வெள்ளி, 28 மார்ச், 2014

ஆன்மீக தகவல்கள்

ராதே கிருஷ்ணா 28-03-2014





குருபகவானுக்கு தட்சிணாமூர்த்தி என்ன சம்பந்தம் ஏன்? 

From the album: Mobile Uploads
By ஆன்மீக தகவல்கள்
குருபகவானுக்கு தட்சிணாமூர்த்தி என்ன சம்பந்தம் ஏன்? குருப்பெயர்ச்சி குருவருள் கிடைக்க தட்சிணாமூர்த்தி வணங்கு கிறோம் ?
அந்த தட்சிணாமூர்த்தி என்பவர் யார் என்ற கோள்வி உங்கள் மனதில் இருக்கும் அதன் விளக்கம்
தட்சிணாமூர்த்தி
64 சிவ வடிவங்களில் 32வது வடிவம் தட்சிணாமூர்த்தி ஆவர்

சிவபெருமானுடன் கையிலையில் உரையாடிக் கொண்டிருந்தார் பார்வதி தேவியார். அப்பொழுது சிவபெருமானிடம் ஐயனே தட்சனின் மகளானதால் தாட்சாயினி எனும் பெயர் எனக்கு ஏற்பட்டது. தங்களை அவமதித்த தட்சனின் இப்பெயரை வைத்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை எனவே அப்பெயர் மாறும் வண்ணம் வரம் வேண்டுமெனக் கேட்க உடன் சிவபெருமானும் பார்வதி மலை மன்னன் குழந்தை வரம் வேண்டி தவமிருக்கிறான், அவனுக்கு நீ மகளாகச் செல். பின் நான் வந்து மணமுடிப்பேன் என்றுக் கூறி அனுப்பினார். அங்கே குழந்தை உருவில் வந்த பார்வதி தேவி வளரத் துவங்கினார். இதற்கிடையே நான்முகனின் நான்கு புதல்வர்களான சனகன், சனந்தனன், சனாதனன், சனத்குமாரன் என்ற நான்கு முனிவர்கள் வேதாகமத்தை ஆரம்பம் முதல் முடிவு வரை படித்திருந்தனர். இருப்பினும் அவர்களது மனம் அலைபாய்ந்துக் கொண்டிருந்தது. இதனை சிவபெருமானிடம் கூறி தங்களுக்கு வேதத்தின் உட்பொருளை உபதேசிக்குமாறு வேண்டினார். உடன் சம்மதித்த சிவபெருமான் நந்திதேவரிடம் சென்று மன்மதனைத் தவிர வேறு யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம் என்றுக் கட்டளையிட்டு வந்து சனகாதியர்க்கு பதி, பசு, பாசம் இவற்றையெல்லாம் விளக்கி விரிவாகக் கூறினார். உடன் அவர்கள் மேலும் மனம் ஒடுங்கும்படி ஞான உபதேசம் செய்யச் சொன்னார்கள். உடனே சிவபெருமான் இதைக் கேட்டவுடன் மெல்லிய புன்னகைப் புரிந்து "அப்பொருள் இவ்வாறிருக்கும் என்றுக் கூறினார். பின்னர் மேலும் புரியவைக்க தன்னையே ஒரு முனிவன் போலாக்கி தியானத்தில் ஒரு கணநேரம் இருந்தார். அதே நிலையிலேயே அந்த நால்வரும் இருந்தனர். அப்போது மன்மதன் உள்ளே வந்து சிவபெருமான் மேல் பாணம் விட, கோபமுற்ற சிவபெருமான் அவனை நெற்றிக் கண்ணாலே எரித்தார். சிவபெருமான் அந்நிலை நீங்கி முனிவர்களை வாழ்த்தி அனுப்பினார். இறைவன் தட்சிணாமூர்த்தியாக இருந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசித்தால் அவரது பெயர் "தட்சிணாமூர்த்தி ஆயிற்று. இவரை தரிசிக்க செல்லவேண்டிய தலம் "ஆலங்குடி யாகும், குடந்தை-நீடாமங்கலம் வழியாக இவ்வூர் உள்ளது. இறைவன் காசியாரணியர். இறைவி <உமையம்மையாவார். இங்கு நடைபெறும் குருபெயர்ச்சி விசேசமாகும். சித்ரா பௌர்ணமி, தைப்பூசம், பங்குனி <உத்திரம் போன்ற நாட்களில் இருபத்தி நான்கு நெய் விளக்கு ஏற்ற திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிடைக்கும். வெண்தாமரை அர்ச்சனையுமும் தயிரன்ன நைவேத்தியமும் வியாழக்கிழமைகளில் கொடுக்க நினைவாற்றல் பெருகும்.
இந்த தட்சிணாமூர்த்தி முன் நீர் ஆரத்தி எடுத்து தீபம் ஏற்ற தடைபெற்ற திருமணம் நடைபெறும், புத்திரப் பேறு கிடைக்கும. குருபகவான் நவகிரகம் அவருக்கு இஷ்ட தெய்வம்
தட்சிணாமூர்த்தி
ஆவார் ஆதலால் நாம் தட்சிணாமூர்த்தியை வங்கிணால் குருபகவான் அருள் பெறலாம்















































































































































செவ்வாய், 25 மார்ச், 2014

சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா ……… இதோ

ராதே கிருஷ்ணா 26-03-2014



சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா ……… இதோ

From the album: Timeline Photos
By ஈழ மண் வாசம்
சென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை அறிந்திருகின்றீர்களா ……… இதோ

சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான். சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது.

அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே.

- 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது.

- Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)

- chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று.

- 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது.

- மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது.

- தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது.

- சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது.

- முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி.

- உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்.

- சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்.

- கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்.

- சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது.

- பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்.

- சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது.

- நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)

- புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது.

- அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி
என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்.

- 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை.

- முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது.

- மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது.

- பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது.

- சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது.

- திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது.

- பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி என பெயர்
உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது.

- தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயே இப்பகுதி பாரிமுனை
(பாரிஸ் கார்னர்) ஆனது.

வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது.





































































மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்

ராதே கிருஷ்ணா 26-03-2014

மனிதன் மனிதனாக வாழ 18 அம்சங்கள்



வெள்ளி, 21 மார்ச், 2014

ஆத்திசூடி

ராதே கிருஷ்ணா 21-03-2014



RADHEKRISHNA MAMA, BIRTH DAY VAZHTHUKKAL
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
==============================



From the album: Timeline Photos
By Suresh babu super photos
ஆத்திசூடியை உலகறியச் செய்வோம்..!
==============================

1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Learn when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Learn from the learned.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubborn.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to learn.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement.

- ஔவையார்.

visit & join https://m.facebook.com/sureshbabusuperphotos,













































































































"களக்காட்டூர்"

ராதே கிருஷ்ணா 21-03-2014

"களக்காட்டூர்" 



From the album: Timeline Photos
By Sasi Dharan
வீட்டு விசேஷத்திற்காக கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்தேன், விழா முடிந்ததும், வீட்டில் வெறுமனே உட்கார்ந்து டி.வி. பார்க்க மனம் ஒப்பாமல், வண்டியை எடுத்துக்கொண்டு அண்ணனுடன் வெளியே புறப்பட்டேன், 25 கிலோமீட்டர் பயணித்து "களக்காட்டூர்" என்ற ஊரை வந்தடைந்ததும், வண்டியை ஓரம் நிறுத்திவிட்டு, அந்த ஊரில் இருந்த டீ கடையில் விசாரித்தேன், அண்ணே.. இங்க ஒரு ஈஸ்வரன் கோயில் இருக்காமே வழி? என்றதும்.. பைக்ல வந்தீங்களா? கார்ல வந்தீங்களா? என்று மறுமுனையில் இருந்து கேள்வி வந்தது, பைக் தாண்ணே என்றதும் " இப்படியே மேற்கால ஊருக்குள்ள போங்க தம்பி, ஊர தாண்டினதும் ஏரி ஒண்ணு வரும், அந்த ஏரிக்கரை மேலயே ஒரு ஒன்றரை கிலோமீட்டர் போனா, வழி எங்க முடியுதோ அங்க தான் இருக்கு நீங்க தேடி வந்த கோயில்".

வண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் பயணப்பட்டேன், ஊர் எல்லையை தாண்டியதும் அவர் சொன்ன அந்த ஏரி கண்ணில் தென்பட்டது, அங்கு வந்த பெரியவர் ஒருவரிடம் மீண்டும் வழிகேட்டதில் கரையை கைகாட்டினார் "இதோ இது மேல தான் போகணும்". அப்போது தான் அந்த டீ கடைகாரர் "பைக்ல வந்தீங்களா? கார்ல வந்தீங்களா?" என்ற கேள்வியை ஏன் எழுப்பினார் என்பது புரிந்தது, அந்த பாதையில் ஒன்று நடந்து செல்ல முடியும் அல்லது இரு சக்கர வாகனம் இருந்தால் மட்டுமே செல்லமுடியும், கைகாட்டிய திசையில் பயணித்தேன், கரை மீது ஒரு ஒற்றையடிப் பாதை, பாதையை மறைத்தவாறு இருபக்கமும் கருவேல மரங்கள், வண்டி ஓட்டிக்கொண்டே செல்லும் போது சுரீல், சுரீல் என கருவேல மரத்தின் முட்கள் முகத்தை பதம் பார்த்தது, முள்ளுக்கு பயந்து கையை குறுக்கில் வைத்து தடுத்தவாறு வண்டியை கொஞ்சம் கவனக்குறைவாக ஓட்டினால் ஏரிக்குள் விழவேண்டியது தான், அனைத்தையும் கடந்து சென்றுகொண்டே இருக்கையில் ஒரு இடத்தில பாதை முடிவுற்றது, இடது பக்கம் திரும்பிப் பார்த்தேன், ஹா..நான் தேடி வந்த செல்வம் கைவிடப்பட்ட குழந்தையை போன்று தன்னந்தனியாய் ஒரு முட்புதருக்கருகில்!!.

இதோ வந்துவிட்டேன் என்று வண்டியை கரை மீது விட்டுவிட்டு கோயிலை நோக்கி ஓடினேன், 1100 வருடங்கள் கடந்த கோயில், விரிசல் விட்ட சுவர், விமானம் இடிந்து மொட்டையான கருவறை, கல்வெட்டுகளை மறைத்து சுவர் முழுக்க சுண்ணம். யாரும் வராத இடத்துக்கு இவன் யார் புதுசா ஒருத்தன் வந்திருக்கான் என்பதைப் போன்று அங்கு ஆடு மேக்கும் பெண்மணி வந்து எட்டிப் பார்த்தார், கோயில் பூட்டி இருக்கே தொறக்கமாட்டாங்களா? அய்யர் காலையில் மட்டும் தான் வருவாரு, வேணும்னா ஊருக்குள்ள போய் கூட்டி வாங்க என்றார். வார்த்தைகளை காதில் போட்டுகொண்டு கோயிலை சுற்றி சுற்றி வந்தேன். கோயில் சுவர்களை தடவிக்கொண்டே கல்வெட்டுகளில் அந்த பெயர் தென்படுகிறதா என்று தேடத் துவங்கினேன்.

ஆயிரம் வருடங்களுக்கு முன் இந்த கிராமத்தில் இருந்து ஒருவர் தஞ்சை செல்ல விழைகிறார், அவர் இந்த கிராமத்தின் அதிகாரி, பெயர் "காடன் மைந்தன்", அவர் செல்வதற்கு காரணம் இருந்தது தன்னுடைய ஊரில் இருக்கும் கோயிலில் தன் மன்னர் பெயரால் அவர் நலத்திற்காக விளக்கொன்று ஏற்ற அவருக்கு ஆசை, மன்னரை நேரில் சந்தித்து தன் விருப்பம் கூறி அதற்கு அனுமதி பெற விரும்பி காஞ்சிபுரம் அருகே இருக்கும் "களக்காட்டூர்" என்ற இந்த ஊரில் இருந்து தஞ்சை பயணப்பட்டார், யார் அந்த அரசன்? வேறு யார் நம் ராஜ ராஜன் தான்!. அரண்மனையில் அரசனை சந்தித்த அந்த அதிகாரி அரசே "தங்கள் நலம் வேண்டி என்னுடைய ஊரில் இருக்கும் கோயிலில் விளக்கேற்ற வேண்டும்" அதற்கு நீங்கள் அனுமதிக்க வேண்டும் என்று காடன் மைந்தன் ராஜ ராஜனை பார்த்து கேட்க, அதற்கு ராஜ ராஜன் “ ஒரு அரசனான எனக்கு பொதுமக்களாகிய உங்கள் நலம் தான் முக்கியம். எனவே, என் ஒருவன் நலனிற்காக விளக்கேற்றுவதைக்காட்டிலும் ஊர் மக்களின் நலனுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும், இந்த உலக மக்களின் நலனுக்ககாகவும் விளக்கு வைப்பதே சிறந்தது” என்று அவரை சமாதானப் படுத்தி ஊருக்கு அனுப்பி இருக்கிறார் !!.

அன்றைக்கு ஒரு சாதாரண கிராம அதிகாரியால் தென் இந்தியா முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆட்சி செய்து வந்த பேரரசனை நேரில் சந்தித்து பேசமுடிந்திருக்கின்றது!, அதுமட்டுமல்லாமல் " தன் நலனை இரண்டாம் பட்சமாக நினைத்து, உங்கள் நலனுக்காகவும், உங்கள் ஊர் மக்களின் நலனுக்காகவும், இந்த உலக மக்களின் நலனுக்ககாகவும் விளக்கு வைக்கவும்” என்று தன் நாட்டு மக்களின் நலத்தின் மீது எத்தனை அக்கறை கொண்டிருந்திருக்கிறான் ஒரு பேரரசன், என்ன ஒரு பண்பு!! தன் மக்கள் மீது என்ன ஒரு மதிப்பு! பாசம்!!

தஞ்சையில் இருந்து தன் சொந்த ஊருக்கு திரும்பிய அந்த அதிகாரி என்ன செய்தார் தெரியுமா? தன் மன்னன் ஆசையாக கேட்டுக்கொண்டதற்கு இணங்க நாட்டு மக்களின் நலனுக்காக தினமும் இறைவன் முன் ஒரு விளக்கு ஏற்ற வாய்பாய் கொடை அளித்துள்ளார்!! அதுமட்டுமல்லாமல் தன் நாட்டு மக்களின் மீது இத்தனை அன்பு வைத்திருக்கும் தன் மன்னன் எந்த குறையுமின்றி நலமுடன் இருக்க வேண்டும் என்று இன்னொரு விளக்கு ஏற்றவும் வழி செய்துள்ளார் அந்த அதிகாரி"!!மன்னன் மக்களை விட்டுக்கொடுக்கவில்லை, மக்கள் மன்னனை விட்டுக்கொடுக்கவில்லை!!.

சுண்ணாம்பு பூச்சுகளுக்கிடயே இருந்த அந்த கல்வெட்டை பார்த்ததும் மனம் கனத்தது, கூடுதலாக ராஜ ராஜனின் இயற் பெயரான "அருமொழி வர்மன்" என்ற பெயரை முதன் முதலாக கல்வெட்டில் கண்டேன், வண்டியை எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த முள் வேலிகளுக்குள் புகுந்து அந்த ஒற்றை அடிப் பாதையில் பயணித்து ஊரை அடைந்து, விளக்கு வைக்க எண்ணெய்,திரி எல்லாம் வாங்கிகொண்டு, அய்யர் வீட்டையும் தேடி கண்டுபிடித்து அவரையும் உடன் அழைத்துக் கொண்டு மீண்டும் கோயிலை வந்தடைந்தேன், கோயில் திறக்கப்பட்டது, இறைவன் பரிதாபமாக இருந்தார், "வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வானம் மாறவில்லை, வான் மதியும் மீனும் கடல் காற்றும் மலரும் மண்ணும் கொடியும் சோலையும் நதியும் மாறவில்லை மனிதன் மாறிவிட்டான்"!! மிகவும் நல்ல அய்யர், வரலாற்று ஆர்வலர், தனக்கு முன்பிருந்தவர்கள் கல்வெட்டில் சுண்ணாம்பு பூசிவிட்டதை நினைத்து பெரிதும் வருத்தப்பட்டார், " 50 ரூபா மதிப்புள்ள விளக்கு, தட்டு கூட விட்டு வைக்க மாட்டேங்குறாங்க சார், அதனால தான் தினமும் பூஜை புடிஞ்சதும் இது எல்லாத்தையும் கையோட கொண்டு போய் கொண்டு வறேன்" என்றார், கோயிலின் நிலை குறித்து அவர் பேசும் போது அழக்கூடாது என்பதை மனதில் வைத்து பேசியதைப் போன்றே இருந்தது, நீண்ட நேரமாக அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன், ஒரு மணி நேரம் கடந்திருக்கும், நல்ல மனிதரை சந்தித்ததில் பெருமகிழ்ச்சி ஏற்ப்பட்டது. உங்கள் பெயர் என்ன சார் என்று அவரிடம் கேட்டேன். "ராஜேந்திரன்" என்றார் அந்த ஒலி காதில் பாய்ந்ததும் உடல் சிலிர்த்தது!.

அங்கு விளையாடிக்கொண்டிருந்த நான்கு சிறுவர்கள் கோயிலுக்குள் ஓடிவந்தார்கள், அய்யருக்கு உதவினார்கள், இந்த கோயிலுக்கு தொடர்ந்து வர்றவங்க இவங்க மட்டும் தான் தம்பி", என்றார் இந்த முறை நான் அழக்கூடாது என்று பல்லைக் கடித்துக் கொண்டேன், கல்வெட்டில் "ஊருணி ஆழ்வார்" என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த இறைவனுக்கு வாங்கி வந்த எண்ணெய்யில் விளக்கு வைக்கும் படி கொடுதேன், மூன்று அகல் விளக்குகள் எடுத்தார் , மூன்றும் ஏற்றப்பட்டது, ஒண்ணு கொண்டு போய் வெளியே இருக்குற துர்கைக்கு வெச்சிட்டு வாங்க தம்பி என்று கொடுத்தார், வைத்து விட்டு மீண்டும் உள்ளே வந்தேன், தீபம் காட்டப்பட்டது, மனதில் எந்த கள்ளம் கபடமும் இல்லாத என்னை சுற்றி இருந்த அந்த நான்கு குழந்தைகளும் "ஓம் நம சிவாய" "ஓம் நம சிவாய" என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்க அந்த சிறிய கோயிலில் ஒலி வெளியே செல்லமுடியாமல் அங்கேயே வட்டமிட்டு, மீண்டும் மீண்டும் காதுக்குள் வந்து ஒலித்துகொண்டே இருந்தது, மீதம் இருந்த இரண்டு விளக்குகள் கருவறைக்குள் கொண்டு சென்று இறைவன் முன் வைக்கப்பட்டது, குழந்தைகள் உச்சரித்துகொண்டே இருந்த ஓம் நம சிவாய அதிர்வலைகளுக்கு மத்தியில் இறைவனை வேண்டிக்கொண்டேன், இந்த கோயிலை மிதிக்க ஆசிர்வதித்த இறைவா உனக்கு என் நன்றி, இந்த கோயில் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்ப வேண்டும், இங்கு மீண்டும் இரண்டு விளக்குகள் ஏற்றப்பட்டுள்ளது ஒன்று " மக்கள் நலன் மீது இத்தனை அன்பு கொண்ட பேரரசன் ராஜ ராஜன் புகழ் சந்திர சூரியன் உள்ளவரை தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்" என்பதற்காக இருக்கட்டும், மற்றொன்று அவன் ஆசைப்படி இந்த உலக மக்கள் நலனுக்காக இருக்கட்டும்!!. என்று வேண்டி முடித்தேன், அவ்வளவு நேரம் அடங்கி இருந்த கண்ணீர் அத்தனையும் மீறி ஏனோ வெளியே வந்துவிட்டது!.






























































































புதன், 19 மார்ச், 2014

Jagannath Temple, Puri, Orissa, India.

ராதே கிருஷ்ணா 20-03-2014



Jagannath Temple, Puri, Orissa, India.


From the album: Timeline Photos
By Chinthamani
Jagannath Temple, Puri, Orissa, India.

The Jagannath Temple in Puri is a famous Hindu temple dedicated to Jagannath and located in the coastal town of Puri in the state of Odisha, India. The name Jagannath (Lord of the Universe) is a combination of the Sanskrit words Jagat (Universe) and Nath (Lord of) and also, the word "Jagannatha" is evolved from "Jagati" (as an elevated platform or "Ratnabedi" on which the wooden form of Jagannatha, Balabhadra and Subhadra are worshiped on or the temple or its precincts inside the "Narendra Pokhari" ) and "Natha" (means "Lord"). The temple is an important pilgrimage destination for many Hindu traditions, particularly worshippers of Krishna and Vishnu, and part of the Char Dham pilgrimages that a Hindu is expected to make in one's lifetime . The temple was built in the 11th century atop its ruins by the progenitor of the Eastern Ganga dynasty, King Anantavarman Chodaganga Deva. The temple is famous for its annual Rath Yatra, or chariot festival, in which the three main temple deities are hauled on huge and elaborately decorated temple cars. Since medieval times, it is also associated with intense religious fervour.

The temple is sacred to the Vaishnava traditions and saint Ramananda who was closely associated with the temple. It is also of particular significance to the followers of the Gaudiya Vaishnavism whose founder, Chaitanya Mahaprabhu, was attracted to the deity, Jagannath, and lived in Puri for many years.
The central forms of Jagannath, Balabhadra and the goddess Subhadra constitute the trinity of deities sitting on the bejewelled platform or the Ratnavedi in the inner sanctum. The Sudarshan Chakra, idols of Madanmohan, Sridevi and Vishwadhatri are also placed on the Ratnavedi. The deities of Jagannath, Balabhadra, Subhadra and Sudarshan Chakra are made from sacred Neem logs known as Daru Bramha. Depending on the season the deities are adorned in different garbs and jewels. Worship of the deities pre-date the temple structure and may have originated in an ancient tribal shrine.

According to recently discovered copper plates from the Ganga dynasty, the construction of the current Jagannath temple was initiated by the ruler of Kalinga, Anantavarman Chodaganga Dev. The Jaga mohan and the Vimana portions of the temple were built during his reign (1078 - 1148 CE). However, it was only in the year 1174 CE that the Oriya ruler Ananga Bhima Deva rebuilt the temple to give a shape in which it stands today.

Jagannath worship in the temple continued until 1558, when Odisha was attacked by the Afghan general Kalapahad. Subsequently, when Ramachandra Deb established an independent kingdom at Khurda in Orissa, the temple was consecrated and the deities reinstalled.

Legendary account as found in the Skanda-Purana, Brahma Purana and other Puranas and later Oriya works state that Lord Jagannath was originally worshipped as Lord Neela Madhaba by a Savar king ( tribal chief ) named Viswavasu. Having heard about the deity, King Indradyumna sent a Brahmin priest, Vidyapati to locate the deity, who was worshipped secretly in a dense forest by Viswavasu. Vidyapati tried his best but could not locate the place. But at last he managed to marry Viswavasu's daughter Lalita . At repeated request of Vidyapti, Viswavasu took his son-in-law blind folded to a cave where Lord Neela Madhaba was worshipped.

Vidyapati was very intelligent. He dropped mustard seeds on the ground on the way. The seeds germinated after a few days, which enabled him to find out the cave later on. On hearing from him, King Indradyumna proceeded immediately to Odra desha Orissa on a pilgrimage to see and worship the Deity. But the deity had disappeared. The king was disappointed. The Deity was hidden in sand. The king was determined not to return without having a darshan of the deity and observed fast unto death at Mount Neela, Then a celestial voice cried 'thou shalt see him.' Afterwards the king performed a horse sacrifice and built a magnificent temple for Vishnu. Sri Narasimha Murti brought by Narada was installed in the temple. During sleep, the king had a vision of Lord Jagannath. Also an astral voice directed him to receive the fragrant tree on the seashore and make idols out of it. Accordingly the king got the image of Lord Jagannath, Balabhadra, Subhadra and Chakra Sudarshan made out of the wood of the divine tree and installed them in the temple.

Indradyumna's prayer to Lord Brahma

King Indradyumna put up for Jagannath the tallest monument of the world. It was 1,000 cubits high. He invited Lord Brahma, the cosmic creator, consecrate the temple and the images. Brahma came all the way from Heaven for this purpose. Seeing the temple he was immensely pleased with him. Brahma asked Indradyumna as to in what way can he (Brahma) fulfill the king's desire, since was very much pleased with him for his having put the most beautiful Temple for Lord Vishnu. With folded hands, Indradyumna said, "My Lord if you are really pleased with me, kindly bless me with one thing, and it is that I should be issueless and that I should be the last member of my family." In case anybody left alive after him, he would only take pride as the owner of the temple and would not work for the society

திங்கள், 17 மார்ச், 2014

ஈமச் சடங்குகள்

ராதே கிருஷ்ணா 18-03-2014



ஈமச் சடங்குகள் எல்லாம் பொருள் செரிந்தவையாகும். இறந்த தந்தைக்கு முன் மகன் தோளில் நீர் சுமந்த குடத்தை வைத்துக்கொள்வான். நாவிதனார் தண்ணீர் குடத்துடன் மூன்று முறை சுற்ற செய்து மூன்று ஓட்டை இட்டு, 'அப்படியே உடைத்து திரும்பி பார்க்காமல் போ' என்பார்.

From the album: Timeline Photos
By சித்தர்கள் உலகின் முதல் விஞ்ஞானிகள்
ஈமச் சடங்குகள் எல்லாம் பொருள் செரிந்தவையாகும். இறந்த தந்தைக்கு முன் மகன் தோளில் நீர் சுமந்த குடத்தை வைத்துக்கொள்வான். நாவிதனார் தண்ணீர் குடத்துடன் மூன்று முறை சுற்ற செய்து மூன்று ஓட்டை இட்டு, 'அப்படியே உடைத்து திரும்பி பார்க்காமல் போ' என்பார்.

தண்ணீர் குடம் என்பது சாரீரம். அதி நிறைந்த தண்ணீர் ஜீவான்மா. முதலில் இட்ட ஓட்டை தனெஷனை (பணத்தாசை), இரண்டவது இட்ட ஓட்டை தாரெஷனை (மனைவி மேல் வைத்த ஆசை) , மூன்றாவது இட்ட ஓட்டை மக்கள் மேல் வைத்த ஆசை. இந்த மூன்று ஆசைகளாகிய ஓட்டைகளின் வழி சரிரதிலிருந்த ஆத்ம சைதன்யமாகிய உயிர் சிந்திவிட்டது. இந்த ஆசாபாசத்தை திரும்பி பாராமல் நீ அறநெறியில் செல்வாயாக என்ற குறிப்பை நவிதனார் காட்டுகிறார்.

நம் முன்னோர்கள் செய்த சடங்குகள் அர்த்தமற்றவை என்று தல்லாமல் நுனித்து உணர்வது மதிடமை ஆகும்.

இந்த ஆன்மாக்களுக்கு செய்யும் வழிபாடுகள் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிகடனாகும்

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றுங்
கைம்புலத்தார் ரோம்பல் தலை - திருக்குறள், (அறத்துப்பால்-43)

- சமய தத்துவங்கள் ஐநூறு நூலிலிருந்து


















10 Ways to be Happy

ராதே கிருஷ்ணா 18-03-2014


10 Ways to be Happy





ஞாயிறு, 16 மார்ச், 2014

ஆலய தரிசனம் ஏன்?

ராதே கிருஷ்ணா 16-03-2014




ஆலய தரிசனம் ஏன்?

ஆலய தரிசனம் ஏன்?

ஆலய தரிசனம் ஒரு மனிதனுக்கு அவசியம் தேவை. வீட்டில் இருந்தபடியே கடவுளை வணங்கினால் போதாதா என கேட்கலாம். எங்கும் பரவி இருக்கும் பரம்பொருளை ஒரு குறிப்பிட்ட இடத்தில் தியானிப்பதால் விசேஷ நன்மைகள் உண்டு. உலகம் முழுவதும் தண்ணீர் இருந்தாலும் அந்த தண்ணீரை கிணறுகள் தோண்டி எடுப்பதுபோல நம் மனதை ஆண்டவனிடம் செலுத்திக் கொண்டே வந்தால் அவன் அருள் நமக்கு இலகுவாக கிடைக்கும். இதற்காக ஜபமோ, ஹோமமோ, பூஜையோ செய்ய வேண்டும் என்பதில்லை. தினமும் ஆண்டவன் சன்னிதானத்தில் ஐந்து நிமிடம் கண்மூடி தியானித்தாலே போதும். தேவைகளை அவரிடம் சொல்ல வேண்டியதில்லை. அவருக்கே நமது தேவைகள் தெரியும்































































அன்பரின் வேண்டுகொளுக்குகிணங்க.......வெள்ளியங்கிரி பற்றி சில குறிப்புகள்.....

ராதே கிருஷ்ணா 16-03-2014


அன்பரின் வேண்டுகொளுக்குகிணங்க.......வெள்ளியங்கிரி பற்றி சில குறிப்புகள்.....


அன்பரின் வேண்டுகொளுக்குகிணங்க.......வெள்ளியங்கிரி பற்றி சில குறிப்புகள்......

Narasimman Nagarajan shared ஆதி சித்தன்'s photo.
அன்பரின் வேண்டுகொளுக்குகிணங்க.......வெள்ளியங்கிரி பற்றி சில குறிப்புகள்......

அடிவாரக் கோயில்:
கோவை நகரின் மேற்கு எல்லையில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள தலம் தான் வெள்ளிங்கிரி. இம்மலையின் அடிவாரத்தில் உள்ள பகுதி பூண்டி ஆகும். இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர் மனோன்மணி அம்மன் ஆகிய சன்னதிகளுடன் கூடிய அழகிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சமீபத்தில் 4 1/2 அடி உயரமுள்ள ஐம்பொன்னாலான நடராஜர் திருவுருவ சிலை மற்றும் 63 நாயன்மார்களின் கற்சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலுக்கு முன்புறமாக முருக நாயனார் நந்தவனம் ஒன்றையும் அமைத்துள்ளனர். கோயிலைச் சுற்றி பக்தர்கள் இளைப்பாற மண்டபங்கள் சத்திரங்கள் உள்ளன. கோயிலின் வடக்குப் பகுதியில் ஐந்து விநாயகர் சிலைகள் அமைந்த பஞ்ச விநாயக மண்டபம் உள்ளது. அடுத்து கல்லினால் ஆன இராசி தூண். வேறு எந்த கோயிலிலும் காணப்படாத ஒன்று. விரிந்த தாமரை மலரின் நடுவில் உள்ள தண்டில் 9 தாமரை மலர்களை அடுக்கி வைத்தாற்போல் உருவாக்கி உள்ளனர். மேல் பகுதியில் ஒரு குடையும் அதன்மேல் ஓர் அழகிய அன்னப்பட்சியின் திருவுருவத்தை அமைத்துள்ளனர். விரிந்த தாமரை மலரின் கீழ்பகுதியில் 12 ராசிகளை சிற்பமாக நேர்த்தியாக செதுக்கி உள்ளனர்.

மலைக்கோயில்:
கிரிமலை எனப்படும் ஏழாவது மலையில் அமைந்துள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் குகைக்கோயில் சுமார் 6000 அடி உயரத்தில் கடுங்குளிரான சீதோஷ்ண நிலையில் மிக மிக செங்குத்தான மலைப்பாதையின் முடிவில் அமைந்துள்ளது. இக்கோயில் அமைந்துள்ள இடம் அடர்ந்த காடுகள் சூழ்ந்த வனப்பகுதி ஆகும். வன விலங்குகளின் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதால் மாலை 6 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. கோயிலின் பின்புறம் வடக்கு பகுதியில் மலை மீது செல்வதற்கான படிகள் உள்ளன. வெள்ளிங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அன்று. இரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், குறைந்த, அதிக ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கும் மேலானவர்கள் ஆகியோர் மலை ஏறுவது உயிருக்கு மிக ஆபத்தானதாகும். 10 வயதிற்கு மேலும் 40 வயதிற்கு கீழும் உள்ள பெண்கள் மலைஏறக்கூடாது. மலைஏறும் போது பனிப்புயல், மழை ஏற்பட்டால் தொடர்ந்து மலை ஏறாமல் உடனே அடிவாரம் திரும்ப பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மலை ஏறும்போதும் இறங்கும் போதும் நமக்கு உயிர்த்துணையாக விளங்குவது ஊன்று கோலாய் பயன்படும் மூங்கில் தடி ஆகும். இத்தடிகள் அடிவாரத்தில் விற்பனைக்கு உள்ளன. தற்போது அதன் விலை ரூ 20/- அத்தடியை தங்கள் உயரத்திற்கு தகுந்தாற் போல் நீளத்தை சீராக்கி தர ரூ 5/- வசூலிக்கின்றனர். இத் தடி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வந்ததற்கான அடையாள சின்னமாக விளங்குவதுடன் அதைப் பத்திரமாக பாதுகாத்து வைக்கின்றனர்.

இம்மலைக்கு வருடத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி 15ம் தேதி வரை மட்டும் தான் பக்தர்கள் வருகின்றனர். இம் மாதங்களில் நிலவும் சீதோஷ்ண நிலை உகந்ததாக இருக்கின்றது. குறிப்பாக சித்ரா பவுர்ணமி யன்று இலட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது சிறப்பாகும். பொதுவாக இரவு நேரத்தில் மலை ஏறி தரிசனம் செய்தபின் வெயில் கடுமை அதிகரிக்கும் முன் அடிவாரத்தை அடைவது நல்லது. கோடை காலத்தில் நீர்நிலைகளை நாடி பெரும்பாலான வன விலங்குகள் கீழ் பகுதிக்கும் சென்றுவிடும். அச்சமயத்தில் பக்தர்கள் பயணிப்பதால் வன விலங்குகளின் தொந்தரவு ஏதும் இருக்காது. மழை காலங்களில் மலை ஏறுவது பாதுகாப்பானது அல்ல மாறாக ஆபத்தை விளைவிக்கும். சறுக்கி, வழுக்கி விழும் அபாயமும் உள்ளது. மலைப்பாதை படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் நாகத்துடன் கூடிய சிவலிங்கம், நந்தியம் பெருமான் மற்றும் மனோன்மணி அம்மனின் திருவுருவ சிலைகளை பிரதிஷ்டை செய்துள்ளனர். மலைஏறும் முன்பு ஈசன், அன்னை மற்றும் நாகரை வணங்கி அவர்களின் அருட்துணையோடு பத்திரமாக சென்று திரும்பி வரவேண்டும் என்ற வேண்டுதலோடு பயணத்தைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இச் சிலைகளை மலைப்பாதை தொடக்கத்தில் நிறுவி உள்ளனர்.

முதல் மலையில் அமைந்துள்ள பாதை முழுவதும் சீரான படிகள் என்றாலும் படியின் உயரம் 3/4 அடிமுதல் 1 அடி வரை செங்குத்தானவை. இரவில் நிலா வெளிச்சம் இருந்தாலும் அடர்ந்த சோலைகளின் நடுவே பயணிக்கும் போது இருட்டாகத்தான் இருக்கும். எனவே டார்ச் லைட் எடுத்துச் செல்வது மிகஅவசியம். கூடுதலாக ஒரு செட் பேட்டரி செல் வைத்திருப்பது நல்லது. இம்மலையில் காட்டுக் கொசுக்கள் அதிகம். உடல் பாகங்கள் வெளியே தெரியாமல் மறைத்துக் கொண்டால் கொசுக்கடியால் இருந்து தப்பிக்கலாம். குறிப்பாக மாலைநேரத்தில் கொசுக்கள் அதிகம் இருக்கும். இம்மலையில் மூங்கில், தேக்கு வேங்கை மற்றும் மூலிகைச் செடிகள், மரங்கள் அதிக அளவில் உள்ளன. மலை ஏறத் தொடங்கும் போது லேசாக வியர்க்கத் தொடங்கி பாதி மலைக்கு மேல் பயணிக்கும் போது அந்த இரவு நேரத்திலும் வியர்வை கொட்டும். மலைஏறும் போது மிகக் கடினமான சூழலில் ஓம் நமசிவாய என்ற மந்திரத்தைத் சொல்லிக் கொண்டு சென்றால் எந்த வித சலிப்பும் தெரிவதில்லை. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்றும், சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்மியமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் ஏற்படும் இனிய அனுபவத்தை உணரத்தான் முடியுமே தவிர எழுத்துக்களால் விவரிக்க இயலாது. மூலிகை தாவரங்களின் மணம், பூக்களின் நறுமண வாசனை, மாசற்ற தூய காற்றை சுவாசிப்பதால் உடலுக்கு ஆரோக்கியம் கிடைக்கிறது. மலை ஏறும் போது உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வையுடன் கலந்து வெளியேறுகிறது. சுவாசகுழாயும், சுவாசப் பையும், மார்பு எலும்புகள் விரிந்து சுருங்குவதால் உடற்பிணி நீங்குகிறது. மூலிகைகளின் சாரம் மிகுந்த நீரை பருகுவதாலும் நீராடுவதாலும் உடல்நலம் சீராகுகிறது.

ஏழு மலைகளில் முதல் மலை மட்டும் அதிக உயரம். சுமார் 1 1/2 கி.மீ. இருக்கும். முதல் மலை முடிந்து இரண்டாவது மலை தொடக்கத்தில் வெள்ளை விநாயகர் சன்னதி உள்ளது. இக்கோயிலின் அருகே இளைப்பாற ஒரு சிறிய கூடமும் பிஸ்கட், சோடா, சுக்கு காபி போன்றவற்றை விற்பனை செய்யும் கடையும் உள்ளது. வெள்ளிங்கிரி மலையில் சாப்பிட வேறு எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காது. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே சுனைநீர் கிடைக்கும். எனவே மலை ஏறும் போது சாப்பிட ரொட்டி ஜாம், சப்பாத்தி, பழங்கள் மற்றும் உலர் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களையும் தண்ணீரையும் எடுத்துச் செல்ல வேண்டும். எண்ணெயில் தயாரித்த உணவுப் பொருட்களைத் தவிர்தல் நலம். இல்லையெனில் மலைஏறும் போது நிறைய நீர் அருந்த வேண்டி வரும். நீர் அதிக அளவில் அருந்தினால் மலை ஏறுவது சிரமமான காரியம் ஆகிவிடும்.

இரண்டாவது மலை சிற்சில இடங்களில் சமவெளியும் படிகளும் உள்ளன. அடர்ந்த மரங்கள் நிறைந்திருப்பதால் நிலவு ஒளியிலும் பாதையில் வெளிச்சம் தெரிவதில்லை. ஓரிடத்தில் படி ஏறிச் செல்லும் போது கருத்த உருவம் ஒன்று நகர்ந்து வருவதை டார்ச் வெளிச்சத்தில் காண முடிந்தது. கூர்ந்து பார்த்தால் அது ஒரு கருந்தேள். பயந்து நடுங்கிவிட்டோம். நாங்கள் ஒதுங்கி அதற்கு பாதை விடுத்து பின் பயணத்தைத் தொடர்ந்தோம். ஏனெனில் அவை வாழும் இடத்திற்கு நாம் வந்துள்ளோம். அவற்றுக்கு எந்த விதத்திலும் இடையூறு செய்வது நியாயமில்லை. இரவு நேரத்தில் மின்மினி பூச்சிகளை அதிக அளவில் காணமுடிந்தது. இம்மலையில் மிளகு திப்பிலி மூங்கில் வேங்கை போன்ற தாவர மர வகைகள் நிறைந்து காணப்படுகின்றன. இம்மலையின் முடிவில் பாம்பாட்டி சுனை என்ற தீர்த்தம் உள்ளது.

மூன்றாவது மலையில் சில சரிவான பாறைகளின் மீது ஏறிச் செல்ல வேண்டும். ஏறும் போது வழுக்கி விழுவதால் இதற்கு வழுக்குப்பாறை என பெயர் பெற்றது. அப்பாறைகளில் இலகுவாக ஏறிச்செல்ல படி வடிவத்தில் செதுக்கி அமைத்துள்ளனர். மரத்தின் வேர்களுக்கு இடையே பாதை அமைந்துள்ளது. நடக்கும் போது மிகவும் கவனமாகச் செல்லவேண்டும். மழை காலங்கள் இப்படிகள் வழியே தான் மழை நீர் வருகின்றது. மழைநீரின் வேகத்துக்கேற்ப படிகள் இடம் பெயர்ந்து விடுகின்றன. சில இடங்களில் படிகள் அடித்துச் செல்லப்படுகிறது. மண் வழிப்பாதையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு சீசன் போதும் இப்பாறைகளை சீரமைத்து வருகின்றனர். இம் மலையிலும் இரண்டாவது மலையில் உள்ள தாவரங்களே காணப்படுகின்றன. வேங்கை மரத்தில் வடியும் பாலை சிறிய தேங்காய் ஓடுகளில் சேகரித்து கடைகளில் விற்பனை செய்கின்றனர். வேங்கைப் பாலால் கைக்குழந்தைகளுக்கு திலகம் இட்டால் வசீகரமாகும் என்பதுடன் கண் திருஷ்டி பாதிக்காது என இன்றும் கிராமங்களில் நம்புகின்றனர். திருப்பூர் அருகே உள்ள புகழ் பெற்ற அலகு மலை முருகனுக்கு அலங்காரத்தில் இந்த வேங்கைப் பாலால் தான் திலகம் இடப்படுகிறது என்பது கூடுதல் செய்தியாகும். இம் மலையில் கைதட்டிச் சுனை என்ற தீர்த்தம் உள்ளது. ஒவ்வொரு மலை முடியும் இடம் தொடங்கும் இடம் என எந்தவிதமான அரிதியும் குறியீடும் இல்லை.

ஒருவிதமான கோரைட் புற்கள் அடர்ந்து வளர்ந்த இடம் வந்தால் அது நான்காம் மலையின் தொடக்கம் என அறியலாம். இம்மலையை ஒட்டன் சமாதி மலை, திருநீர் மலை எனவும் கூறுவர். மலையின் மேற் பரப்பு வெண்மையான திருநீரை ஒத்த தரைப் பகுதியைக் கொண்டவை. பெரும்பாலும் மண்படிகள் தான் அமைந்துள்ளது. சுமார் 25% சதவீதம் பகுதி கற்படிகளால் ஆனவை. இம் மலையில் வசு வாசி என்ற மதுர களி பாக்கு அதிக அளவில் விளைகின்றது. சீற மஞ்சள் என்ற என்றும் வாடாத மஞ்சள் இம் மலையில் உள்ளது.

ஐந்தாவது மலை பீமன் களியுருண்டை மலை என அழைப்பர். ஒரு பெரிய பாறை களியுருண்டை வடிவில் உள்ளதால் இப்பெயர் பெற்றது. இம்மலையில் செண்பக மரங்கள், குறிஞ்சிப் பூ செடிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. பாதையின் வடக்குப் பகுதியில் அடர்ந்த சீதை வனம் அமைந்துள்ளது. ஏற்ற இறக்கங்கள் இல்லாமல் சமவெளி போன்ற பகுதியே இம்மலையில் அதிகம். இப்பகுதியில் பயணிக்கும் போது, கோடை காலத்திலும் கடுங்குளிருடன் அதி வேகத்துடன் காற்று வீசுவதை உணர முடியும். இக்குளிரிலிருந்து காக்க கம்பளி உடைகளான மப்ளர், ஸ்வெட்டர், தலைக்கு குல்லாய் போன்றவற்றை அணிவது அவசியம். இம்மலையில் பயணிக்கும் போது நடைபாதையின் ஓரத்தில் வரப்பு போன்ற பகுதியில் கட்டு விரியன் பாம்பு ஒன்று எங்களை நோக்கி ஊர்ந்து வந்ததை எதிர் கொண்டோம். பாதை ஓரத்தில் ஒதுங்கி அதற்கு வழிவிட்டு, அது எங்களைக் கடந்து சென்றபின் நாங்கள் எங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம்.

அடுத்து ஆறாவது மலை. சந்தன மலை என அழைக்கின்றனர். காரணம் இதன் நிலப்பரப்பு சந்தனத்தின் நிறத்தை ஒத்திருப்பது தான். வாசனைப் புற்கள், கற்றாழை, கற்பூர வல்லி, மிளகு பலாமரம் போன்ற மருத்துவ குணங்கள் நிறைந்த தாவரங்கள், மரங்கள் அதிக அளவில் உள்ளதைக் காணலாம். பாதையின் இருபுறங்களிலும் சமவெளிப் பகுதிகளிலும் புற்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இரவில் இம்மலையில் பயணிக்கும்போது மலையின் உச்சி பகுதியில் இருப்போம். தங்கு தடையின்றி அதிக விசையுடனும் ஓசையுடனும் காற்று வீசுவதை உணரவும் கேட்கவும் முடியும். ஐந்தாவது மலையிலும் இம்மலையிலும் படிகள் ஒரே சீராக இல்லாததால் உட்கார்ந்து நகர்ந்து நகர்ந்து கீழ் நோக்கி இறங்கிச் செல்ல வேண்டும். இம்மலையின் முடிவில் ஆண்டி சுனை எனப்படும் பிரம்பி தீர்த்தம் உள்ளது. இந்த சுனை தீர்த்தம் தான் ஈசனின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இச்சுனைக்கு அருகில் ஈரப்பதமான பகுதிகளில் அட்டை பூச்சிகள் உள்ளன. குளிக்கும் போதும் நீர் அருந்த சுனைக்கு அருகில் செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டிய பகுதி ஆகும். முகம் கழுவும் போது அட்டைப் பூச்சி மூக்கினுள் சென்றுவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அர்ச்சுனன் தவம் செய்த சேத்திழைக் குகை இம்மலையில் தான் உள்ளது.

ஏழாவது மலையின் ஆரம்பத்தில் ஒரு டீக்கடை உள்ளது. மலை உச்சியில், கடுங்குளிரில் மலை ஏறிவந்த களைப்பும் சோர்வும் உள்ள நிலையில் ரூபாய் பத்துக்கு கிடைக்கும் சூடான சுவையான சுக்கு காபி தேவாமிர்தம் போல் இருந்தது. இக்கடையை அடுத்து கோயில் நிர்வாகத்தினரால் வெய்த தகர கொட்டகை ஒன்று உள்ளது. இதில் சுமார் 50/60 பேர் படுத்து ஓய்வெடுக்கலாம். இது இரண்டு மாத உபயோகத்திற்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டதாகும். இங்கு தங்கி ஓய்வெடுத்து பின் விடியற்காலை பயணத்தைத் தொடரலாம். இங்கு தங்காமலும் செல்லலாம். இம்மலையை சுவாமிமுடி மலை என்பர். இம் மலையில் செங்குத்தான படிகள் இல்லை. ஆனால் மண் மற்றும் பாறைகள் நிறைந்த சரிவான பாதை. சில இடங்களில் கைகளை ஊன்றி ஊர்ந்தும் தவழ்ந்தும் செல்ல வேண்டும். பாதையின் இருபுறங்களிலும் புற்கள் மற்றும் குறிஞ்சிப்பூ செடிகள் பூத்துக் குலுங்குவதை காணலாம். இம் மலை உச்சியில் தோரணக்கல் என்ற இயற்கை கோபுரவாயில் நம்மை வரவேற்கிறது. இவ்வாயிலைக் கடந்ததால் விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து சிறிய குகைக்குள் அம்மன் சன்னதி உள்ளது. இதை அடுத்து ஒரு பெரிய பாறையின் கீழ் அமைந்துள்ள குகையில் தான் வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயில் அமைந்துள்ளது. இக் குகைக் கோயிலில் சுயம்பு லிங்கங்களான அக்னி, வாயு, நீர், நிலம், ஆகாயம் என பஞ்ச பூதங்களும் ஒருங்கே அமையப்பெற்ற பஞ்ச பூத ஸ்தலமாக விளங்குகிறது. இறைவன் பஞ்சலிங்கேசனாகவும் இறைவி மனோன்மணி என்ற பார்வதியாகவும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக் கோயிலை அடைந்து ஈசன் முன் நிற்கும் போது நாம் அடையும் மகிழ்ச்சி, பூரிப்பு ஆகியவற்றை சொல்ல இயலாது. ஏழு மலைகளை சிரமப்பட்டு ஏறி வந்த உடல் களைப்பு, மனச்சோர்வு, அசதி கால்வலி அனைத்தும் ஈசனைக் கண்ட அந்த ஒரு நொடிப் பொழுதில் மறைந்து விடுகிறது. எங்கும் காணக்கிடைக்காத அபூர்வ தரிசனம் நம் கண்களை விட்டு என்றுமே அகலாத நினைவுகளாகும்.

இங்கு மின்சாரமோ மின் விளக்குகளோ இல்லை. எண்ணெய் தீபம் மட்டும் தான். பெட்ரோமாக்ஸ் விளக்கு உண்டு. சூரிய ஒளியில் (சோலார்) இயங்கும் மின் விளக்குகளை அமைத்துள்ளனர். எனவே இரவு எந்த நேரத்திலும் கண்குளிர தரிசிக்கலாம். வெள்ளிமலை, ரசதகிரி, தென்கைலாயம், பூலோக கைலாயம் என வழங்கப்பெறும் புண்ணிய ஸ்தலமாகும். ஊட்டி மலையின் உயரத்திற்கு சமமானது. விழாக் காலங்களில் பூசாரி தொடர்ந்து 24 மணி நேரமும் இருப்பார். மற்ற காலங்களில் அமாவாசை யன்று மட்டும் கூட்டமாக பக்தர்கள் சென்று பூஜை செய்து துதித்தபின் திரும்பி வருவர். கால பூஜை போன்ற எந்த குறிப்பிட்ட பூஜையும் கிடையாது. 24 மணி நேரமும் வழிபடலாம். எப்போதும் திறந்தே இருக்கும். கதவுகளே இல்லை. கோயிலின் முன்பு சுமார் 10 அடி அகல நிலப்பரப்பு உள்ளது. அதற்கப்பால் ஆழமான பள்ளத்தாக்கு. கூட்ட நெரிசல் அதிகம் இருந்தால் நீண்ட நேரம் நின்று தரிசனம் செய்ய வாய்ப்பில்லை. கூட்டம் குறைவாக இருந்தால் நிதானமாக நின்று இறைவனை கண்குளிர வேண்டலாம். ஆன்மிக அன்பர்கள் தங்கள் வாழ் நாளில் ஒருமுறையேனும் இத்தலத்திற்கு வந்து பஞ்ச லிங்கேசனாகத் திகழும் ஈசனை தொழுதுய்ய வேண்டும்.

உமையவள் இறைவன் திரு நடனத்தைக் கண்டுகளிக்கும் முதன்மை பேறு தனக்கே உரியதென்றும், தம் பொருட்டு ஒரு திருநடனம் ஆடிக்காட்டி அருளுமாறு வேண்டினார். இறைவனும் அகமகிழ்ந்து உமையவள் கண்டு மகிழ மூலஸ்தானத்திற்கு அருகே உள்ள வெள்ளியம்பலத்தில் திருநடனம் புரிந்தார். அப்படி திரு நடனம் புரிந்த மேடை பல்கலை மேடை என அழைக்கலாயினர். அப்பெயர் நாளடைவில் திரிந்து பல காரமேடை என தற்சமயம் வழங்கி வருகிறது. தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், நாரத மகாமுனிவர் மற்றும் ஆதிசேஷன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற பெருமையினைப் பெற்றது.

கீழே இறங்கும் போது 3வது மலையினுள் நுழைந்து நடக்க ஆரம்பித்தால் ஏசி அறையினுள் இருப்பதைப் போன்ற ஓர் உணர்வு வந்து விடுகிறது. அடர்ந்த மரங்களினிடையே பயணிக்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதது ஆகும். இரவு நேரத்தில் மலை ஏறும் போது மூலிகை காற்றின் வாடையையும், குளிர்ச்சியையும் உணர்ந்த நமக்கு கீழே இறங்கும் போது வண்டுகள் எழுப்பும் ரீங்காரம், பறவைகள் கத்துகின்ற மெல்லிய ஓசை, இயற்கை எழில் காட்சிகளை ரசித்து, தூய காற்றை சுவாசித்துக் கொண்டு பயணிக்கும் சுகமே அலாதி தான். இரண்டாம் மலையிலும் முதல் மலையிலும் பறக்கும் அணில்கள் மரங்களில் தாவிச் செல்வதைக் காணலாம். பாதை ஓரத்தில் உள்ள செடிகளில் சிவப்பு எறும்புகள் (செவ்வெறும்பு) அதிக அளவில் காணப்படுகின்றன. கடித்தால் உடல் முழுவதும் தடித்துக் கொள்வதுடன் அரிப்பும் உண்டாகி விடும். எனவே மிகுந்த கவனம் தேவை. கீழே இறங்கியவுடன் நல்ல முறையில் எந்த விதமான விபத்தும் இன்றி சென்று வந்ததற்காக ஈசனுக்கும் மனோன் மணியம்மைக்கும் நன்றி தெரிவிப்பது நமது கடமையாகும். எந்த ஒரு பிரச்சனையும் இன்றி ஒருவர் மலைக்குச் சென்று ஈசனைத் துதித்து பின் இறங்கிவிட்டால் அவர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் திகழ்கிறார் எனக் கொள்ளலாம்.

புனித பயணத்தின் போது ..

ஈசனின் புனித தலமான இம்மலையில் சுற்றுப்புற சூழலும், துப்புரவும் காக்க வேண்டியது ஆன்மிக பற்றுக் கொண்ட ஒவ்வொருவரின் தலையாய கடமை. ஆனால் அவ்வாறு நடந்து கொள்பவர்கள் மிகச் சிலரே. மிகமிக முக்கியமாக பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வனத்துறையினர் விழாக் காலங்களில் அனைவரின் பைகளையும் சோதனை செய்து பிளாஸ்டிக் கவர் போன்றவற்றைப் பிரித்து எடுத்த பின்பு தான் மேலே செல்ல அனுமதிக்கின்றனர். குறிப்பாக பிளாஸ்டிக் கவர்களில் அடைக்கப்பட்ட நீர் மேலே எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாறாக சலுகை விலையில் தண்ணீர் பாட்டில்களைத் தருகின்றனர். மற்ற நேரங்களில் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது. போதிய விழிப்புணர்வு இருந்தும் இப்படி ஈசன் குடிகொண்டுள்ள மலையை மாசுபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்? புனித மலைக்கு வரும்போது புகையிலை பொருட்களான சிகரெட், பீடி, குட்கா, பான் மசாலா போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும். புண்ணிய தலங்களுக்கு பயணிக்கும் போது பொதுவாக இறைவன் மீது உள்ள பாடல்களைப் பாடுவர். சிலர் நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உச்சரிப்பர்.

வசதி இருந்தால் யார் வேண்டுமானாலும் விமானம், ஜீப் மற்றும் குதிரைகளின் உதவியுடன் வட கைலாயம் சென்று தரிசனம் செய்து திரும்பி விடலாம். ஆனால் தென் கைலாயமான இம் மலைக்கு உடல் பலமும், மன உறுதியும் ஈசன் அருளும் இருந்தால் மட்டுமே ஈசன் தரிசனம் கிடைப்பது சாத்தியம். பாம்பாட்டி சித்தர், சாதுக்கள், யோகிகள் அர்ச்சுனன் முதலானோர் கடுந்தவம் மேற்கொண்டு வலிமை பெற்ற தவ பூமியாகும். வட கைலாயதிற்கு இணையாகவும் அதைவிட பெருமையும் சக்தியும், அற்புத குணங்களை உடைய ஏராளமான மூலிகைகளை தன்னகத்தே கொண்ட ஒப்புயர்வற்ற மலை தென் கைலாயம் எனும் வெள்ளிங்கிரி மலையாகும்.

காலை நேரத்தில் ஈசனைத் தரிசித்த பின் அம்மலையின் அழகு, சூரியோதயம், இயற்கை எழில் ஆகியவற்றை ரசிக்கலாம். இரவு நேரத்தில் ஏறி இறைவனைத் தொழுதபின் உடனே கீழே இறங்கி விட்டால் இந்த இயற்கைச் செல்வங்களை கண்டு அனுபவிக்கும் வாய்ப்பை இழந்து விடுவோம். இம் மலையில் இருக்கும் போது கிழக்கில் சூரியன் உதிக்கும் அழகையும், சிறுவாணி நீர்த் தேக்கத்தின் எழில் தோற்றத்தையும் கேரள மலைத் தொடரின் பசுமையான அழகிய காட்சிகளை கண்டு களிக்கலாம்.
.