கள் ஜானகி என்பவரை மணந்து இனிதே வாழ்ந்து மூன்று மகன்களையும், இரண்டு மகள்களையும் பெற்று வளர்த்து, அவர்களுக்கு மணமுடித்து, அவர்களுடைய மழலைச் செல்வங்களையும் பார்த்து மகிழ்ந்து சிறிது காலத்திற்கு முன் தெய்வீக பதவி அடைந்து விட்டனர்.
பெரியவன் கிருஷ்ணன் நிர்மலா என்பவரை மணந்து அங்கிருக்கும் MIT யில் பணி புரிந்து ரிடையர் ஆகி ஒரு மகன், இரண்டு மகள்களைப் பெற்று இனிதே வாழ்ந்து வருகின்றனர்.
உஷா மகள் மோகன் என்பவரை மணந்து குழந்தைகளைப் பெற்று நலமாக வாழ்ந்து வருகின்றனர்.
பவானி மாதவ ராவ் தேசாய் என்பவரி மணந்து இல்லறத்தை நல்லறமாக நடத்தி வருகின்றனர்.
பாஸ்கர் உஷா என்பவரை மணந்து இனிதே இல்லறத்தை நடத்தி வருகின்றனர்.
மதுசூதனன் பரிமளா என்பவரி மணந்து இனிதே மக்கட்ச்செல்வங்களைப் பெற்று வாழ்ந்து வந்தனர். இறைவன் இதைப் பார்க்க பொறுக்காமல் குடும்பத்தலைவரைத் தன்னிடம் சேர்த்துக் கொண்டார்.
அடுத்ததாக குரோம்பேட்டையில் வசித்து வரும் சஞ்சீவி காக்க குடும்பம். சஞ்சீவி சித்தப்பா விமலா என்பவரை மனது சுரேஷ் என்கின்ற மகனையும், உமா, லதா என்கின்ற மகள்களையும் பெற்று சிறிது காலத்திற்கு முன் இறைவனடி சேர்ந்துவிட்டார்.
மகள் உமாவின் கணவரும் இரயில் விபத்தில் இறந்து போனார்.
அடுத்ததாக ரங்கநாதன் சித்தப்பா சுகன்யா வை மணந்து ஒரு மகன் கிரிதரையும், மீனா, மற்றும் ஜெயஸ்ரீ என்பவருடன் இனிதே வாழ்ந்து வந்தனர்.
சிறிது காலத்திற்கு முன் சுகன்யா கக்கி இறந்து விட்டார்.
சகுந்தலா அத்தை PM சஞ்சீவி ராவ் என்பவரை மணந்து மக்கட் செல்வங்களைப் பெற்று இந்தே இல்லறத்தை நல்லறமாக நடத்தி வருகின்றனர்.
காவேரி அத்தை கோபாலக்ருஷ்ண ராவ் (சானிடரி இன்ஸ்பெக்டர், சேலம்) என்பவரை மணந்து மகன் ஜனார்தனன் , மற்றும் சுலோச்சனா , நாமகிரி, சாவித்திரி அவர்களை ஈன்று வளர்த்து அவர்கள் வளர்ந்ததைப் பார்த்து மகிழ்ந்து வந்தனர்.
சில காலத்திற்குப் பிறகு காவேரி அத்தை, கோபாலக்ருஷ்ண ராவ் மாமா மற்றும் ஸ்ரீனிவாசன் மூவரும் இறந்து போயினர்.
சரோஜா கல்யாண சமயம் நாங்கள் ஐவரும் (முரளி, ரகு, கிருஷ்ணன், மூர்த்தி, பாஸ்கர்) அப்பாவிடம் படம் பார்ப்பதற்கு பணம் கேட்டோம். பெரியவர்கள் வரிசையில் எனது அப்பா ஒருவர் தான் எப்போது எப்படி இருக்கவேண்டுமோ அப்படி இருக்க அனுமதிப்பார். அதனால் நங்கள் அப்பாவிடம் சென்று சினிமா பார்க்க பணம் கேட்டோம். பிராட்வேயில் நாட்டுப் பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள சத்திரத்தில் தான் கல்யாணம் . அப்பாவிடம் பணம் கேட்டவுடன் Rs. 5 கொடுத்தார். நங்கள் ஐவரும் அங்கிருந்து கிரௌன் தியேட்டருக்குப் போனோம். போகும் வழியில் எதிரில் வருவோரிடம் முட்டுவதுபோல் நடந்து அருகில் வந்தவுடன் விலகி நடப்போம். இது ஒரு விளையாட்டு அப்போது. மூர்த்தி தான் லீடர் இதற்கு. தெய்வத்தாய் MGR படம் பார்க்கத் தான் இந்த ஏற்பாடு. டிக்கெட் விலை 0.84 பைசா , மீதம் உள்ள 16 பைசாவில் 15 பைசா ஒரு தோசை, இது தான் எங்கள் ஏற்பாடு.
அதுபோல் சினிமா பார்ப்பதில் ஒரு த்ரில் தான்.
இனி நம் குடும்பத்திற்கு வருவோம்.
அப்பா தனது பாவா கீதகோவிந்தம் உபன்யாசத்திற்கு சென்று வருவார். அம்மா அப்பாவிற்கு பணிவிடைகள் செய்வதில் கை தேர்ந்தவர்.
அப்பா தனது LIC வாழ்க்கையை செவ்வனே செய்து வந்தார். அதே சமயம் தனது குடும்ப பாரத்தையும் பார்த்து வந்தார். குஞ்சவ்வா விஷயத்தில் அவரது உறவினர்கள் திருப்பதியில் இருப்பதாகவும் விசாரித்து ராமச்சந்திரன் என்பவருடன் பேசி அவர்களுடன் சமரசம் பேசி முடிவு எடுத்தார்.
ஒரு சமயம் வ்யசராஜ மடத்து ஸ்வாமைகளை வரவழைத்து வீட்டில் பூஜைகளை நடத்தினார். அம்மாளு அத்தை அவர்களுடன் சேர்ந்து அவரது பாடல்களை சேகரித்து வந்தார்.
அம்மாளு அத்தை சென்னை வரும்போதெல்லாம் அம்பதூருக்கு அழைத்து வந்து பூஜைகள் செய்து கவனமாகும் பாடல்களை எழுதி வந்தார். பிருந்தாவும் அம்மாளு பாடல்களை பாடி தேர்ச்சி பெற்று வந்தார்.
ICF அருகில் வசித்து வந்த பாப்பா சுப்ரமணியம் என்பவருடன் சேர்ந்து அம்மாளு அத்தை அவர்களுடன் கும்பகோணம் நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தார்.
அம்மாளு அத்தை செய்யும் நவராத்திரி, நரசிம்ஹ ஜெயந்தி போன்றவற்றிற்கு அம்மா அப்பா இருவரும் சென்று வந்தனர்.
பிருந்தாவும் சென்று வருவார்கள்.