Tags

(திருநெல்வேலி To திருசெந்தூர் Rd)

25th, 26th & 27th Dec., 2015  
     தாமிரபரணி ஆற்றங்கரை மீது அமர்ந்த, நவ திருப்பதி திருத்தலங்களும், 108 திவ்ய தேசங்களுள் அடங்கும். திருத்துலைவில்லிமங்கலத்தில் இருக்கும் இரு திருப்பதிகளும், திவ்யதேச வரிசையில் ஒரே திவ்யதேசமாக கருதப்படுகின்றன.
0

1. ஸ்ரீவைகுண்டம்–சூரியன்

   நவதிருப்பதி தலங்களில் முதலாவதான தலம் சூரியன் வழிப்பட்டது. நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் நம்மாழ்வார் ஸ்ரீவைகுண்டத்தை வைப்புத் தலமாகப் பாடியுள்ளார்
நெல்லையில் இருந்து 28 கி.மீ ; தூத்துக்குடியில் இருந்து 36 கி.மீ.
மூலவர்-வைகுண்ட நாதர்- நின்ற  திருக்கோலத்தில்.
உற்சவர்-கள்ளபிரான்.
தயார்-வைகுண்டநாயகி,சோரநாயகி
1
       சோமுகாசுரன் என்ற அரக்கன் பிரம்ம தேவனிடம் இருந்து படைப்புத் தொழில் குறித்த ரகசியம் அடங்கிய ஏடுகனை ஒளித்து வைத்துக்கொண்டாராம். அந்த ஏடுகளை மீட்க தாமிரபரணி ஆற்றங்கரையில் விஷ்ணுவை நோக்கி பிரம்மா தவம் இருந்தார். பிரம்மாவுக்கு திருமால் நேரில் காட்சியளித்து படைப்புத் தொழில் குறித்த ரகசியத்தை சோமுகாசுரனிடமிருந்து மீட்டு பிரம்மாவிடம் ஒப்படைத்தார்.
    தனக்கு காட்சி கொடுத்து நின்ற திருக்கோலத்திலேயே இங்கு வைகுண்டநாதனாக காட்சியளிக்க பிரம்மா வேண்ட திருமாலும் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    காலதூஷகன் எனும் திருடன் திருடிய பொருளில் பாதியை ஸ்ரீவைகுண்டம் பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்தி வந்துள்ளான். ஒருநாள் திருடனின் கூட்டத்தினர் திருடச்சென்றபோது பிடிபட்டனர். திருடன் வைகுண்டநாதனிடம் சரணடைந்து தன்னை காக்க வேண்டினான். அதன்பொருட்டு வைகுண்டநாதனே அரண் மனைக்கு வந்து அரசனுக்கு தனது சுயரூபத்தைக்காட்டி, தர்மம் காக்க உன்னை தர்மத்தில் ஈடுபடச்செய்யவே நான் வந்தேன் என்று கூற, அரசனும் தனக்கு கிடைத்த பாக்கியம் மக்களுக்கும் கிடைக்க உற்சவமூர்த்தியை கள்ளபிரான் என்று கூறி வழிபடதொடங்கினான்.
    ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள சிவகாமி அம்மை உடனுறை கைலாசநாதர் கோவில் நவகைலாயங்களில் ஒன்றாகும். இந்த லிங்கம் அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவரால் வழிபடப்பட்டது. சனீசுவரர் இறைவனை வழிபட்ட தலமாதலால் நவகைலாயங்களில் இது சனீசுவரத் தலம் ஆகும்
     ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் என்ற மகானின் அவதாரத் தலமும் ஆகும். இவர் தமது ஐந்தாவது வயது வரை வாய் பேசாதிருந்தார். இவரது பெற்றோர் திருச்செந்தூர்ப் பதியில் தங்கி விரதம் இருந்தனர். கந்தர் கலிவெண்பா பாடினார் என்பது வரலாறு. பின்னர் இவர் மீனாட்சி அம்மை பிள்ளைத் தமிழ், மீனாட்சி அம்மை குறம், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் போன்ற நூல்களையும் அருளினார். காசி சென்று அங்கு சைவ மடத்தை நிறுவ கலைவாணியைக் குறித்துப் சகலகலா வல்லி மாலை என்ற நூலை இயற்ற, கலைவாணியின் அருளால் இந்தி மொழியில் அப்போதே வல்லமை பெற்று சுல்தானிடம் வேண்டிய உதவியைப் பெற்றார்.

2.திருவரகுணமங்கை (நத்தம்) – சந்திரன்

     ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 3 கி.மீ நத்தம் திருத்தலம்
  • மூலவர்– வீற்றிருந்த விஜயாசநன பெருமாள்;
  • உற்சவர் எம்மிடர் கடிவான்
  • தயார்-வரகுணமங்கை; வரகுணவல்லி2      ஆஸன மந்திரம் ஜெபித்து இறைவன் காட்சியளித்த இடமாதலால் விஜயாசனர் என்னும் திருநாமம் திருமாலுக்கு உண்டானது.  இத்திருப்பதியில் உயிர் நீத்தால் மோட்சம்.

3.திருப்புளியங்குடி–புதன்

     நத்தத்தில் இருந்து 1/2 கி.மீ.
  • மூலவர்– பூமிபாலகன்;
  • உற்சவர்-காய்சினவேந்தன்.
  • தயார்-நிலமகள் மலர், புளியங்குடிவல்லி3
    திருமால் இலக்குமி தேவியுடன் நதிக் கரையில் தனித்திருந்த போது, தன்னை திருமால் கண்டு கொள்ளாதிருக்கிறாரோ என பூமாதேவிசினங்கொண்டு பாதாள லோகம் செல்ல திருமால் அங்கு சென்று பூமாதேவியை சமாதானம் செய்து அழைத்து வந்து இரு வரும் சமமே என இரு தேவியருடனும் திருமால் இங்கு எழுந்து காட்சியளிக்கிறார். பூமி தேவியை சமாதானம் செய்து பூமியை காத்ததால், பூமிபாகர் என்ற திருநாமமும்.

4.திருக்குளந்தை (பெருங்குளம்)–சனி

திருப்புளியங்குடியில் இருந்து அதே சாலையில் 5 கி.மீ.
  • மூலவர்-வேங்கடவாணன்;
  • உற்சவர்-மாயக்கூத்தர்.
  • தயார்– கமலாவல்லி, குழந்தைவல்லி
    4
     பெருங்குளத்தில் வசித்து வந்த வேதசாரண்-குமுதவல்லிதம்பதியினரின் மகள் கமலாவதி, தான் திருமணம் செய்தால் பெருமாளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி, பெருமாளை நோக்கி கடும் தவம்புரிந்தார். பெருமாளும் நேரில் தோன்றி தன்னுடைய மார்பில் கமலாவதியை ஏற்றுக்கொண்டார்.
   ஒரு சமயம் வேதாசாரண் மனைவி குமுதவல்லியை அச்மசாரன் என்னும் அரக்கன் கவர்ந்து சென்றான். குமுதவல்லியை அரக்கனிடமிருந்து பெருமாள் மீட்டுவந்தார். பெருமாளுடன் அரக்கன் போரிட்டான். அரக்கனைநர்த்தனம் செய்து அவனை வதம் செய்ததால், மாயக்கூத்தன் என்ற திருநாமம் பெருமாளுக்கு ஏற்பட்டது. இது சனி கிரஹ தோஷ நிவர்த்தி ஸ்தலம்.

5.தொலைவில்லிமங்கலம்-தெற்கு கோவில்

   (இரட்டைதிருப்பதி)-ராகு
   பெருங்குளத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் மங்களகுறிச்சியில் இருந்து வலது புறமாக திரும்பி 2 கி.மீ மேற்கு நோக்கி வந்தால் இரட்டை திருப்பதி.
  • மூலவர் ஸ்ரீனிவாசன்;
  • உற்சவர் தேவர்பிரான்.
  • தயார்– அலர்மேல்மங்கை, பத்மாவதி5
   ஆத்ரேயசுப்ரபர் என்ற ரிஷி யாகம் செய்வதற்காக இத்தலத்தில் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, பூமியில் புதையுண்டு கிடந்த ஒரு வில்லையும் தராசையும் எடுத்தார். அவர் கையில் எடுத்தவுடன் வில் ஆணாகவும், தராசு பெண்ணாகவும் மாறியது. இருவரும் குபேர சாபத்தால் வில்லாகவும் தராசாகவும் மாறி இத்தல மண்ணில் புதையுண்டு கிடந்ததாக கூறி பரமபத முக்தி அடைந்ததால் இத்தலம் தொலைவில்லி மங்கலம் எனப் பெயர் பெற்றது.

6.தொலைவில்லிமங்கலம்-வடக்கு    

(இரட்டைதிருப்பதி)–கேது
     தெற்கு கோவிலில் இருந்து எட்டிய தூரத்தில் உள்ளது. வடக்கு கோவில் இங்குள்ள
  • மூலவர் அரவிந்த லோசனர்;
  • உற்சவர் செந்தாமரைக்கண்ணன்.
  • தயார்– கருத்தடங்கண்ணி
    6
    தினமும் தேவபிரானுக்கு வடக்கு தடாகத்தில் இருந்து சுப்ரபர் தாமரை மலர்களை எடுத்து வந்து பூஜித்து வந்தார். ஒருமுறை சுப்ரபர் எங்கிருந்து தாமரை மலர்களை கொய்து கொண்டு வருகிறார் என்பதை பார்ப்பதற்காக, பின் தொடர்ந்து சென்றார். இதை அறிந்த சுப்ரபர் தன்னை பின் தொடர்வதற்கான காரணம் கேட்க தேவ பிரானோடு சேர்த்து தனக்கும் அபிஷேகம் செய்ய பெருமாள் கூறியதால், அங்கேயும் ஒரு பெருமாளை பிரதிஷ்டை செய்து சுப்ரபர் பூஜைகள் செய்து வந்தார். அந்த பெருமாளே செந்தாமரைக்கண்ணனாக காட்சி அளிக்கிறார்.

    7.தென்திருப்பேரை – சுக்கிரன்

நெல்லையில் இருந்து திருச்செந்தூர் ரோட்டில் 38 கி.மீ.
  • மூலவர்- மகரநெடுங்குழைக்காதன்-வீற்றிருந்த திருக் கோலம்
  • உற்சவர்- நிகரில் முகில்வண்ணன்.
  • தயார் குழைக்காதுவல்லி, திருப்பேரைநாச்சியார்7
       துர்வாசமுனிவரின் சாப விமோசனம் பெறுவதற்காக பூமாதேவி இத்தலம் வந்து ஓம் நமோ நராயணாய என்ற மந்திரத்தை ஜெபம் செய்தார். பங்குனி பவுர்ணமி தினத்தில் ஜெபம் செய்து ஆற்றில் நீரை அள்ளி எடுக்கும்போது இரண்டு மகர குண்டலங்கள் கிடைக்க திருமாலுக்கு அணிவித்து மகிழ்ந்தார். அப்போது தேவர்கள் பூமாரி செரிய பூமா தேவியின் மேனி அழகானது. லக்குமியின் உடலுடன் பூமாதேவி தவமிருந்ததால் இவ்வூர் ஸ்ரீபேரை என்றழைக்கப்பட்டது. இத்தலத்தில் மழை வேண்டிபிரார்த்தனை செய்தால் இன்று வரை பெய்ப்பதில்லை.

 8.திருக்கோளுர்–செவ்வாய்

(மதுரகவி ஆழ்வார் அவதார தலம்)
    தென்திருப்பேரையில் இருந்து ஆழ்வார்திருநகாி செல்லும் வழியில் 3 கி.மீ. மேற்காக வந்து இடதுபுறம் ரோட்டில் 2 கி.மீ.
  • மூலவர்-வைத்தமாநிதி;
  • உற்சவர்-நிச்சோபவிந்தன்.
  • தயார்– குமுதவல்லி, கோளுர்வல்லி8
    சிவனை வழிபட கைலாயம் சென்ற குபேரன் பார்வதியை கெட்ட நோக்கத்தோடு பார்த்தானாம். பார்வதி கோபம் கொண்டு குபேரனை சபித்தாள். குபேரனின் உடல் விகாரமானது. குபேரன் தன் தவறை உணர்ந்து பார்வதியை அடி பணிந்தான். பார்வதி கோபம் தணியாதவளாய் உன் உடல் விகாரம் மாறாது, உனக்கு ஒரு கண் தெரியாது. நீ இழந்த நிதிகளைவைத்தமாநிதி பெருமாளிடம் தவம் செய்து பெற்றுக் கொள் என்று கூறினாள்
.    குபேரன் திருக்கோளூர் பெருமாளை நோக்கி கடும் தவம் செய்து இழந்த நிதியில் பாதியை பெற்றான். எனவே இழந்த செல்வத்தை பெற திருக்கோளூர் வைத்தமாநிதி பெருமாளை வழிபடலாம். இது செவ்வாய் கிரஹதோஷ நிவர்த்தி ஸ்தலம்.

9.ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்)–குருவியாழன்

   (நம்மாழ்வார் அவதார தலம்)
ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து 5 கி.மீ.
  • மூலவர்–ஆதிநாதன்- நின்ற திருக்கோலத்தில்
  • உற்சவர் பொலிந்து நின்றபிரான்
  • தயார்– ஆதிநாயகி, திருகுருகூர்நாயகி9
       திருமாலிடம் பிரம்மா தவம் இருக்க இடம் கூறுமாறு வேண்டினார். அதற்கு திருமால் நான் உன்னை படைப்பதற்கு முன்பே தாமிரபரணி நதிக்கரையில் யாம் எழுந்தருளி உள்ளோம் என்று திருமால் கூறிய இடமான ஆழ்வார்திருநகரி பெருமாள் ஆதியிலே தோன்றிய நாதன் என்பதால்  ஆதிநாதன் என திருநாமம் ஏற்பட்டது. திருமாலே பிரம்மனுக்கு குருவாக காட்டிய இடமாகியதால் குருகூர் என அழைக்கப்படுகிறது.
   ஆற்றில் வந்த சங்கு இப்பெருமானை வழிபட்டு மோட்சம் பெற்றதால், சங்கின் மறுபெயரான குருகு என்பதில் இருந்து குருகூர் என்று அழைக்கப்படுகிறது. சங்கு மோட்சம் பெற்ற தலம் இன்றும் திருச்சங்கண்ணிதுறை என்று அழைக்கப்படுகிறது.
    வராஹ அவதாரம் காண முனிவர்கள் இத்தலத்தில் தவமிருந்து அவர்களுக்கு பிராட்டியுடன் வராஹ நாராயணன் காட்சி அளித்ததால்வராஹ ஷேத்திரம் எனவும், நாய்க்கும் மோட்சம் அளித்த தீர்த்தகரை என்பதால் தீர்த்த ஷேத்திரம் எனவும், பஞ்ச மஹா ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. நம்மாழ்வார் குழந்தையாக தவழ்ந்த புளியமரத்தில் இன்றும் குழந்தையின் உருவம் உள்ளது.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
Please click below to go to CONTENTS for all the Articles in HRE: